Tuesday, 11 February 2014

‘பிங்க்’ உதடுகள் பெற சில டிப்ஸ்!

முகத்திற்கு அழகைத் தருவதில் உதடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் உதடுகள் மென்மையாக, பிங்க் நிறத்தில் இருந்தால் முகமே அழகுடன் காணப்படும். சிரிக்கும் போது அழகாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு உதடுகளானது அழகிய அமைப்பிலும், மென்மையாகவும் இருக்க வேண்டும். அந்த உதட்டின் அமைப்பை வெளிப்படுத்தவே சிலர் பல நிறங்களில் உதட்டிற்கு சாயங்களைப் பூசுகின்றனர். அவ்வாறு சாயங்கள் பூசாமல் உதட்டை பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்ணைப் பழத்தை (avocado oil) வைத்து மாற்ற முடியும்.

1. வெண்ணைப்பழ எண்ணெயை வைத்து உதடுகளை பிங் நிறமாக மாற்றலாம். சிறிது வெண்ணைப்பழ எண்ணெயை எடுத்து உதடுகளில் தடவி, சற்று நேரம் மசாஜ் செய்யவும். அப்படி மசாஜ் செய்யும் போது, மேல் உதட்டில் துவங்க வேண்டும். மேலும் மசாஜை முதலில் மேல் நோக்கியே துவங்க வேண்டும். இந்த மசாஜை 4-5 நிமிடம் தினமும் படுக்கும் முன் செய்து வந்தால் உதடானது மென்மையுடன், பிங் நிறத்திலும் மாறும்.

2. ஒரு பௌலில் வெண்ணைப்பழ எண்ணெயுடன் சிறிது தேனை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து, அந்த கலவையை உதட்டில் 3-4 நிமிடம் தேய்க்கவும். பின் அதனை குளிரிந்த நீரால் கழுவினால், அதில் உள்ள உப்பு உதட்டில் இருக்கும் கிருமிகளை அழித்தும், தேன் உதட்டை ஈரப்பசையுடனும் வைக்கும்.

3. மற்றொரு முறை வெண்ணைப்பழ எண்ணெயை சர்க்கரையுடன் கலந்து, பேஸ்ட் போல் செய்து உதட்டில் தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் உதட்டில் இருக்கும் கரும்புள்ளிகளை சர்க்கரை நீக்கி உதட்டை சிவப்பு நிறத்தில் காண்பிக்கும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

4. வெண்ணைப்பழ எண்ணெய் கிடைக்காதவர்கள், அந்த பழத்தை அரைத்து அத்துடன் சிறிது வெண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, உதட்டில் தடவி 4-5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின் அந்த கலவை காய ஆரம்பிக்கும் போது, விரலை பாலால் நனைத்து உதட்டின் மேல் மசாஜ் செய்யவும். இதனால் அதில் உள்ள வெண்ணெய் உதட்டில் ஈரப்பசையை தந்து, உதட்டிற்கு நிறத்தை ஊட்டி பொலிவைத் தருகிறது.

5. மேலும் வீட்டிலேயே ஈஸியாக ஒரு ‘லிப் பாம்’ செய்யலாம். இதற்கு வெண்ணைப்பழ எண்ணெய், தேன்மெழுகு மற்றும் வெண்ணெய் வேண்டும். முதலில் ஒரு பெரிய பௌலை எடுத்துக் கொண்டு அதில் 1 இன்ச் அளவு தண்ணீர் நிரப்ப வேண்டும். பின் தேன்மெழுகை ஒரு சிறிய பௌலில் போட்டு தீயில் வைக்கவும். தேன்மெழுகானது உருகும் போது அத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெயை சேர்க்க வேண்டும். வெண்ணெயானது நன்கு உருக வேண்டும். உருகியப் பின் அதில் வெண்ணைப்பழ எண்ணெயை ஊற்றி கலக்க வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து, ஏதேனும் ஒரு டியூபில் ஊற்றி வைக்க வேண்டும். இப்போது ‘லிப் பாம்’ தயார்!!! வேண்டுமென்றால் அதோடு பிடித்த எசன்ஸ் ஆன ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், பீச் போன்றவற்றை ஊற்றலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால் உதடானது நிறத்தை அடைவதோடு, மென்மையாகவும், வறட்சி அடையாமலும் இருக்கும்.

0 comments:

Post a Comment