Tuesday, 11 February 2014

அனைத்து வகைகோப்புக்களையும் திறந்து பார்க்க!

அனைத்து கோப்புக்கள் மற்றும் காமிக் புத்தக தொகுப்புகள் கோப்புகளை மற்றும் ஒலிக்கோபுக்கள் புகைப்படங்களை பெரிதாக்கி பார்ப்பது  தேடல் வசதிகள் என்று பல வசதிகளை கொண்டுள்ள  ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு

இணையத்தளங்களில் இருந்தோ அல்லது நண்பர்களால் அனுப்பப்படும் கோப்புக்களை தரவிறக்கி பார்க்கும் போது. அந்த கோப்பை பார்ப்பதற்குரிய மென்பொருள் உங்கள் கணனியில் இல்லை என்ற செய்தி அடிக்கடிவரலாம். அவ் மென்பொருளை தேட இணையத்தில் நேரம் செலவிட வேண்டி இருக்கும்.

இம்மென்பொருள் உபயோகிக்க உங்கள் கணனி

OS:         Microsoft Windows 2000/XP/2003/Vista/7

Processor:         Intel / AMD compatible at 1 GHz or higher

RAM:         512 MB or higher   இருக்க வேண்டும்

அனைவருக்கும் பயன்படும்  இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி வைத்துக்கொள்வதன் மூலம், இலகுவாக அனைத்துவிதமான கோப்புக்களையும் வாசிக்க முடியும்!

உதாரணமாக :

 DjVu , XML, JBIG2 ,TIFF, PDF, DjVu, XPS, JBIG2, WWF , FB2, TXT, Comic Book Archive (CBR or CBZ), TCR, PalmDoc(PDB), DCX மற்றும் BMP, PCX, JPEG, GIF, PNG, WMF, EMF, PSD கோப்புக்கள்.




Download MSI installer (3 MB) - See more at: http://tamilcomputer.yarlnatham.com/2014/01/blog-post_14.html#sthash.HA64Srw0.dpuf



Download MSI installer (3 MB) - See more at: http://tamilcomputer.yarlnatham.com/2014/01/blog-post_14.html#sthash.HA64Srw0.dpuf

சிறிய வீட்டை பெரிதாக காட்டும் வழிமுறைகள்!

நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாக அழகுபடுத்தலாம்.

சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது. கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணாடிகளை சுவர்களில் அழகாக பொருத்தினால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும்.

வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதேபோல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்சை போன்ற வர்ணங்களை சுவர்களுக்கு அடிப்பதும் வீட்டை பெரிதாக்கி காட்டும். சீலிங்கும், சுவரும் தொட்டுக்கொள்ளும் இடத்தில் அழகான பார்டர் போல வால்பேப்பரில் ஒட்டுவது அறையின் அகலத்தை அதிகமாக்கி காட்டும்.

சிறிய அறையில் ஜன்னல் இல்லாமல் இருக்கிறதா?  ஓவியங்களை சுவர்களில் தொங்கவிட வீடு அழகாவதோடு ஜன்னல் இல்லாத குறையை நீக்கும். சிறிய இடம்தான் இருக்கிறதா ஒரே அலமாரியில் அனைத்தையும் அடுக்குவது போல உள்ள வசதியான அலமாரியை தேர்தெடுப்பது நல்லது.

புத்தகங்களை அடுக்க ஏற்ற உயரமான அலமாரிகளை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். அவை பழமையை பறைசாற்றும் வகையில் இருப்பது நலம். அதே சமயம் கண்களை உறுத்தாத வகையிலும் இருக்கவேண்டும்.

‘பிங்க்’ உதடுகள் பெற சில டிப்ஸ்!

முகத்திற்கு அழகைத் தருவதில் உதடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் உதடுகள் மென்மையாக, பிங்க் நிறத்தில் இருந்தால் முகமே அழகுடன் காணப்படும். சிரிக்கும் போது அழகாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு உதடுகளானது அழகிய அமைப்பிலும், மென்மையாகவும் இருக்க வேண்டும். அந்த உதட்டின் அமைப்பை வெளிப்படுத்தவே சிலர் பல நிறங்களில் உதட்டிற்கு சாயங்களைப் பூசுகின்றனர். அவ்வாறு சாயங்கள் பூசாமல் உதட்டை பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்ணைப் பழத்தை (avocado oil) வைத்து மாற்ற முடியும்.

1. வெண்ணைப்பழ எண்ணெயை வைத்து உதடுகளை பிங் நிறமாக மாற்றலாம். சிறிது வெண்ணைப்பழ எண்ணெயை எடுத்து உதடுகளில் தடவி, சற்று நேரம் மசாஜ் செய்யவும். அப்படி மசாஜ் செய்யும் போது, மேல் உதட்டில் துவங்க வேண்டும். மேலும் மசாஜை முதலில் மேல் நோக்கியே துவங்க வேண்டும். இந்த மசாஜை 4-5 நிமிடம் தினமும் படுக்கும் முன் செய்து வந்தால் உதடானது மென்மையுடன், பிங் நிறத்திலும் மாறும்.

2. ஒரு பௌலில் வெண்ணைப்பழ எண்ணெயுடன் சிறிது தேனை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து, அந்த கலவையை உதட்டில் 3-4 நிமிடம் தேய்க்கவும். பின் அதனை குளிரிந்த நீரால் கழுவினால், அதில் உள்ள உப்பு உதட்டில் இருக்கும் கிருமிகளை அழித்தும், தேன் உதட்டை ஈரப்பசையுடனும் வைக்கும்.

3. மற்றொரு முறை வெண்ணைப்பழ எண்ணெயை சர்க்கரையுடன் கலந்து, பேஸ்ட் போல் செய்து உதட்டில் தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் உதட்டில் இருக்கும் கரும்புள்ளிகளை சர்க்கரை நீக்கி உதட்டை சிவப்பு நிறத்தில் காண்பிக்கும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

4. வெண்ணைப்பழ எண்ணெய் கிடைக்காதவர்கள், அந்த பழத்தை அரைத்து அத்துடன் சிறிது வெண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, உதட்டில் தடவி 4-5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின் அந்த கலவை காய ஆரம்பிக்கும் போது, விரலை பாலால் நனைத்து உதட்டின் மேல் மசாஜ் செய்யவும். இதனால் அதில் உள்ள வெண்ணெய் உதட்டில் ஈரப்பசையை தந்து, உதட்டிற்கு நிறத்தை ஊட்டி பொலிவைத் தருகிறது.

5. மேலும் வீட்டிலேயே ஈஸியாக ஒரு ‘லிப் பாம்’ செய்யலாம். இதற்கு வெண்ணைப்பழ எண்ணெய், தேன்மெழுகு மற்றும் வெண்ணெய் வேண்டும். முதலில் ஒரு பெரிய பௌலை எடுத்துக் கொண்டு அதில் 1 இன்ச் அளவு தண்ணீர் நிரப்ப வேண்டும். பின் தேன்மெழுகை ஒரு சிறிய பௌலில் போட்டு தீயில் வைக்கவும். தேன்மெழுகானது உருகும் போது அத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெயை சேர்க்க வேண்டும். வெண்ணெயானது நன்கு உருக வேண்டும். உருகியப் பின் அதில் வெண்ணைப்பழ எண்ணெயை ஊற்றி கலக்க வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து, ஏதேனும் ஒரு டியூபில் ஊற்றி வைக்க வேண்டும். இப்போது ‘லிப் பாம்’ தயார்!!! வேண்டுமென்றால் அதோடு பிடித்த எசன்ஸ் ஆன ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், பீச் போன்றவற்றை ஊற்றலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால் உதடானது நிறத்தை அடைவதோடு, மென்மையாகவும், வறட்சி அடையாமலும் இருக்கும்.

வாட்ச் அணிபவர்களுக்கு சில டிப்ஸ்!

தற்போதுள்ள அனைவரும் விதவிதமான வாட்ச் அணிய விரும்பம் உள்ளவர்களாக உள்ளனர். அதுவும் பெண்கள் சேலை, சுடிதார், பட்டுசேலைக்கு மேட்சாக வாட்ச் அணியும் கிரேஸ் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

ஆண்கள் லெதர், மெட்டல், கோல்ட் என பல மாடல்கள் வைத்திருப்பனர். ஆனால் அவர்கள் எல்லாமே உபயோகிப்பதில்லை. சிலவாட்ச்கள் பீரோவில் தூங்கும் அப்படி ரொம்பநாள் கழித்து எடுத்து பார்க்கும் போது பேட்டரி போய் விடும். இல்லை கருத்துவிடும். பேட்டரி போகமால் இருக்க வாட்சில் டைம் செட் செய்யும் ஸ்க்ரு இருக்கும். அதை லேசாக இழுத்து விட்டால் மணி ஓடாமல் நின்றுவிடும்.

அப்படியே பீரோவில் வைத்து விட்டு பின்னர் நாம் எடுத்து பயன்படுத்தும் போது அந்த ஸ்க்ரூவை அழுத்தி விட்டு டைம் செட்செய்து போட்டுகொள்ளலாம் இதனால் வாட்ச் பேட்டரி நீண்ட நாள் முடிந்து போகாமல் இருக்கும்.

செண்ட் போன்ற வாசனை திரவியங்கள் பட்டால் வாட்ச் கருத்து வெளுத்து போய்விடும். எனவே வாட்சை எல்லா பொருட்களுடனும் போட்டு வைக்காமல் தனியாக அதற்குறிய பாக்ஸிலோ அல்லது டிஷு பேப்பரில் சுருட்டியோ வைத்தால் கருக்காமல் இருக்கும்

நகைகள் பராமரிப்பு - பயனுள்ள தகவல்!

அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து   குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.

சேமியா பிரியாணி செய்முறை!

சேமியாவை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான எளிதாக சமைக்க கூடிய பிரியாணி.

தேவையான பொருட்கள்:

    சேமியா – 200 கிராம்
    தக்காளி – 2
    பெரிய வெங்காயம் – 1
    கேரட் – 25 கிராம்
    பீன்ஸ் – 25 கிராம்
    பட்டாணி – 25  கிராம்
    இஞ்சி – சிறு துண்டு
    பூண்டு – 1 பல்
    பட்டை – 2  துண்டு
    கிராம்பு – 3
    கசகசா – 1/2  தேக்கரண்டி

செய்முறை

    சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டுதாளிக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.

    பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு காரட், பீன்ஸ், பட்டாணி  மற்றும் தேவையான  அளவு  உப்பு ,தண்ணீர் சேர்த்து

    காய்களை முக்கால்வாசி வேகவிடவும்.

    200 கிராம் சேமியாவுக்கு  400 கிராம் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி கிளறி இறக்கவும்.

குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட தலைமுடிக்கான சில பராமரிப்பு டிப்ஸ்…

குளிர்காலம் என்றாலே குளிர்ந்த காற்றும் மிதமான பனிபொழிவும் தான் நினைவிற்கு வரும். இவை இனிமையாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் சரும பதிப்புகள் நம்மை வருத்தப்படச் செய்யும். அதனால், இந்த குளிர்காலங்களில் நமது உடல்நல மற்றும் சரும பராமரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் சரும மற்றும் உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மீண்டும் இந்த வருடத்திற்கான குளிர்காலத்தை வரவேற்க தயாராகுங்கள். குளிர்காலம் இனிமையாக இருந்தாலும் இது பிரச்சனைகளுக்கான காலமும் கூட. இந்த காலத்தில் உங்கள் சருமமும் தலைமுடியும் வறண்டு போய்விடுவதால், அவற்றின் பராமரிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. குளிர்காலத்தை கண்டு பயம் கொள்ளுபவர்கள் பலர் உண்டு. குளிர்காலங்களில் வீசும் குளிர்ந்த காற்றை நீங்கள் ரசிப்பவராக இருக்கலாம். ஆனால், அது உங்கள் தலைமுடியை பாதிக்கக்கூடும் என்பது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

டிசம்பர் மாதமே வருக வருகவே! உங்கள் விலை உயர்ந்த உடை அலமாரியில் இருக்கும் ஸ்வெட்டர் மற்றும் ஸ்கார்ப்களை எடுப்பதற்கான நேரம் இதுதான். இவை அனைத்தும் உண்மை என்றால், குளிர்காலங்கள் உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்யும் என்பதும் உண்மைதான். குளிர்காலத்தில் தட்பவெட்ப நிலைகளில் வேறுபாடு ஏற்படுவது பொதுவான ஒன்றாகும்.

இதுவே உங்கள் தலை முடி வறண்டு போவதற்கான காரணமாகும். காலங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை அதனால் அதன் நிலைகளுக்கு ஏற்றவாறு இணங்க வேண்டும். ஒவ்வொரு காலங்களும் உங்கள் சருமத்திலும், தலைமுடியிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும். குளிர்கால மாதங்கள் உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்து, அதில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்துவிடும். தலைமுடி மற்றும் தலைச் சருமத்தின் ஈரப்பத பற்றாக்குறை உங்கள் தலைமுடிக்கு பல எண்ணற்ற பிரச்சனைகளை விளைவிக்கும். உங்கள் தலைமுடிக்கான குளிர்கால பராமரிப்பு டிப்ஸ் இதோ உங்களுக்காக. இதனை படித்து பின்பற்றினால், அழகான தலைமுடியை எளிதாக பெறலாம்.

எண்ணெய்களில் கவனம் தேவை

வறண்ட தலைமுடியின் பராமரிப்பில் முதன்மையான தாதுப்பொருளாக இருப்பது இன்றியமையாத எண்ணெய்கள் தான். குளிர்காலங்கள் தலைமுடியையும் தலைச்சருமத்தையும் வறண்டு போகச் செய்யும். அப்பொழுது இன்றியமையாத எண்ணெய்களாகிய தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை தலையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால் சிறந்த பலனை அடையலாம். இது தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

“கூடாது”

தலைமுடிக்கு வண்ணம் பூசுதல், அயர்னிங் செய்வது, ஸ்ட்ரீகிங் செய்வது போன்றவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது. இது குளிர்காலங்களில் தலைமுடி பராமரிப்பில் ஒரு பகுதியாகும். இவை அனைத்தும் உங்கள் அழகான தலைமுடிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால், இவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது. குளிர்கால தலைமுடி பராமரிப்பு மிகவும் இன்றியமையாதலால் தலைமுடியை கவனமாக பராமரிக்க வேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான ச‌மோஷா வீட்டிலேயே செய்யும் முறை!

“வெஜிடபிள் சமோசா செய்யும் முறை

தேவையான பொருட்கள்

மைதா மாவு – ஒன்றரை கோப்பை
வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் – அரைத் தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
உருகைக்கிழங்கு – அரைக் கிலோ
பச்சைபட்டாணி – முக்கால் கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு
துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – கால்தேக்கரண்டி
கரம்மசாலா – அரைத்தேக்கரண்டி
புதினா தழை – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு பிடி
எண்ணெய் – இரண்டு கோப்பை

செய்முறை :

இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி காயவைத்து, நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கவும்.

அதன் பிறகு எல்லாத் தூளையும் போட்டு கிளறவும்.

பின்னர் மசித்த கிழங்கு கலவையை கொட்டி, கொத்தமல்லி, புதினாவை அத்துடன் சேர்க்கவும்.

அனைத்தையும் ஒன்றாக கலந்து, வேகவிட்டு இறக்கி நன்கு ஆறவைக்கவும்.

பிறகு மைதாமாவில் உப்புத்தூள், சூடுபடுத்திய வெண்ணெய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பூரி மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக 10 – 12 உருண்டைகள் செய்து வைக்கவும்.

பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி போல், ஆனால் மெல்லியதாக தேய்த்து, இரண்டாக வெட்டவும். பின்பு ஒரு அரை வட்டத்தில் உருளைகிழங்கு கலவையை வைத்து மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி அழுத்தி ஒட்டவும்.

இதைப் போலவே எல்லா உருண்டைகளையும் சமோசக்களாக செய்து வைக்கவும். பிறகு ஒரு குழிவான சட்டியில் எண்ணெய்யை ஊற்றி, நன்கு காய வைத்து, பிறகு அடுப்பின் அனலை பாதியாக குறைத்து வைத்து சமோசாக்களை இரண்டு அல்லது மூன்றாக போடவும்.

அவை பொன்னிறமாக வேகும் வரை வேகவிட்டு, திருப்பிப்போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். பிறகு மீண்டும் அனலைக் கூட்டி, பின்பு குறைத்து மேற்கூறிய முறையில் எல்லாவற்றையும் பொரித்து எடுக்கவும்.

சுவையான சமோசா தயார்.

முக அழகிற்கு தகுந்த புருவ மாற்றம் !!

முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.

• குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.

• நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.

• ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.

• அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.

• புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.

• சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.

• புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.

• கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

• வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.

• நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.

• நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.

• வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.

• உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.

அஜீரண தொல்லையிலிருந்து விடுபட ஓமம்!

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமி நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும்.


முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி ந“ங்கும். வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும். சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அஜீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்.


குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும். வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும். சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி நீங்கும்.


 இஞ்சிச்சாறுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, கல் உப்பைப் பொடித்துச் சேர்த்துக் குடித்தால், செரிமானக் கோளாறு சட்டென சரியாகும். கால் ஆணி சரியாக ஒரு எளிய வைத்தியம்: தக்காளியை இரண்டாக வெட்டி, அதன் சதைப் பகுதியை ஆணியின் மேல் வைத்து, மீதி அரை தக்காளியால் அதை மூடி, ஒரு துணியால் கட்டிக் கொண்டு தூங்கவும். கூடவே ஓமத்தை பொடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து, 1 டீஸ்பூன் அளவு இரவில் சாப்பிடவும். 1 வாரம் இரண்டையும் செய்து வர, கால் ஆணி குணமாகும்.


மணத்தக்காளி வாய் புண்ணுக்கு நல்லது எனத் தெரியும். மணத்தக்காளிக் கீரையை காரமில்லாமல் பச்சைப் பருப்புடன் சேர்த்து சமைத்தோ, கீரையை லேசாக வதக்கி, வதக்கிய மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தோ சாப்பிட, நீண்ட நாள் இருமலால் உண்டான தொண்டைப் புண்ணும், ரணமும் ஆறும். இஞ்சியைக் கழுவி, தோல் நீக்கி சின்னத் துண்டுகளாக வெட்டவும்.


சுத்தமான தேனில் அதை நான்கைந்து நாட்கள் ஊற வைக்கவும். தினம் இதில் ஒரு துண்டு சாப்பிட்டு வர, சருமச் சுருக்கங்கள் நீங்கி, இளமை ஊஞ்சலாடும். முட்டைக்கோஸை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் பொடியாகும்படி சுற்றவும். அத்துடன் கொஞ்சம் உப்பும் மிளகுத்தூளும் கலந்து, கொஞ்சம், கொஞ்சமாகச் சாப்பிட, எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும்.


முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பதும் பலன் தரும். திடீரென காது வலிக்கிறதா? பூண்டை உரித்து, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, வலிக்கிற காதுக்குள் 1 மணி நேரம் வைத்திருக்கவும். 2-3 நாட்களுக்கு அப்படிச் செய்தால், காது வலி சரியாகும். சீழ் வடிவதும் நிற்கும். 

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க…

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க…

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நிறைய உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த உணவுகளைப் பார்த்தாலும், சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இது கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய உணர்வுகள் தான். சிலருக்கு உணவுகளை சாப்பிடவே தோன்றாது. ஆனால் ஒருசில உணவுகளைப் பார்த்தால், அதன் மீது ஆசை அதிகரிக்கும். அப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுவார்கள். உதாரணமாக, நிறைய கர்ப்பிணிகள் இனிப்புகள், காரமான உணவுகள் அல்லது ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட விரும்புவார்கள்.

அதிலும் குறிப்பாக ஜங்க் உணவுகளை தான் பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவர். ஆனால் அவற்றை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடுவதை தவிர்கக வேண்டும். ஏனெனில் அவை உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். அவை சாதாரணமாகவே ஆரோக்கியமற்றது, கர்ப்பிணிகளுக்கு சொல்லவா வேண்டும்.

எனவே கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்று சிலவற்றை பட்டிலிட்டுள்ளோம். அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, கவனமாக இருங்கள்

சோடா

கர்ப்பமாக இருக்கும் போது கார்போனேட்டட் பானங்களான சோடா அல்லது கூல்டிரிங்ஸ் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் வாயுத் தொல்லையை அதிகரிப்பதோடு, அதில் கலோரிகள் அதிகம் உள்ளன.

தயிர்

பால் பொருட்களில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கும். எனவே கர்ப்பிணிகள் பால் பொருட்கள், குறிப்பான தயிரை அதிகம் சாப்பிட்டால், எலும்புகள் வலுவடையும்.

ஜூஸ்

ஜூஸ் வகைகளில் கேரட், பீட்ரூட் மற்றும் இதர பழச்சாறுகள் மிகவும் ஆரோக்கியமானவை. முக்கியமாக கர்ப்பிணிகளுக்கு சிறந்தது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி


பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பாக்டீரியா அதிகம் இருக்கும். ஜங்க் உணவுகளில் உள்ள இறைச்சிகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்டவையே. எனவே நிச்சயம் இதனை தவிர்க்க வேண்டும்.

முழு தானியங்கள்


தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும். மேலும் தானியங்களில் கலோரிகள் மிகவும் குறைவு.

நூடுல்ஸ்

இந்த உணவுகளை மிகவும் வேகமாக சமைத்துவிடலாம். ஆனால் அந்த உணவுகளை கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் உப்பு, கலோரிகள் அதிகம் இருப்பதோடு, செரிமானமடைவது கடினமாகிவிடும்

சீஸ்

கொழுப்பு குறைவான சீஸில் கலோரிகள் குறைவாகவும், கால்சியம் அதிகமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி இதில் பாக்டீரியா இருக்காது. எனவே இது கர்ப்பிணிகளுக்கான சிறந்த உணவாகும்.

உறைந்த உணவுகள்

உறைந்திருக்கும் உணவுகளில் உப்புகள் அதிகம் இருக்கும். அத்தகைய உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமற்றவை.

கேரட்

கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் சிறந்தது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதும்ட பொலிவோடு அழகாக இருக்க கேரட்டை அதிகம் சாப்பிடலாம்.

சாலட்

மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்றால் சாலட் என்று சொல்லலாம். ஏனெனில் சாலட்டானது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றால் செய்யப்படுவதால், இதில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிடுவதால், வயிறு நிறைவதோடு, கலோரிகளும் குறைவாக இருக்கும்.

பழங்கள்

பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பேரிக்கய் மற்றும் மற்ற பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அதிலும் அவற்றை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், கருவில் இருக்கும் சிசுவிற்கும் நல்லது. எனவே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆனால் பப்பாளி மற்றும் அன்னாசியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.