Wednesday, 26 February 2014

அழகான புருவம் வேண்டுமா?

புருவங்கள் தான் பெண்களின் கண்களிலேயே அழகை மிகைப்படுத்தி காட்டும் பகுதியாக உள்ளன. இவை முகத்தின் அழகை வெளிப்படுத்தும் பாகமாகவும் உள்ளன.

விளையாட்டிற்கு கூட நமது அழகை நாம் பாழ்படுத்த விரும்புவதில்லை. டிரிம் செய்யாத புருவமும் இப்படித்தான், தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருந்து நமது அழகை பாழாக்கும்.

நமது உடல் அமைப்பிற்கேற்ப நமது புருவங்களும் இருப்பது அவசியம். இது நமது அழகையும் அமைப்பையும் மிகைப்படுத்தும். இதை பெறுவதற்கு ஏதேனும் இரசாயன மருந்துகளையும் சிகிச்சையும் நீங்கள் பெற விரும்பினால் அது தவறு.

இதை எல்லாம் முயற்சி செய்து நம்மை நாமே பாழாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. எனவே, இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு சரி செய்ய முடியும்.

இதை வைத்து நாம் அடர்த்தியான புருவங்களை பெற முடியும். கொஞ்சம் கூட இரசாயனம் இல்லாமல் சிறப்பான முறையில் மற்றும் பாதுகாப்பான வழியில் பெறும் வழியாகும். கீழ் வரும் பகுதியில் உள்ள இயற்கையான முறைகளை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் புருவத்தை பெற முடியும்.

குறைந்த செலவில் மிகுந்த பலன் தரக்கூடியது ஆமணக்கு எண்ணெயாகும். தடியான புருவங்களை பெற இதை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆமணக்கு எண்ணையை உங்களுடைய புருவங்களில் தொடர்ந்து தடவி வந்தால் புருவங்களின் அடர்த்தி அதிகரிக்கும். இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு சிறந்த பலனை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாசலீன் பயன்படுத்துவது உலர்ந்த புருவங்களை ஈரப்பதமூட்டி அதில் உள்ள வெடிப்புகளை சரி செய்கின்றது. இதனால் அங்குள்ள தசைகள் ஊட்டம் பெறுகின்றன. இதை நாம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவ வேண்டும். இதனால் புருவம் நீளமாகவும், உறுதியாகவும் காணப்படும். அது மட்டுமில்லாமல் புருவத்தையும் நன்கு பெருகி வளரச் செய்யும்.

தேங்காய் எண்ணெய் நிச்சயம் முடி வளர்ப்பிற்கு உதவும் என்பது நமக்கு மிகவும் தெரிந்த உண்மைகளில் ஒன்று. இதுவும் புருவங்களை வளர்ப்பதற்கு ஏற்ற சிறந்த திரவமாக உள்ளது. இந்த எண்ணைய் முடியை விரைவாக வளரச் செய்வது மட்டுமல்லாமல் புருவத்திற்கு நல்ல வடிவத்தையும் தருகின்றது.

0 comments:

Post a Comment