Saturday, 8 February 2014

கேட்கத் தெரிகிறதா உங்களுக்கு?

கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன.

பொதுவாக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து வெளிப்படும் இயல்புகளை, வயதாக வயதாக, .உரிய பக்குவத்துடன் வளர்த்து வரும்போது அது நமக்குப் பலவகைகளில் உறுதுணையாய் இருக்கிறது.

கேள்வி கேட்கிற குணம் அப்படியொரு குணம். உங்களுக்கு என்ன தேவையோ, அதை வெளிப்படையாய்க் கேட்கிற குணம் ஒவ்வொரு குழந்தையிடமும் உண்டு. சில வேளைகளில் பொறுமையில்லாத பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, ஓர் அதட்டல் போட்டு, கேள்வி கேட்கும் ஆர்வத்தை முடக்கி விடுகிறார்கள்.

தன்னுடைய தேவைகளைக் கேட்டுப் பெறுவது என்பதும், தெரியாத ஒன்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வது என்பதும், வெற்றிக்கான அடிப்படை தேவைகள்.

தேவை என்பது எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், தேவை இருக்கிற எல்லோருமே கண்டடைவதில்லை. தேடல் யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் கண்டடைகிறார்கள். ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்பது நம்முடைய நாட்டுப் புறங்களில் பிறந்த அனுபவ வாசகம்.

கிடைக்காது என்று முன்முடிவை தாமாக ஏற்படுத்திக் கொண்டு, எளிதில் கிடைக்க கூடியவற்றை கோட்டை விடுபவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

ஒரு குழந்தையின் இதழ்கள் ஓயாமல் உச்சரிக்கும் கேள்விகளின் வேர்களைத் தேடிப்பிடித்தால், சில சின்ன சின்ன சொற்கள்தான். யார்-என்ன-எங்கே-ஏன்-எப்படி-எப்போது. தீர யோசித்தால், உலகின் எல்லாக் கேள்விகளுமே இந்த ஆறு சொற்களுக்குள் அடங்கி விடக் கூடியதுதான்.

“இந்த மாமா யார்?” என்று கேட்கும் ஒரு குழந்தையில் தொடங்கி, ” நான் யார்” என்று கேட்கச் சொன்ன ரமண மகரிஷியின் வழிகாட்டுதல் வரை எல்லாமே கேள்விகளின் முக்கியத்துவத்தைத்தான் காட்டுகிறது நமக்கு.

நீங்கள் ஒரு தொழிலில் இருக்கிறீர்கள் என்றால், அந்தத் தொழிலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? உங்கள் தயாரிப்பைப் பற்றியோ, சேவையை பற்றியோ வாடிக்கையாளர்கள் என்ன கருதுகிறார்கள்? உங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? உங்கள் போட்டியாளர்கள் எதைத் தருவதாக இழுக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை. இதற்கான பதில்களை நீங்கள் கண்டடைவதில்தான் உங்கள் அடுத்த கட்ட வளர்ச்சி இருக்கிறது.

அடுத்ததாக, நீங்கள் கேட்டுப் பெறக்கூடிய வாய்ப்புகள். வாய்விட்டுக் கேட்பவை மட்டுமே வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழி. எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தேடல் எப்போதும் இருப்பவர்களே ஜெயிப்பவர்கள். “பூமி பொதுச்சொத்து! உன் பங்கு தேடி உடனே எடு!” என்கிறார் கவிஞர் வைரமுத்து.

உங்களுக்காக காத்திருக்கும் உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் தேடுகிறீர்களா? உங்களை நீங்களே கேளுங்கள். அமெரிக்க நாட்டில் விற்பனையாளர்களைப் பற்றி ஒரு விசித்திரமான ஆய்வு வெளி வந்திருக்கிறது. விற்பனையாளர்களில் 60% பேர் தாங்கள் விற்பனை செய்யும் தயாரிப்புகள் பற்றி விலாவாரியாக சொல்கிறார்களே தவிர, வணிக வாய்ப்பைத் தருமாறு கேட்கத் தயங்குகிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள்.

நிறுவனங்கள், விற்பனையாளர்களுக்கு சொல்லித் தரவேண்டிய அடிப்படையான அரிச்சுவடியே, “அழுதபிள்ளை பால் குடிக்கும்” என்பதுதான்.

பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை!

பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை - வந்து விட்டது கிவாமி - அதி வேக எலக்ட்ரிக் பைக் இந்திய ரோடுகளுக்கு - 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு

ஜப்பானின் நெ 1 எல்க்ட்ரிக் பைக் த்யாரிப்பாளர் டெர்ரா மோட்டார்ஸ், இப்போது இந்தியாவுக்கு ஒரு அதி நவீன பைக்கை அறிமுகபடுத்த உள்ளனர். இதன் பெயர் கிவாமி. இது 160 கிலோமீட்டர் வரை பறக்கும் திற்ன் படைத்தது. இதன் எஞ்சின் 1000 சிசி பவர் கொண்டது.

2015ல் தான் இந்த கம்பெனி பைக்கை இந்தியாவை தயாரிக்க போகிறது, ஆனால் அது வரை ஜப்பானில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யபட்டு விற்க போகிரார்கள். இந்த பைக் 100% மின்சார சார்ஜ் ஏத்தினாலே போது. அதாவது 6 மணி நேரம் முழு சார்ஜை ஏற்றீனால் 3000 தடவை ஸ்டார்ட் செய்யலாம் மற்றும் 200 கிலோமீட்டர் நான் ஸ்டாப்பாய் போக முடியும் - சென்னை - கடலூர் / அல்லது சென்னை - கிருஷ்னகிரி வரை செல்ல ஏதுவான பைக்கின் உள்ளே மொபைலுக்கு பயன்படுத்து லித்தியம் வகை பேட்டரிகளை பொருத்தி உள்ளதால் சாதாரண மொபைல் சார்ஜர் பாயின்டில் சார்ஜ் ஏத்தி கொள்ளலாம்.


6 மணி நேரம் சார்ஜ் ஏற்ற 6 யூனிட்கள் - ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் வைத்தாலும் 30 ரூபாய்கள் தான் 200 கிலோமீட்டர் தூரத்திர்க்கு - சிட்டியில் யூஸ் பன்றவங்களுக்கு வாரத்திர்க்கு ஒரு நாள் தான் சார்ஜ் பண்ணினா போதும். அப்ப கிலோமீட்டரின் மொத்த செலவு 0.07 காசுகள் தான். அப்புறம் இந்த ஆயில் லொட்டு லொசுக்கு செலவு இல்லவே இல்லை. ஒரு நெருடல் இதன் விலை 18 லட்சம் - ஆனா பெட்ரோல் போடும் செலவை கம்பேர் பண்ணீனால் சில வருஷத்தில எடுத்திடலாம் முதலை ஆனாலும் இந்தியாவில் தயாரிக்க ஆரம்பிச்ச உடனே இதன் விலை குறையும்னு நம்புறேன்.

வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய சில சிம்பிளான வழிகள்!

வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய சில சிம்பிளான வழிகள்!

ஷூக்களை சுத்தம் செய்வது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், அதை சுத்தம் செய்து முடிப்பதற்குள் உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் போய்விடும். குறிப்பாக வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று நினைக்கும் போதே பல தாய்மார்கள் சோர்ந்துவிடுவார்கள்.

அதற்காக வெள்ளை நிற ஷூக்களை துவைக்காமல் இருக்க முடியுமா என்ன? ஒருவேளை வாரம் ஒரு முறை அதனை சுத்தம் செய்யாமல் இருந்தால், பாதங்களில் தான் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அனைவரும் தவறாமல் 1-2 வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டும்.

அப்படி சுத்தம் செய்யும் போது, வேலை எளிதில் முடிப்பதற்கு தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதன்படி செய்தால், நிச்சயம் ஷூக்களை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் சுத்தம் செய்துவிடலாம்.

ஈரமான ஸ்பாஞ்ச்

இது மிகவும் ஈஸியான ஒரு வழி. அது என்னவென்றால், எப்போது வெள்ளை நிற ஷூக்களை அணிந்து வந்த பின்னரும், தினமும் அதனை ஈரமான ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து வந்தால், வெள்ளை நிற ஷூவின் நிறம் பாழாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும் வாரம் ஒரு முறை சோப்பு தண்ணீரில் ஊற வைத்து, வெளியில் உலர வைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், வெள்ளை நிற ஷூவானது நன்கு ஜொலிக்கும்.

டிடர்ஜெண்ட்

இது மற்றொரு மிகச்சிறப்பான மற்றும் ஈஸியான வழி. அதற்கு வெள்ளை நிற ஷூவை வெதுவெதுப்பான சோப்பு நீரில் 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா பயன்படுத்தி கூட வெள்ளை நிற ஷூவை சுத்தம் செய்யலாம். அதற்கு பேக்கிங் சோடாவை சோப்பு நீரில் கலந்து, அதில் வெள்ளை நிற ஷூக்களை ஊற வைத்து துவைத்து, வெயிலில் உலர வைக்க வேண்டும்.

எலுமிச்சை

பாதங்கள் அதிகம் வியர்க்குமானால், அத்தகையவர்கள் எலுமிச்சை சாற்னினைப் பயன்படுத்தி துவைத்தால், ஷூக்களில் உள்ள மஞ்சள் நிற கறைகள் நீங்குவதோடு, ஷூக்களும் நன்கு நறுமணத்துடன் இருக்கும். வேண்டுமானால் அத்துடன் சிறிது உப்பையும் சேர்த்து ஊற வைத்து துவைக்கலாம். குறிப்பாக, எப்போது ஷூக்களை துவைத்தப் பின்னரும், அவற்றை சூரிய வெப்பத்தில் உலர வைக்க வேண்டும். இதனால் விரைவில் ஷூவானது உலர்வதோடு, அதில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றம் போன்றவை நீங்கிவிடும்.

வெள்ளை வினிகர்

வினிகர் கூட ஷூக்களை சுத்தம் செய்ய உதவும் பொருட்களில் ஒன்றாகும். அதற்கு வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரை சரிசமமாக எடுத்து, அதில் ஷூக்களை 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் அதில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கிவிடும்.

இந்த வாரம் ஒன்றை கற்போம்!

இந்த வாரம் ஒன்றை கற்போம் -வரிசையில் இன்று மெமரி கார்டின் ஸ்பீடை கண்டுபிடிப்பது / லாக் செய்யவும்
மற்றும் அழித்த டேட்டாவை மீட்டு எடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோமா?.

1. மெமரி கார்ட் வைத்திருக்காதவர்களே இப்போது இல்லை என்ற காலத்தில் நிறைய குழப்பங்கள் வருகின்றது. நாலு ஜிபி 150 ரூவாய்க்கு வாங்கினேன் மச்சி ஆனா நீங்க மட்டும் ஏன் 250 அதே 4 ஜிபியை வாங்கினீங்கன்னு கேட்டா பல பேரிடம் அது வந்து…வந்துனு தான் பதில் இருக்கும். இது ஏன் தெரியுமா. ஒவ்வொரு கார்டிலும் நாம் பார்ப்பது இரண்டே தான். முதல் விலை இரண்டாவது என்ன பிராண்டு என்று.

இதை தவிர நீங்கள் முக்கியமாய் பார்க்க வேண்டிய்து கிளாஸ் எனப்படும் மூன்றாவது முக்கிய விஷயம் 1 – முதல் 10 வரை இருக்கும் இன்னொரு விஷயம். இது என்ன? 4 ஜிபி வாங்கினாலும் அதில் 2 கிளாஸ் என்று குறிப்பிட்டிருந்தால் அது 2 மெகாபிட்ஸ் ஸ்பீட்ல தான் டேட்டாவை டிரான்ஸ்ஃபர் செய்யும். அதே சமயம் 4 ஜிபியில் 10 கிளாஸாக இருந்தால் முன்பு சொன்ன 4 ஜிபியை விட 2 1/2 மடங்கு வேகம் அதிகம். அதனால் நல்ல அதிக கிளாஸை பார்த்து வாங்கவும்.

2. டேட்டாவை மெமரி கார்ட்டில் அழித்துவிட்டால் அதை திரும்ப பெறுவது எப்படி. அதை கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுத்தால் அவன் கொஞ்சம் உங்க டேட்டாவை எடுத்து கொள்வான் அல்லது பரப்பிவிடுவான். அதனால் பாதி பேருக்கு அழித்த விஷயங்களை எடுக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தினால் அழித்த டேட்டாவை எடுக்கலாம். லின்க் – http://www.pandorarecovery.com/ இது ஹார்டு டிஸ்க்குக்கூட பொருந்தும்.

3. எல்லா மெமரி கார்டிலும் லாக் ஸ்விட்ச் இருப்பதால் சேஃப்டிக்கு அதை யூஸ் பண்ணுங்க இதனால் முதல்லேயே டேட்டா அழிவதை தடுக்க இயலும் – இது தெரியாத மக்களுக்கு ( சைடில் இருக்கும்).

விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும் - விமர்சனம்

பழைய பத்மினி காரும் அதன் மேல் பண்ணையாரும் அவருடன் இருப்பவர்களும் காரின் மீது வைத்திருக்கும் காதல் தான் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் கதை.’நாளைய இயக்குநர்’தொடருக்காக உருவாக்கிய குறும்படத்தை முழுநீளப்படமாக எடுத்த இயக்குனர் அருண்குமாரை பாராட்டலாம். காரை மையமாக வைத்து அதில் காதல், பாசம் என அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவில் 1980-ம் ஆண்டை நம் கண்முன் அற்புதமாக காட்சி தந்திருக்கிறார்.

ஒரு கிராமத்தில் பண்ணையாராக இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். நவீன பொருட்கள் எது வந்தாலும் அதை அந்த ஊருக்கு கொண்டு வந்து மக்களுக்கு அறிமுகம் செய்துவைப்பவர் இவர்தான்.இந்நிலையில் பண்ணையார், உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு பத்மினி காரை பார்க்கிறார். பார்த்தவுடன் காரின் மீது ஆசைப்படுகிறார். உறவினரிடம் பண்ணையார் காரைப்பற்றியே பேசுகிறார். இதை கவனிக்கும் உறவினர், தன் மகள் வீட்டுக்கு செல்லும்போது காரை பண்ணையாரிடம் கொடுத்துவிட்டு தான் திரும்பி வரும்வரை காரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு செல்கிறார்.
மகிழ்ச்சியடைந்த பண்ணையார், காரை ஓட்டுவதற்கு விஜய் சேதுபதியை நியமிக்கிறார்.

இதிலிருந்து ஊரில் எந்தவொரு நல்லது, கெட்டதுக்கும் பத்மினி காரை பயன்படுத்துகிறார்கள். ஒருநாள் துக்கவீட்டில் நாயகி ஐஸ்வர்யாவை சந்திக்கிறார் விஜய் சேதுபதி. பார்த்தவுடன் அவர் மீது காதல் வயப்படுகிறார். பின்பு அவரையே சுற்றி சுற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, காதலை ஏற்றுக்கொள்கிறார்.

பண்ணையாரும், அவர் மனைவி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பத்மினி காரை மிகவும் நேசிக்கிறார்கள். கார் இல்லாத வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு செல்கிறார்கள். இந்நிலையில் பத்மினி காரின் உரிமையாளர் மகளான சினேகா பண்ணையார் வீட்டுக்கு வருகிறார். அங்கு பண்ணையாரிடம் தன் தந்தை இறந்து விட்டதாகவும், அவர் விட்டுச்சென்ற சொத்துக்களை தரும்படி கேட்கிறார். பண்ணையார் சொத்துக்களை கொடுத்துவிட்டு காரை மட்டும் கொடுக்காமல் விட்டுவிடுகிறார். பின்பு தன் மனைவியின் அறிவுறுத்தலின்படி காரை சினேகாவிடம் கொடுக்கிறார். அதற்கு சினேகா வாங்க மறுப்பு தெரிவித்து நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

இதனால் பெரும் மகிழ்ச்சியடைகிறார் பண்ணையார். இந்நிலையில் தனது திருமணநாள் நெருங்குவதால் அதற்குள் பத்மினி காரை ஓட்டக்கத்துக்கொண்டு தன் மனைவியை உட்காரவைத்து ஓட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவர் மனைவிக்கும் இதே ஆசை உள்ளது. இதற்கு விஜய் சேதுபதியை கார் ஓட்ட கற்றுத்தரும்படி கூறுகிறார். பண்ணையாருக்கும் ஓட்ட கற்றுக்கொடுத்தால் தன்னால் இக்காரை விட்டு பிரியவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் ஓட்ட கற்றுத்தராமல் ஏமாற்றி வருகிறார்.

இதற்கிடையில் வீட்டில் உள்ள ஒவ்வொன்றாக எடுத்துச்செல்லும் பண்ணையாரின் மகளான நீலிமா, பத்மினி காரையும் எடுத்துச் செல்கிறார்.இறுதியில் பத்மினி காரை மகளிடம் இருந்து மீட்டாரா? தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.

பண்ணையாராக வரும் ஜெயப்பிரகாஷ் தன் இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். கார் மீது பாசம் காட்டுவது, மகளிடம் மென்மையாக பேசுவது, கார் ஓட்ட துடிப்பது என பல்வேறு கோணங்களில் நடிப்பு திறனால் மிளிர்கிறார். பண்ணையார் மனைவியாக வரும் துளசி, தன் அழகிய நடிப்பால் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவருடைய மர்மப்புன்னகை பார்ப்பதற்கு ரசிக்கும் படியாக உள்ளது.

டிரைவரான விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் குறைவு. இருந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக பண்ணையார் கார் ஓட்ட கற்றுக்கொண்டால் தன்னைக்கழட்டி விட்டுவிடுவாரோ என்ற பதட்டம் அவருடைய சிறந்த நடிப்புக்கு உதாரணம். நாயகியாக ஐஸ்வர்யா, இவருக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. கிராமத்து வேடத்துக்கு அழகாக பொருந்துகிறார்.