Wednesday, 26 February 2014

உங்கள் பற்கள் இயற்கையாக வெண்மையாக வர வேண்டுமா ?

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள்வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம்.

இருப்பினும் ஏதாவது உணவு களை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைக ள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக்கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால் பற்கள் வெண்மையுடன் இருக்கும்.

மே லும் ஒருசில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும் , பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையு டனும் இருக் கும். சரி, இப்போது அத்தகைய பொ ருட்கள் என்ன வென்று பார்க்காம்.

•எலுமிச்சை துண்டை வைத்துபற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

 • பற்களை வெள்ளையாக்கும் பராம் பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென் றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்கவேண்டுமென்று நினை ப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொ த்தை பற்கள் இருப்பவர்களுக் கு கிராம்பு ஒருசிறந்த மருத்துவப்பொருள். அதிலும்தினமும் பற்களை துலக்கும்போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண் ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொரு ட்களில்இதுவும் ஒன்று. இதனை வை த்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்ப தோடு, பளிச்சென்றும் மின் னும்.

• பிரியாணி இலையைபொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கல ந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

உங்கள் காதலில் செய்யக் கூடாதவைகள் !

காதல் செய்யக் கூடாதவைகள் என சில விடயங்கள் இருக்கின்றது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை :

நண்பர்களை கழித்துவிடுதல் :

உமது காதலர் இவ்வளவுக் காலமாக பழகி வந்த தோழர்களையும், தோழிகளையும் வெட்டி விடச் சொல்லுவது.

முதலில் உமது காதலரின் தோழர்கள், தோழிகள் யார் என்பதை கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்களை ஒரு நாள் சந்தித்து நீங்களும் அறிமுகமாகிக் கொள்ளுங்கள். அவர்களின் குண நலங்கள் நன்மையாக இருந்தாலோ, தீமை இல்லாமல் இருந்தாலோ அவர்களோடு நீங்காளும் நட்பைப் பேணலாம். அவர்களின் குண நலங்கள் தவறாக இருந்தால் உடனடியாக அவர்களை விட்டு விலகு என காதலரிடம் கட்டளை இடாதீர்கள். அது சிக்கல்களை உண்டு பண்ணும். கூடா நண்பர்களை உமது காதலர் கொண்டிருந்தால் அவர்களிடம் இருந்து படிப் படியாக காதலரை விலச் சொல்லலாம். அது குறித்து காதலரிடம் உங்களது நிலைப்பாட்டை விலக்குங்கள்.

நம்பிக்கைகளை அழித்துவிடுதல் :

காதல் என்றதும் தான் சார்ந்த அதே சமூகத்தில் இருக்கும் பெண்ணிடம் தான் காதல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு லவ்வர் கிடைப்பது கடினமானக் காரியமாகும். காதல் என்பதே எந்த வித பின்புலம் பாராமல் மனதோடு ஒன்றிப் போகும் உன்னத நட்பு ஆகும். ஆகவே உமதுக் காதலர் வேறு பின்புலத்தில் இருந்தால் அவரது நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவற்றை கைவிடும் படி கட்டளை இடாதீர்கள். உங்களுக்கு அவரது நம்பிக்கைகள் பிடித்து இருந்தால் நீங்களும் பழகிக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றால் அவரது நம்பிக்கைகளை கிண்டலோ, கேலியோ செய்யாதீர்கள். அவரை அவரதுப் போக்கிலே விட்டுவிடுவது நல்லது. வேண்டும் என்றால் ஒரு முறை கூறிப்பார்க்கலாம். அவர் விரும்பினால் தமது நம்பிக்கைகளை மாற்றட்டும். நீங்களே மாற்றும் படி கட்டளையிடாதீர்கள். காதலில் ஒருவரு மற்றவரை அடிமையாக நடத்துதல் கூடாது.

சொன்னதை செய்தல் :

காதல் என்றதும் சில விடயங்களில் பொது உடன்பாடு கொள்ளுதல் ஆகும். அப்படி உடன்பாடுகள் இல்லாத விடயங்களில் உமது ஆதிக்கத்தை நிறுவ வேண்டாம். பொது உடன்பாடுகளில் நீங்கள் கட்டளையிடாதீர்கள். நான் சொன்னதை நீ செய்யவில்லை என கட்டளையிடாதீர்கள். இருவரும் அமர்ந்து ஒரு காரியம் செய்ய முன் பேசுங்கள். குறிப்பாக காதலர் ஆனதும் நீங்கள் ஒரு வாகனம் வாங்க விரும்புகிறீர்கள். உங்களது ரசனையும், உமது காதலரின் ரசனையும் மாறுப்படும் என்றால் - முதலில் இருவரும் பேசி எப்படி வாங்கலாம் ஒருவர் ஒருவரின் விருப்பங்களை அறிந்துக் கொண்டு வாங்குதல் அவசியம்.

பின்புலம் பார்த்தல் :

காதலின் புனிதமே அது காதலரின் பின்புலத்தை ஆராய்வதில்லை. பின்புலம் என்ன என்று தெரிந்துக் கொள்ளுதல் அவசியம். ஆனால் தனது பின்புலம் உயர்வானது என்ற செருக்கு காதலில் வந்துவிட்டால் அது காதலாகாது. உங்களது காதலர் வேற்று மதம், சாதி, மொழி, நாட்டவராய் இருந்தால் அவற்றை அரவணைத்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது தோழர்களிடமும், பெற்றோரிடமும் கூறும் போது எடுத்துக் கூறுங்கள். காதலரின் பாசிட்டவான விடயங்களை முன்வையுங்கள். பின்புலத்தைத் தாண்டியும் நீங்கள் மகிழ்ச்கியான குடும்பம் ஒன்றை நிறுவ ஏதுவான நபர் இவர் தான் என காதலரைப் பற்றி உயர்வாகக் கூறுங்கள்.

உடல் ரீதியான உறவு :

காதல் என்றதுமே பீச், சினிமா, பார்க் சென்று உரசுதல் மட்டுமே என்று பலர் நினைத்திருக்கிறார்கள். காதல் என்பது வெறும் மனம் சம்பந்தம் மட்டுமில்லாமல் உடல் சம்பந்தமானதும் கூட. அதற்காக உங்களது இச்சைகளைத் தீர்க்கும் மெசினாக காதலரைப் பார்க்க வேண்டாம். அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டாம். நிச்சயம் திருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபட வேண்டாம்.


கையைப் பிடித்தல், அணைத்துக் கொள்ளுதல், முத்தமிடல் இவை யாவையும் காதல் சொன்ன அடுத்த நாளே செய்ய வேண்டாம். இந்த மூன்றும் காதலில் இன்றியமையாதவைகள் தான். ஆனால் அதற்கான நேரம், பக்குவம், மன நிலையை தயார்ப்படுத்துதல் அவசியம். உங்களது காதலர் வெறும் உடலுறவுக்குத் தான் உங்களை உட்படுத்த முயல்கிறார் என்றால் அது குறித்து அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். உடலுறவில் ஈடுப்பட்டு விட்டால் பலருக்கு மன ரீதியான அழுத்தங்களும், குற்ற உணர்வும் ஏற்படும் இது காதலில் விரிசல்களையும், தேவையற்ற கர்பங்களைக் கூட ஏற்படுத்தலாம். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதும் நினைவுக் கொள்ளத் தக்கது.


காதலரோடு வெளி இடங்களுக்கு செல்லும் போது தனிமையான இடங்களுக்குப் போக வேண்டாம். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்துக்குச் செல்லுங்கள். தனிமையான இடங்கள் பல நேரம் பல்வேறு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.


சில வேளைகளில் உமது காதலருக்கு மூன்றாம் நபர்களால் ஆபத்தும் நிகழக் கூடும். காதலரை வருங்கால கணவன்/மனைவியாகப் பார்க்கப் பழகினால் அவரது பாதுக்காப்பையும், கௌரவத்தையும், கண்ணியத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.


குறிப்பாக இந்த சமூகம் காதலர்கள் பொது இடங்களில் முத்தமிடுவதையும், கையைப் பிடிப்பதையும், அணைப்பதையும் அனுமதிக்க வேண்டும். இவற்றை அனுமதிக்காமல் தடுப்பதால் தான் பெரும்பாலான காதலர்கள் தனிமையான இடங்களுக்குச் சென்று பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு பசி எடுக்கவில்லையா ? கவலை வேண்டாம் !!!

சாப்பாட்டுக்கு வழியின்றி வாடுவோர் ஒருபுறம் என்றால், விதவிதமான சாப்பாடு இருந்தாலும் பசியின்றித் தவிப்போர் இன்னொரு புறம். ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் பசியின்மை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பிச் சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இதோ.

01-நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே வகை உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாகச் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

02-சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பிச் சாப்பிட முடியும்.

எனவே வழக்கமான காய்கறிகள் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

3-ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொதுவாகச் சாப்பிடப்படும் உணவு நமக்கு ஒத்துக்கொள்ளுமா என்று யோசித்தபிறகே சாப்பிட வேண்டும்.

4-உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களைச் சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையைப் பராமரிப்பதே உடல் நலத்துக்கும், உணவுப் பழக்கவழக்கத்துக்கும் நல்லது.

5-உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாகச் சாப்பிடுவதுதான் சரியான நேரத்துக்குப் பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாகச் சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்குத் தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

6-சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும்.

அடிக்கடி புதிய உணவுகளைச் சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசியெடுப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான செரிமானத்துக்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

7-சேர்க்க வேண்டிய உணவுகளைச் சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளைத் தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும்.

உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளைச் சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளைக் குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

8-எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல.

ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்துக்கு உங்கள் ஆரோக்கியத்துக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமல்லவா?

உடற்பயிற்சிக்குப் பிறகு தக்காளி ஜூஸ் அருமை!

உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பலர் சக்தி பானம் என்று எதைஎதையோ குடித்து உடலைத் தேற்றி வருகின்றனர். ஆனால் தக்காளி ஜூஸ் அருமையான எனெர்ஜி டிரின்க் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


கடுமையாக உடற்பயிற்சி விளையாட்டு வீரர்கள் உட்பட சாதாரண மனிதர்களுக்கும் தேவைதான், ஆனால் அதன்பிறகு தேவைப்படும் எனெர்ஜியக் கொடுக்க, அதாவது இறுகிய தசைகள் ரிலாக்ஸ் ஆகவும், ரத்த ஓட்டம் மீண்டும் நார்மலாகவும் தக்காளி ஜூஸ்தான் சிறந்தது என்கிறது இந்த ஆய்வு.


மேலும்....கிரீஸில் 15 தடகள வீரர்களை வைத்து இந்த பரிசோதனை செய்யப்பட்டதில் தக்காளி ஜூஸ் உடனடி எனெர்ஜி கொடுப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.


தக்காளி ஜூஸ் குடித்தவுடன் குளூக்கோஸ் அளவு விரைவில் நார்மலடைவதை இந்த ஆய்வு கண்டு பிடித்துள்ளது.


தக்காளியில் உள்ள 'லைக்கோபீன்' என்ற ரசாயனம் அதன் சிகப்பு நிறத்தைக் கொடுக்கிறது. சிகப்பு நிறமான எதுவும் உடலுக்கு நல்லதுதான்.


வைட்டமின்கள் பல அடங்கிய தக்காளி புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளை தடுக்கவல்லது.


தசை மற்றும் மூளை பழுதடைவதற்குக் காரணமாகும் சில சுரப்பிகளின் தீமையான அளவை தக்காளி ஜூஸ் குறைக்கிறது.


உடலின் நச்சுத் தன்மையை தக்காளி ஜூஸ் கடுமையாகக் குறைப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு? - ரஜினி ரசிகர்கள் ஆலோசனையா?

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ரஜினி ரசிகர்கள் சென்னையில் கூடி ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் சேலத்திலும் கூடி ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்திகளை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் மறுத்துள்ளது.

ரஜினி வாய்ஸ்

தேர்தலுக்குத் தேர்தல் ரஜினி வாய்ஸ் குறித்து அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பது வழக்கம்.

1996, 1998, 2004- தேர்தல்களில் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு என ரஜினி வாய்ஸ் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு, ரசிகர்கள் தங்கள் விருப்பப்பட்ட கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று கூறிவிட்டார்.

இதனால் ரசிகர்களை வளைப்பதில் திமுக, அதிமுக இரண்டுமே தீவிரமாக வேலை பார்ப்பது வழக்கும். குறிப்பாக திமுக.

பாஜக கோரிக்கை

கடந்த சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி அமைக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி எந்த கட்சியை ஆதரிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடியுடன் நெருக்கமான நட்பு கொண்ட அவர், பாஜகவுக்கு ஆதரவு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

பாஜகவினரும் ரஜினியின் ஆதரவை மேடை தோறும் கோரி வருகின்றனர்.

சென்னையில்

இந்நிலையில்தான் தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், ரஜினி ரசிகர் மன்ற பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவையினர் ஆகியோர் சென்னையில் கூடி தேர்தலில் ஆதரவு யாருக்கு என ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

கூட்டத்தில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்து சேலம்

மேலும் சென்னையை அடுத்து சேலத்தில் கூட்டம் நடத்தி ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறவேற்றி ரஜினியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

மறுப்பு

ஆனால் இந்த தகவல்களை அடியோடு மறுத்துள்ளனர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற சென்னை நிர்வாகிகள். இதுகுறித்து சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராமதாஸிடம் கேட்டபோது, "இப்படியொரு நிகழ்வு நடக்கவே இல்லை. தேர்தல் குறித்து எந்த முடிவையும் தலைவர்தான் எடுப்பார். ரசிகர்கள் எடுக்க முடியாது. இப்படியொரு கூட்டம் எங்கே நடந்ததென்று எங்கள் யாருக்கும்தெரியாது. சேலம் மாவட்ட நிர்வாகிகளைக் கேட்டபோது, அப்படியொரு நிகழ்ச்சியை நடத்தும் திட்டம் இல்லை என்றுதான் சொன்னார்கள். யாராவது தனிப்பட்ட முறையில் பேசினார்களா என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வமான நிர்வாகிகள் யாருக்கும் இதுபற்றிய தகவலே இல்லை," என்றார்.

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

சூது கவ்வும் படத்தில் நடித்த சிம்ஹா மற்றும் அதிதி நடிக்கும் புதிய ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்.


ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் டாக்டர் எல்.சிவபாலன் மற்றும் காபி சினிமாஸ் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய திரைப்படம் 'உறுமீன்'.


சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!


இது ஒரு ஆக்ஷன், திரில்லர் கதை. இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். அச்சு இசையமைக்கிறார். ஸ்ரீசரவணன் ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்.


சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!


சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக அதிதி நடிக்கிறார்.


முக்கியமான கதாபாத்திரத்தில் காளி, வெங்கட், கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.


படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முன்னனி நடிகர் ஒருவருடன் பேச்சு நடத்தி வருகின்றனர். இப்படத்தின் பூஜை இன்று ஜீரோ ரூல்ஸ் அலுவலகத்தில் நடந்தது.


தயாரிப்பாளர் சிவி குமார் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இதில் கலந்து கொண்டனர்.


சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!


கார்த்திக் சுப்பாராஜ் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். இப்படப்பிடிப்பு மார்ச் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் தொடங்கி, கோவை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடக்கிறது.

இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா தம்பதியரின் 34வது திருமண நாளுக்கு வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் திரண்டனர்.


திரையுலகில் பிற நடிகர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் உதாரணமாகத் திகழும் தம்பதியர் ரஜினிகாந்த் - லதா.


இருவருக்கும் கடந்த 1981-ம் ஆண்டு இதே நாளில் திருப்பதியில் திருமணம் நடந்தது. நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர வேறும் யாருக்கும் திருமணத்துக்கு அழைப்பு தரவில்லை.


இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்


பத்திரிகையாளர்கள் நிச்சயம் வரவேகூடாது என பிரஸ் மீட் வைத்தே கூறிவிட்டார். அப்படியும் மீறிச் சென்ற பத்திரிகையாளரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பினார் ரஜினி.


அதன் பிறகு சென்னையில் அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நடத்தினார்.


ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், திரையுலகைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் திகழ்ந்தாலும், குடும்பத்தைப் பொருத்தவரை ஒரு எளிய தலைவனாக, மனைவிக்கு மரியாதை கொடுத்து, அதற்கேற்ப நடக்கும் ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு அன்பான தகப்பனாகத் திகழ்கிறார்.


இந்த ஆண்டு திருமணம், அடுத்த ஆண்டு விவாகரத்து, அதற்கடுத்த சில மாதங்களில் மறு திருமணம்.. என்பதே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறையாகிவிட்ட இந்த திரையுலகில்... ரஜினி- லதா உதாரணத் தம்பதியராகத் திகழ்கின்றனர்
.

இந்த ஆண்டு இருவருக்கும் திருமணமாகி 33 ஆண்டுகள் முடிந்து, 34 ஆவது ஆண்டு பிறக்கிறது. ஆண்டு தோறும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 மட்டுமல்ல, திருமண நாளான பிப்ரவரி 26-ம் தேதியும் வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக்கு ரசிகர்கள் செல்வது வழக்கம். அவர்களை வரவேற்று இனிப்பு வழங்குவார் லதா ரஜினிகாந்த்.


இந்த ஆண்டும் ஏராளமான ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலிருந்து ரஜினிக்கும் லதாவுக்கும் மலர்க் கொத்துகள், பரிசுகள் கொடுத்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவர்களை வரவேற்று நன்றி கூறி இனிப்பு வழங்கினார் லதா ரஜினி.

பாக் மில்கா பாக் - ஓடு மில்கா ஓடு!

 தடகள வீரனைப் பற்றி நகைச்சுவையாகச் சொல்லி கடந்த ஆண்டு வெற்றி கண்ட படம் எதிர்நீச்சல். அழுத்தமான பதிவாக வெளியானது ஹரிதாஸ். இந்தி சினிமாவில் தடம்பதித்தது பாக் மில்கா பாக். இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரரான மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைத் தழுவி உருவான பயோபிக் திரைப்படம் இது. 187 நிமிடங்கள் ஓடும் இந்த படம், இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. உலக ரசிகர்களையும் கவர்ந்தது.


மூன்று மணிநேரப் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்த இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர், அக்ஸ், ரங்க் தே பசந்தி டெல்லி-6 போன்ற படங்களுக்காகத் தேசிய விருதுகளையும், பிலிம்ஃபேரின் பல விருதுகளையும் பெற்ற ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா. ரங்க் தே பசந்தி (2006), ராகேஷ் மெஹ்ராவுக்குப் பாலிவுட்டில் பெரிய அடையாளத்தைத் தந்தது என்றால் பாக் மில்கா பாக் அவரை இந்தியாவின் முதன்மையான இயக்குநர்களில் ஒருவராக ஆக்கியது.


படத்தின் கதை என்ன?


ரோமில் 1960இல் நடைபெறும் ஒலிம்‌பிக்ஸில் மில்கா சிங் ஓடத் தயாராகும்போது, அவரின் பயிற்சியாளர் “ஓடு மில்கா ஓடு” என்கிறார். மில்காவின் ஓட்டத்தை, அவரின் சிறு வயது அனுபவங்களும் துயரங்களும் தடை செய்து, அவரை நான்காவது இடத்துக்குத் தள்ளுகின்றன.


மில்கா சிங்கின் வாழ்க்கையைச் சிறு வயதிலிருந்து நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம். 1947இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் பிரிவினை கலவரங்களில் மில்கா சிங்கின் பெற்றோர்கள் கொல்லப்படுகிறார்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகளோடு பெற்றோரை இழந்த சிறுவன் மில்கா சிங் டில்லி வந்து சேர்கிறான்.


சில நாட்களில் தப்பி வந்த தன் அக்காவையும் அவள் கணவனையும் காண்கிறான். அகதிகள் முகாமில் மில்காவுக்கு நண்பர்கள் கிடைக்கிறார்கள். அக்காள் கணவனுடன் ஒரு சிறிய பிரச்சினையில் அங்கிருந்து வெளியேறுகிறான். தனியாக நண்பர்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறான். ஓடும் ரயிலில் நிலக்கரி திருடிச் சம்பாதிக்கிறான்.


காலம் கரைகிறது. இளைஞனாகும் மில்கா (பர்ஹான் அக்தர்) நண்பர்களுடன் நிலக்கரித் திருட்டைத் தொடர்கிறான். அப்பகுதியில் வசிக்கும் பீரூவை (சோனம் கபூர்) காதலிக்கிறான். அவளும் காதலித்தாலும், அவனுடைய திருட்டுத் தொழிலை அறிந்து, அவன் நல்ல பாதைக்குத் திரும்பினால் மட்டுமே அவனுடன் வாழ விரும்புவதாகச் சொல்கிறாள்.இதனால் மில்கா ராணுவத்தில் சேர்கிறான். அங்கே அவன் ஓட்டத்தைப் பார்த்து, ஹவால்தார் குருதேவ் சிங் (பவன் மல்ஹோட்ரா) அவனை ஊக்கப்படுத்துகிறார்.


ஒலிம்பிக் போட்டிக்காக இந்தியப் பெயர் பொறித்த மேல் அங்கியின் மீது ஆசைப்படும் மில்காவைக் கண்டு மூத்த பணியாளர்கள் நகைக்கிறார்கள். அந்த மேல் அங்கியை அடையப் பல பயிற்சிகளை எடுக்கிறான். பயற்சியாளர் ரன்வீர் சிங்கின் (யோகராஜ் சிங்) பார்வை அவன் மேல் படுகிறது. ஒலிம்‌பிக்ஸ் போட்டிக்குச் செல்லும் அணிக்கான தேர்வில், கால் அடிபட்ட நிலையிலும் ஓடி தேசிய சாதனையை முறியடிக்கிறான். ஒலிம்பிக் குழுவில் இடம் பிடித்து அங்கியைப் பெறுகிறான். அந்தப் பெருமையுடன் பீரூவைக் காணச் செல்கிறான். ஆனால் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மில்கா ஏமாற்றத்துடன் திரும்புகிறான்.


மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் (1956) அவன் ஓடத் தயாராகிறான். அங்கே, ஆஸ்திரேலியப் பயிற்சியாளரின் பேத்தி ஸ்டெல்லா (ரெபேக்கா ப்ரீட்ஸ்), எனும் இளம் பெண் பழக்கமாகிறாள். அவளுடன் இரவைக் கழிக்கிறான். அந்தக் களைப்பில் மறுநாள் தோற்கிறான். வந்த நோக்கத்தை மறந்து சந்தோஷத்தில் திளைத்து, நாட்டை ஏமாற்றியதற்கு வருந்துகிறான்.


 400 மீட்டர் ஓட்டத்தில், உலக சாதனை நேரமான 45.9 விநாடிகளை இலக்காகக் கொண்டு, கடுமையான பயிற்சிகளை எடுக்கிறான். 1958இல் டோக்கியோவில் ஆசியப் போட்டியில், 200 மீட்டர் பந்தயத்தில், 21.6 விநாடிகளில் ஓடி, வெற்றி அடைகிறான். 1958இல் காமன்வெல்த் போட்டியில், 45.8 விநாடிகளில் 400 மீட்டர் ஓடி உலக சாதனை படைக்கிறான்.

இந்தியா பாகிஸ்தான் இடையே நட்புறவை வளர்க்க ஓட்டப் பந்தயம் நடத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபர் அயுப் கானும் முடிவு செய்கிறார்கள். மில்கா சிங் பழைய அனுபவங்களால் பாகிஸ்தான் செல்ல மறுக்கிறார். நேரு அவரைச் சந்தித்துப் பேசுகிறார். மில்கா பாகிஸ்தான் சென்று தன் சிறு வயதில் வசித்த கிராமத்திற்குச் சென்று நினைவுகளில் மூழ்கி அழுகிறார்.


ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு போட்டியில் வெல்கிறார். அதிபர் ஆயுப் கான் 'பறக்கும் (ஃ ப்ளையிங்க்) சீக்கியர்' என்று மில்காவைப் புகழ்கிறார். அவர் வெற்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடுமையான உழைப்பும் மனோபலமும் ஆழ்ந்த ஈடுபாடும் இருந்தால் உலகை வெல்ல முடியும் என்ற செய்தியுடன் படம் முடிகிறது.


படத்தின் சிறப்புகள்


மில்கா சிங்கும் அவர் மகள் சோனியா சான்வால்காவும் எழுதிய 'த ரேஸ் ஆஃப் மை லைஃப்' புத்தகத்தின் பாதிப்பில், பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி திரைக்கதையை எழுதினார். திரைக்கதையை எழுத 30 மாதங்களாயின. 30 கோடியில், 12 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் 160 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. பல மாநிலங்களில் இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. உலகெங்கிலும் பல பாராட்டுகளைப் பெற்றது.


இது ஒரு விளையாட்டு வீரனின் வெற்றிக் கதை மட்டுமல்ல. ஒரு தனி மனித ஆன்மாவின் வெற்றி. வணிக சமரசம் இல்லாமல் உண்மையாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இருந்த ஜீவனால் உலக அளவில் மாபெரும் வெற்றிப்படமானது. இந்திய விளையாட்டு அரங்கில் எவ்வாறு மில்கா சிங்கின் பெயர் காலம் காலமாக நிலைத்து இருக்குமோ, அதே போல், மில்கா சிங்காக வாழ்ந்திருக்கும் பர்ஹான் அக்தரின் கடின உழைப்பிலும் பிரமாதமான நடிப்பிலும் வந்திருக்கும் பாக் மில்கா பாக் படமும் ரசிகர்கள் மனத்தில் என்றும் இருக்கும். 

ப‌சி‌யி‌ன்மையை‌ப் போ‌க்கு‌ம் க‌றிவே‌ப்‌பிலை!

க‌றிவே‌ப்‌பிலை, சு‌க்கு, ‌மிளகு, ‌தி‌ப்‌பி‌லி, காய‌ம், இ‌ந்து‌ப்பு சம அளவு எடு‌த்து பொடி செ‌ய்து, சுடுசாத‌த்‌தி‌ல் கல‌ந்து நெ‌ய் ‌வி‌ட்டு ‌பிசை‌ந்து சா‌ப்‌பிட ‌ப‌சி‌யி‌ன்மை, உண‌வி‌ல் வெறு‌ப்பு, பு‌ளியே‌ப்ப‌ம், வா‌ய் கும‌ட்ட‌ல் ஆ‌கியவை குணமாகு‌ம்.


குழ‌ந்தைகளு‌க்கு‌ம் இ‌ந்த சாத‌த்தை ‌சி‌றிய அள‌வி‌ல் கொடு‌த்து வரலா‌ம்.


க‌றிவே‌ப்‌பிலை ஈ‌ர்‌க்குட‌ன் சே‌ர்‌த்து இடி‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து ‌கிரா‌ம்பு, ‌தி‌ப்‌பி‌லி பொடியை சே‌ர்‌த்து குழை‌த்து தர குழ‌ந்தைகளு‌க்கு உ‌ண்டாகு‌ம் வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ந‌ன்கு ப‌சியெடு‌க்கு‌ம்.


க‌றிவே‌ப்‌பிலை, ‌மிளகு, ‌சீரக‌ம், வெ‌ந்தய‌ம், சு‌ண்டை வ‌ற்ற‌ல், சூரண‌த்து உ‌ப்பு சே‌ர்‌த்து உ‌ண‌வி‌ல் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வர ம‌ந்த‌ம் ‌நீ‌ங்‌கி ப‌சி உ‌ண்டாகு‌ம்.


க‌‌றிவே‌ப்‌பிலையை துவையலாகவோ, பொடியாகவோ செ‌ய்து ‌தினமு‌ம் உ‌ட்கொ‌ண்டு வர, செ‌ரியாமை, ப‌சி‌யி‌ன்மை, க‌ழி‌ச்ச‌ல் இவ‌ற்றை‌ப் போ‌க்கு‌ம். தலைமுடியை ‌நீ‌ண்டு வளர‌ச் செ‌ய்யு‌ம். 

மூலிகைகளின் அற்புதங்கள்!

கீழாநெல்லி :

தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் பிழிந்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டுவர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்ல மருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்றகல்லீரலை மீட்கிறது.


துளசி:

மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரûஸ எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி, ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரிக்க, அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து நோய் எதிர்ப்பு திறன் கொண்டது.


ஆஸ்துமா நோயாளிகளின் நண்பன். 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் பல் கூசுதல் தொண்டை புண் தொண்டைச்சளி குணமடையும்.


கரிசலாங்கண்ணி:

கல்லீரலில் ஏற்படும் புண், வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண், தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது. ஹெபடைடில் ஏ.பி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் இருமலை மட்டுப்படுத்தும் அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரமிருமுறைஉண்டு வர சளி பிடிக்காது.


தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும். இலைகள் கைப்பிடியளவு சிறிது உப்பு சேர்த்து மண் பானையிலிட்டு வதக்கி நாய் கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுத்து அதே இலையை வைத்து கட்டினால் நஞ்சு முறிந்து விடும்.


பிரண்டை:

பிரண்டை சாறு கருப்பைக் கட்டிக்கு மருந்து. பைலோரி என்னும் கிருமி உண்டாக்கும் வயிற்றுபுண்னை ஆற்ற வல்லது. பசியை தூண்டும்.


அதிமதுரம்:

நாவறட்சி தொண்டைக்கட்டு வறட்டு இருமலுக்கு “டாக்டர்” குடல் புண்னை ஆற்றும். இனிப்பு, சர்க்கரைக்கு பதிலாக அதிமதுரத்தை பயன்படுத்தலாம்.


அருகம்புல்:

ரத்த கொலஸ்டிராலைக் குறைக்க, உடல் எடை குறைய உதவும் நச்சுக்களால் உடலில் ஏற்படும் திடீர் அரிப்பு நோய் ஒவ்வாமை நோய்க்கு அருகம்புல் சாறு 100மி தினமும் 2 வேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிட 15 நாளில் பலனுண்டு.

பல குரல்களில் டப்பிங் பேசும் விக்ரம்?


ஐ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. பொதுவாக படப்பிடிப்பு முடிந்த பிறகே போஸ்ட் புரொடக்சனை வைத்துக் கொள்வார்கள்.


படப்பிடிப்புக்கு ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் ஐ போன்ற பிரமாண்டப் படங்களுக்கு இப்படி வேலைகளை அடுத்தடுத்து முடிப்பதென்றால் மேலும் ஒரு வருடம் பிடிக்கும். படப்பிடிப்புடன் சேர்த்து போஸ்ட்புரொடக்சன் வேலைகளையும் ஷங்கர் நடத்தி வந்தார்.


இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் முன்பே முதல்பாதி படத்தின் டப்பிங்கை விக்ரம் முடித்துவிட்டார். விரைவில் இரண்டாவது பாதிக்கான டப்பிங்கை தொடங்குகிறார்.


பலவித தோற்றங்களில் நடித்திருப்பதால் அந்தந்த தோற்றங்களுக்கு ஏற்ப குரலில் மாறுதல் செய்து விக்ரம் டப்பிங் பேசவுள்ளதாக தெரிவிக்கிறது படயூனிட்.


ஐ யில் எமி ஜாக்சன், சுரேஷ் கோபி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். பீட்டர் ஜாக்ஸனின் வீட்டா ஸ்டுடியோ படத்தின் மேக்கப் பணிகளை மேற்கொண்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


தயாரிப்பு ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம்ஸ்.

ஆஹா கல்யாணம் வெளிநாடுகளில் வசூல் நிலவரம்!


ஆஹா கல்யாணம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் முதல் தென்னிந்திய தயாரிப்பு. ஒரே நாளில் தமிழ் தெலுங்கில் வெளியானது.


இரண்டு மொழிகளிலும் படம் ப்ளாப். எதிர்பார்த்த கலெக்சன் கிடைக்காதது மட்டுமின்றி எதிர்பார்க்காத தோல்வியும் அடைந்துள்ளது படம்.


வெளிநாடுகளிலும் நிலைமை சொல்லும்படி இல்லை.


யுஎஸ்ஏ யில் இப்படம் முதல் மூன்று தினங்களில் எட்டு திரையிடல்களில் 2.21 லட்சங்களை வசூலித்துள்ளது. தழிழ் பரவாயில்லை.


இதன் தெலுங்குப் பதிப்பு இங்கு 2 திரையிடல்களில் 86,000 ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.


கனடாவில் ஆஹா கல்யாணம் முதல் மூன்று தினங்களில் ஒரு திரையிடலில் 22,800 ரூபாயை வசூலித்துள்ளது.


யுகே மற்றும் அயர்லாந்தில் ஐந்து திரையிடல்களில் 90,000 ரூபாய். நியூசிலாந்தில் ஒரு திரையிடலில் 16,100 ரூபா‌ய்.


யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்பதால் வழக்கமாக தமிழ்ப் படங்கள் வெளியாகாத நாடுகளிலும் ஆஹா கல்யாணம் வெளியானது. ஆனால் வரவேற்புதான் சரியில்லை.

போச்சுடா... விமலும் இப்போ பாடகர்!

கமல், சிம்பு, ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவ கார்த்திகேயன்.... என்ற நீண்ட வரிசையில் இப்போது விமலும். இந்த நல்ல (அல்லது கெட்ட) காரியத்தை செய்தவர் டி.இமான்.


இப்போதெல்லாம் நடிகர்களை பாட வைப்பது அவர்களின் குரலுக்காக கிடையாது. சும்மா ஒரு பாடலை பதிவு செய்தால் மீடியா திரும்பிப் பார்க்காது. இதுவே ஒரு நடிகர் அல்லது நடிகை பாடினால் நாலு காலத்துக்கு செய்தி போட்டு நாறடித்து...


ஸாரி விளம்பரப்படுத்துவார்கள். தவிர இப்போது வருகிற டாஸ்மாக் கானா பாடலுக்கோ, ஈவ்டீஸிங் பாடலுக்கோ குரல் முக்கியமில்லை.


வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவ கார்த்திகேயனை பாடகராக்கிய டி.இமானுக்கு விமலின் மீது ஒரு கண் போலிருக்கிறது. ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவில் அதனை தீர்த்துக் கொண்டார்.


கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இந்தப் படத்துக்கு டி.இமான்தான் இசை. அதில் வரும் ஒரு பாடலை விமலிடம் தந்து பாட வைத்துள்ளார். சும்மா சொல்லக் கூடாது சூப்பராகவே பாடியிருக்கிறார் என்கிறார்கள் உடனிருந்தவர்கள்.


குளோபல் இன்போடெய்ன்மெண்ட் மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்கிறார். 

ஹன்சிகா கடந்த காலம் - பிரேக்கப்பை அறிவித்த சிம்பு !


சிம்பு, ஹன்சிகா காதலிக்கிறார்களா இல்லை கா விட்டு பிரிந்துவிட்டனரா?


 இரண்டு வாரமாக அல்லாடிக் கொண்டிருந்தவர்களை தனது அறிவிப்பு மூலம் ஆஃப் செய்துள்ளார் சிம்பு.


வேட்டைமன்னன், வாலு படங்களில் நடித்த போது சிம்பு - ஹன்சிகாவிடையே காதல் மலர்ந்தது.


 இருவரும் அதனை ட்விட்டரில் உறுதி செய்தனர்.


சிம்பு, ஹன்சிகா பற்றி அறிந்தவர்கள் இந்த ட்விட்டர் காதல் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும் என ஆருடம் கூறினர்.

நடிகையை மெய் மறந்து ரசித்த - வெங்கட்பிரபு!

இயக்குனர் வெங்கட்பிரபு தனது சகாக்களான ஜெய், வைபவ், சிவா, தம்பி பிரேம்ஜி உள்ளிட்ட நடிகர்களுடன் எந்த விழாக்களுக்கு வந்தாலும், விழா களை கட்டுமாம் . அந்த அளவுக்கு அங்கு வந்திருப்பவர்களைப்பற்றி ஏதாவது சொல்லி கலாய்த்துக்கொண்டேயிருப்பார்கலாம்.


அப்படிப்பட்ட வெங்கட்பிரபு, சமீபத்தில் ஒரு சினிமா விழாவுக்கு வந்திருக்கிறார் , அப்படத்தின் நாயகியான ரம்யா நம்பீசனின் பெயரை மேடையில் பேசுபவர்கள் குறிப்பிட்டாலே கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


இதனால் எதிரே இருக்கும் ரசிகர்களை விட, மேடையில் தனக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பார்கள் போலிருக்கே என்று பெருமையாக அமர்ந்திருந்தார் ரம்யா நம்பீசன். ஆனால், அதைப்பார்த்து அவர்கள் ரம்யாவை கலாய்க்கிறார்கள் என்றுதான் மற்றவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.


ஆனால், வெங்கட்பிரபு பேசுகையில், ரம்யாவை குறிப்பிட்டு, நான் சாதாரணமாக எல்லா நடிகைகளையம் ரசிக்க மாட்டேன். ஆனால், ரம்யாநம்பீசனின் பியூட்டியும், பர்பாமென்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த குள்ளநரிக்கூட்டம் படம் பார்த்ததில் இருந்தே நான் அவரது ரசிகனாகி விட்டேன்.


இப்போதும் அவர் நடித்த படங்களென்றால அவருக்காகவே அந்த படங்களை ஆர்வமாக பார்த்து ரசித்து வருகிறேன் என்று பேசினார்.


இதை கேட்டுக்கொண்டிருந்த ரம்யா நம்பீசன், ஒரு பிரபல டைரக்டரே தனது பர்பாமென்ஸ் பற்றிமேடையில் பெருமையாக சொன்னதோடு, அவரை தனது ரசிகர் என்றும் சொன்னதால், சொல்ல முடியாத சந்தோசத்தில் திளைத்துப்போயிருந்தார்

யுவன் மதம் மாறியது குறித்து கேட்காதீங்க! - இளையராஜா!

இயக்குனர் மகேந்திரன் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் . இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குனர் மகேந்திரன். நடிகர் நடிகையர் தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.


இதனிடையே படத்திற்கான பிரஸ்மீட் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் இளையராஜாவும், மகேந்திரனும் கலந்து கொண்டனர். ஆனால் பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ., முகத்தில் ஒரே டென்ஷன் காணப்பட்டிருக்கிறது.


காரணம், இரண்டு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கிடையாது. சில வாரங்களுககு முன் இஸ்லாமியராக மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி பத்திரிகையாளர்கள் அவரின் தந்தை இளையராஜாவிடம் ஏடாகூடமாக எதுவும் கேட்டுவிடக் கூடாது என்று தான்.


 இது குறித்து முன்னதாகவே சுதாரித்துக் கொண்ட பி.ஆர்.ஓ., பிரஸ்மீட்டில் கேள்வி கேட்கும் வழக்கமுடைய முக்கிய பத்திரிகையாளர்களை அழைத்து மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்.


அவருடைய இந்த பரிதாப நிலைமையை உணந்த பத்திரிகையாளர்கள் இளையராஜாவிடம் யுவன் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லையாம். இதன்பிறகே சம்மந்தப்பட்ட அந்த பி.ஆர்.ஓ., நிம்மதி பெருமூச்சிவிட்டிருக்கிறார்.

அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களின் இயக்குநர்கள்!

'ஆரம்பம்' , 'வீர்ம்' படங்களின் ஹிட் அலைவரிசை தொடரவேண்டும் என்பதே அஜித்தின் ஆசை. அதற்காகவே பார்த்துப் பார்த்துப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் அஜித்.


கௌதம் மேனன் இயக்கும் அஜித் படம் மார்ச் மூன்றாம் வாரத்தில் தொடங்குகிறது.


அதற்கடுத்து அஜித் யார் படத்தில் நடிப்பார் என்பதுதான் கேள்வியாக இருந்தது.


கௌதம் படத்தை முடித்த பிறகு, அஜித் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறார்.


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 56வது படம்,


விஷ்ணுவர்தன்  இயக்கத்தில் 57வது படம்,


சிவா இயக்கத்தில் 58வது படம் என அஜித் நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.


ரஜினி நடிப்பதாக இருந்த கே.வி.ஆனந்த் கதையில் அஜித் நடிக்கப் போவதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


விஷ்ணுவர்தன் இயக்கும் படம் 'பில்லா' அளவுக்கு மாஸ் படமாக இருக்குமாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் - முழு விளக்கமளித்தார்..இன்று...?

துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் தொடங்கி சென்னை, ராஜமுந்திரி என்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ஆரம்பத்தில் விஜய், வங்காள மொழி வில்லன் நடிகர் டோட்டா ராய் செளத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது விஜய்-சமந்தா சம்பநதப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியபோது அப்படம் பற்றி மீடியாக்களில் பேட்டி கொடுத்த டோட்டா ராய் செளத்ரி அதில் தனது வில்லன் கதாபாத்திரம் பற்றி சொன்னவர், விஜய் இரண்டு வேடம் என்பதையும், தன்னை ஜெயிலுக்குள் தள்ளும் அவரை பழிவாங்க தான் விஸ்வரூபம் எடுப்பது போன்றும் படத்தின் சில முக்கியத்துவம் வாய்ந்த ட்ராக்கை அவுட் பண்ணினார்.


இதனால் அதிர்ச்சியடைந்த முருகதாஸ், கதையின் மையத்தை அவர் மீடியாக்களில் உளறி விட்டதால், அவசரகதியில் கதையில் திருத்தம் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.


ஆனால், இப்போது அதை மறுத்துள்ளார் முருகதாஸ். என் படத்தின் கதையை அத்தனை எளிதில் எல்லோரிடமும் நான் சொல்லி விடுவதில்லை. மேலும், இந்த படத்தைப்பொறுத்தவரை டோட்டா ராய் முக்கிய வில்லன் இல்லை.


அவர் ஒரு சிறிய வில்லன்தான். அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே விளக்கினேன். மற்றபடி படத்தின் முழுக்கதை அவருக்கு சொல்லவே இல்லை. அதனால், அவர் என் படத்தின் கதையை அவுட் பண்ணி விட்டார் எனவும், அதற்காக நான் கதையில் திருத்தம் செய்து வருவது போலவும் வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று தற்போது மீடியாக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார் முருகதாஸ்.

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி?

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிப்பது சற்றே கடினமான காரியம் தான். மனைவியை சமாளிப்பது தவிர மற்ற எல்லா துறைகளிலும் ஆண்கள் முன்னணயில் உள்ளனர் என்பதும் உண்மை!

ஆமாம் கணவன்மார்களே! நாங்கள் குறை சொல்லவில்லை, உண்மையை சொல்கிறோம். உங்களில் சில பேர் மட்டுமே உங்களுடைய தந்தை, அம்மாவை சமாளிப்பதை கவனித்திருப்பீர்கள்.

இந்த விஷயத்தை சமாளிக்கும் குறிப்புகளை சொல்லத் தொடங்குவதற்கு முன்னர், ´தவறு´ செய்வது மனைவிகள் மட்டுமல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். கோபமாக இருக்கும் மனைவினை சமாளிக்க முடியவில்லையெனில், அதற்கு சம அளவு காரணமாக நீங்களும் இருப்பீர்கள்.

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க விரும்பும் நீங்கள், அவள் உங்களுடைய குடும்பத்தை நடத்துவதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுக்கிறாள் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவளுக்கும் சொந்தமான வாழ்க்கை உள்ளது. எனவே, நாம் உண்மையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது தான். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தும் சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

உண்மையில் அவள் மன அழுத்தத்துடன் இருக்கிறாள், அவளுக்கு உங்களுடைய அன்பு தேவைப்படுகிறது. அவளை முத்தமிடுங்கள், அவளை எந்த அளவிற்கு விரும்புகிறீர்களோ அந்த அளவிற்கு முத்தமிடுங்கள். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த இதைவிட சிறந்த டிப்ஸ் எதுவும் இல்லை.

பெரும்பாலான பெண்கள்,தங்களுடைய கணவன்மார்கள் தங்களுடைய பிரச்னைகளை புரிந்து கொள்வதில்லை என்று நினைக்கிறார்கள். ஆண்களுடைய ஆண்மை குணம், பெண்கள் பேசும் போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு விடுகிறது. மாறாக, அவளை ஓய்வெடுக்கச் செய்யுங்கள் மற்றும் அவளுடைய பிரச்னைகளை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று புரிய வையுங்கள்.

அவள் சமைக்கிறாள். மேலும்,நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். எனவே, அவளை சமாதானப்படுத்த வேண்டிய வேலை உங்களுடையது தான். அவளுக்கு துணிகளை துவைக்க நீங்கள் உதவி செய்யுங்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இவ்வாறு செய்தால் அவள் உண்மையிலேய சமாதானமடைவாள்.

நீங்கள் செய்த விஷயங்களை அவள் கவனிக்க மாட்டாள் மற்றும் மேலும் மேலும் ஏதாவது செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டிருப்பாள். இந்த வேலைகளை செய்த குறிப்புகளை படுக்கை, சமையலறை மற்றும் டைனிங் டேபிளில் விட்டுச் செல்லுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை அவளுக்கு சொல்லுங்கள். இதை அவள் புரிந்து கொள்வாள் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த உங்களுக்கு உள்ள மற்றொரு சிறந்த வழி நன்றி சொல்வது! அவள் செய்த விஷயங்கள் பற்றி பேசத் தொடங்குங்கள். ஆவற்றிற்காக நன்றி தெரிவியுங்கள். இப்படி செய்தால் உங்களுக்கு சுவை மிக்க டின்னர் கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய நாட்களின் ஆண்களுக்கு பெண்களும் சமம் என்பதை நாம் அறிவோம். உங்கள் மனைவி நன்கு படித்தவராகவும் மற்றும் வேலை செய்ய விரும்புபவராகவும் இருக்கலாம். ஆனால், அவளுக்கு பிடித்த வேலையை அவளையே தேர்ந்தெடுக்க செய்யுங்கள். உங்களுடைய பண சுமையை குறைப்பதற்காக என்றில்லாமல், அவளுடைய திருப்திக்காக அவளை வேலை செய்ய விடுங்கள்.

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த இதுவும் ஒரு சிறந்த வழியே! உங்கள் மாமியாரை வீட்டுக்கு அழைத்து,அவரை உங்களுடைய அம்மாவிற்கு சமமாக மதித்து நடந்து கொள்ளுங்கள். இந்த செயலின் பலன் சிறப்பாக இருக்கும்.

ஆண்கள் மனரீதியாக உறுதியாக இருக்க வேண்டும். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தும் வழிகளை தேடுவதை விட்டு விட்டு,அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ள முன்னணியில் இருந்து தயாராக இருங்கள்! முன்னணிக்கு சென்று உங்கள் குடும்பத்தின் அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளுங்கள்.

எதுவுமே நடக்கவில்லையென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை மற்றும் அவள் உங்களை சுரண்டுகிறாள் என்றும் நீங்கள் நினைக்கும் போது இதை செய்யுங்கள். அவளுடைய நடவடிக்கைகளை நீங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்று அவளிடம் பொறுமையாகவும், உறுதியாகவும் சொல்லுங்கள். இது அவளை சமாதானப்படுத்திவிடும்.

அழகான புருவம் வேண்டுமா?

புருவங்கள் தான் பெண்களின் கண்களிலேயே அழகை மிகைப்படுத்தி காட்டும் பகுதியாக உள்ளன. இவை முகத்தின் அழகை வெளிப்படுத்தும் பாகமாகவும் உள்ளன.

விளையாட்டிற்கு கூட நமது அழகை நாம் பாழ்படுத்த விரும்புவதில்லை. டிரிம் செய்யாத புருவமும் இப்படித்தான், தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருந்து நமது அழகை பாழாக்கும்.

நமது உடல் அமைப்பிற்கேற்ப நமது புருவங்களும் இருப்பது அவசியம். இது நமது அழகையும் அமைப்பையும் மிகைப்படுத்தும். இதை பெறுவதற்கு ஏதேனும் இரசாயன மருந்துகளையும் சிகிச்சையும் நீங்கள் பெற விரும்பினால் அது தவறு.

இதை எல்லாம் முயற்சி செய்து நம்மை நாமே பாழாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. எனவே, இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு சரி செய்ய முடியும்.

இதை வைத்து நாம் அடர்த்தியான புருவங்களை பெற முடியும். கொஞ்சம் கூட இரசாயனம் இல்லாமல் சிறப்பான முறையில் மற்றும் பாதுகாப்பான வழியில் பெறும் வழியாகும். கீழ் வரும் பகுதியில் உள்ள இயற்கையான முறைகளை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் புருவத்தை பெற முடியும்.

குறைந்த செலவில் மிகுந்த பலன் தரக்கூடியது ஆமணக்கு எண்ணெயாகும். தடியான புருவங்களை பெற இதை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆமணக்கு எண்ணையை உங்களுடைய புருவங்களில் தொடர்ந்து தடவி வந்தால் புருவங்களின் அடர்த்தி அதிகரிக்கும். இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு சிறந்த பலனை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாசலீன் பயன்படுத்துவது உலர்ந்த புருவங்களை ஈரப்பதமூட்டி அதில் உள்ள வெடிப்புகளை சரி செய்கின்றது. இதனால் அங்குள்ள தசைகள் ஊட்டம் பெறுகின்றன. இதை நாம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவ வேண்டும். இதனால் புருவம் நீளமாகவும், உறுதியாகவும் காணப்படும். அது மட்டுமில்லாமல் புருவத்தையும் நன்கு பெருகி வளரச் செய்யும்.

தேங்காய் எண்ணெய் நிச்சயம் முடி வளர்ப்பிற்கு உதவும் என்பது நமக்கு மிகவும் தெரிந்த உண்மைகளில் ஒன்று. இதுவும் புருவங்களை வளர்ப்பதற்கு ஏற்ற சிறந்த திரவமாக உள்ளது. இந்த எண்ணைய் முடியை விரைவாக வளரச் செய்வது மட்டுமல்லாமல் புருவத்திற்கு நல்ல வடிவத்தையும் தருகின்றது.

சினிமாவுக்கு குட்பை - நடிகை அஞ்சலி!

சென்னையில் இருந்து தமிழ்ப் படங்களில் நடித்தபோது தனது சித்தியுடன் ஏற்பட்ட தகராறினால் தனது சொந்த ஏரியாவான ஆந்திராவுக்கு ஓடினார் அஞ்சலி.

அங்கே பாதுகாப்பாக இருந்து படங்களில் நடிக்கலாம் என்று கணக்கு போட்டவர் தமிழ்ப் படங்களுக்கு குட்பை சொன்னார். பல படங்கள் அவரைத் தேடி வந்தும் கூட ‘மசாலா’ என்ற ஒரே ஒரே தெலுங்கு படத்தில் தான் அவர் நடித்தார். கடந்த 2013-ஆம் வருடம் ரிலீசான அந்தப்படம் தான் அவருக்கு கடைசிப்படம். அதற்குப் பிறகு தெலுங்கிலும், தமிழிலும் எந்த ஒரு புதிய படத்திலும் அவர் நடிக்கவில்லை.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ஷகிலாவின் சுயசரிதையை மையமாக வைத்து வெளிவர இருக்கும் படத்தில் அஞ்சலி நடிக்கப் போகிறார் என்றும், அதில் அஞ்சலிதான் ஷகிலாவாக நடிக்கப் போகிறார் என்று செய்தி வெளியாகின.

ஆனால் தற்போது அஞ்சலி அந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றும், கூடவே இந்த நிமிடம் வரை அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை இல்லை என்றும் சீக்ரெட் தகவல் கசிந்திருக்கிறது.

சென்னையிலும் இல்லை, ஆந்திராவில் எந்த ஒரு பட விழாவிலும் அஞ்சலியை பார்க்க முடிவதில்லை, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் வைத்திருக்கும் இரண்டு மொபைல் எண்களை தொடர்பு கொண்டால் இரண்டிலுமே எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

அப்படியானால் அஞ்சலி எங்கே போனார்? யாருடைய பிடியில் இருக்கிறார்? என்பது மர்மமாகவே உள்ளது.

இதனால் அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்காக யோசிக்கும் டைரக்டர்கள் அவரை யார் மூலம் எப்படி தொடர்பு கொள்வது? என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் அஞ்சலியோ சினிமாவுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்டு விட்டு ஒரு ‘பெரிய புள்ளி’யின் அன்புப் பிடியில் அடைக்கலமாகி விட்டார் என்றும், இனிமேல் அஞ்சலி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூடுதல் தகவல்களை அவரது நெருங்கிய வட்டாரங்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ அஞ்சலி அதே பெரிய புள்ளியுடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதெல்லாம் உண்மையா? பொய்யா? என்ன என்பதை அஞ்சலியே நேரில் வந்து சொன்னால் தான் உண்டு. சொல்லுங்க எங்க இருக்கீங்க அஞ்சலி?

உதிரிப்பூக்கள் என்ற தலைப்பை வைத்தது இளையராஜாதான்! இயக்குனர் மகேந்திரன்!

“தன்னுடைய புகழ் பெற்ற படமான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் தலைப்பை தேர்வு செய்து கொடுத்ததே இளையராஜாதான்..” என்று இயக்குநர் மகேந்திரன் கூறியுள்ளார்.


தமிழ்ச் சினிமாவின் அடையாள இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன், தற்போது மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னமும் தலைப்பு வைக்கவில்லையாம். இசை இசைஞானி இளையராஜதான். படத்தின் கதை புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையாம்.


படத்தின் ஒளிப்பதிவை சஞ்சய் லோக்நாத் மேற்கொள்கிறார். இவர் புகழ்பெற்ற பழம் பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்தின் மகன். எடிட்டிங் காசி விஸ்வநாதன். சரவணன் என்ற தயாரிப்பாளர் இதனைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.


அப்போது பேசிய இயக்குனர் மகேந்திரன், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்குகிறேன்.


கொஞ்ச நாட்களாக எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் என்னுடைய சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ள முடியாததால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை. உங்களுக்கெல்லாம் தெரிந்த கதை தான்.


என் படங்கள் சிலவற்றுக்கு இளையராஜாதான் தலைப்பு வைத்தார். ‘உதிரிப் பூக்கள்’ என்ற தலைப்புகூட அவர் வைத்ததுதான். அதேபோல இந்தப்படத்துக்கும் அவர்தான் தலைப்பு வைப்பார்.


என் படங்களில் பெரும்பாலான வசனங்களை இளையராஜாதான் எழுதியிருப்பார். குழப்பமாக வேண்டாம். நான் எடுத்த பெரும்பாலான எடுத்த மவுனக் காட்சிகளுக்கெல்லாம் தன் பின்னணி இசையால் அர்த்தமுள்ள வசனங்கள் எழுதியவர் இளையராஜாதான். அதனால் தான் அப்படிச் சொன்னேன். அவர் இல்லாமல் என் படங்கள் எப்போதுமே இல்லை.


நானெல்லாம் சினிமா இயக்க வந்ததே விபத்துதான். ஏதோவொரு உந்துதலால் படம் இயக்க வந்தேன். அதற்கு முன் நிறைய படிச்சபிறகுதான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்துச்சு. ஆனால் அவர் ஒரு பிறவி மேதை’’ என்றார்.

மே 9ல் ரிலீஸ் ஆகிறதா 'விஸ்வரூபம் 2?'

'விஸ்வரூபம் 2' இந்த ஆண்டே வெளிவரும் என்று அறிவித்தார் கமல். ஆனால், தொழில் நுட்பப் பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது.


தற்போது  2014 மே 9ல் 'விஸ்வரூபம்2' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.


'விஸ்வரூபம்'  படம் ஆஃப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடப்பதாக கதை அமைப்பு பின்னப்பட்டிருந்தது. பட முடிவில் வில்லன் தப்பித்துப் போவதாக காட்டியிருந்தார் கமல். இப்போது அதன் தொடர்ச்சி இந்தியாவில் நடைபெறுகிறதாம்.


விஸ்வரூபத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளிடம் நடித்திருக்கிறார்கள்.


'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. 'விஸ்வரூபம்' படம் வெளியாகும் போதே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்தவர் ரவிச்சந்திரன். இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.


'விஸ்வரூபம்' ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் சில தியேட்டர்களில் மட்டும்தான் வெளியிடப்பட்டது, 'விஸ்வரூபம்2' அனைத்து தியேட்டர்களிலும் ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட, கமல் முயற்சித்து வருகிறார்.


'விஸ்வரூபம்' படத்தினை விட பிரம்மண்டமாக உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.


மே 9ல் 'விஸ்வரூபம்2' ரிலீஸ் ஆகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆரை புகழும் பாட்டு சிவாஜிகணேசன் பாடினார்!

ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் 'கில்லி', 'தூள்' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.

1990-ம் ஆண்டு, கேமராமேன் ரவியாதவ் தயாரிப்பில் 'உறுதிமொழி' என்ற படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்த படம், வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. மரண தண்டனை கைதியை தூக்கில் போட கொண்டு செல்லும்போது, அங்கு வரும் டாக்டர், கைதியை கடத் திச் சென்று, பல கொடியவர்களை கொல்வதுதான் கதை.

இந்தப்படத்திலேயே 'கிராபிக்ஸ்' காட்சிகளை அமைத்திருந்தார்கள். சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் தீப்பற்றி எரிவது போல் கிராபிக்ஸ் மூலம் காண்பித்தார்கள்.

உறுதிமொழியை தயாரித்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்காக 'கிழக்கு வாசல்' படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் உதயகுமாரே எழுதியிருந்தார். தெருக்கூத்துக் கலைஞரான கார்த்திக்கை, அடுத்த ஊரின் பண்ணையார் மகள் குஷ்பு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவார். இதற்கிடையே பண்ணையாரால் அந்த ஊருக்கு அழைத்து வரப்படும் ரேவதியை கார்த்திக் காதலிப்பார்.

'கிழக்கு வாசல்' படப்பிடிப்பின்போது பல விபத்துக்கள் நடந்தன. ஒரு விபத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று அதிசயமாக உயிர் பிழைத்தார், உதயகுமார். 

அஜீத்துடன் நடிக்க ஆசைப்படும் நடிகை!

சமந்தா தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறார். அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.


லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடக்கிறது.


ஏற்கனவே சித்தார்த், ஜீவா போன்றோருடன் நடித்து இருக்கிறார். விஜய், சூர்யாவுடன் நடிக்கும் படங்கள் ரிலீசானதும் தனது மார்க்கெட் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறார்.


அத்துடன் அஜீத் ஜோடியாக நடிப்பதும் அவரது கனவாக இருக்கிறது.


இதுகுறித்து டுவிட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு, சமந்தா எனக்கு அஜீத்துடன் நடிக்க ஆசை உள்ளது என்று பதிலளித்தார். விரைவில் அது நிறைவேறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

கமல்ஹாசனின் நாட்டுப்பற்று!


வருமானவரி துறை சார்பில் தேசிய கலைவிழா (2013-14) 2 நாட்களுக்கு சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி தலைமை தாங்கினார்.


நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வருமானவரி துறை இணை ஆணையர் ஜெயராகவன் வரவேற்று பேசினார். டைரக்டர் ஜெனரல் புலனாய்வு ஜெய்சங்கர், வருமானவரி துறை முதன்மை ஆணையர்கள் சேத்தி, கே.கே.மிஸ்ரா, வருமானவரி துறை ஆணையர் ஆறுமுகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நடிகர் கமல்ஹாசன் மற்றும் வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தேசிய கலைவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-


அனைவரும் தவறாமல் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவதை தேசிய கடமையாக நினைக்க வேண்டும். என் தந்தையாரும் எனக்கு அப்படி தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.


உண்மையில் வரி செலுத்துவது என்பது நாட்டின் கட்டமைப்புக்கு நம்முடைய பகுதியாக அல்லது பங்காக நினைத்து நாம் செலுத்த வேண்டும். நானும் அப்படி நினைத்து தான் செய்து வருகிறேன். அடிப்படையில் இந்த எண்ணம் இருந்தால் வரி செலுத்துவதில் எந்த பிரச்சினையும், தயக்கமும் வராது.


பல்வேறு பணி சுமைகளின் மத்தியில் தங்களது திறமைகளை வெளிகாட்ட வந்திருக்கும் உங்களிடத்தில் இருந்து தான் உண்மையான கலை மற்றும் திறமை வெளிவரும். பல்வேறு இடங்களில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.


இவ்வாறு அவர் பேசினார்.

சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை!

ஒரு படம் ஹிட்டடித்து விட்டால் போதும், அதன் பிறகு அந்த படத்தின் கதையை தழுவியே கதை கேட்பார்கள் நடிகர்கள். அதேபோல் அதில் தங்களுடன் பணியாற்றிய நடிகர்-நடிகைகளையும் கூட்டணி சேர்த்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.


இதை ஆரம்பத்தில் கடைபிடிக்காத சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து, அதே பாணியில் கொஞ்சம் காதல், நிறைய காமெடி அதற்குள்ளே ஒரு மெசேஜ் என்ற விகிதத்தில் கதைகள் கேட்கிறார்.


அதனால் காமெடி ஒன்றையே இலக்காக வைத்து தனக்கு கதை பண்ணி முற்றுகையிட்ட அத்தனை டைரக்டர்களிடமும் கரெக்சன் சொல்லி அனுப்பி விட்டார். குறிப்பாக, முன்னணி கதாநாயகி என்பதை விடவும், வெற்றி படங்களில் நடித்த நடிகையாக இருக்க வேண்டும் என்பதையும் கோடிட்டு காட்டுகிறாராம்.


இதற்கெல்லாம் மேலாக காமெடியன் சூரி கட்டாயம் வேண்டும் என்கிறாராம். ஒரு மாறுதலுக்காக சந்தானத்தை சேர்த்துக்கொள்ளலாமே? என்று யாராவது சொன்னால், காமெடியனை நான்தான் கலாய்க்க வேண்டும். அதற்கு சூரி உடன்படுவார்.


ஆனால், சந்தானம் அவர்தான் கதாநாயகர்களை கலாய்க்க ஆசைப்படுகிறார். அதனால் அவர் நமக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்கிறாராம். இதன்காரணமாக, சிவகார்த்திகேயன் கேட்டு வைத்துள்ள மூன்று கதைகளிலுமே காமெடி ஏரியாவுக்கு சூரிக்குதான் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதியானது!

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா.


அதன்பிறகு பாலிவுட்டில் பிசியாகி விட்ட அவரை எந்த இயக்குனரும் தமிழுக்கு கொண்டு வரவில்லை.


இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்காக மீண்டும் தமிழுக்கு வருகிறார் பிரியங்கா சோப்ரா.


முன்னதாக, அந்த படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்கு கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனேயைத்தான் கேட்டார்கள்.


ஆனால் அவரோ, ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற கணக்கில் சம்பளம் கேட்டதால், இவர் கோடம்பாக்கத்துக்கேற்ற கோவக்காய் இல்லை என்று கட் பண்ணி விட்டு, இப்போது பிரியங்கா சோப்ராவை பேசியுள்ளார்களாம்.


பிரியங்காவும் இப்போது பாலிவுட்டில் அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகைதான் என்றபோதும், கோடம்பாக்கத்தின் பட்ஜெட்டுக்கேற்ப விட்டுக்கொடுத்துள்ளாராம். மறுபடியும் தமிழில் நடிக்கிறோம் என்பது மட்டுமின்றி, தனது முதல் பட நாயகனான விஜய்யுடன் மீண்டும் இணைப்போகிறோம்


என்று இரட்டிப்பு சந்தோசமும் இதற்கு காரணமாம். அதனால் காலம் தாழ்த்தாமல், கதையை சொல்லி அட்வான்சையும் கைமாற்றி விட்டார்களாம்.

சிவகார்த்திகேயனுடன் அனிருத் ஆட்டம்!

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா மொத்வானி ஜோடியாக நடிக்கும் படம் "மான் கராத்தே" இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த திருக்குமரன் இயக்குகிறார்


.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் கானா பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளாராம் அனிருத்.


அந்த பாடலை பாட வித்தியாசமான குரலை தேடிவந்த இவருக்கு ‘கானா’ என்றாலே உடனே ஞாபகத்துக்கு வரும் இசையமைப்பாளர் தேவா நினைவுக்கு வர உடனே அவரை தொடர்பு கொண்டு இப்பாடலை பாடிக் கொடுக்க சம்மதம் கேட்டுள்ளார். அவரும் உடனே சம்மதித்து பாடிக் கொடுத்துள்ளார்.


இப்பாடல் படத்தின் கிளைமாக்சில் இடம்பெறுகிறதாம்.


 இது இந்த வருடத்தின் சிறந்த பாடலாக இருக்கும் என அனிருத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்து அனிருத்தும் ஆடியுள்ளாராம்.


ஏற்கெனவே அனிருத், சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து போனார்


. அதன்பிறகு ‘வணக்கம் சென்னை’ படத்தில் கேங்ஸ்டர் என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ‘மான் கராத்தே’ படத்தில் டான்ஸ் ஆடியிருக்கிறார்.

13 படங்கள் வரும் 28ந் தேதி ரிலீஸ்!

கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சுமார் 200 படங்கள் தியேட்டர் கிடைக்காமல் ரிலீசாகவில்லை. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவு ஒன்றை அறிவித்து இருந்தனர்.


 அதில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ரிலீசாக வேண்டும், மற்ற வெள்ளிக்கிழமைகளில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும்.


இதில் டப்பிங் படங்கள் இந்த வரைமுறைக்குள் வராது.


அறிவிப்பு வெளியான முதல் வெள்ளிக்கிழமையே 13 படங்கள் ரிலீசாவது திரையுலகிற்கு சின்ன அதிர்ச்சி தான்.


இந்த படங்களில் வல்லினம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் மட்டுமே மீடியம் பட்ஜெட் படங்கள். அதைத்தவிர பனிவிழும் மலர்வனம், அமரா, தெகிடி, அங்குசம், காதல் சொல்ல ஆசை வங்கங்கரை ஆகியவை சிறு பட்ஜெட் படம்.


வெற்றி மாறன் (மலையாளம்), நான் ஸ்டாப், பறக்கும் கல்லரை மனிதன், ஆக்ஷன் கிட்ஸ் (ஆங்கிலம்) கரன்சி ராஜா (தெலுங்கு) ஆகிய படங்களும் ரிலீசாகிறது.


தமிழ்நாட்டில் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன.


இவற்றில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 800 இதில் வல்லினம் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது.



இதுபோக மீதமுள்ள 400 தியேட்டர்களைத்தான் மற்ற படங்கள் திரையிடப்படுகிறது.

தெலுங்கு செல்லும் ’சுமார் மூஞ்சி குமாரு’..!

விஜய்சேதுபதி-சுவாதி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா".


இப்படத்தில், விஜய்சேதுபதி “சுமார் மூஞ்சி குமாரு” என்றொரு கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தார்.


தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.


தெலுங்குப் படத்துக்கு இதே பெயரை தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் பாலகுமாராவுக்குப் பதில் பாலகிருஷ்ணா. விஜய் சேதுபதிக்கு ஆந்திராவில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


இருந்தாலும், படத்தின் நாயகி சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு அங்கு நல்ல மார்கெட் இருக்கிறதாம். அந்த மார்கெட்டை நம்பி தெலுங்கில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.


வரும் மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் தெலுங்குப் பதிப்பின் பாடல்களையும் பின்னர் அதே மாதத்திலேயே படத்தையும் வெளியிடப் போகிறார்களாம். தற்போது இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம் 

கோடை விடுமுறைக்குள் 'ஐ'.! - சங்கர்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் படம் 'ஐ'. இப்படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து வருகின்றனர் இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


இது குறித்து 'ஐ' படக்குழுவினர் கூறுகையில் படத்தை கோடை விடுமுறைக்குள் திரையிட திட்டமிட்டுள்ளோம்.


இதனால் படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம் படத்திற்காக போஸ்ட் புரடக்டசன் வேலைகள் 24 மணி நேரமும் நடந்துவருகிறது ,மேலும படத்தின் முதல் பாதியை விக்ரம் டப்பிங் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.


இந்த படத்தில் விக்ரம் வெவ்வேறு கெட்டப்பில் நடித்துள்ளதால் இரண்டாவது பாதியை குரல் வித்தியாசத்துடன் அடுத்த மாதம் டப் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமோடு போட்டியிட முடியாமல் தவிக்கும் எமி ஜேக்சன்!

ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரமோடு இணைந்து நடித்துவரும் எமி ஜேக்சன் சமீபமாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னால் விக்ரமோடு போட்டி போட்டு நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.


தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான விக்ரம் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்துவரும் திரைப்படம் ஐ.


இப்படத்தில் விக்ரம் மூன்று விதமான வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அவரது கெட் அப் சேஞ்ச்களுக்காகவே இப்படத்தின் படப்பிடிப்புக்கள் இத்தனை நாட்களாக தொடர்வதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


கட்டுமஸ்தான உடலமைப்புக் கொண்டவராகவும், பின்னர் மிகவும் ஒல்லியானவராகவும் இப்படத்தில் அவர் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் ஒரு பாடல் மட்டுமே பாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்றும் தெரிகிறது.


இப்படத்தின் நாயகியான எமி ஜேக்சன் விக்ரமைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். விக்ரம் மிகச் சிறந்த நடிகர் என்றும், தன்னால் அவருடன் போட்டியிட முடியாது என்றும், ஒருவேளை அவருடன் போட்டியிட வேண்டுமானால் தனக்கு இன்னும் பத்தாண்டுகள் அனுபவம் தேவைப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் விக்ரம் தனக்கு ஒரு முன்மாதிரி நடிகர் என்று கூறியிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவரது தோற்றம் வித்தியாசப்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.


ஐ படத்திற்குப் பிறகு விக்ரம் இயக்குனர் தரணி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.