Monday, 24 February 2014

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில வழிகள்!

கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு தன் வயிற்றில் உள்ள குழந்தை பெண்ணா, ஆணா என்று தெரிந்து கொள்ள ஆவளாக இருப்பார்கள்.

அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில வழிகள் மூலம் தெரிந்து கொள்வார்கள். உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும் பின்னும் ஆடினால், அது பெண் என்றும் அக்காலத்தில் எல்லாம் கணித்தார்கள். இதுப்போன்று நிறைய வழிகள் உள்ளன. அந்த வழிகள் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுத்துள்ளவற்றை படித்து தெரிந்து முயற்சித்துப் பாருங்கள். வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில விசித்திரமான வழிகள்

கர்ப்பிணிகளுக்கு வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை ஆண். ஆனால் வயிறு பெரியதாக இருந்தால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.
தெற்கு திசையை நோக்கி நிற்கும் போது, வயிறானது கீழே இறங்கி காணப்பட்டால், ஆண் குழந்தை என்றும், அதுவே வயிறு பெரியதாக காணப்பட்டால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.

இந்த முறையின் படி பலருக்கு உண்மை நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இதயத்தின் துடிப்பு நிமிடத்திற்கு 140+ ஆக இருந்தால், பெண் குழந்தை என்றும், 140- ஆக இருந்தால் ஆண் என்றும் அர்த்தம். ஆகவே இதயத் துடிப்பை கண்க்கிட்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்பிணிகளுக்கு புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட ஏங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை அதுவே இனிப்பு சாப்பிட விரும்பினால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.

சருமமானது பொலிவிழந்து, சோர்ந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை ஆனால் கர்ப்பிணிகள் நன்கு அழகாக, பொலிவோடு காணப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.

பொதுவாக கர்ப்பிணிகள் சிலருக்கு காலையில் சோர்வு அதிகம் இருக்கும். ஒருவேளை அப்படி எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

வயிற்றில் பெண் குழந்தை இருந்தால், கர்ப்பிணிகள் சோர்வாகவும், வலிமையின்றியும் இருப்பார்கள். ஏனெனில் வயிற்றில் வளரும் பெண் குழந்தையானது, தாயிடமிருந்து, அழகு மற்றும் வலிமையை எடுத்துக் கொண்டு வளர்கிறதாம். மேற்கூறியவற்றை முயற்சி செய்து பாருங்கள். இவை நகைச்சுவையாக இருந்தாலும், பலருக்கு சாத்தியமாக உள்ளது.

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்! ! ! !

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்! ! ! !

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும்,மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது!

ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது!


குழந்தைகளின் பிரிய பிஸிகெட் ஆகிவிட்டது ஓரியோ. கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.


ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.

குட்டி பாப்பா பிறந்ததும் செய்ய வேண்டிய பரிசோதனைகள...!

குட்டி பாப்பா பிறந்ததும் செய்ய வேண்டிய பரிசோதனைகள...!

குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.

குறை தைராய்டு (Congenital Hypothyroidism) : பிறவி தைராய்டு குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும். குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அட்ரீனல் கோளாறு (Congenital Adrenal Hyperplasia) : பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும்.

என்சைம் குறைபாடு (Galactosemia) : என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும்.

இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.

முப்பரிமாண உணர்கருவிகளைக் கொண்ட 'ஸ்மார்ட்' கையடக்கத்தொலைபேசி!

 கூகுள் நிறுவனமானது பயன்பாட்டாளரை சூழவுள்ளவற்றின் முப்பரிமாண வடைபடங்களை உருவாக்கக் கூடிய மென்பொருள்களையும் வன்பொருள்களையும் கொண்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.


அந்த கையடக்கத் தொலைபேசியிலுள்ள உணர்கருவிகள் ஒவ்வொரு செக்கனிலும் அதிருக்கும் நிலையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் 250,000 க்கு மேற்பட்ட முப்பரிமாண அளவீடுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.


 பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தங்கோ திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த கையடக்கத் தொலைபேசி விருத்தி செய்யப்பட்டுள்ளது.

அலர்ஜியை போக்கும் அருமையான வழிகள்!

இன்றைய காலகட்டத்தில் அலர்ஜியானது பலருக்கு ஏற்படுகிறது. அது ஏற்படுவதற்கு நமது உடலில் உள்ள திசுக்கள் வழக்கத்திற்கு மாறாக செயல்படுவதால் ஏற்படுவதே ஆகும். அதுமட்டுமல்லாமல் உடலானது மிகவும் உணர்திறன் மிக்கதாகவும், எளிதில் கிருமிகளால் பாதிக்கக்கூடியதாகவும் மாறிவிடுகிறது.

 அதிலும் எந்த இடத்தில் அலர்ஜியானது ஏற்படும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அலர்ஜியானது ஏற்படும். இவ்வாறு அலர்ஜி ஏற்படும் போது, அதனை சாராதணமாக விட கூடாது, விடவும் முடியாது. ஏனெனில் அலர்ஜியானது வந்துவிட்டால் ஒரு இடத்தில் நிம்மதியாக உட்காரக் கூட முடியாது. மேலும் இன்றைய காலத்தில் கலரும் வேலைக்காக அடிக்கடி இடமானது மாற வேண்டியிருக்கிறது. ஆகவே அத்தகைய அலர்ஜி எப்படி திடீரென்று வருகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, எவ்வாறு அதிலிருந்து குணமாவது என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...


அலர்ஜி எப்படி வரும்?
பொதுவாக அலர்ஜியானது தூசி, பூச்சிக் கடி மற்றும் உணவுப் பொருட்களால் வரும். அதுமட்டுமல்லாமல் புதுமையான சூழ்நிலைகளாலும் வரும். அதிலும் உணவுகளான முட்டை, வேர்கடலை, கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் மற்றும் பால், சோயா பீன்ஸ், சாக்லேட், கோதுமை போன்றவற்றை உண்பதாலும், தொடர்ச்சியான மன அழுத்தம், உளவியல் ரீதியான காரணிகள், தூசிகள் அதிகம் இருக்கும் இடங்களில் இருப்பது, பூச்சிகள் கடித்து அதனை சாதாரணமாக நினைத்து இருப்பது போன்றவற்றால் அலர்ஜியானது வருகிறது.


அறிகுறிகள்...

கடுமையான தலைவலி, அதிகபடியான காய்ச்சல், மன அழுத்தம், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, மூச்சுத்திணறல், மூக்கு ஒழுகுதல், பதட்டம் அடைதல், கண்களைச் சுற்றி கருவளையம் வருதல், ஆங்காங்கு வீக்கங்கள், தேவையில்லாத அரிப்புகள், சருமமானது சிவப்பு நிறத்தில் இருப்பது போன்றவையெல்லாம் இருந்தால் அலர்ஜி இருப்பதற்கான காரணங்களாகும்.
அலர்ஜி போவதற்கான வீட்டு மருந்து...

1. சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவினால், சற்று நேரத்தில் அரிப்புகள் போய்விடும். இது ஒரு சிறந்த பலனையும் தரும்.

2. பாதாம் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

3. எந்த பொருளையும் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவ விருப்பம் இல்லாதவர்கள், புதினா இலையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து, சிறிது சர்க்கரை கலந்து, தினமும் இரண்டு முறை பருகினால், அரிப்புகள் போய்விடும்.

4. அலர்ஜி வந்தால் எப்போதும் அரிப்புகள் தான் அதிகம் வரும். அதற்கு பப்பாளி விதையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அதனால் அரிப்புகள் எளிதில் குணமாகிவிடும்.

5. மற்றொரு இயற்கையான வழி என்னவென்று கேட்டால், எலுமிச்சை சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவ வேண்டும்.

6. கசாகசா விதைகளுடன், தண்ணீர் மற்றம் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினால் உடனே அரிப்புகளானது போய்விடும்.

7. அலர்ஜி போவதற்கு ஒரு எளிமையான வழி என்னவென்றால் வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். மேலும் ஆப்பிள் சாற்றினாலான வினிகரை தண்ணீரில் கலந்து குடித்தாலும் அலர்ஜியானது போய்விடும். அதுமட்டுமல்லாமல் 5 துளிகள் ஆமணக்கெண்ணெயை ஏதேனும் ஒரு கப் பழங்களுடன் அல்லது பழச்சாற்றுடன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதிலும் சிறந்தது கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை ஜூஸ் செய்து ஒன்றாக கலந்து குடித்தாலும் அலர்ஜி மற்றும் அதனால் வந்த அரிப்பும் பறந்தே போய்விடும்.. 

உங்களை விளம்பரம் செய்யுங்கள்..!

வேலைக்கு ஆட்கள் தேவை. அற்புத சுகமளிக்கும் கூட்டம். ஆறே வாரத்தில் சிகப்பழகு. டிசைனர் சாரீஸ். மூலம் பவுத்திரம் நிரந்தரத் தீர்வு’ இப்படி திரும்பிய திசையெங்கும் விளம்பரங்கள்.

ரேடியோ கேட்டால் விளம்பரம். டிவியை பார்த்தால் விளம்பரம். பத்திரிகையை திறந்தால் விளம்பரம், ஏன் தெருவில் நடந்தால்கூட சுவரெங்கும் விளம்பரங்கள். =சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்.’

குழந்தைகள்கூட ரைம்ஸ் போல விளம்பரப் பாடல்களைத்தான் பாடுகிறார்கள். ”அதான்! அதான்! அதேதான்… ஆடைகள்னா…”

இவையெல்லாம் போதாது என்று எஸ்.எம்.எஸ் மூலம் வேறு விளம்பரங்கள் வருகின்றன.

டிவியில் நிகழ்ச்சிகளைவிட விளம்பரங்கள் தான் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அதனால் விளம்பரம் முடிந்து நிகழ்ச்சி ஆரம்பமானதும் சேனல் மாற்றி அடுத்த சேனலில் விளம்பரம் பார்க்கலாம் போலிருக்கிறது.

டிவியில் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் விளம்பரம் வந்த காலம் போய், இப்போது நிகழ்ச்சியே விளம்பரமாக மாறிவிட்டது. அந்த சாமியார் அற்புத குணமளித்ததாக, யாரோ நீட்டி முழக்கி கடைசியில் சாமியாரின் முகவரியை போடுகிறார்கள். பிறகுதான் தெரிகிறது, அது நிகழ்ச்சி அல்ல, விளம்பரம் என்று.

கவரேஜ் ஜர்னலிசம் என்ற பெயரில் பத்திரிகைகளில்கூட கட்டுரைகள் போலவே விளம்பரம் வருகிறது. இதெல்லாம் விளம்பரம் என்பதே தெரியக்கூடாது என்ற நோக்கில் செய்யப் படும் விளம்பரங்கள்.

டாக்டர்கள் விளம்பரம் செய்யக்கூடாது என்பது விதி. ஆனாலும் அவர்களும் விளம்பரம் என்பதை, கண்டுபிடிக்க முடியாதபடி செய்கிறார்கள். சிலர் நேரடியாகவே செய்கிறார்கள். கிட்னி பழுது நீக்கித்தரப்படும் என்கிற அளவிற்கு இன்னும் காலம் கலியாகி விடவில்லை. ஆனால் ஒரு கண் ஆப்ரேஷன் செய்து கொண்டால் இன்னொரு கண் ப்ரீ என்கிற அளவில் முதலில் வரலாம்.

பிரபலங்கள் பலர் தங்களுக்கு விளம்பரம் கிடைக்காதா? என்று ஆளாய்ப் பறக்கிறார்கள். கூட்டங்களில் ஆடை அவிழ்ந்தால் ஒரே நாளில் உலகம் முழுவதும் விளம்பரமாகிவிடலாம் என்று அதைக்கூட முயற்சிக்கிறார்கள் வெளிநாட்டு நடிகைகள்.
சென்னையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில், பேருந்துநிலையத்திற்கு பக்கத்தில் என்று செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள இடத்தை விளம்பரம் செய்கிறார்கள்.
விளம்பரங்கள் மூலம் ஏமாற்றுவது அதிகரித்து விட்டதால் மக்கள் விளம்பரங்களை சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள். அதனால் இன்னும் அதிக விளம்பரம் செய்ய வேண்டியிருக்கிறது.

டிவிக்கள், பத்திரிகைகளில் தங்கள் நிகழ்ச்சியை பற்றி, சீரியல் பற்றி… காணத் தவறாதீர்கள் என விளம்பரங்கள் வெளியிடு கின்றன. பத்திரிகைகள், தங்களின் மேன்மையை, =தமிழின் நம்பர் 1 நாங்கள்தான்’ என டிவியில் விளம்பரம் செய்கின்றன.
பத்திரிகை விளம்பரங்களைவிட, கண்களையும் காதுகளையும் ஒரே நேரத்தில் கவர்வதால், தொலைக்காட்சி விளம்பரங்களுக்குத் தான் அதிக நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் திறன் உண்டு என்கிறது ஒரு விளம்பரம்.

ஆக, விளம்பரம் செய்பவர்களுக்கே விளம்பரம் தேவையாக இருக்கிறது.
இதையெல்லாம்கூட விட்டுத்தள்ளுங்கள். இன்று கடவுளுக்குக்கூட விளம்பரம் தேவைப் படுகிறது. அதிகம் விளம்பரப்படுத்தப்படும் கடவுள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்.
ஆக, இது விளம்பர உலகம். விளம்பரங்களில் வரும் தயாரிப்புகளை மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிச் செல்கிறார்கள். விளம்பரம் இல்லையென்றால் எதுவும் இனி விலை போகாது.

பூக்கடைக்கு மட்டுமல்ல, இந்தச் சாக்கடைக்கும் விளம்பரம் தேவையில்லை என்று எப்போதோ படித்த பைனான்ஸ் கம்பெனி பற்றிய கவிதை வரி ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் அதற்கும் இப்போது ஒரு நடிகர், தங்கத்தை எங்கள் பைனான்ஸில் அடமானம் வை என்று டான்ஸ் ஆடி சொல்லித் தருகிறார்.

நன்றாக விளம்பரமாகிவிட்ட பொருள்களுக்குக்கூட, அந்த நிலையை தக்க வைக்க, திரும்பத்திரும்ப புதிய விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துவிட்டன விளம்பரங்கள். விளம்பரங்கள் செய்வதற்கு இப்போ தெல்லாம் இடம் கிடைப்பதில்லை. சுவர்கள் நிரம்பி விட்டதால் போஸ்டர் ஒட்ட முடிவதில்லை. பத்திரிகைகளில் ப்ரண்ட் பேஜ் போனமாசமே புக் ஆயிடுச்சு என்கிறார்கள்.

குறைந்த செலவில் விளம்பரம் செய்யுங்கள் என்றுகூட விளம்பரம் வருகிறது. விளம்பரத்திற்கே விளம்பரம் செய்யும் இப்படிப் பட்ட விளம்பர உலகில் உங்களுக்கும் விளம்பரங்கள் தேவை.

புகழ் பெற்றவர்கள் செய்கிற தவறுகள்கூட புகழ் பெற்று விடுகின்றன என்பார்கள். நல்லவை புகழ் பெறவேண்டுமென்றால் அதைச் செய்யும் நாம் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என் வாதம்.

உங்களை விளம்பரம் செய்யுங்கள். அப்போதுதான், இந்த உலகத்திற்கு. நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே தெரியும்.

பறந்துகொண்டே மீன் பிடியுங்கள்..!

ஆடு மேய்ச்சமாதிரியும் ஆச்சு! அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும்… ஆச்சு!” இது கிராமத்தில் கேட்கின்ற வழக்கமான வாக்கியம். ஒரு நேரத்தில் ஒரு வேலைதானே செய்யமுடியும். இது எப்படி? என்று நினைக்கத் தோன்றும். இது நேரத்தின் முக்கியத்துவத்தை சொல்லித் தருகின்ற கிராமத்தின் நேர்த்தி.

கோவையிலிருந்து பழனிக்கு ஒரு வேலை நிமித்தம் செல்கின்ற ஒருவருக்கு பொள்ளாச்சியில் வேறு ஒரு வேலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் பழனிக்குப் போகின்ற போதோ அல்லது பழனியிலிருந்து திரும்பும் போதோ அந்த வேலையை முடிக்க வேண்டும். அதற்கான நேரத்தை அவர்தான் சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சி சென்றால் அது வேண்டாத வேலைதான். பல நேரங்களில் இப்படிச் செய்துவிட்டு, திருவிழாவில் காணாமல் போன குழந்தைமாதிரி =திரு திரு’ என்று விழிக்கின்றவர் பலபேர் நம்மிடையே உண்டு.

வளரும் சிகரங்கள் அமைப்பில் குழந்தைகளுக்கிடையே நடைபெற்ற ஓர் ஓவிய அரங்கில் ஒரு குழந்தை மீன் வரைந்திருந்தது. அருகிலிருந்த மற்றொரு குழந்தை சொன்னது, ”இந்த மீன் நீந்துவது மாதிரி இல்லை. பறக்கிற மாதிரி இருக்கு! அப்படின்னா இது என்ன மீன் தெரியுமா? விண்மீன்!!” ஆற்றுமீனை விண்மீனாக மாற்ற பள்ளிக்குழந்தைக்கு தெரிந்திருக்கிறது என்றால் நமக்கு மீன்பிடிக்க அல்லவா தெரிந்திருக்க வேண்டும்!

நல்ல தொழிலை லாபத்துடன் செய்து கொண்டே அந்த தொழில் சார்ந்த உபரி தொழில்களையும் செய்து தொழில் வல்லுனர் ஆவது புத்திசாலித்தனம். மீன் கொத்திப் பறவைகளையும் கொக்கையும் ஒப்பிட்டுப் பாருங்களேன். =ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை’ ஒற்றைக்காலில் நின்றுகொண்டு நேரத்தை வீணடிக்கும் கொக்கு. ஆனால் ஓடுகின்ற ஆற்றின்மேல் லாவகமாய் பறந்து கொண்டே ஆற்றில் துள்ளிக் குதிக்கின்ற மீனை டக்கென்று பிடித்துக்கொண்டு மீண்டும் பறக்கின்ற மீன் கொத்திப்பறவை. இதில் எது சரி? பறந்து கொண்டே மீன் பிடிப்பதுதானே!

எதிரில் நிற்பவர் எல்லாம் என் உறவினர். நான் போர் செய்ய மாட்டேன் என்று சும்மா நின்ற அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து உலகிற்கு கீதையை தரமுடிந்தது கிருஷ்ணனால். எப்படி? போதி மரத்தடியில் அல்ல! ஐந்து குதிரைகளின் கடிவாளம் ஒரு கையில்! நிற்கின்ற இடமோ போர்க்களம்! மனதளவில் பலமுனைத் தாக்குதல். என்ன தான் கடவுள் என்று நாம் சொன்னாலும் (நினைத்தாலும்)கூட போர்க்களத்தில் கீதையைத் தர கிருஷ்ணனுக்கு தேவைப்பட்டது இரண்டு. 1) இன்று இது இப்பொழுது தேவை என்கின்ற மனம். 2) மிகச்சரியான ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்கின்ற தெளிவு! இவை இரண்டும் போர்க்களத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக் களத்திற்கும் தேவை.

ஒன்றிலிருந்து கொண்டு மற்றொன்றில் நிலைத்த தன்மை பெறுவதுதான் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒன்று. மளிகைக்கு ஒரு கடை; காய்களுக்கு ஒரு கடை; பாத்திரங்களுக்கு ஒன்று; செருப்புக்கு ஒன்று; =நாவல்டீஸி’ற்கு ஒரு கடை; அழகு சாதனங்களுக்கு ஒரு கடை என்று அலைகின்றபோது அய்யோடா என்று இருந்த ”ஷாப்பிங்…” அனைத்தும் ஒரு கூரையின்கீழ் டிபார்ட்மெண்ட் ஸ்டோராக வந்தபோது பயனடைந்தது வாடிக்கையாளர், கடை முதலாளி, தொழிலாளி மூவரும்தான்.

முழு நேரமும் எல்.ஐ.சி. முகவராக இருக்கின்ற ஒருவர் கிடைக்கின்ற வேலை நேரத்தில் ரியல் எஸ்டேட் ஒரு கை என்று இருந்தார் என்றால் அவருக்கு லட்சுமி கடாட்சம் அமோகம் தான். ஏனெனில் இரண்டுக்கும் வாய் ஒன்றுதான் முதலீடு. வாய் இருந்தால் வருவாய்க்கு ஏது பஞ்சம். தனித்தனி நேரம் தேவையில்லை, தங்கள் பயனாளிகளைப் பார்க்க! ஒரே நேரத்தில் இரண்டு காரியமும் ஆகும். முதலில் தரம் வாரியாக பஞ்சை மட்டும் பிரிக்கின்ற நிறுவனம் பின்னாளில் பஞ்சிலிருந்து நூல்; நூலிலிருந்து தரம் வாரியான துணிகள். பின் சந்தைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் ஆடைகள், அதன்பின் ஆயத்த ஆடைகள். அடுத்த கட்டமாக ஏற்றுமதி, நிறைவாக மக்களிடையே நேரடி சந்தைப்படுத்துதல். சந்தைப் படுத்துதலில் புதுப்புது உத்திகள்! இன்றைய பிரபல அனைத்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களும் இப்படித்தான்!

இதுதான் ஒன்றிலிருந்து கொண்டு இன்னொன்று! பறந்து கொண்டே மீன் பிடிக்கத் தேவை காட்சிப் பிரமாணமும் மற்றொன்று அனுமானப்பிரமாணமும். பார்க்கின்ற காட்சியை புரிந்துகொள்ள வேண்டும். எது இருக்கிறது என்று அனுமானிக்கத் தெரிய வேண்டும். புகை இருக்கின்றது என்றால் நெருப்பு இருக்கும் என்று அனுமானிக்கும் அறிவும், புரிதலும் இருந்தால் அந்த நெருப்பு நமக்கு பயன்படவும் செய்யும்.

செயல்திறனை வளர்த்துக் கொண்டால் சுற்றும்பூமி நம் கையில்தான். பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !

மாற்று எரிபொருளாக எத்தனால் வருமா?

ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வையே அதிர்ச்சியோடு பார்த்தவர்களுக்கு இப்போது வழக்கமாகி விட்டது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பிடிக்கிறது. அன்றாடம் வேலைக்கு செல்ல இரு சக்கர வாகனம் அல்லது கார் பயன்படுத்துபவர்களாக இருந்தால் எரிபொருளுக்கென தனியாக பட்ஜெட் போட்டு முன் கூட்டியே சேமிக்க பழகி விட்டனர். மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமாக டீசல் விலை உயர்வு அமைந்து விடுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.47.93க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.74.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் விலையை உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு ஆண்டுக்குள் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஒருபுறம் எதிர்க்கட்சிகள், பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை கடமையாக கொண்டுள்ளனர்.

ஆனால் இதற்கான மாற்று திட்டங்களில் பலர் கவனம் செலுத்துவதில்லை என்பது தான் உண்மை. மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை நீக்கினால் ஓரளவு குறைந்த விலைக்கு பெட்ரோல் வாங்க முடியும். ஆனால் வரியை குறைப்பதோ அல்லது நீக்குவதோ சாத்தியமில்லாதது. கோவாவில் மட்டும் விற்பனை வரி குறைக்கப்பட்டது. இனி வரும் ஆண்டுகளிலும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் தவிர்க்கமுடியாதது. இதற்கு மாற்று தீர்வு எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது மட்டும் தான். இந்தாண்டின் துவக்கத்தில் சர்க்கரை ஆலைகளில் 5 சதவீதம் மட்டும் எத்தனால் எரிபொருள் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

இதை மேலும் ஊக்குவிக்கவேண்டும். எத்தனாலை தவிர வேறு எதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்காது. எத்தனால் தயாராவது எப்படி: கரும்பு சாறுடன் சாக்ரோமைசிஸ் செர்வேசியே என்ற ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இந்த நுண்ணுயிரி தான் எத்தனால் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மொலாசஸிஸ் இருந்து 97 சதவீதம் தூய எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எத்தனால் பயன்பாடு மூலம் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 25 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை எத்தனாலை கலந்து பயன்படுத்தலாம். அதிகபட்சம் ரூ.30க்கு ஒரு லிட்டர் எத்தனாலை வாங்க முடியும். இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் கார் இஞ்சின்களில் 25 சதவீதம் எத்தனாலை பயன்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகிறது. இந்தியாவில் சாத்தியமா?: இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் விருதகிரி கூறியதாவது: இந்தியாவில் கரும்பு உற்பத்தி அதிகம். தமிழகத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி நடக்கிறது.

சர்க்கரை ஆலைகளில் 20 ஆயிரம்  விவசாயிகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசு மொத்தம் 9 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அங்கு தயாரிக்கப்படும் எத்தனாலை தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான எரிசாராயமாக தயாரித்து தரக் கூறி ஆலைகளை அரசு நிர்பந்திக்கிறது. மாற்று எரிபொருளாக எத்தனாலை பயன்படுத்த அரசுக்கு விருப்பம் இல்லை. 313 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரைக்கு பதிலாக எத்தனால் தயாரிக்கலாம்.

விலைமதிப்புள்ள வைரத்தை விழுங்கிய திருடன்!

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் இருந்து விலை மதிப்பு மிக்க வைரத்தை திருடி வாயில் போட்டு விழுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மாத்யூ ஆஸ்போர்ன் என்னும் 29 வயது நபர் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா வந்தார். அப்போது, மெல்போர்ன் நகரில் நடந்த வைர கண்காட்சிக்கு சென்ற இவர் அங்கு வைக்கப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிற வைரத்தை திருடி ஒரு சைக்கிளில் தப்பியுள்ளார்.


பின்னர் மெல்போர்னில் இருந்து விமானம் மூலம் நியூசிலாந்திற்கு தப்பிக்க முயன்ற மாத்யூவை போலீசார் கைது செய்தனர்.


விசாரணையில் அவர் கொள்ளையடித்த வைரத்தை விழுங்கி மறைத்தது தெரியவந்தது. அந்த வைரத்தின் மதிப்பு 1,00,000 பவுன்டுகளுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது

மனித குரங்குகளிடமிருந்து பரவும் வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

விஞ்ஞானிகள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் ஆப்பிரிக்காவில் உள்ள மனித குரங்குகளிடம் இருந்து ஒரு வகை மலேரியா வைரஸ் கிருமிகள் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர்.


இந்த வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆப்பிரிக்காவில் உள்ள மனித குரங்குகளின் கழிவுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் புதிய வகையான பிளாஸ்மோடியம் விவாக்ஸ் கிருமி இருந்தது தெரியவந்தது. இந்த வைரஸ் கிருமியின் எண்ணிக்கை அடர்ந்த காட்டுக்குள் இருந்த குரங்குகள் மத்தியில் அதிகமாகவும் காணப்பட்டது.


இந்த நோய் கிருமி குறித்து ஆய்வை மேற்கொண்ட பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கும் போது, மனிதர்களின் உடலில் 5 வகை பிளாஸ்மோடியம் வைரஸ்கள் மலேரியாவை உருவாக்கும்.


அவற்றில் பி விவாக்ஸ் எனப்படும் பிளாஸ்மோடியம் விவாக்ஸ் வைரஸ் கிருமி மூலம் சுற்றுலா பயணிக்கு ஒருவருக்கு மலேரியா தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.