Sunday 16 February 2014

ஒன்று சேராத சமுத்திரம் - gulf of Alaska!


இப்படத்தில் காண்பது அலாஸ்க சமுத்திரம்,,


 இங்கு இரு சமுத்திரம் சந்திக்கும்.. 


அனால் ஒன்றுடன் ஒன்று இணையாது !!! 


இந்த ஒன்று சேராத சமுத்திரத்தை gulf of Alaska என்று அழைக்கபடுகிறது..

"மாமனிதர்"" - காமராஜர் ஒரு முறை...?

"மாமனிதர்"" - காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார்.


சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது. ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார். உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரியவில்லை


. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். அங்கு மேலே இருந்த ஒரு டியூப் லைட்டைச் சுட்டிக் காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே...


ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்க ன்னு பாருங்க...'' என்றார்.


 இதுவரை காமராஜர் கட்டிய எதிலும் அவர் சம்மந்தமான எதையும் குறிப்பிட சொன்னதே இல்லை...

"மாமனிதர்""

உங்கள் மொபைல் ஃபோன் / டேப்ளட் பேட்டரியை பாதுகாப்பது எப்படி?

உங்கள் மொபைல் ஃபோன் / டேப்ளட் பேட்டரியை பாதுகாப்பது / இலவச பேட்டரி மீட்டர் சாஃப்ட்வேர் எப்படி?


சரியான ஜோடியை தேர்ந்தெடுககவிடில் வாழ்க்கை எப்படி சூனியம் ஆகுமோ அதே தான் பலரின் மொபைல் ஃபோன் வாழ்கை. எப்ப பார் சுகர் பேஷன்ட் மாதிரி சார்ஜரோடு திரிஞ்சிகிட்டு இருப்பாங்க. இது ஏன்? - முதல் முதல் ஃபோன் வாங்கின உடனே ஃபோனை ஃபிளைட் மோட் அல்லது ஆஃப் செஞ்சிட்டு தொடர்ந்து 6 மணி நேரம் மினிமம் சார்ஜ் பண்ணனும். அதுக்கு அடுத்து முதல் 15 - 30 நாட்கள் பேட்டரியை 80% உபயோகபடுத்தாம சார்ஜ் ஏற்றவே கூடாது. ஏன்னா அப்படி செஞ்சா பேட்டரியோட சைக்கிள் சரியா வேலை செய்யாம பேட்டரி அரை குறை சார்ஜ் தான் வாழ்க்கை முழுசா தரும்.


முதல் சார்ஜ் செய்யும் போது அந்த கவர் / ஸ்லீவ் லொட்டு லொசுக்கு எல்லா கருமத்தையும் கழட்டிடு சார்ஜ் பன்னுங்க. அப்படி செய்யும் போது மிக மிக மெல்லிய உஷ்னம் தான் வரனும், இதற்க்கு மாறா உஷ்னம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்திச்சினா - உங்களுக்கு ஃபோன் வித்தவன் டுபக்கூர் பேட்டரியை கொடுத்திருக்கான் - அதனால் அவன் மூஞ்சிலே போய் போடுங்க இல்லைனா அவனை ஒரிஜினல் கம்பெனி சர்வீஸ் சென்ட்டருக்கு போவேன்னு சொன்னாலே மிரன்டு போய்டுவான். 75% இன்னைக்கு விக்கிற போன்கள் - இந்த தனியார் மொபைல் கம்பெனிகள் பேட்டரியை லவட்டி கொண்டு அதன் மூலம் டூப்ளிகேட் பேட்டரியை போட்டு உங்களுக்கு சில்வர் காயின் / கேரி பேக் / உருப்புடாத கிஃப்டெல்லாம் தரும் காரணம் ஒரிஜினல் பேட்டரி 20% விலைக்கு சமம். அதனால் தான் இந்த வெந்த வேகாத கடையில ஃபோன் வாங்காதீங்க. அவனுங்க உங்க முன்னாடி தான் அந்த பாக்ஸ் ஸ்டிக்கரை கிழிக்கிற மாதிரி செய்வாங்க ஆனா அந்த ஃபோன் வேண்டாம்னு சொன்ன பழைய மாதிரி ஒட்டிருவாங்க...........


இரண்டாவது பலர் இந்த கொத்து கொத்தா டுபாக்கூர் சார்ஜர் டிராஃபிக் சிக்னல்ல வாங்கி போடுவீங்க அது பெரிய நோ நோ - அடுத்து ஆம்னி பஸ் போர்ட் சார்ஜர் நோ நோ / அடுத்து ரயில்வே போர்ட் சார்ஜர் நோ நோ - இதெல்லாம் பெரிய பிரச்சினை ஆனாலும் இதை சமாளிக்க யூ எஸ் பி சார்ஜர் ஒகே - ஆனாலும் யூ எஸ் பி 5 வோல்ட் தான் இருந்தாலும் சில சார்ஜர் டக்குனு சார்ஜ் ஆகும் - சிலாது ஆகும் ஆனா ஆகாது. இதுக்கு காரணம் யூ எஸ் பி 1. வெர்ஷன் வெறும் .5மில்லி ஆம்ப்பியரை தான் தரும். யூ எஸ் பி 2 வெர்ஷன் .9 மில்லி ஆம்பியரையும் யு எஸ் பி 3 வெர்ஷன் 1.5 மில்லி ஆம்ப்பியரையும் தரும். இப்ப நல்ல கம்பெனிகள் காருக்கு சிகரட் லைட்டர்ல 1500 முதல் 3000 மில்லிஆம்பியர் வரை சார்ஜ் செய்யும் வண்ணம் கொன்டு வந்திருக்காங்க DOUBLE SPEED RAPID CHARGERS.


சூப்பர் சார்ஜர் - ஒரிஜினல் ஃபோனோடு வரும் சார்ஜர் இந்த ஃபோனுக்க்னு செஞ்சதால் கரெக்டா இருக்கும். அதே சார்ஜர் பின் ஆனால் என் ஃபோன் வேலை செய்யலைனு சொல்லாதீங்க ஒவ்வொரு பேட்டரியும் வித்தியாசம். கார் சார்ஜர் / லேப்டாப் சார்ஜர் / சேஃப் ஆனா டெஸ்க்டாப் சார்ஜர் டேஞ்சர். ஆன்ட்ராயிட்ல இதுக்கு ஒரு சாஃப்ட்வேர் இலவசமா இருக்கு

https://play.google.com/store/apps/details?id=you.in.spark.energy

அதை டவுன்லோட் பண்ணினா 100 பர்சென்ட் பச்சை மற்றும் மஞ்சல் / ஆரஞ்சு / மற்றூம் 20 %க்கு கீழே சிவப்பு வர்ர மாதிரி ஆட்டோமேட்டிக்கா காட்டும் பார் டவுன்லோட் செஞ்சு கரெக்டான சார்ஜர் இருந்தா சூப்பர் பேட்டரி லைஃப். இந்த சார்ஜ் ஏத்தறது 20% கீழே போனா மட்டும் அது வரை சார்ஜ் பண்ணவே கூடாது. அதே மாதிரி 20% கீழே போனா தயவு செய்து கால்கள் பண்ணாதீங்க இது அணு உலைக்கு உள்ளே இருக்கு ரேடியேஷன் மாதிரி அம்பூட்டு டேஞ்சர். இது போக ஃபேஸ்புக் ஆப் (Facebook APP) ஆப்பிளோ அல்லது ஆன்ட்ராயிட்ல போட்டு யூஸ் பண்ணீனா பேட்டரி 8 மணி நேரம் கூட தாங்காது அதனால் அந்த ஆப்பை எடுத்திடுங்க - ஏன்னா பிரவுசர் முறையில யூஸ் பண்ணீனா லாங்க் லை 14 மணி நேரம் வரை வொர்க் அவுட் ஆகும். நீங்க தப்பு தப்பா பேட்டரி சார்ஜரை அல்லது போலி பேட்டரி போட்டு அப்புறம் சார்ஜ் போட்டுகிட்டு பேசாதீங்க வெடிச்சிடும்னு சொல்லாதீங்க - சரியான சார்ஜர் / பேட்டரி வெடிப்பதில்லை


இன்னொரு முக்கிய விஷயம் 3ஜி சர்வீஸ் இல்லாத ஊர்ல / நகரத்தில 3ஜி ஆப்ஷனை ஆஃப் செய்தா பேட்டரி இன்னும் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை எக்ஸ்ட்ரா வரும் 2ஜி / ஈ / ஜிபிஆர் எஸ் இருக்கிற ஊர்ல கெத்துக்குனு 3ஜி ஆன் பண்ணி வச்சா வேஸ்ட் தான்

இது கதிர்வேலன் காதல் முதல் நாள் வசூல்!

சென்னை மற்றும் அதன் சுற்றுவடாரப்பகுதிகளில் இப்படம் ரிலீசான முதல் நாளில் 72 லட்சங்களை வசூல் செய்துள்ளது.


 ஒட்டு மொத்த தமிழகம் முழுவதுமாக சேர்த்து ஏறக்குறைய மூன்று கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளது.


ஆசிட் டெஸ்ட் எனப்படும் இரண்டாவது படத்தில் உதயநிதிக்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பதன் மூலம் இளம் நடிகர் என்பதை தாண்டி மிகப்பெரிய ஓப்பனிங் உள்ள நடிகர்களின் படியலில் இணைந்துள்ளார் உதயநிதி.

நயன்தாராவின் அரசியல் பிரவேசம்!

ராதா என்ற தெலுங்கு படத்தில் வெங்கடேஷ் ஹோம் மினிஸ்டராக நடிக்கிறார்.


நயன்தாரா அவருக்கு உதவியாளராக நடிக்கிறார். நயன்தாரா இவ்வளவு சீரியான அரசியல் பாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாக இருப்பதால் மிகவும் ஹோம் ஒர்க் செய்து நடிக்கிறாராம்.


இப்படத்தை மாருதி தாசரி இயக்குகிறார். யுனிவர்சல் மீடியா சார்பாக தன்யா தயாரிக்கிறார்

‘வாலு’வின் எக்கச்சக்க எதிர்பார்ப்பு!

சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘வாலு’. இப்படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் புரமோ பாடலை சிம்பு, காதலர் தினத்தன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.


சிம்பு ‘வாலு’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘லவ் என்றவன் நீ யாருடா’ என்னும் பாடலின் ஆடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர் மனதில் இடம்பிடித்து பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்பாடலின் புரமோ வீடியோவை சிம்பு, காதலர் தினத்தில் வெளியிட்டது மேலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ‘வாலு’ படத்தை பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது வீடியோ மூலம் ரசிகர்கள் மனதில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆண்ட்ரியாவுக்கு தலை கால் புரியாத சந்தோஷம்!

தரமணி படத்திற்காக ஆண்ட்ரியா முதன்முதலாக இசையமைத்து எழுதி பாடிய ஆங்கில பாடல் வெளியானதில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட பாராட்டு மடல்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம். குறிப்பாக, அனிருத் உள்ளிட்ட வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களே, ஆண்ட்ரியாவிடமிருந்து வெளிப்பட்டுள்ள இந்த இசை இளமையாகவும், இனிமையாகவும் உள்ளது. இது இளைய இதயங்களை பெரிய அளவில் ஈர்க்கக்கூடிய வலிமையுள்ளதாக இருக்கிறது என்று வஞ்சணையில்லாமல் புகழ்கிறார்களாம்.

தான் கம்போஸ் செய்த பாடலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருப்பதை கண்டு தலைகால் புரியாமல் தடுமாறிப்போயிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு, அடுத்தடுத்து இசையமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருக்கிறதாம். ஆனால், இதை செயல்படுத்த வேண்டும் என்று சில அபிமானத்திற்குரிய டைரக்டர்களிடம், தற்போது ஒரு பாடலுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் தன்னை முழு இசையமைப்பாளராக்கி விடுமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறாராம்.

இந்நிலையில், அவர்கள் தன்னை அழைக்கும்போது தன்னிடம் பல படங்களுக்கான பாடல்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இப்போது, பாடல் கம்போஸிங் வேலைகளில் மும்முரமாகியிருக்கும் ஆண்ட்ரியா, நண்பர்களுடன் அடித்து வந்த அரட்டை, லூட்டி என அனைத்து பொழுதுபோக்கு விசயங்களையும் தற்காலிகமாக மூட்டைகட்டி வைத்து விட்டாராம். ஆக, கோலிவுட்டுக்கு ஹாலிவுட் தரத்தில் இசையை கொடுக்க ஒரு பெண் இசையமைப்பாளர் அதிரடியாக தயாராகிககொண்டிருக்கிறார்.

சசிகுமாரின் புது ரூட்!

சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பிரம்மன். படத்துக்கான புரமோசன்களை தொடங்கிவிட்டார். இந்தப் படத்தை ஒரு கன்னட தயாரிப்பாளரும், ஒரு மலையாள தயாரிப்பாளரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதுபற்றி சசிகுமார் கூறியதாவது:


என்னை நம்பி வந்தவர்கள் யாரும் நஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறவன் நான். பிரம்மன் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பக்கத்து மாநிலத்திலிருந்து என்னை நம்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் தோற்ககூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். பொதுவாகவே தயாரிப்பாளர்கள் தோற்ககூடாது. ஒரு நடிகரோ, இயக்குனரோ தோற்றால் அவர்களுக்கு உழைப்பு மட்டுமே நஷ்டம் அடுத்த படத்தில் எழுந்து வந்துவிடலாம். ஒரு தயாரிப்பாளர் தோற்றல் உழைப்பு, பணம் எல்லாமே நஷ்டம்.


எப்போதுமே ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி திட்டமிடுவேன். இயக்குனர் சாக்ரடீஸ் பிரம்மன் கதையை என்னிடம் பலமுறை சொல்ல முயற்சித்தார். அப்போது நான் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தால் அவரிடம் எனது முடிவை சொல்ல முடியவில்லை. அந்த படங்கள் முடிந்தவுடன் சாக்ரட்டீசுக்கு சான்ஸ் கொடுத்தேன். இப்போது பிரம்மன் பிரமாதமாக வந்திருக்கிறது. பழைய சசிகுமாரை இதில் பார்க்க முடியாது. சில புது விஷயங்களை இதில் கையாண்டிருக்கிறேன். அது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன். என்றார்.

யான் படமும் மொராக்கோவும்!

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் யான். ஜீவாவுடன் துளசி நாயர் நடிக்கிறார். ஆர்.எஸ்.இன்போடையின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவில் இதன் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட வேண்டியது இருந்தது. ஆனால் அந்த நாட்டில் படப்பிடிப்பிற்கு அனுமதி பெறுவதில் பெறும் சிக்கல் எழுந்தது.

மொராக்கோ கட்டுப்பாடான முஸ்லிம் நாடு. அந்த நாட்டில் சர்வதேச தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் ஜீவா அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை ஷூட் பண்ண வேண்டும். அந்த நாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கும்போது படத்தின் ஸ்கிரிப்டை கொடுக்க வேண்டும். யான் ஸ்கிரிப்டை படித்த அந்த நாட்டு அதிகாரிகள், எங்கள் நாட்டில் சர்வதேச தீவிரவாதிகள் இல்லை. இங்குள்ள மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். என்று அனுமதி மறுத்தனர்.

வேறு நாட்டு தீவிரவாதிகள் மொராக்கோ வழியாக செல்கிறார்கள் என்று சமாதானம் சொல்லி அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இதற்காக 8 மாதங்கள் வரை காத்திருந்தார்கள். அனுமதி கிடைத்தும் கிளம்பிச் சென்று 15 நாட்கள் அங்கு தங்கி இருந்து கிளைமாக்சை படம்பிடித்து திரும்பி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்புகள் முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

"காத்திருந்தாலும் அதற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது. மொராக்கோவில் படம்பிடிக்க கேமரா குழுவினர் கடுமையாக உழைத்தனர். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் வந்திருக்கிறது. ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இப்போது படம் எடிட்டர் டேபி

அஜீத்தை எச்சரித்த மருத்துவர்கள்!

பைக் ரேஸ் வீரரான அஜீத், பலமுறை விபத்துக்களை சந்தித்தவர். அதனால் சினிமாவில் ஏற்படும் விபத்துக்களை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. குறிப்பாக, சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்து பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். ஆனபோதும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உடனடியாக படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அப்படி ஆரம்பம் படத்தில் நடித்தபோது விபத்தில் சிக்கிய அஜீத்தை உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கடுத்து உடனடியாக வீரம் படத்தில் நடிக்க வேண்டியிருந்ததால் அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்த அஜீத். அதைத் தொடர்ந்து இப்போது கெளதம் மேனன் இயக்கும் படத்திலும் நடிப்பதற்கு தயாராகி விட்டார்.

ஆனால், இந்த படத்திற்காக உடல்கட்டை மாற்றி வரும் அஜீத், ரிஸ்க்கான காட்சிகளிலும் நடிக்க வேண்டியிருப்பதால், அவரை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் எச்சரித்து உள்ளார்களாம். அதனால். கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? என்று யோசித்து வருகிறாராம் அஜீத்.