'விஸ்வரூபம் 2' இந்த ஆண்டே வெளிவரும் என்று அறிவித்தார் கமல். ஆனால், தொழில் நுட்பப் பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது.
தற்போது 2014 மே 9ல் 'விஸ்வரூபம்2' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'விஸ்வரூபம்' படம் ஆஃப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடப்பதாக கதை அமைப்பு பின்னப்பட்டிருந்தது. பட முடிவில் வில்லன் தப்பித்துப் போவதாக காட்டியிருந்தார் கமல். இப்போது அதன் தொடர்ச்சி இந்தியாவில் நடைபெறுகிறதாம்.
விஸ்வரூபத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளிடம் நடித்திருக்கிறார்கள்.
'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. 'விஸ்வரூபம்' படம் வெளியாகும் போதே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்தவர் ரவிச்சந்திரன். இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
'விஸ்வரூபம்' ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் சில தியேட்டர்களில் மட்டும்தான் வெளியிடப்பட்டது, 'விஸ்வரூபம்2' அனைத்து தியேட்டர்களிலும் ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட, கமல் முயற்சித்து வருகிறார்.
'விஸ்வரூபம்' படத்தினை விட பிரம்மண்டமாக உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
மே 9ல் 'விஸ்வரூபம்2' ரிலீஸ் ஆகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 comments:
Post a Comment