Sunday 16 February 2014

யான் படமும் மொராக்கோவும்!

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் யான். ஜீவாவுடன் துளசி நாயர் நடிக்கிறார். ஆர்.எஸ்.இன்போடையின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவில் இதன் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட வேண்டியது இருந்தது. ஆனால் அந்த நாட்டில் படப்பிடிப்பிற்கு அனுமதி பெறுவதில் பெறும் சிக்கல் எழுந்தது.

மொராக்கோ கட்டுப்பாடான முஸ்லிம் நாடு. அந்த நாட்டில் சர்வதேச தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் ஜீவா அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை ஷூட் பண்ண வேண்டும். அந்த நாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கும்போது படத்தின் ஸ்கிரிப்டை கொடுக்க வேண்டும். யான் ஸ்கிரிப்டை படித்த அந்த நாட்டு அதிகாரிகள், எங்கள் நாட்டில் சர்வதேச தீவிரவாதிகள் இல்லை. இங்குள்ள மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். என்று அனுமதி மறுத்தனர்.

வேறு நாட்டு தீவிரவாதிகள் மொராக்கோ வழியாக செல்கிறார்கள் என்று சமாதானம் சொல்லி அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இதற்காக 8 மாதங்கள் வரை காத்திருந்தார்கள். அனுமதி கிடைத்தும் கிளம்பிச் சென்று 15 நாட்கள் அங்கு தங்கி இருந்து கிளைமாக்சை படம்பிடித்து திரும்பி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்புகள் முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

"காத்திருந்தாலும் அதற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது. மொராக்கோவில் படம்பிடிக்க கேமரா குழுவினர் கடுமையாக உழைத்தனர். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் வந்திருக்கிறது. ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இப்போது படம் எடிட்டர் டேபி

0 comments:

Post a Comment