Monday, 17 February 2014

"லீடர்" - படத்தில் ரஜினி நடித்தால் அரசியல் சூழலே மாறிவிடும்..!

தெலுங்கில் தான் இயக்கிய லீடர் படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை என்றார் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா.

லீடர் படம் தெலுங்கில் பெரும் வெற்றியை ஈட்டிய படம். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்தால், அரசியல் சூழலே மாறும் என்று ஏற்கெனவே ஒரு விழாவில் சேகர் கம்முலா கூறியிருந்தார். அரசாங்கத்தையே மாற்றும் சக்தி மிக்கவர் ரஜினி ஒருவர்தான் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

லீடர் படத்தில் ரஜினி நடித்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை! - சேகர் கம்முலா

இந்த நிலையில் நீ எங்கே என் அன்பே படத்தின் செய்தியாளர் சந்திப்புக்காக நேற்று சென்னை வந்த சேகர் கம்முலாவிடம், ரஜினியை வைத்து லீடர் படத்தை ரீமேக் செய்வது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சேகர் கம்முலா, "இன்றைய இயக்குநர்கள் அத்தனைப் பேருக்குமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவரை இயக்க விரும்பாதவர் யாராவது இருக்க முடியுமா... அத்தனை சிறந்த கலைஞர், மனிதர் அவர்.

எனது லீடர் படத்தின் கதை அவரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான். அந்தப் படத்தை ரஜினி பார்க்க வேண்டும் என்று விரும்பி ஏவிஎம் சரவணனிடம் சொல்லி அனுப்பினேன் (லீடர் ஏவிஎம் தயாரிப்புதான்). ரஜினியும் படம் பார்த்தார். ஆனால் அவர் கருத்து என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

லீடர் பட ரீமேக்கில் ரஜினி நடித்தால் மிகப் பெரிய வெற்றி மட்டுமல்ல, அரசியல் சூழலே மாறிவிடும்.

இப்போதும் அவரை இயக்கும் பெரும் கனவு எனக்குள் இருக்கிறது. ஆனால் அவரை அணுக முடியவில்லை. உங்கள் மூலம் என் விருப்பம் அவருக்குத் தெரிய வரும் என நம்புகிறேன்," என்றார்.

சேகர் கம்முலா வெறும் பரபரப்புக்காகப் பேசுபவரில்லை. தெலுங்கு சினிமாவில் ராஜமவுலி மாதிரி மவுசு மிக்கவர். மிகச் சிறந்த படைப்பாளி. ரஜினியின் மிகத் தீவிர ரசிகரும்கூட. அவரைப் போன்ற ரசிகர்கள்தான் ரஜினியை உணர்ந்து அவருக்கேற்ற திரைக்கதையைப் படைப்பார்கள்.

சூப்பர் ஸ்டாரிடமிருந்து விரைவில் சேகர் கம்முலாவுக்கு அழைப்பு வரும் என நம்புவோமாக!

சூசன் பிரிவு... காதலர் தினத்தை மகன்களோடு செலவிட்ட ஹிரித்திக் ரோஷன்!

மனைவி சூசனை பிரிந்ததால், கடந்த வெள்ளியன்று வந்த காதலர் தினத்தை தனது இரு மகன்களோடு செலவிட்டுள்ளார் நடிகர் ஹிரித்திக் ரோஷன்.

கடந்த 17 வருடங்களாக பிப்ரவரி 14ம் தேதியை தனது காதல் மனைவி சூசனுக்கென ஒதுக்கி வைத்திருந்தார் இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன். ஆனால், கடந்தாண்டு திடீரென ஹிரித்திக்-சூசன் மண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டது.


அதனைத் தொடர்ந்து தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, மணாலியில் இருந்த ஹிரித்திக் மும்பை பறந்து வந்தார்.


மும்பையில் தனது இருமகன்களான ஹிரீகான் மற்றும் ஹிரீதான் ஆகியோரோடு காதலர் தினத்தை செலவழித்தாராம் ஹிரித்திக்.

குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !

பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அன்பு என்ற உணர்வு ஒன்று தான். பெற்றோர்களுக்கு குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது. பொறுப்பான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, வாழ்க்கையில் கடினமாக வேலை செய்து. அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஊக்குவிக்கிறார்கள். பெருமைக்குரிய குழந்தையாக வளர்வது கடினமானதாக இருப்பது போலவே. ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பதும் கடினமானதாகும். கோபத்தின் வடிகாலாக பயன்படுத்தப்படும் கடுமையான வார்த்தைகளை மனிதர்களால் மட்டுமே கூற முடியும்.

இருப்பினும் இந்த கோபத்திற்கு ஆளாவது குழந்தைகள் மட்டுமே. இதனால் ஒரு நிலையற்ற, சமாளிக்க முடியாத விளைவுகள் குழந்தைகளிடையே ஏற்படுகிறது. ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்போதும் சொல்லக்கூடாதவைகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை குழந்தைகளிடம் சொல்வதை தவிர்த்திடுங்கள்.

நான் உங்கள் வயதில் இருந்த போது, மிகவும் பொறுப்பாக இருந்தேன்! 

மேற்கூறியவற்றையே பெரும்பாலான பெற்றோர்கள் சொல்வது. இவ்வாறு குழந்தையின் திறமையை தங்களுடன் ஒப்பிட்டு சொல்வது பெற்றோர்கள் செய்யும் முதல் தவறு ஆகும். பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்புகளினால் குழந்தைக்கு முதலில் வருவது எரிச்சல் மட்டும் தான். ஆகவே அப்போது நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த தவறுகளை எல்லாம் நினைவுப்படுத்தி பார்த்து, அப்பொழுது உங்கள் பெற்றோர்களுக்கு உண்டான தொந்தரவுகளை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். மேலும் குழந்தையிடம், வீட்டில் நீ தான் மூத்தவனாக இருப்பதால் எப்படி உறவுமுறைகளிடம் நடந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற வார்த்தைகளால், குழந்தையின் நம்பிக்கை

நீ எப்போதுமே தவறான முடிவுகளையே எடுப்பாய்! 

முதலில் இவ்வாறு கூறி குழந்தையின் பக்குவப்படாத வயதிற்காக தண்டனை அளிக்கக்கூடாது. உண்மையில் கற்கின்ற போது எல்லோருமே தவறு செய்வது சகஜமான ஒன்று தான். ஒருவேளை குழந்தைகள் வேலைச் செய்ய எடுத்துக் கொண்ட கல்வித்துறை ஆர்வமூட்டுவதாக இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் எடுத்துக் கொண்ட கல்வித்துறையின் கம்பெனி மிகவும் பிரபலமானதாக இல்லாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் எடுத்துள்ள தீர்மானத்தில், அவர்களை குற்றம் சொல்ல வேண்டுமென்பது இல்லை. ஒரு பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டுமே ஒழிய, உங்களின் கருத்துக்களை ஏற்க கட்டாயப்படுத்தக் கூடாது.

ஏன் நீங்கள் ஒரு சகோதரன்/சகோதரி போன்று இருக்க முடியாது? 

இது மீண்டும் ஒரு நியாயமற்ற ஒப்பீடாகும் மற்றும் இதுவும் பொதுவாக வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கிடையே அவர்களின் திறன்களை, மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறு செய்வதால் உடன்பிறப்புகளுக்கிடையே பிளவு உருவாக்கலாம்.ஆகவே குழந்தைகளுக்கு இடையிலான மதிப்பிடுதலை தவிர்த்தால், குழந்தைகளுக்கு உங்கள் மீது ஏற்படும் வெறுப்புணர்வுகளைத் தவிர்க்கலாம்.

என்னை தனியாக இருக்கவிடுங்கள்!

 குழந்தைகள் கவலை மற்றும் பொறுப்புகள் இல்லாமல் அப்பாவித்தனமாக இருப்பார்கள், அதனால், பெரியவர்களுக்கு குழந்தைகளைப் பார்த்து கொள்ள வேண்டிய பெரிய பொறுப்புகள் உண்டு. அதே சமயம், சில நேரத்தில் நாம் தனிமையை விரும்பக்கூடும். அப்பொழுது குழந்தைகள் இது போன்ற சூழல்களை புரிந்துக் கொள்ளும் திறனற்று இருப்பார்கள். இந்த நேரத்தில் பொறுமையிழந்து அவசரப்பட்டு, ‘என்னை தனியாக இருக்கவிடு‘, என்று எரிச்சல்பட்டு சொல்வது, குழந்தைக்கு புறக்கணிக்கப்பட்ட மற்றும் தேவையற்ற மன அழுத்தத்தையே உண்டாக்கும். ஆகவே இதுப் போன்ற சமயத்தில் சிறிது பொறுமையாக இருந்து குழந்தையிடம் கோபமாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

நீங்கள் உங்களை கண்டு வெட்கப்பட வேண்டும்! 

இது மாதிரி வெளிப்படையாக மிகக்கடுமையாக மற்றும் மோசமாகப் பேசுவது, சாதாரணமாக எந்த ஒரு குழந்தைக்கும் தவறாகத் தான் தோன்றும். ஆம், சில குறும்புக்கார குழந்தைகளிடம் நச்சரித்து துளைத்தெடுக்கும் சுபாவம் மிக சாதாரணமாகக் காணப்படும். அதற்காக உங்களின் எதிர்ப்பை காண்பிக்க வேண்டுமென்பதில்லை. இந்நேரத்தில் குழந்தைக்கு நல்லது மற்றும் கெட்டது என இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை புரிய வைக்க சிறந்த மற்றும் பொறுமையான வழிகள் பல உள்ளன.

நீங்கள் உங்களது தந்தை/தாய் போலவே தான் இருக்கிறீர்கள்...

 திருமணமான அனைத்து தம்பதிகளும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதில்லை. பெரும்பாலானோர் வெறுப்பினால் அவர்களது உறவுகளுக்கிடையே ஒருவருக்கொருவர் எதிராக கொடூரமாக வார்த்தைகளால் பேசிக் கொள்கின்றனர். இதனால் சில உறவுகள் இறுதியில் பிரிந்தும் விடுகின்றன. எவ்வாறு பார்த்தாலும், குழந்தைகள் இந்த பரஸ்பர விரோத போக்குக்கு மற்றும் விமர்சனங்களுக்கு ஒரு சாட்சியாகின்றனர். அதனால் உங்களுக்கு இடையேயான விரோதத்தை, உங்கள் குழந்தை மீது காண்பித்தால், அது உங்கள் மீதான மரியாதையை இழக்கச் செய்யும்.

நீங்கள் எப்போது என்னை காயப்படுத்தலாம் என்ற நேரத்தை நோக்கியிருக்கிறீர்கள்! 

குழந்தைகள், பெற்றோர்களை புண்படுத்தும் வகையில், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செய்வதன் மூலம், பெற்றோர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் நேரங்கள் இருக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் இது எதிர்பாராவிதமாக நடந்தாலும், சில சமயத்தில் குழந்தைகள் வேண்டுமென்றே செய்கின்றன. எனினும், மேலே கூறப்பட்ட வார்த்தைகளைப் போன்று குழந்தைகளிடம் சொல்வதன் மூலம், அவர்களுடைய மனத்தில் குற்ற உணர்வு கொள்ளச் செய்துவிடுகிறது. இதனால் அவர்கள் உங்களது கோரிக்கைகளுக்கு இணங்கி உங்களை மகிழச் செய்வார்கள். ஆனால் நீங்கள் அவர்களுடைய உரிமைக்கான மகிழ்ச்சியை நீண்ட காலமாக பறித்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் குழந்தைகளை தங்களுடைய சொந்த எண்ணத்தின் படி வாழ விட்டு, அவர்களை குற்றமற்ற வாழ்க்கை வாழ விடுங்கள்.

உங்களைப் போன்ற ஒரு குழந்தை இருப்பதை விட குழந்தையில்லாமல் இருப்பதே மேல்...

 மேலே சொல்லப்பட்டது போல் அவசரப்பட்டு சொல்லுகின்ற வார்த்தைகளால், குழந்தைகள் பெரும்பாலும் தீவிர உணர்ச்சி வசப்படுகின்றனர். மேலும் இது அவர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சந்தேகத்திற்கு இடமில்லாமல், அப்படிச் சொல்வது மனம் மிகவும் புண்படுத்தும் விதமாக இருப்பதால், குழந்தைகளிடம் இது போல் ஒருபோதுமே சொல்லக் கூடாது. எந்தவிதமான நெருக்கடியாக இருந்தாலும், இப்படி ஏதாவது சொல்வதன் மூலம், இறுதியில் அது உங்கள் வாழ்க்கை முழுவதும் வருத்தப்படச் செய்துவிடும்.


கெட்ட நண்பர்களின் சகவாசத்தை விட்டுவிடவும்! 

பெற்றோர்களும் ஒருவரை நண்பராக்குவதற்கு முன்பு யோசனைச் செய்வதில்லை. அதுபோலவே குழந்தைகளும் செய்கின்றனர். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், நமக்கு ஏற்படும் கெட்ட நண்பர்களின் சகவாசத்திலிருந்து எப்படி விட்டு விலக வேண்டுமென்று நமக்கு தெரியும். ஆனால் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு நண்பர்களே உலகம், எனவே நீங்கள் வெறும் அதிகாரத்தினால் 'நல்ல' நண்பர்களைப் திரும்பவும் பெற வேண்டும் என்று அவர்களிடம் கூற முடியாது.உறவுகள்.

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம்.

ஆனால் இப்படி இழப்பதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அப்படி வெளிக்காட்டினால், பின் திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் போய்விடும் என்பதால் தான். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் உள்ள ஆண்கள் தான் திருமணத்திற்கு பின் நிறையவற்றை தியாகம் செய்கின்றனர். சரி, இப்போது அப்படி திருமணத்திற்கு பின் ஆண்கள் எவற்றையெல்லாம் இழக்கின்றனர் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்த்து சரிதானா என்று சொல்லுங்க


அமைதி 

திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

அம்மா

 ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

நண்பர்கள்

 பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.

ஆண் ஈகோ

திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

பணம்

பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

சுதந்திரம் 

முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.