ஆஹா கல்யாணம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் முதல் தென்னிந்திய தயாரிப்பு. ஒரே நாளில் தமிழ் தெலுங்கில் வெளியானது.
இரண்டு மொழிகளிலும் படம் ப்ளாப். எதிர்பார்த்த கலெக்சன் கிடைக்காதது மட்டுமின்றி எதிர்பார்க்காத தோல்வியும் அடைந்துள்ளது படம்.
வெளிநாடுகளிலும் நிலைமை சொல்லும்படி இல்லை.
யுஎஸ்ஏ யில் இப்படம் முதல் மூன்று தினங்களில் எட்டு திரையிடல்களில் 2.21 லட்சங்களை வசூலித்துள்ளது. தழிழ் பரவாயில்லை.
இதன் தெலுங்குப் பதிப்பு இங்கு 2 திரையிடல்களில் 86,000 ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.
கனடாவில் ஆஹா கல்யாணம் முதல் மூன்று தினங்களில் ஒரு திரையிடலில் 22,800 ரூபாயை வசூலித்துள்ளது.
யுகே மற்றும் அயர்லாந்தில் ஐந்து திரையிடல்களில் 90,000 ரூபாய். நியூசிலாந்தில் ஒரு திரையிடலில் 16,100 ரூபாய்.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்பதால் வழக்கமாக தமிழ்ப் படங்கள் வெளியாகாத நாடுகளிலும் ஆஹா கல்யாணம் வெளியானது. ஆனால் வரவேற்புதான் சரியில்லை.
0 comments:
Post a Comment