Monday, 3 February 2014

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்:-

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்:-

சர்க்கரை நோய்க்கு இயற்கை கஷாயம் மிகவும் நல்லது. முள்ளங்கி கிழங்கு 2 எடுத்து கொண்டு நசுக்கி கொள்ள வேண்டும். வேப்பிலை, மா இலைகளை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர், மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.

தினமும் 100 மில்லி கஷாயம் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 நாளைக்கு ஒருமுறை புதியதாக கஷாயத்தை தயாரித்து வைத்து கொள்ளலாம். சர்க்கரை நோயை பொருத்த வரை உணவு முறை முக்கியமான ஒன்று.வழக்கமாக அவரவர் உடம்புக்கு ஏற்றவாறு உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இரவில் உணவின் அளவை பாதியாக குறைத்து கொள்ள வேண்டும். உடல் கட்டுப்பாடுக்கு ஏற்ப 20 முதல் 30 நாட்களுக்கு கஷாயத்தை தொடர்ந்து குடித்து வரவேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்:

மா இலை, அத்தி இலை ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண் பாத்திரத்தில் பாதியாக காய்ச்சி கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு பிறகு 50 மில்லியும் குடித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும்.

உடலில் ஏற்படும் தீராத புண் மீது அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை எண்ணெயில் கலந்து இரவு தூங்க போகும் முன் தடவி வந்தால் நோய் குணமாகும். பகல் நேரங்களில் உணவு சாப்பிடுவதற்கு முன்பு பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு:

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் டைப் 2 நீரிழிவு நோய் குணமாகும். நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையும். அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறைகிறது. இந்த நோயை கட்டுபாட்டிற்குள் கொண்டு வராவிட்டால் குளுகோஸூம், கொழுப்பும் உடலில் அதிக நேரம் தங்கி இருந்து உடல் உறுப்புகளை சேதப்படுத்தும். இதை தடுக்க பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், உடலில் இன்சுலின் அதிகளவில் சுரக்கும், கெட்ட கொழுப்புகளின் அளவும் குறையும்.

நீரிழிவு நோயாளிகளின் உடல் பருமன்:

பாதாம் பருப்பை போல இதர கொட்டை பருப்புகளும் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதாக ஆய்வின் கூறப்படுகிறது. பாதாம் மற்றும் மற்ற கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுகின்றன. பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை அண்டாது.

இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்..?

இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்

தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.

சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்.

தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.

மதுரை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் ‘இட்லி, தோசை மாவு தரமான அரிசி, உளுந்து கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப்படும் போது யாருக்கும், எவ்வித பாதிப்பும் கிடையாது. மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம்.

மாவு தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்கள் வரை தான் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும். அதற்கு மேல் கெட்டுப் போய் விடும். இம்மாதிரியான சூழலில் மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகிறார்கள் என சொல்ல முடியாது. கடைகளில் மக்கி போன, பூஞ்சை படர்ந்த அரிசி, உளுந்து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்காக மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.35 என்றால் காலாவதியான அரிசி கிலோ ரூ.5 முதல் ரூ.10க்கு கிடைக்கிறது. அதே போல் உளுந்து கிலோ ரூ.70 என்றால் இந்த உளுந்து அதிகபட்சம் கிலோ ரூ.20 தான். தற்போது கிடைக்கும் விலையில்லா அரிசியைக் கொண்டு குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டலாம். மாவு வெண்மையாக, பஞ்சு போல் இருப்பதற்காக சிறிதளவு சுண்ணாம்பு, பிளீச்சிங் லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்தவுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைகளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரும்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது கடினம். மினரல் வாட்டரை மாவு தயாரிக்கும் அனைவருமே பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.

சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும்‘ என்றார்.

மாவு விற்பனை மூலம் அதிக லாபம்

வீடுகளில் மாவு விற்பனை செய்யும் சாந்தி கூறியதாவது: ‘ஒரு படி ரேஷன் அரிசிக்கு, கால் கிலோ ரேஷன் உளுந்து பயன்படுத்துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவசமாக கிடைக்கிறது. ரேஷன் உளுந்து ஒரு கிலோ ரூ.30 தான். அப்போது கால் கிலோ உளுந்து ரூ.7.50. இதனை அரைக்க ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்தம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு ரூ.10 தான். மாவு பஞ்சு போல் சாப்ட்டாக வருவதற்கு கொஞ்சம் ஆப்ப சோடா சேர்த்துக்கலாம். ரேசன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசி பாதி சேர்த்தால் மாவு வெள்ளையா தான் இருக்கும். நல்லா கழுவிட்டா வாடையே இருக்காது. இந்த மாவை ஒரு கப் ரூ.20க்கு 5 பேருக்கு விற்கலாம். ஒரு நாளைக்கு எப்படியும் 5 படி அரைச்சு விற்போம். இதனால் குறைந்தது ரூ.400 லாபமாக கிடைக்கும்‘ என்றார்.

புகார் வந்தால் நடவடிக்கை உறுதி

மதுரை மாவட்ட உணவு மற்றும் மருந்தியல் பாதுகாப்பு நிர்வாக அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது: ‘மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8 ஆயிரம் பேர் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் பாக்கெட் செய்து இட்லி தோசை மாவு விற்பனை செய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு முறை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து உரிமம் வழங்கியிருக்கிறோம். வீடுகளில் மாவு தயாரிப்பவர்களையும் எங்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் முன்வருவது இல்லை. மேலும், சுகாதாரமான முறையில் எவ்வாறு மாவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். புகார் பெறப்பட்டால் மாவு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, கலப்படம், சுகாதாரமின்மை கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

3 வருடம் சிறை தண்டனை உண்டு

நுகர்வோர் கண்காணிப்பகத்தின் தலைவர் வக்கீல் பிறவிப்பெருமாள் கூறுகையில், கலப்பட தடைச் சட்டம் மற்றும் உணவுப்பொருள் தர நிர்ணயம் சட்டப்படி புகாருக்குள்ளான உணவுப்பொருளின் மாதிரி எடுக்க வேண்டும். 14 நாட்களுக்கு பகுப்பாய்வு செய்து அதன் முடிவை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கொடுக்க வேண்டும். ஆய்வு முடிவின் அடிப்படையில் இருவிதமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் வழக்கு நடைபெறும். இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். அடுத்த நிலையில் டிஆர்ஓ கோர்ட் மூலம் வழக்கு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலப்பட தடுப்பு பிரிவிற்கு என தனியாக நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர்.

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர்.

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர். சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது , மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.

இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ…

இடமிருந்து வலம்.. லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி

இடமிருந்து வலம் ..Louis Pasteur Albert Einstein Ibn Khaldoun Ben Johnson Aristotle Thiruvallur Plato Confucius Socrates, and Maria Montessori

இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.

இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்.

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது.

அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது. கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறு நீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை உண்டாக்குகிறது. இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும் போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது.

சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?

குடும்ப பாரம்பரியம் இதற்கு முக்கிய காரணம். ஆக்சலேட் நிறைந்த காய்கறி உணவுகள், தண்ணீரில் உள்ள தாதுப்பொருட்கள், மாமிசம், அதிக புரதச் சத்துள்ள உணவுகள் ஆகியவை சிறுநீர் கற்கள் உருவாக முக்கிய காரணம் ஆகும். இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச் சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
4. பிரத்யேக உறுப்புகளின் சுத்தமும் பராமரிப்பும் முக்கியம்!

சிறுநீரகக் கற்கள் யாருக்கு உண்டாகிறது?

30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஆண்கள், வேலை காரணமாக வெயிலில் செல்கின்றனர். கடும் வேலை பளு காரணமாக தண்ணீர் குடிக்காமல் சிறுநீர் கற்கள் ஏற்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் ஆக்சலேட்டை உடலில் அதிகமாக உற்பத்திச் செய்கின்றன.

சிறுநீரகக் கல் உருவானது அறிகுறி:

அடி வயிற்றில் வலி இருக்கும். குமட்டல், வாந்தி, படபடப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும். ஙீக்ஷீணீஹ். மிக்ஷிறி மற்றும் 24 மணி நேர யூரின் டெஸ்ட் செய்ய வேண்டும்.

சிறுநீரகக் கல் உருவானது எப்படித் தெரியும்?

மலைப் பகுதியான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் போன்ற ஏரியாக்களில் தண்ணீரில் சால்ட்கள் அதிகமுள்ளன. அந்த ஏரியாவின் பள்ளியில் உள்ள சிறுவர்கள் அடி வயிறு வலிக்கிறது என்று சொன்னதால் அவர்களுக்கு டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மாம்பழம், சீதாப்பழம் போன்றவை அதிக ஆக்ச லேட் கொண்டவை. பால், தயிர் மற்றும் பால், பொருட்கள் போன்றவை மூலம் கால்சியம் உள்ளே செல்வதால் உடலில் உள்ள உறுப்புகளில் கால்சியம் ஊறித் ததும்பிய நிலையில் இருக்கும்.

தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான லைஃப் ஸ்டைல், அதிகமான வேலைகள், டென்ஷன் போன்றவை பி.பி. போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக்கல்லுக்கும் ஒரு காரணம். முறையான வாழ்க்கை ஆரோக்கியமான உணவு நல்ல உறக்கம். மன அழுத்தமில்லா நிலை போன்றவை கிட்னி ஸ்டோனுக்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். சிறுநீர் கற்கள் உற்பத்தியாவதை தடுப்பது மருந்துகளில் இல்லை. அது நம் கையில்தான் உள்ளது. கிட்னி ஸ்டோன் பிரச்னைகளால் வலி மட்டுமல்லாமல் இறப்புகளும் கூட அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதனால் உணவில் கவனமாக இருங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

தேநீர், பருப்புக் கீரை
வாழைப்பூ, வாழைக்காய், கொள்ளு
கேசரி பருப்பு
மாம்பழம், சீதாப்பழம்
அரைக்கீரை, முருங்கைகாய்
தாமரைத்தண்டு, எள்
பச்சைமிளகாய், நெல்லிகனி

உட்கொள்ள வேண்டியவை:

நிறைய தண்ணீர்,
பழச்சாறு (எலுமிச்சை, மாதுளம், தர்பூசணி)
கேழ்வரகு
புழுங்கல் அரிசி
பருப்பு, காய்ந்த பட்டாணி
கோஸ், கேரட், வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய், அவரை, வெண்டைக்காய்

காய்கறிகள்: தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம் (Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் அதிகம் (Purines) உள்ளன. இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்.

பழங்கள்: சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம்.

எள்: இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

அசைவ உணவுகள்: ஆட்டிறைச்சி (Mutton), மாட்டிறைச்சி (Beef), கோழிக் கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமில மும் அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

முந்திரிப்பருப்பு: இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்தவை ஆகும். இதனைத் தவிர்க்கவும். சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ ஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது. எச்சரிக்கை தேவை. தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும், கடினத்தன்மை உள்ள நீராய் இருந்தால் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.

கற்களின் வகைகளுக்கேற்ற சிறப்பு உணவு முறைகள்

கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக் கொள் ளவும். வயிறு அல்சருக்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டா சிட் மருந்துகளைத் தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ளவும்.

யூரிக் அமில வகை கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிக உள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன், பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

ஸ்ட்ரூவைட் வகை கற்கள் : இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன. மருத்துவர் பரிந்துரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகள் (ஆன்டி பையாடிக்ஸ் -Antibiotics) மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும் தினம் குறைந்தது 12 டம்ளர் நீர் அருந்தவும்.

சிஸ்டின் வகைக் கற்கள் :இவை மிக அபூர்வமானவை. மீன் உணவை தவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.

உலகிற்கு தேவையானவர்கள்...

உலகிற்கு தேவையானவர்கள்...

1 பேச்சை விட செயலில் பிள்ளைகளுக்கு முன்மதிரியனவர்.

2 உதவி பெறுவதை விட உதவி செய்வதை விரும்புபவர்.

3 தவறு என்னுடையது,நான் வருந்துகிறேன் எனக்கூறுவதற்கு தயங்காதவர்.

4 தவறு செய்ய வேண்டி ஏற்படக்கூடிய நேரத்தில் அதைவிட்டு நீங்கிக்கொள்ளத் தயங்காதவர்.

5 ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடித்த பின் அதன் வெற்றியை அச்செயலில் தமக்கு உதவியவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தயங்காதவர்.

6 தனது பிள்ளைகளை புனித ஸ்தலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக அங்கு கூட்டிக்கொண்டு செல்பவர்.

7 பிறரது தவறுகளை காண்பதற்கு முன்னர் தனது தவறுகளை காணக்கூடியவர்.

8 தனது அறிவு,நேரம்,பணம் என்பவற்றை மீண்டும் பெறக்கூடிய நோக்கமின்றி பிறருக்காக செலவு செய்பவர்.

9 தாம் பின்பற்றும் மதத்தை சார்ந்து அதன் போதனைகளை முற்றாக பின்பற்றுபவர்.

10 மற்றவர்களை எப்போதும் புன்முறுவலோடு நோக்கி அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களோடு அன்பாக பழகி தட்டிக்கொடுப்பவர்.

வண்ணத்துப் பூச்சிகளின் பளபளப்பிற்கு என்ன காரணம்?

பூச்சி இனத்திலேயே மிகவும் அழகான, அனைவராலும் அறியப்பட்ட பூச்சி வண்ணத்துப்பூச்சி தான்.

உலகில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. வெப்ப மண்டலக் காடுகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றன.

இவற்றின் இறக்கைகளின் மீது வண்ண நிற செதில்கள் காணப்படுகின்றன, இவைதான் பூச்சிகளின் பளபளப்பிற்கும் காரணம்.

இதில் செதில்களை அகற்றி விட்டால் தெளிந்த பகுதிபோல் தோன்றும், மேலும் அவைகளால் பறக்கவும் முடியாது.

கசப்பான மருந்து!

உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

அந்தவகையில் அந்த புழுக்களை அழிக்கவல்ல பாகற்காயின் நன்மைகளை பார்ப்போம்.

1.பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2.பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3.பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4.பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5.ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6.பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு(கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7.உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

8.பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

9.நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

10.ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

11.மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12.பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

எச்சரிக்கை விடுத்ததுள்ளது யாகூ(yahoo...)

பிரபல்யமான மின்னஞ்சல் சேவை வழங்குனர்களுள் ஒருவராகத் திகழும் யாகூ நிறுவனமானது தனது பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றினை விடுத்துள்ளது.

அதாவது பயனர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மாதங்களில் யாகூ தளத்தினை ஊடுருவும் செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்த அதேவேளை தற்போது ஹேக்கர்கள் மீண்டும் மின்னஞ்சல் கணக்குகளை ஹேக் செய்ய எத்தனித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உங்கள் யாகூ மின்னஞ்சலின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு கைப்பேசிகளுக்கு SMS மூலமாகவோ அல்லது மாற்று மின்னஞ்சலின் ஊடாகவோ உள்நுழையும்போது எச்சரிக்கை செய்தியை பெறும்பொருட்டு தகவல்களை வழங்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் கவிதை எழுதும் ரோபோ !

உலகப் பிரபல ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரிய­ருமான வில்லியம் ஷேக்ஸ்பியரின் எழுத்தாக்கங்களை கற்றுக்கொண்டு சுயமாக கவிதை எழுதக்கூடிய ரோபோவொன்றை அமெரிக்க டெக்கிரன்ச் செய்தி இணையத்த­ளத்தைச் சேர்ந்த நடாஷா லோமஸ் என்பவர் வடிவ­மைத்துள்ளார்.

மேற்படி ரோபோவானது 'புளுவன்சி' என அழைக்க­ப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி ஷேக்ஸ்பியரின் எழுத்து நடையை பகுப்பாய்வு செய்து கிரகித்து கவிதைகளை சுயமாக எழுதுகிறது.

இந்த மென்பொருள் அன்ட்ரோயிட் கையடக்கத்தொலை பேசியில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் மேற்படி ரோபோ இயந்திரம் வழங்கப்பட்ட சொற்களின் பட்டியலிலிருந்து பொருத்தமான சொற்களைத் தெரிவு செய்து புதிய கவிதையொன்றை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. 

தாவரங்களுக்கு நினைவாற்றலும் கற்கும் திறனும் உண்டாம் ???

ஆஸ்திரேலியாவின், உயிரியல் பரிமாணங்கள் பற்றிய ஆய்வாளர்கள், தாவரங்களின் கற்கும் திறன் பற்றிய ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து, ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

விலங்குகள் மனிதர்களைப் போலவே, கற்கும் திறன் படைத்தவை. விலங்குகளுக்கு மூளை இருப்பதால், இயற்கையாக கற்கும் செயல்களையும், மனிதர்களால் கற்பிக்கப்படும் செயல்களையும், அவை மீண்டும் நினைவு கூர்ந்து செயலாற்றுகின்றன.

இதன் மூலம் விலங்குகளுக்கு நினைவாற்றல், கற்கும் திறன் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தாவரங்களும் நினைவாற்றல் பெற்றுள்ளன. தாவரங்களுக்கு மூளை கிடையாது. எனினும், தாவரங்கள் இயற்கையால் தங்களுக்கு நேரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அதற்கேற்ப செயல்படுகின்றன.

அதேபோல், தாவரங்களுக்கு கற்கும் திறனும் உண்டு. தாவரங்களில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. ஒரு தாவரத்தை குறிப்பிட்ட கலனில் வைத்து, நீரில் மூழ்கடித்தோம்.

நீரில் மூழ்குவதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, அத்தாவரம், தன் இலைகளை சுருக்கிக் கொண்டது. நீரிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இலைகள் மீண்டும் பழைய நிலையை அடைந்தன.

இதேபோல் மீண்டும் மீண்டும் செய்த போது, ஒரு குறிப்பிட்ட முறைக்கு மேல், அத்தாவரம், நீரில் மூழ்கடிக்கும் போதும், அதன் இலைகளை சுருக்கிக் கொள்ளவில்லை. முதல் முறை புதிய நிகழ்வு நடக்கும்போது, இடர்பாட்டிலிருந்து தன்னை காத்துக்கொள்ள தாவரம் இலையை சுருக்கியது.

அதே நிகழ்வு மீண்டும் மீண்டும் நிகழ்ந்ததால், அதில் ஆபத்து இல்லை என உணர்ந்த அத்தாவரம், இலைகளை சுருக்குவதை நிறுத்திக் கொண்டது. இதேபோல், தாவரங்களின் கற்கும் திறன் குறித்தும், சில சோதனைகள் நடத்தப்பட்டன.

வெவ்வேறு பருவநிலைகளில், வெவ்வேறு சுற்றுச் சூழலுக்கு ஏற்ப தாவரங்களின் கற்கும் திறன், நினைவாற்றல் மாறுபடுகிறது. இது ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தாவரங்கள் பற்றிய மேலும் சில ஆய்வுகளுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறபப்பட்டுள்ளது. 

ஆண்களே !! இளவயதில் திருமணமா ? எச்சரிக்கை !!!

இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதால், ஆண்களின் எலும்புகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது,

அதிக வயதில் திருமணம் செய்வோரை விட, 25 வயதுக்குள் திருமணம் செய்யும், இளைஞர்களின் முதுகெலும்பு, பலம் குறைந்து காணப்படுகிறது.

மேலும், இளம் வயதில் திருமணம் செய்வோரிடம், விவாகரத்து செய்வது அதிகளவில் காணப்படுகிறது.

குறைவான கல்வி மற்றும் வருமானம் உடையவர்களின், இளம் வயது திருமணத்தால், முதுகெலும்பு திண்மை ஆண்டுதோறும் குறைந்து, அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

எனவே, திருமணத்தை, 25 வயதிற்குப் பின் செய்வது நல்லது. பெண்களைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையின் ஆதரவே பெரிய பலமாக அமைந்துவிடுவதால், அவர்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. இவ்வாறு, ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளியில் அமைக்கப்படும் லடா பசுமைத் தோட்டம்!

உலக நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணியில் உள்ள விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளுக்காக அங்கே  லடா என்ற பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு சோதனை முயற்சியாக காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பட்டாணி, கீரை வகைகள் மற்றும் குள்ள வகையைச் சேர்ந்த கோதுமை போன்றவை இதுவரை அங்கு விளைவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்ற சான்றிதழைப் பெற்றுள்ளதாக உயிர்மருத்துவவியல் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும் ரஷ்ய நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ரஷ்ய ஆய்வாளரான மார்கரிட்டா லெவின்ஷிக் சமீபத்தில் மாஸ்கோவில் நடைபெற்ற விண்வெளிக் கருத்தரங்கின் ஆண்டு மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த ஆண்டிற்கான பழுது பார்க்கும் பணி நிறைவடைந்தவுடன் அரிசி, தக்காளி, மணி மிளகு போன்றவை அங்கு பயிரிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைக்காக இந்தப் பயிர்கள் பயன்படுவதோடு விண்வெளியில் ஏற்படக்கூடிய மரபணு மாற்றங்கள் குறித்த ஆய்விலும் இவை பயன்படுத்தப்படும் என்று ஆய்வு நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்வெளியில் அமைக்கப்படும் வாழ்விடம் குறித்த நம்பிக்கையை அளிப்பதாக இந்த முடிவுகள் இருப்பதாக ரஷ்ய ஆய்வு நிறுவனம் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் உடா மாகாண பல்கலைக்கழகத்தின் விண்வெளி டைனமிக்ஸ் ஆய்வகத்துடன் இணைந்து ரஷ்ய நிறுவனம் இந்த விவசாய முயற்சியில் இறங்கியுள்ளது. 

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக் கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.

(ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.)

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

ஏப்ரல் 11-ல் வெளியாகிறது 'கோச்சடையான்'! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'கோச்சடையான்' ஏப்ரல் 11-ம் தேதி உலக அளவில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில், மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது.

அவதார், டின் டின் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், முதல் முதலாக இந்திய சினிமாவில் கோச்சடையான் மூலம் புகுத்தப்பட்டுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் உடன் தீபிகா படுகோன், சரத் குமார், நாசர், ஆதி மற்றும் ருக்மணி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் 11-ல் கோச்சடையான் ரிலீஸ் ஆவது குறித்து இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் கூறும்போது, இந்தியாவில் மாற்று சினிமா களத்தில் கோச்சடையான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டார். 

கதாநாயகன் முக்கியமல்ல, கதைதான் முக்கியம்! ஹன்சிகா அதிரடி

சினிமாவில் என்ட்ரியாகும் நடிகைகள் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடினால்தான் முன்னணி இடத்துக்கு செல்ல முடியும். கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்க முடியும். அதனால்தான், அந்த மாஸ் இறங்கி விடக்கூடாது என்று முன்னணி நடிகைகள் கவனமாக இருப்பார்கள். ஆனால், சமீபகாலமாக ஹன்சிகா அப்படி பார்ப்பதில்லை. சிவகார்த்திகேயனுடன் மான்கராத்தேயில் நடிப்பவர், அடுத்து ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் என்ற புதுமுகத்துடன் நடிக்கிறார்.

இப்படி நடிப்பதால், மார்க்கெட் இறங்கிப்போகாதா? என்று அவரைக்கேட்டால், படங்களின் வெற்றிதான் மார்க்கெட்டை முடிவு செய்கிறது. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து படங்கள் தோற்று விட்டால் அப்படங்களின் ஹீரோக்கள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ கதாநாயகியை ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டி விடுவார்கள் என்ற நிலைதான் உள்ளது.

அதனால்தான், வெற்றியை முன்வைத்தே எனது பயணம் செல்கிறது. அதன்காரணாகத்தான், கதாநாயகனைப்பார்த்து படங்களை ஒத்துக்கொள்வதை நிறுத்தி விட்டு, கதையை முன்வைத்தே படங்களை ஓ.கே செய்து வருகிறேன் என்று சொல்லும் ஹன்சிகா, எல்லா மொழியிலும் இதே பாணியைத்தான் இப்போது கடைபிடிக்கிறாராம்.

இதனால் உங்களது படக்கூலி இறங்கி விடுமே? என்றால், என்னைப்பொறுத்தவரை, இப்போதும் படத்துக்கப்படம் எனது சம்பளம் எகிறிக்கொண்டுதான் இருக்கிறது. முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்பதற்காக யாரும் எனது படக்கூலியை குறைக்கவில்லை என்கிறார் ஹன்சிகா.

4 உடன் 5 மகிழ்ச்சி அளிக்கிறது....

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அந்த வகையில் 1992ல் சினிமாவுக்குள் என்ட்ரியான அவர், கடந்த 21 ஆண்டுகளில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தேசிய விருது, ஆஸ்கர் விருது போன்ற விருதுகளை பெற்றவர், இதுவரை 4 முறை டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தற்போது 5வது முறையாகவும் அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த பட்டம் கிடைத்துள்ளதாம். 1945ம் ஆண்டிலிருந்து உலக அளவில் நடிப்பு, நடனம், இசை போன்ற துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த டாக்டர் பட்டத்தை தான் மட்டும் வாங்கிக்கொள்ளாமல் தனது கேஎம் இசைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்களுடன் சென்று பெற்றுள்ளாராம் ரகுமான்.

அதோடு, ஒவ்வொரு முறை விருதுகள், பட்டங்கள் கிடைக்கும்போது சந்தோசத்தையும், நெகிழ்ச்சியையும் அனுபவிக்கிறேன். அந்த வகையில், இந்த டாக்டர் பட்டம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் கொடுத்துளளது என்று தெரிவித்துள்ளார் ரகுமான்.

ஆண்ட்ரியாவுக்கு கிடைத்த அதிஷ்டம்...?

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு ஆண்ட்ரியாவின் மவுசு ஓரளவு எகிறியிருக்கிறது. ஆனபோதும், முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. அதனால், அதன்பிறகு தனது சமபளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஆண்ட்ரியா அடக்கி வாசித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது விஸ்வரூபம்-2 படம் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருப்பதால், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நான்தான் முக்கிய கதாநாயகியாக நடித்திருக்கிறேன். கமலுடன் எனக்கு பாடல் காட்சிகூட உள்ளது. அதோடு, கிளாமரிலும் அதிரடியாக பிரவேசித்திருக்கிறேன் என்று புதிய பில்டப்பை அவிழ்த்து விட்டு வருகிறார்.

அதை முன்வைத்து, புதிதாக கமிட்டாகும் படங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி விட்டுள்ள ஆண்ட்ரியா, பிரம்மன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமாட வேணடும் என்று கேட்டபோது, 25 லட்சம் வேண்டும் என்றாராம். ரொம்ப ஜாஸ்தியா இருக்கே என்று தயாரிப்பாளர் தலையை சொறிந்தபோது, வேண்டுமானால், அந்த பாடலையும் நானே பாடிக்கொடுக்கிறேன். இரண்டுக்கும் சேர்த்து இதே சம்பளத்தை கொடுங்கள் என்றாராம்.

இதற்கு படாதிபதி உடன்படாத போதும், அந்த காட்சியில் அவர் ஆடினால்தான் சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர் சொன்னதால், இப்போது ஆண்ட்ரியாவையே புக் பண்ணியிருக்கிறார்களாம். இதனால் இன்னும் கொஞ்சம் அடித்து பேசினால், நாமளும் கோடிக்கணக்கில் சம்பளமே கேட்கலாம் போலிருக்கே என்று உற்சாக மனநிலையில் இருக்கிறார் ஆண்ட்ரியா.

சந்தானத்திற்கு ஷாக்! கொடுத்த படம் இதுதான்...?

கவுண்டமணியின் தீவிர ரசிகர் சிம்பு. அதனால் தனது ஆரம்பகால படங்களில் அவரை தனது படங்களில் நடிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், சந்தானத்தின் நடிப்பும் அவரை கவர்ந்ததால், காதல் அழிவதில்லை படத்திலிருந்தே அவருக்கு வாய்ப்பு கொடுத்து வந்கிறார்.

ஒரே படத்தோடு விடாமல் தொடர்ந்து தான் நடித்த படங்களில் சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்து அவரை சினிமாவில் ஆளாக்கி விட்டார் சிம்பு.

அதனால், சிம்புதான் எனது காட்பாதர் என்று மேடைகளில் சொல்லும் சந்தானம், அவரது படங்களுக்கு எப்போது அவர் அழைத்தாலும் ஓடிச்சென்று நடித்துக்கொடுப்பேன். சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன், இல்லையென்றாலும் நடிப்பேன் என்று கூறும் சந்தானம், தற்போது சிம்பு-நயன்தாரா இணைந்துள்ள இது நம்ம ஆளு படத்திலும் தனக்கு கண்டிபபாக வாய்ப்பு இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தாராம்.

எப்படியாவது அழைப்பு வரும் என்று நினைத்தவருக்கு தற்போது சூரியே அப்படத்தின் பிரதான காமெடியனாக நடிக்கும் அதிர்ச்சி செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாம.

இதையடுத்து, அவசர அவசரமாக சிம்புவையும் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த கதையை எழுதும்போதே சூரியை மனதில் கொண்டு பாண்டிராஜ் எழுதிய விவரத்தை சிம்பு சொல்ல, என் காட்பாதர் படத்தில் நான் இல்லையா? இது கொஞ்சம்கூட நியாயமே இல்லை என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியவர், எப்படியோ உங்களுடன் நான் இல்லையென்றாலும், நீண்ட இடைவேளைக்குப்பிறகு நயன்தாரா இணைந்திருக்கிறார்.

ஏதோ ஒருவகையில் நல்லது நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இதுகூட எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்று அப்படம் வெற்றிபெற மனதார வாழ்த்து சொல்லி விடைபெற்றாராம் சந்தானம்.

பிரகாஷ்ராஜிக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு!

வழக்கமாக ஹீரோக்கள், ஹீரோயின்கள்தான் இரட்டை வேடங்களில் நடிப்பார்கள்.

வில்லன்கள் எப்போதாவது ரொம்ப அபூர்வமாக நடிப்பார்கள். இப்போது பிரகாஷ்ராஜ் வில்லனாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ் படத்தில் அல்ல தெலுங்கு படத்தில். மகேஷ்பாபு நடிக்கும் அகடு படத்தில்தான் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார்.

 இந்த படத்தை ஸ்ரீனுவைட்லா டைரக்ட் செய்கிறார். ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று குழந்தையிலேயே பிரிந்து விடுகிறதாம்.

 பிரிந்த குழந்தை சர்வதேச தீவிரவாதியாக வளர்கிறதாம், இன்னொரு குழந்தை இந்தியாவில் அராஜக அரசியல்வாதியாம்.

ஹீரோ மகேஷ்பாபுவே பிரகாஷ்ராஜின் கேரக்டருக்கு நல்ல முக்கியத்தும் கொடுத்து எடுக்குமாறு கூறிவிட்டாராம்.

கமல் - புதிய படத்தின் பெயர் "காட்சிபிழை"

மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த த்ரிஷ்யத்தை ரீமேக் செய்ய இந்திய மொழிகள் அத்தனையிலும் போட்டி நடக்கிறது. தெலுங்கில் வெங்கடேஷ் ரீ-மேக் செய்கிறார்.

மோகன்லால் நடித்த கேரக்டரில் அவரே நடிக்கிறார். தமிழில் விகரம், சரத்குமார், நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்தது. இப்போது த்ரிஷ்யம் ரீ-மேக்கில் கமல் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார். மோகன்லால் நடித்த கேரக்டரில் கமல் நடிக்கிறார். தமிழ் ரீமேக்கிலும் மீனாவே நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. மறைந்த தயாரிப்பாளர் பாலாஜியின் (மோகன்லாலின் மாமனார்) மகன் சுரேஷ் பாலாஜியும், ஜார்ஜ் பியோசினின் வைட் ஆங்கிள் கிரியேஷனும் இணைந்து தயாரிக்கிறது.

 கமல் விஸ்வரூபம்-2க்கு பிறகு ரமேஷ் அரவிந்தின் உத்தம வில்லன் படத்தை இரண்டு மாத்ததில் முடித்துவிட்டு திரிஷியத்தில் நடிக்கிறார். படத்திற்கு காட்சிபிழை என்று டைட்டில் வைக்க இருக்கிறார்கள். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதுகுறித்து ஜீது ஜோசப் கூறியதாவது: கமலுடனான ஒப்பந்தம் முடிந்து விட்டது. மற்ற நடிகர், நடிகைள் டெக்னீஷியன்கள் பற்றி பேசி வருகிறோம். என்றார்.

மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!

 Methods of Laptop Maintenance.! மடிக்கணினி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்பவர்கள் (Business mans), சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். லேப்டாப்பின் வளர்ச்சி அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது.

 லேப்டாப்பானது பல்வேறு அளவுகளில், சிறிதும் பெரிதுமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு கொண்டுள்ளன. பொதுவாக லேப்டாப்பை அனைவருமே விரும்பக் காரணம் எடை குறைவு, எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடிவது என காரணங்களை வரிசையாக அடுக்கலாம். இதனால்தான் மடிக்கணினியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் எத்தனைப் பேர் முறையாக மடிக்கணினியைப் பராமரிக்கின்றனர் என்பதுதான்.

மடிக்கணினியை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு எந்த ஒரு செலவும் செய்யாமல், எந்த பிரச்னையும் வராமல் வருடக்கணக்கில் புதிய மடிக்கணியின் (new laptop computer ) செயல்பாட்டை வேகத்தை உங்களால் பெற முடியும். இதற்கு குறிப்பிட்ட பராமரிப்பு வேலைகளை (Maintenance) தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக பரிமரித்தால் நிச்சயம் உங்களுடைய மடிக்கணினிக்கு ஆயுள் கூடும்.


மடிக்கணினியை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? 
Methods of Laptop Maintenance

    குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System த்தை புதுபிக்கவும்.
    மடிக் கணினிக்கு -ற்கு Battery மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும்.


    குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். (உ.ம் - வெளியூர் செல்லும் நாட்கள்) remove battery in the laptop if you have not work on laptop two or three days  மடிக்கணினிக்கான உறை பையை (Use Laptop Bag) பயன்படுத்துவது உங்கள் மடிக்கணினிக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.


    மடிக் கணினியில் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற, அதற்கு தகுந்தாற் போல் உள்ள சமமான இடத்தில் வைத்து பணியாற்ற வேண்டும்.
    மடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்துங்கள். (Use Laptop Stand)


    அதிக தூரப் பயணங்களின் போது பயணித்தவாறே லேப்டாப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
    லேப்டாப்பிற்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger)பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High power flow) காரணமாக உங்களுடைய லேப்டாப் செயலிழந்து போகலாம்.


    மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லேபேட்டரி சிக்னல் கிடைத்தப் பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும்.
    முடிந்தளவு மடிக்கணினி இயக்கவிட்டு, அதில் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். (do not charge laptop battery while working on laptop.)


    மடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்னை என்றாலும் கூட, அதை நாமாவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்னையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே தெரியாத ஒன்றை செய்ய லேப்டாப் பொறுத்தவரை முயற்சிக்க கூடாது.


    மடிக்கணினியின் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்த கூடாது.(Do not change the battery from a laptop to another laptop) ஒரு லேப்டாப்பிற்கான பேட்டரியை அதே லேப்டாப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு

'இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது.

பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.

10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.

வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து. விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும்!''

வெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன?

அந்தப் புதிய முயற்சியிலே, அவர் வெற்றி அடைவாரா அல்லது தோல்வி அடைவாரா என்பதை எப்படித் தீர்மானிப்பது?

‘நாம் வெற்றியே அடைவோம்’ என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வலுவாக இருக்க வேண்டும். இருந்தால் அவர் முழு வெற்றியை அடைவார், உறுதி.

நாம் வெற்றி அடைவோமோ, மாட்டோமோ என்ற அரைகுறையான நம்பிக்கையாக அது இருந்தால் அடையக் கூடிய வெற்றியும் அரைகுறையான வெற்றியாகத்தான் இருக்கும்.

முயற்சியில் குதித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும்போதே, தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது? தோல்வி அடைந்துவிட்டால் நிலைமை இப்போது இருப்பதைக் காட்டிலும் படுமோசமாகப் போய்விடுமே என்று சந்தேகப்பட்டால் - என்று பயந்தால் தோல்விதான். வெற்றி கிடைக்கவே கிடைக்காது.

சுருக்கமாகச் சொன்னால்…

ஒரு மனிதன் தனக்கு என்ன நடக்கும் - எது கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறானோ அதுவே அவனுக்கு நடக்கும். அதுவே அவனுக்குக் கிடைக்கும்.

நன்மைகளை நாம் அடைந்தே தீருவோம். வெற்றிகளை நாம் குவித்தே தீருவோம் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் உறுதியாக இருக்க வேண்டும். வேரூன்றி விளங்க வேண்டும்.

‘நமக்கு எங்கே நன்மைகள் வரப்போகின்றன. நமக்கு மேலும் மேலும் சிரமங்கள்தாம் வந்து கொண்டிருக்கும்,’ என்று மனத் தளர்ச்சியோடு நாம் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தால் நாம் எதிர்பார்க்கிற துன்பங்களும், துயரங்களுமே நம்மைச் சூழும்; மேலும் மேலும் சூழும், சூழ்ந்து சூழ்ந்து நம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

நம்மிடத்திலே நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நாம் நன்மைகளையோ உயர்வுகளையோ ஒருநாளும் பெறமுடியாது.

இதே கருத்தைத்தான், மனம்போல வாழ்வு என்ற பழமொழி பேசுகிறது.

தீயசக்திகள் படுவீழ்ச்சி அடைந்துவிடும். இது உறுதி. தீயசக்தியின் அந்த வீழ்ச்சி நாளை எதிர் நோக்கி அமைதியாகக் காத்திருந்தால் நம்முடைய தன்னம்பிக்கை நம்மைவிட்டுப் போகாது!

வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழந்தவர்களின் மனம் தூய வழிகளில் செல்லாது. தீய வழிகளில்தான் அவர்களுடைய புத்தி போய்க் கொண்டிருக்கும். அவர்கள் தீய செயல்களிலேயே ஈடுபடத் தொடங்குவார்கள். தீய செயல்கள் மனிதனை மேலும் மேலும் கோழையாக்கி, அவனை உருத்தெரியாமல் அழித்துவிடுகின்றன

ANDROID APPS ஐ நம் கணிப்பொறியில் இயங்க வைக்கும் வழிமுறைகள்!

 இன்று மிகவும் பிரபலமான மொபைல் இயங்குதளம் "ANDROID" ஆகும் .இதன் முக்கிய சிறப்பு அம்சம் தொடு திரையில் இதனை இயக்குவது மேலும் எண்ணற்ற மென்பொருள்கள் இலவசமாக கிடைப்பது இதன் பலத்தை மேலும் அதிகப்படுத்துகிறது

அப்படி பட்ட "ANDROID" இயங்குதளத்தை மொபைல் போனில் மட்டும் தான் இயக்கமுடியுமா ? நமது கணிப்பொறியில் இயக்கமுடியாத என குழப்பத்தில் இருப்பவருக்காக இப்பதிவை சமர்பிக்கிறேன்
முதலில் இங்கு சென்று" DOWNLOAD" கிளிக் செய்ததும்  விண்டோஸ் தோன்றும்

அதில் எந்த இயங்குதளத்தை நாம் பயன் படுத்துகிறோம் உதராணமாக விண்டோஸ் இயங்குதளம் என்றால் விண்டோஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும் மேக் இயங்குதளம் என்றால் மேக் என்பதனை தேர்வு செய்து கொள்ளவேண்டும் இங்கு நாம் பெரும்பாலம் பயன்படுத்தப்படும் இயங்குதளம் விண்டோஸ் என்பதால் விண்டோஸ் ஐ தேர்வு செய்துள்ளேன்

அடுத்தபடியாக இந்த மென்பொருள் ஆனது பகுதி பகுதியாக நிறுவ வேண்டும் முதல் பகுதி நிறுவப்பட்டதும் அடுத்தது தானாக நிறுவிக்கொள்ளும் .

இவ்வாறு நிறுவப்படுவதிற்கு காரணம் நமது கணிப்பொறி யானது இந்த மென்பொருளை இயக்க வல்லதா என்று சோதனை செய்த பிறகே நிறுவப்படும்

சோதனைக்கு பிறகு மேலே உள்ளது போன்று விண்டோ வானது தோன்றும்
அதில் நமக்கு பிடித்த மென்பொருளை எப்படி மொபைல் யில் இயக்குகின்றோமோ அதே போன்றே விண்டோஸ் இல் இயக்கமுடியும்

ஒரு வழிய இன்ஸ்டால் பண்ணியாச்சி இப்போ கொஞ்ச விளையாடி தான் பாக்கலாமே !!!

ANDROID GAMES லேயே மிகவும் பிரபலமானது "TEMPLE RUN" இதை விளையாடதவர்களே இருக்க முடியாது அதை நம் கணிப்பொறியில் விளையாடுவோம்

நிங்களும் இனி கணினியில் உங்களுக்கு புடிச்ச ANDROID APPS நிறுவி விளையாடுங்க !!!

குறிப்பு :இதை நிறுவ உங்கள் கணினியில் கிராபிக்ஸ் கார்டு 512 MB ஆவது இருக்க வேண்டும்