ஹாலிவுட் படங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை ஏஞ்சலீனா ஜோலீ பெற்றுள்ளார். இவர் கடந்த 2013ம் ஆண்டில் 33 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற ஜோலீ அதிக சம்பளம் வாங்கியவர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஜெனிபர் லாரன்ஸ் 26 மில்லியன் டாலர் பெற்று 2வது இடத்திலும், கிறிஸ்டன் ஸ்டூவர்ட் 21.5 மில்லியன் டாலர் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர்.
இதேபோன்று, 4வது மற்றும் 5வது இடத்தில் ஜெனீபர் ஆனீஸ்டன் 20 மில்லியன் டாலர் மற்றும் எம்மா ஸ்டோன் 16 மில்லியன் டாலர் வருமானமும் பெற்று உள்ளனர். ஹாலிவுட் நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் என்ற பெருமையை ராபர்ட் டவுனி ஜூனியர் பெறுகிறார். கடந்தாண்டு அவரது வருமானம் 75 மில்லியன் டாலர்.
அவரை அடுத்து சானிங் டாட்டம் 60 மில்லியன் டாலருடன் 2வது இடமும், ஹக் ஜேக்மேன் 55 மில்லியன் டாலருடன் 3வது இடமும், 4வது இடத்தில் மார்க் வால்பெர்க் 51 மில்லியன் டாலர் பெற்றும் உள்ளனர். டாப் 10 நடிகர்களில், டுவைன் ஜான்சன், லியோனார்டோ டிகேப்ரியோ, ஆடம் சாண்ட்லர், டாம் குரூஸ், டென்செல் வாஷிங்டன் மற்றும் லியாம் நீசன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.