Thursday, 27 February 2014

என் திருமணம் கேள்விக்குறியாகவே உள்ளது : ஆர்யா!!

இன்னும் நான் தேடும் கனவுக் கன்னி என் கண்ணில் படவில்லை. அதனால் என் திருமணம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.


கோலிவுட்டின் பிசி நாயகர்களுள் ஒருவர் ஆர்யா. கடந்த ஆண்டு அவர் நடித்த சேட்டை, ராஜா ராணி, ஆரம்பம் மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் வெளியாகின.


இந்த ஆண்டும் அவரது படங்கள் குறைவில்லாமல் வெளியாகும். ஆர்யா தற்போது மீகாமன் மற்றும் புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் புறம்போக்கு படத்தில் அவருடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.


ஆர்யா என்றாலே நடிகைகளுடன் ஜாலியாக பேசுவார், அவர்களை கலாய்ப்பார் என்று அனைவருக்கும் தெரியும். ஆர்யாவுக்கு மச்சம் தான் பலர் கூறும்படி அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.


ஆர்யாவும், நயன்தாராவும் காதலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. இந்நிலையில் நயன்தாராவின் பெயர் தற்போது அவரது முன்னாள் காதலருடன் சேர்ந்து அடிபடுகிறது.


ஆர்யாவுக்கு திருமணம் எப்பொழுது என்று பலர் கேட்டாலும் அதற்கு பதில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் திருமணம் பற்றி பேசியுள்ளார்.


ஆர்யா நினைக்கும் கனவுக் கன்னி இன்னும் அவர் கண்ணில் படவில்லையாம். அத்தகைய கனவுக் கன்னி கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வாராம். அதுவரை அவரது திருமணம் ஒரு கேள்விக்குறிதானாம்.

அடுக்கு மாடி (Appartment) வீடுகளி‌ன் அடிப்படை வாஸ்து விதிகள்!

அடுக்கு மாடி (Appartment) வீடுகளில் வடகிழக்கு மூலையில் உள்ள வீடுகளுக்கு மட்டும்தான் ஓரளவு வாஸ்து பொருந்தும்.


அடுக்கு மாடி (Appartment) வீடுகளில் பார்க்க வேண்டிய முக்கிய அடிப்படை வாஸ்து விதிகள்.


வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் இருக்க வேண்டும்.
தலை வாசல் உச்சத்தில் இருக்க வேண்டும்.


தாய்சுவரின் எந்த முனையும் உடையாமல் இருக்க வேண்டும்.


கழிவறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.


சமையலறை / பூஜையறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.

திரை உலகுக்கு வாருங்கள்: பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு !

நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, 'தெய்வத்தாய்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று 'மெழுகுவர்த்தி.' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.

அவர் பேசும்போது, 'பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்' என்றார்.

அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க 'தெய்வத்தாய்' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.

அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.

சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது.

அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.

ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.

இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.

அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது' என்கிறார், பாலசந்தர்.

'தெய்வத்தாய்' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.

'தெய்வத்தாய்' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.

நாடகமாக பெரிய வெற்றி பெற்ற 'சர்வர் சுந்தர'த்தை படமாக்க ஏ.வி.எம். நிறுவனம் தீர்மானித்தது. அதன் கதை-வசனத்தை பாலசந்தர் எழுதினார். முத்துராமன், நாகேஷ், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ட் செய்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது.

அடுத்து, இதே ஆண்டில் முக்தா சீனிவாசன் தயாரித்து டைரக்ட் செய்த 'பூஜைக்கு வந்த மலர்' படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதினார்.

இதே ஆண்டில் வெளிவந்த 'நீலவானம்' படத்துக்கும் பாலசந்தர் கதை- வசனம் எழுதினார். சிவாஜி கணேசனும், தேவிகாவும் இணைந்து நடித்தனர். தேவிகாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம்.

இந்த படத்தை டைரக்ட் செய்தவர் பி.மாதவன்.

'நீலவானம்' சிறந்த படமாக அமைந்தது.

இந்த சமயத்தில், பாலசந்தர் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு தேடி வந்தது. 

அபூர்வ நாயகன் கமலஹாசன்! - ஒரு சிறப்புப் பார்வை!

நடிகர் கமலஹாசனைப் பற்றிய ‘அபூர்வ நாயகன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள கமலஹாசனின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இப்புத்தகத்தை உருவாக்கிய ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் புத்தகத்தை வெளியிட, கலைஞானி கமலஹாசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கமலஹாசனின் அபூர்வ புகைப்படங்களும், அவர் நடித்த திரைப்படங்கள் குறித்த தகவல்களும் பல முன்னணி கவிஞர்களின் வாழ்வியல் கவிதைகளும் அடங்கிய தொகுப்பாக, களஞ்சியமாக இப்புத்தகம் திகழ்கிறது.


உலக அரங்கில் தமிழ் திரைத்துரையை தலைநிமிரச் செய்த கலைஞன் கமலஹாசனின் சாதனைகள் குறித்த பெட்டகமாக திகழும் இப்புத்தகம், நிகழ்காலத்தில் மட்டுமின்றி வருங்கால சரித்திரத்திலும் தனியிடம் பெறு
மென்பதில் ஐயமில்லை.


1960-ல் திரைத்துறையில் நுழைந்து, 55 வருடங்களாக தனது உழைப்பின் மூலம் தமிழகத்தின் பெருமையை தரணியில் உயர்த்திய தமிழனுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சமர்ப்பணமாக இப்புத்தகம் அர்ப்பணிக்கப்படுகிறது என்று ராம்ராஜ் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் கூறினார். 

எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை நடிகர் அமீர் கான் சொல்கிறார்!

எனக்கு எதிராக எந்த மிரட்டலும் வரவில்லை என்று இந்தி நடிகர் அமீர் கான் தெரிவித்தார்.

நடிகர் அமீர் கான்

இந்தி நடிகர் அமீர் கான் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதில் பெண்சிசு கொலை, ஆஸ்பத்திரியில் நடைபெறும் மோசடிகள் மற்றும் சமூகத்தில் நிலவும் கவுரவ கொலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு சில விஷமிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதை உறுதிபடுத்தும் விதமாக அமீர் கான் சமீபத்தில் குண்டுகள் துளைக்காத விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது.

பயம் இல்லை

இந்த நிலையில், நடிகர் அமீர் கான் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தனக்கு எதிராக வந்த கொலை மிரட்டல்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அமீர் கான் கூறியதாவது:–

எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. வந்தாலும் நான் பயப்பட மாட்டேன். வதந்திகளை நம்பாதீர்கள். என்னை பொறுத்தவரை நான் ஒரு தகவல் தொடர்பாளர். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது என் பொறுப்பு. மக்கள் என்னோடு சேர வேண்டும். இதை தான் நான் விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில், பெண்கள் கையில் அதிகாரம் இருப்பதை நான் விரும்புகிறேன்.

அரசியலில் ஆர்வம் இல்லை

மேலும் எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. அதில் இருந்து விலகி இருக்கவே நான் விரும்புகிறேன். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளில் தான் நான் கவனம் செலுத்துகிறேன். அரசியலில் அல்ல.

நான் உணர்ச்சிப்பூர்வமானவன். இதயம் நொறுங்குகிற அளவுக்கு கதைகளை கேட்கும்போது என்னை அறியாமலே அழுதுவிடுவேன். ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் நான் அழுத காட்சிகளை எல்லாம், ஊழியர்கள் நீக்கிவிடுவார்கள்.

இந்த உலகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது தைரியத்தையும், தீர்மானத்தையும் பார்த்து நான் தலை வணங்குகிறேன்.

இவ்வாறு நடிகர் அமீர் கான் தெரிவித்தார்.

ரஜினியால் மறக்க முடியாத மார்ச் 11...?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படம் ஏப்ரல் 11 அன்று திரைக்கு வரவிருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.


கிட்டதட்ட மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் படம் திரைக்கு வருவதால் இந்த வெளியீட்டை பிரமாண்டமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் அதற்கு சரியாக ஒரு மாதம் முன்பாக ரஜினியின் குடும்பத்தில் ஒரு பெரிய கொண்டாட்டமே நடக்க இருக்கிறது.


ஆமாங்க, மார்ச் 11 ரஜினியின் வாழ்வில் மிக முக்கியமான நாள். அந்த நாளில்தான் சிவாஜி கெய்க்வாடாக இருந்தவர் ரஜினிகாந்த் என்று தன் குருநாதல் இயக்குநர் கே.பாலச்சந்தரால் பெயர்சூட்டப்பட்டார்.


கடந்து வந்த பாதையையும் ஏற்றிவிட்ட கரங்களையும் என்றும் மறவாதவரான ரஜினி, தன் வெற்றிக்கு காரணமான பெயரைப் பெற்ற நாளைக் கொண்டாடாமல் இருப்பாரா? ஒவ்வொரு ஆண்டும் போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைவாழ்வில் தன் முன்னேற்றத்துக்குப் பங்களித்த பெரியவர்களுக்கு விருந்து கொடுப்பார்.


இந்த விருந்தில் இடம்பெறும் உணவு வகைகளை ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தே சமைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் ‘ரஜினி பெயர் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்துவருவதாகக் தெரியவந்துள்ளது.

சத்யராஜுடன் இணைந்து பரத் நடிக்கும் ‘ஏழு கடல் தாண்டி’!

’ஐந்து ஐந்து ஐந்து’ படத்தை தொடர்ந்து பரத் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ‘ஏழு கடல் தாண்டி’  என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் செந்தில் குமார் இயக்குகிறார். இவர், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.


இந்தப் படத்தில் பரத்துடன் சதயராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது. படப்பிடிப்பு விரைவில் ஆரமபமாகவுள்ளது.


தற்போது பரத் ‘கூதற’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லட்சத்தீவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாறுபட்ட ஒரு கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தில் மோகன்லாலும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை பரத் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.


காதல் படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் பரத். அதன் பிறகு சில படங்கள் அவருக்கு கை கொடுத்தாலும் காதல் போன்று பெயர் வாங்கி கொடுக்கும் படம் இல்லாத ஏக்கம் அவரிடம் இருந்து வருகிறது.


வெங்கடேஷ் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்த ‘கில்லாடி’ என்ற படம் இன்னமும் ரிலீசாகாமல் இருப்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்!

அஜித்துக்கு கௌரவம் தேடிக் கொடுத்த 'வல்லினம்'!

'ஈரம்' இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள இரண்டாவது படம்'வல்லினம்'. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகுல் பேஸ்கட்பால் வீரராக நடித்திருக்கிறார். ஹீரோயினாக மிருதுளா நடித்துள்ளார்.


'ஈரம்' படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றதால், 'வல்லினம்' படத்தையும் ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.


இந்தப் படத்தில் பல விளையாட்டு வீரர்களுக்கு கிரெடிட் வழங்கப்படுகிறது. சச்சின், பி.டி.உஷா, நரேன் கார்த்திகேயன், தோனி, கபில்தேவ், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருடன் அஜித்தின் பெயரும் இடம்பெறுகிறது.


பைக் மற்றும் கார் ரேஸில் அசாதரணமாக பல சாதனைகளைச் செய்ததற்காக அஜித்தை கௌரவம் தேடித்தந்துள்ளார்களாம்.

கன்னடப்படத்தை ரீமேக் செய்யும் தனுஷ்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ரீமுரளி, ஹரிப்ரியா நடித்த கன்னடப் படம் 'உக்ரம்'. அதுல் குல்கர்னி, அவினாஷ் ஆகியோர் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 21ல் ரிலீஸ் ஆனது.


'லூசியா' படத்துக்குப் பிறகு 'உக்ரம்' கன்னடத்தில்  சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு பெரிதும் பேசப்படுகிறது.


சமீபத்தில் 'உக்ரம்' படத்தின் டிரெய்லர் பார்த்த தனுஷ் மிரண்டு போய்விட்டாராம். இப்படியெல்லாம் கேங்ஸ்டர் வாழ்க்கையைப் பதிவு செய்ய முடியுமா என ஆச்சர்யப்பட்டவர் இப்போது ரீமேக் செய்யவும் முடிவெடுத்துவிட்டார்.


தமிழ், இந்தி என இரு மொழிகளில் தனுஷ் ரீமேக் செய்கிறார். இது தனுஷ் ரீமேக் செய்யும் இரண்டாவது கன்னடப் படம். சிவராஜ்குமார் நடித்த 'ஜோகி' என்ற படத்தின் ரீமேக்தான் தமிழில் 'பரட்டை என்கிற அழகு சுந்தர,' ஆனது.


தனுஷ் 'உக்ரம்' ரீமேக்கில் ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். பிரசாந்த் நீல் தமிழ், இந்தியிலும் இயக்க வாய்ப்பு இருக்கிறதாம்.


ஹீரோயின் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம்.

பிப்ரவரி 28-ல் வெளியாகிறது வாயை மூடிப் பேசவும் டீசர்!

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிவரும் புதிய திரைப்படமான வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 28ல் வெளியாகவுள்ளது.


துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகிவரும் திரைப்படம் வாயை மூடி பேசவும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கெனவே பிரபலமடைந்துள்ளன.
.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வித்தியாசமான முறையில் டிசைன் செய்யப்பட்டிருப்பதாகப் பாராட்டப்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. வருகிற பிப்ரவரி 28ல் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரேடியன்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இப்படத்தினைத் தயாரித்துவருகின்றன. பிரபல கிதார் இசையமைப்பாளரான சீன் ரோல்டன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.


இப்படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலாஜி மோகன் தனுஷ் - காஜல் அகர்வால் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார்.

காதலருடன் துபாய் சென்ற காஜல் அகர்வால்!

திரையுலகப் பிரபலங்கள் காதல் வயப்படுவதும், அதனை மறுப்பதும், பின்னர் அதனைச் சுற்றி கிசுகிசுக்கள், வதந்திகள் பரவுவதும் தொடர்கதைதான்.


அந்தவகையில் சமீபமாக மீடியாக்களுக்குத் தீனி போட்டுவருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரைக் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் சில நாட்களாக பேசப்பட்டுவருகிறது.


ஆனால் காஜல் அகர்வால் தனது காதல் விவகாரத்தையும், திருமணம் குறித்த செய்திகளையும் மறுத்தே வருகிறார். சினிமா நட்சத்திரங்கள் இதுபோன்ற செய்திகளை மறுப்பதும், பின்னர் திடீரென ஒப்புக் கொள்வதும் புதிதல்ல.


 இதுவரையிலும் தனது காதல் மற்றும் திருமணம் குறித்த வதந்திகளுக்குப் பதில் சொல்லாமல் இருந்துவரும் காஜல் அகர்வால் சமீபமாகத் தனது காதலருடன் துபாய் சென்று வந்ததுள்ளதாகச் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.


காஜல் அகர்வாலின் தீவிர ரசிகர் ஒருவர் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டிருப்பதாகவும், அந்தப் புகைப்படத்தில் இருப்பது காஜல் அகர்வாலின் காதலர்தானென்றும் கிசுகிசுக்கப்படுகிறது.


விரைவில் காஜல் அகர்வால் இதுகுறித்து வாய்திறப்பார் என்றும் பேசப்படுகிறது. 

கோச்சடையான் இசை வெளியீடு உறுதி செய்யப்பட்டது!

மிக நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


வருகிற மார்ச் 9 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெறும் என்று கோச்சடையான் இசைத் தட்டுக்களை வெளியிடும் உரிமை பெற்ற சோனி மியூசிக் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.


சூப்பர் ஸ்டாரின் இளைய மகளான சௌந்தர்யா இயக்கத்தில், மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கிறது கோச்சடையான். இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.


ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


கோச்சடையான் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 11ல் உலகெங்கிலும் சுமார் 6000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


 தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உட்பட மொத்தம் எட்டு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு ஏற்படும் குழந்தைப்பெறுன்மையை போக்கும் வழிகள் .....?

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை.அதே போல் கர்ப்பமான பெண் அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத் தன்மை என்று தான் கூறுவோம்.

சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர்ந்து ஒரு வருடம் ஈடுபட்டும் கூட கரு தரிக்கவில்லை என்றால் தான் மலட்டுத் தன்மை இருப்பதாக கருதப்படுகிறது. மலட்டுத் தன்மைக்கு பல காரணங்கள் வழி வகிக்கிறது.

உங்கள் வயது, உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், மருத்துவ நிலைப்பாடு அல்லது தொழில் ரீதியான வெளிப்படுத்தல்கள் போன்றவைகள் இதற்கு காரணமாக விளங்கலாம். இது உங்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மலட்டுத் தன்மையையும் உண்டாக்கி விடுகிறது.

பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட காரணமாக விளங்குவது மரபு சார்ந்த பிரச்சனைகள், சீரில்லாத கருமுட்டை வெளிப்படுதல், ஹார்மோன் சமமின்மை, உடல் பருமன் போன்றவைகள். பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

துரித உணவு மற்றும் ஜங்க் உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். இவ்வகை உணவுகளில் தீவனச் சேர்க்கைப் பொருட்கள் மற்றும் பதப்பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இது உங்கள் கருத்தரிப்புத் திறனை வெகுவாக பாதிக்கும். மலட்டுத்தன்மையை தடுக்க காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருத்தரிப்புத் திறனை பாதிக்கும் மருத்துவ நிலைகளை பற்றி தெரிந்து கொள்ள வல்லுனர்களிடம் இருந்து மருத்துவ ஆலோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மலட்டுத்தன்மை ஏற்படும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சனைகளை கண்டறிந்தால் மலட்டுத்தன்மையை தவிர்க்கலாம். பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது உடல் பருமன். உடல் பருமன் ஹார்மோன் சமமின்மையை உண்டாக்கும். அதனால் மலட்டுத் தன்மை ஏற்படும்.

பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல பிரச்சனைகளை சரி செய்ய உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மையை தடுக்க சரியான உடல் எடையுடன் இருப்பதும் அவசியமானதாகும்.

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்திட வேண்டும். உங்கள் வாழ்க்கை முறையே உங்கள் வாழ்க்கையை பற்றிய அனைத்தையும் கூறி விடும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுத்திடுங்கள்.

தலைமுடியை அழகு படுத்த சில டிப்ஸ்!

முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, குழந்தையின் க்ராடில் க்ராப்பிலிருந்து வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.


முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.


தொட்டிலில் தொடர்ந்து படுப்பதால், பிறந்த குழந்தைகளுக்கு பொடுகு தொல்லை ஏற்படும். இதனை போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் போல் ஊறவிட்டு பிறகு அலசவேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து தூங்கினால் சிறிது இடம் மாற்றிப் போடவேண்டும்.


தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு ஆண்களைப் பொறுத்த வரை பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதற்கு ஹேர் வீவிங் போன்ற சில சிகிச்சை முறைகளைத்தவிர வேறு எந்த மருந்தும், உணவும் தீர்வாக சொல்லப்படவில்லை. சின்ன வெங்காயம் தடவுவது, மூலிகை எண்ணெய் தடவுவது போன்ற சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டாலும் அதன் பலன் 100% இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது.


 முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இதற்கு நல்ல தீர்வு. நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும்.


தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. ஷாம்பூ போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும், முடியின் pH அளவை சமச்சீராக வைத்திருக்கவும், முடி ஸ்மூத்தாக இருக்கவும் கண்டிஷனர்(conditioner) உதவுகிறது. கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது நல்லது. மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் ஸ்ட்ராங்காக இருக்கும்.


அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது நல்லது. இப்போது டெய்லி கேர் ஷாம்பூக்கள் (daily care shampoo) பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன. தினமும் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லதல்ல. ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்களை தினமும் உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதுமானது. தலைக்கு அடிக்கடி பெர்மிங் (perming), ஸ்ட்ரெயிட்னிங் (straightening) என்று ப்யூட்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதும் முடியை பாதிக்கும்.


வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.


சீயக்காய்- 1 கிலோ

செம்பருத்திப்பூ- 50

பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்

எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25

பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ

மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்

கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவு


மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை. வெளிநாட்டில் இந்தப் பொருட்கள் கிடைப்பது அரிது.


பொடுகை நீக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் புலம்புவது ஏன் இத்தனை ட்ரீட்மெண்ட் எடுத்தும் மீண்டும் மீண்டும் பொடுகு வருகிறது என்றுதான். நன்றாக கவனமாக இருந்தோமென்றால் நிச்சயம் பொடுகை அறவே ஒழிக்க முடியும். பொடுக்கு எத்தனையோ ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பூக்கள் இருக்கின்றன. Head & Shoulder, Clinic All clear மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்கள் என்று அத்தனையுமே பொடுகை நீக்கினாலும் நாம் கவனமாக இல்லாவிட்டால் மீண்டும் வந்துவிடும். இயற்கையான ட்ரீட்மெண்ட் என்றால் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த மருந்து. தலையில் தடவும்போது எரிச்சல் ஏற்படும். ஆனால் பொடுகை அறவே நீக்கும். மிளகு அரைத்து தயிரில் கலந்து தடவுவதும் நல்ல பலனை தரும்.


பொடுகுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் அதனை மீண்டும் வர விடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் கழுவி அல்லது புதிதாக உபயோகப்படுத்துக்கள். இல்லாவிட்டால் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு சீப்பு வழியாகவோ, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவிவிட வாய்ப்பு அதிகம். தலை மிகவும் வறண்டு இருந்தாலும் பொடுகு வரும். கண்டிஷனரை தலையில் முடி வேர்வரை போட்டாலும் பொடுகு வரும்.


முடியை பெர்மிங் செய்வதாக இருந்தாலும், ஸ்ட்ரெயிட்னிங் செய்வதாக இருந்தாலும், வீட்டில் நீங்களாகவே முயற்சிப்பதற்கு முன்பு, சலோன் (parlour) சென்று ஆலோசனை பெறுங்கள். ஒவ்வொரு முடியும், முக அமைப்பும் வேறு. ஒருவருக்கு பொருந்தின ஹேர் ஸ்டைல் இன்னொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. முடியின் தன்மை, முகவெட்டுக்கு தகுந்தாற்போல் ஹேர்ஸ்டைல் செய்துக் கொள்ளுங்கள். நம்மால் பராமரிக்க முடிந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.


அதிக ஃப்ரிஞ்சஸ், ஸ்டெப் கட், லேயர்ஸ் போன்றவை எல்லோராலும் எளிதாக பராமரிக்க முடியாது. ஒரே ஹேர் ஸ்டைலில் இல்லாமல் வித விதமான ஹேர்ஸ்டல் செய்து கொள்வது எப்போதும் ஒரு புதிதான தோற்றத்தை கொடுக்கும். இழுத்துப் பிடித்து சடை போட்டுக் கொள்வது பிடிக்கிறது. அதையேதான் பின்பற்றுவேன் என்று இல்லாமல் ஒரு வித்தியாசத்திற்கு மாறுதலான ஒரு ஹேர்ஸ்டைல் செய்து பாருங்கள்.


சில ட்ரெஸ்களுக்கு லூஸ் ஹேர் மிகவும் அழகாக இருக்கும். அப்படி லூஸ் ஹேர் வேண்டுமென்றால அதற்கு ஒன்று ஹேரை ஸ்ட்ரெயிட்னிங் செய்து செட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முடி பறக்காவண்ணம் செட் செய்வதற்கென்றே உள்ள ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம். ஆனால் வேர்க்கால்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். தலை குளிப்பதால் இழக்கும் முடியின் ஈரப்பதத்தை பாலன்ஸ் செய்ய இப்போது ஹேர் ஸ்ப்ரே, மூஸ் (mousse) என்று பல ரகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களது சலோன் கண்சல்டண்டின் ஆலோசனை கேட்டு உங்கள் கூந்தலுக்கேற்ற தயாரிப்பை வாங்குங்கள்.


சில இயற்கை முறைகளைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும். விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர தடவலாம். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து சீயக்காயுடன் சேர்த்து இயற்கையான கருமை நிறத்துக்கு உபயோகிக்கலாம். மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.


பேன் பிரச்சனைக்கு மருந்து போடுவது நல்லது. பொடுகு ட்ரீட்மெண்ட் போலவே இதற்கும் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கவனமாக தலையணை உறை முதற்கொண்டு மாற்றுவது அவசியம். ஏதேனும் விசேஷங்களுக்கு இடிமுடி வைத்து பின்னுவதாக இருந்தாலும் தரமானதாக உபயோகியுங்கள். முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும். சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது.


நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலை முடிக்கு மிகவும் அவசியம். எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் ஹேர்ஸ்டைல் நன்றாக இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. நல்ல மேக்கப்பையும் மோசமான ஹேர்ஸ்டைல் பாழ்பண்ணிவிடும். எனவே தலை முடிக்கு தனியான கேர் கொடுப்பது மிக அவசியம். யாருக்கு என்ன ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று நான் இங்கே குறிப்பிடவில்லை. காரணம், ஸ்டைலை விட அதை மெயிண்டெயின் பண்ணுவது முடியுமா என்ற விஷயத்தை யோசித்துவிட்டு தேர்ந்தெடுப்பது அவசியம்.

மனநிலை பாதிப்பை போக்கும் மருதாணிப்பூ!

மனநிலை பாதிச்சவங்களுக்கு சில வைத்தியம் சொல்றேன்:


இந்த மாதிரி பாதிப்பு உள்ளவங்களை புங்கை மர நிழல்ல இளைப்பாற வையுங்க. அடிக்கிற வெயில்ல எல்லோருமே புங்கை மர நிழல்ல படுத்து தூங்கி பாருங்க. உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.


மத்தபடி பொதுவா மனநிலை பாதிச்சவங்கள திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்து பார்க்கச்சொல்லுங்க. அத்திப்பழத்தை சாப்பிட கொடுங்க. பிறகு கசகசாவை பால் விட்டு அரைச்சி கற்கண்டு சேர்த்து குடிக்க கொடுங்க.


ஆரைக்கீரை தெரியுமா உங்களுக்கு. அதை அப்பப்போ சமைச்சி சாப்பிடலாம். அதேபோல அகத்திக்கீரை சாப்பிடலாம். இதெல்லாம் உங்களுக்கு புதுசா தெரியும்.
தினசரி காலைலயும், ராத்திரி சாப்பாட்டுலயும் கறிவேப்பிலை துவையல் சேர்த்துக்கிறது ரொம்ப நல்லது.


இந்த துவையல்ல எலுமிச்சை சாறு சேர்த்து குழப்பி சாப்பிடுறது நல்லது. மத்தபடி பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி எல்லாத்தையும் பொடியாக்கி ரெண்டு கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும்.


ராத்திரி தூங்கும்போது தலையணையில மருதாணிப்பூவை வச்சிட்டு தூங்குங்க. நிம்மதியா உறக்கம் வரும். அதேமாதிரி கால்ல மருதாணி பூசுங்க. அதுவும் பலன் தரும்.


இது எல்லாத்துக்கும் மேல என்ன காரணத்தால மனநிலை பாதிச்சதுன்னு தெரிஞ்சு அதுக்கு சரியான வழியை பாருங்க. சீக்கிரமா குணமாயிருவாங்க.

'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம்!

டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.

'அபூர்வ ராகங்கள்' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.

அதில் ஒரு விடுகதை:-

'தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.

அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.

கமல் - ஸ்ரீவித்யா

வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.

இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.

மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.

ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.

மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!

கத்திமேல் நடப்பது போன்ற கதை.

கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!

கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!

தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.

'யார் இந்தப் புதுமுகம்?' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.

கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.

'ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்' என்று கூறுகிறார், பாலசந்தர்.

ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

'மூன்று முடிச்சு' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது 'கவுரவ வேடம்' போன்றதுதான்.

ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.

இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-

'திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானேன்.

அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.'

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார். 

பிரசவத்திற்கு பின் வேலைக்குத் திரும்பும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!!!

ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் பெற்றெடுத்தவுடன் பெண்களின் கஷ்டம் தீர்ந்ததா என்றால் அது தான் இல்லை. அந்த குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். வேலைக்குத் செல்லாத பெண்களுக்கே இவ்வளவு பொறுப்பு என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை? அதுவும் குழந்தை பெற்றெடுத்து உடனே வேலைக்குச் செல்ல வேண்டுமானால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கண்கூடு.

மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும். ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம்.

அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு முடிந்து வேலைக்கு உடனே திரும்பும் போது, பெண்களை திணறடிக்கும் விஷயம் பல உண்டு.

ஆனால் அந்த சவால்களை வெற்றிக் கொள்ள உங்களுக்காக சில குறிப்புகளை அளிக்கிறோம். குழந்தையை பிரிதலான சவாலை வெற்றிக் கொள்ளுதல்: வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை தங்களின் பச்சிளங் குழந்தையின் நினைப்பாகவே இருப்பார்கள்.

அது அவர்களுக்குள் ஒரு குற்ற உணர்வை கூட ஏற்படுத்தும். இதனால் அவர்கள் ஒரு நல்ல தாய்க்கு உதாரணம் இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வாறு மனம் நினைக்கும் போது ஆழமாக சுவாசித்து, உங்களை நீங்களே நம்புங்கள். குழந்தையை பிரிதலான சவாலை வெற்றிக் கொள்ள பொறுப்புகளை நன்கு அறிந்து, அதை சரிவர வழி நடத்திச் செல்லுங்கள். தாய்ப்பால் ஊட்டுதலுக்கான சவால்கள்: வீட்டில் தாய்ப்பால் கொடுப்பதையும், அலுவலகம் சென்ற பின் மார்பிலிருந்து பாலை எக்கி எடுக்கவும் ஒரு பெண் படாத பாடுபடுகிறாள். ஆனால் இதை சரிவர செய்ய பழகி விட்டால், இந்த சவாலையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும். அதிலும் அலுவலகம் வந்த பின்னரும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க விரும்பினால், அலுவலக மேலாளரிடம் சின்ன இடைவேளைக்கு அனுமதி வாங்கிக் கொண்டு பாலை எக்கி எடுக்கவும். சில அலுவலகம் இதற்காக சுத்தமான ஒரு தனிப்பட்ட அறையை ஏற்பாடு செய்து கொடுக்கிறது. சில அலுவலகம் பெண்களின் பரிந்துரையின் பேரில், இதற்காக தற்காலிகமாக அறைகளை ஏற்பாடு செய்து கொடுக்கும்.

புது அட்டவணைப்படி பொருந்திக் கொள்ளும் சவால்: பெண்களின் அட்டவணையானது கண்டிப்பாக குழந்தை பெற்றப் பின், குழந்தைக்கு ஏற்றாற்போல் மாறிவிடும். வேலைக்குச் செல்லும் முன் போதிய கால அவகாசம் இருப்பதால், அதை பயன்படுத்திக் கொண்டு குழந்தையின் அட்டவணையை மெதுவாக, அலுவலக தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும். நம்பிக்கைக்குரிய குழந்தைப் பாதுகாவலரை கண்டுப்பிடித்தல்: குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஒரு நல்ல உள்ளூர் குழந்தைப் பாதுகாவலரை ஏற்பாடு செய்துக் கொள்ளவும் அல்லது குழந்தையை பாதுகாக்க வேறு ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேண்டுமெனில் வீட்டு பெரியவர்களை, வீட்டிற்க்கு வரச் சொல்லி குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் குழந்தையை தங்கள் குழந்தையை போலவே பாசம் காட்டி பார்த்துக் கொள்வர். குழந்தையை பார்த்துக் கொள்ள சரியான ஆட்கள் கிடைக்காவிட்டால், நம்பகத்தன்மையுள்ள ஒரு குழந்தை பாதுகாவலரை நியமித்து கொள்ளலாம். அதிலும் அவர்கள் வீட்டிற்க்கு அருகில் உள்ளவர்களாக, பாதுகாப்பான சூழலை உருவாக்கத் தெரிந்தவர்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலாளரிடம் பேசுங்கள்: அலுவலக மேலாளரிடம் முன் கூட்டியே தாய்மைப் பணியின் அட்டவணையை தெரிவித்து வளையுந்தன்மையுடைய வேலை நேரத்தை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

அதிலும் குழந்தை வளரும் வரை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் குழந்தையையும் கவனித்து, வேலையையும் நிம்மதியாக பார்க்கலாம். 

நீங்கள் எந்த வயதில் அழகாக காணப்படுவீ ர்கள் ?

மனிதர்கள் எந்த வயதில் அழகாக காணப்படுகின்றனர் என்பது குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.


இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மிக அழகாக தெரிகின்றனர் என்பது தெரியவந்தது. ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர்.


அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில் தான் அழகாக இருக்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர்.


ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏன் கணவர்கள் மனைவியிடம் பொய்சொல்கின்றார்கள் தெரியுமா ?

உலகம் முழுவதுமே உள்ள கணவர்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காகத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது அம்சமாய் ஒரு பெண் கிராஸ் செய்தால் அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம்.

அப்போது மனைவி கணவரை நோக்கி, இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே என்று கேட்பதோடு நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள். வீட்டில் ஏதாவது புதிதாக சமைத்தால் முதலில் பரிசோதனை செய்வது கணவரை வைத்துதான்.

மனைவியை சந்தோசப்படுத்த கணவரும் மூச்சுவிட முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று கணவன்மார்கள் பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் விடுவார்களாம். சமைத்த சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள்.

அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக் கொள்வார்கள்.

அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம். புதிதாக ஒரு புடவையை கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள்.

அவர்கள் சொல்வது சேலையைத் தான் அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்..!

கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தானாம்.


இதையே சாக்காக வைத்து எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை கணவர்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.