Sunday, 16 March 2014

ரஜினிக்கு வில்லனா? அழைப்பு வரவில்லை

ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வரவில்லை என்றார் சுதீப். ‘நான் ஈ‘ படத்தில் நடித்தவர் சுதீப். தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.


இதுகுறித்து சுதீப் கூறியதாவது: டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் புதிய ஸ்கிரிப்டுடன் என்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகியது உண்மைதான்.


நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்பே ரஜினியை வைத்து படம் இயக்க ரவிகுமார் முடிவு செய்துள்ளார்.


ரஜினியின் உடல்நலன் கருதி நான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே ரஜினி படத்தை தொடங்க உள்ளதாக கூறினார். ஓ.கே சொல்லிவிட்டேன். இப்படத்தில் நான் ரஜினியின் வில்லனாக நடிக்க உள்ளதாக என்னுடைய பெயர் இணைய தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது.


ஆனால் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் என்னிடம் கேட்கவில்லை.


ரவிகுமாருடன் எனது பட ஷூட்டிங் மே அல்லது ஜூனில் தொடங்கும். முன்னதாக ரஜினி படத்தை தொடங்குகிறார் ரவிகுமார். இவ்வாறு சுதீப் கூறினார் 

இந்தின்னா உதட்டு முத்தமும் ஓகே

இந்தியில் நடிக்க ஆரம்பித்த பிறகு தென்னிந்திய படங்களை திரும்பிப் பார்ப்பதில்லை இலியானா. இந்தியில் பிடித்து நிற்க எந்த எல்லைக்குச் செல்லவும் அவர் தயார்.


தற்போது டேவிட் தவான் இயக்கத்தில் மெய்ன் தேரே ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பது வருண் தவான். அவருக்கு இரு ஜோடிகள் இலியானா மற்றும் நர்கிஸ் பக்ரி.


இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டில் நடிக்கையில் உடன் நடிக்கும் நடிகையிடம் கவனமாக இருக்க வேண்டும். கவர்ச்சியைக் காட்டி சட்டென்று நம்மை பின்னுக்கு தள்ள வாய்ப்புள்ளது. அதுவும் எதற்கும் துணிந்தவர் நர்கீஸ் பக்ரி.


கதைப்படி வருண் தவான் இலியானாவுக்கு உதட்டில் முத்தம் தரும் காட்சி படத்தில் வருகிறது. குறிப்பிட்டக் காட்சியில் நடிக்க இலியானாவுக்கு தயக்கம் இருந்தாலும் நர்கீஸ் படத்தில் இருப்பதால் இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும் பாய்ந்து வருண் தவானுடன் பசைபோல் ஒட்டிக் கொண்டாராம்.


படத்தைப் பார்த்தாலே அவர் எவ்வளவு இன்வால்வ்மெண்டுடன் சொன்ன வேலையை செய்கிறார் என்பது புரியும். இந்தியில் காட்டுகிற இன்வால்வ்மெண்ட்டில் கொஞ்சம் இங்கேயும் காமிக்கலாம்.

முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல...?

அஜீத்துக்கு தல என்று அடைமொழி உருவாக காரணமாக இருந்தவர் முருகதாஸ். அவரின் முதல் படம் தீனாவில் அஜீத்தை அவரது அல்லக்கைகள் தல என்றுதான் அழைப்பார்கள். வத்திக்குச்சி பாடலில் மகாநதி சங்கர், தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது என்று ஒரு வசனமும் பேசுவார்.


சரி, அதுக்கென்ன இப்போ? காரணம் உள்ளது. இதே பெயரில், அதாவது தல என்ற பெயரில் அஜீத் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்கப் போவதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலவுகிறது.


வாலி படத்தில் அஜீத் நடித்த போது முருகதாஸ் அப்படத்தின் உதவி இயக்குனர். அப்படிதான் தீனா படத்தில் அஜீத்தை இயக்கும் வாய்ப்பு முருகதாஸுக்கு கிடைத்தது. அப்போது மிகவும் சின்னப் பையனாக இருந்ததால் ஷாட் வைப்பதற்கு முருகதாஸ் திணறியதாகவும் முதல் சில தினங்கள் அவரின் குருநாதர் எஸ்.ஜே.சூர்யாதான் ஷாட் வைத்தார் எனவும் சிலர் மலரும் நினைவுகளில் நினைவுகூர்கிறார்கள்.


படத்தின் ரிசல்ட் எப்படியிருக்குமோ என்று முருகதாஸ் படம் வெளியான போது தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்றுவிட்டார். படம் பிக்கப்பான செய்தி அறிந்த பிறகே அவர் சென்னை திரும்பினார்.


இப்படி முதல் படத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால்தான் முருகதாஸும், அஜீத்தும் மீண்டும் இணையவில்லை என கூறப்பட்டது.


அதெல்லாம் பழைய கதை. இன்று முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க இந்தியாவின் டாப்மோஸ்ட் நடிகர்கள் காத்திருக்கின்றனர். அஜீத்துடன் பணிபுரிய முருகதாஸும் தயார். அதனால், முருகதாஸ் அஜீத்துக்காக தல என்ற ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார் என்பதில் உண்மை இருக்க அதிக சாத்தியமுள்ளது. இன்னும் சில தினங்களில் தல யின் உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வரும்.

ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி - உறுதி செய்த சுதீப்..!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதனால் என்ன. சம்பந்தமில்லாத நடிகர் சுதீப் அவர்கள் இணைந்து படம் செய்வதை உறுதி செய்துள்ளார்.


இந்தியில் சஞ்சய் தத்தை வைத்து இயக்கிய படம் அட்டர் பிளாப்பான பிறகு சுதீப்பை ஹீரோவாக்கி புதிய படத்தை ஆரம்பிக்கும் வேலையில் இறங்கினார் ரவிக்குமார். இந்த நேரத்தில்தான் ரஜினியை ரவிக்குமார் இயக்குகிறார் என செய்தி வெளியானது. அதனை ரவிக்குமார் மறுத்தார்.


இது நடந்த சில வாரங்களில் நிலைமை மாறியது. ரஜினியே அழைத்து ரவிக்குமாரிடம் புதிய படம் குறித்துப் பேசினார். ரவிக்குமாரும் ரஜினியை இயக்க சம்மதித்தார். ரஜினியின் தற்போதைய உடல்நிலையை சுதீப்பிடம் எடுத்துக் கூறிய ரவிக்குமார், ரஜினி படத்தை முடித்துவிட்டு சுதீப் நடிக்கும் படத்தை தொடங்கலாம் என கூறியுள்ளார். சுதீப்பும் அதனை ஒத்துக் கொண்டார்.


இந்தத் தகவலை மீடியாவிடம் பகிர்ந்து கொண்ட சுதீப், ரஜினி படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக இணையத்தில் செய்தி பார்த்தேன். ஆனால் ரஜினி படத்தில் நடிக்கக் கேட்டு இன்னும் யாரும் என்னை அணுகவில்லை என கூறினார்.


சுதீப் கூறியிருப்பதிலிருந்து ரவிக்குமார் ரஜினியை இயக்கவிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை பலமாக.... சில உணவுகள்..!

கர்ப்பப்பை பலமாக.... சில உணவுகள்


அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.

இதை எப்படி செய்வது? (உழுத்தங்களி)

அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7_லிருந்து 10_நிமிடங்கள் வரை வேக விடவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.

சூப் குடியுங்கள்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.

காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.

பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.

பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

அடை சாப்பிடுங்கள்

முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.

சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)

உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.

ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

இனி கர்ப்பிணிகளுக்கான ஒரு சில சத்தான, ருசியான உணவு வகைகள்:

தோடம்பழ சர்பத்

கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.

பூசணிக்காய் சர்பத்

வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.

செய்முறை: முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.

வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)

பாலக் சூப்

(டெல்லி பாலக் கிடைத்தால் அதிக ருசி. இதன் நுனி கூர்மையாக இல்லாமல் அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும்)

இரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்

நுரையீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!

நுரையீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்

மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் பணியினை தவறாமல் செய்ய வேண்டுமெனில் நாம் அவற்றை பேணி காப்பது அவசியம்.அந்த வகையில் நுரையீரலை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

நாம் நமது நுரையீரலை அதிக அக்கறையுடன் கவனித்து வந்தோமென்றால், நுரையீரலும் நம் வாழ்நாள் முழுதும் செயல்படும்.எவ்வித வெளிப்புற பாதிப்பும் இல்லாதவரை, நமது நுரையீரலும் நீடித்து உழைக்கக்கூடியவையே. சில விதி விலக்குகள் தவிர்த்து, நாம் நமது நுரையீரலை எவ்வித சிக்கலுக்கும் உள்ளாக்காத வரை, அவையும் நம்மை எவ்வித சிக்கலுக்கும் உள்ளாக்குவதில்லை. நமது ஆயுள் உள்ள வரை ஆரோக்கியமான நுரையீரலைப் பெற சில வழிகளை இக்கட்டுரையில் காண்போம்.


புகைப்பிடித்தலை நிறுத்துங்கள்

அடிப்படையில் புகைப்பிடித்தல் என்பது நமது நுரையீரலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய விஷயமாகும். புகைப்பிடித்தலுக்கு உள்ளாக்கும் போது நமது நுரையீரலுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடைப்பதில்லை. எந்த அளவிற்கு அதிகம் புகைக்கிறோமோ, அதே அளவிற்கு கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் புற்றுநோய் மற்றும் COPD தாக்கும் வாய்ப்புகள் அதிகம். நாம் இருக்கும் இடத்தில் எவரேனும் புகைப்பிடித்து இருந்தாலோ அல்லது நமது அருகிலிருக்கும் மூன்றாவது நபர் புகைப்பிடித்தாலோ நமக்கு தீங்கு விளையும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. சிகரெட் புகைப்பதை மட்டும் நிறுத்தினால் போதாது. மாரிஜூனா, சுருட்டுகள், குழாய் மூலம் புகைப்பிடித்தல், நமது நுரையீரலுக்கு அதே வழியில் தீங்கு விளைவிக்கும்.


சுத்தமான காற்றுக்காக போராடுங்கள்

உலகில் 155 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். காற்று மாசுபாடு ஆஸ்துமா, COPD போன்ற நோய்களை மட்டும் தருவதில்லை மேலும் மக்களையும் கொல்கிறது. ஒழுங்கு குறைபாடுகளை எதிர்ப்பதன் மூலமும் சுகாதாரமான காற்றுக்கான விதிகளை ஆதரிப்பதன் மூலமும் நாம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தனி நபராக நாம் செய்ய வேண்டியது யாதெனில் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவது, குப்பைகள் மரக்கட்டைகள் எரிப்பதை தவிர்ப்பது, வாகனங்கள் பயன்படுத்தலை குறைப்பது ஆகியவை ஆகும்.


அதிக உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்

உடற்பயிற்சி, நுரையீரலை மட்டும் வலிமைப்படுத்துவதில்லை. அதையும் தாண்டி நமக்கு பல நன்மைகள் செய்கின்றது. நுரையீரல் இதயம் மற்றும் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம் இதயத்திற்கான சுவாசத்தை சிறந்த முறையில் பெற முடியும். நாள்பட்ட நுரையீரல் நோயால் தாக்கப்பட்டவர்க்கு உடற்பயிற்சி பல நன்மைகளை செய்கிறது. நுரையீரல் சிறப்புடன் செயலாற்ற நம்மால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வது அவசியமாகும். குளிர்காற்று, ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளை தூண்டினால், அதனை வெதுவெதுப்பாக்க கழுத்துகுட்டையை (கழுத்தையும் தோளினையும் மறைக்கும் துணி) பயன்படுத்துதல் அவசியம் அல்லது முகத்தை மறைக்க வேண்டும்.


வெளிப்புற காற்று மாசுபாடு குறித்து எச்சரிக்கை அவசியம்

குறிப்பாக கோடை காலத்தில் சில பகுதிகளில் உள்ள காற்று மாசுபடுதலால், வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்வதும், வெளிப்புறத்தில் நேரம் செலவழிப்பதும் கூட நுரையூரலை பாதிக்கும். அதிலும் நுரையீரல் பிரச்சனைகளை கொண்டவர்கள், இக்காலத்தில் காற்று மாசுபடுதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

வீட்டின் உள்ளும் காற்றை மேம்படுத்துங்கள்

காற்று மாசுபாடு ஒரு வெளிப்புற பிரச்சனை மட்டும் அல்ல. மரம் எரிக்கும் அடுப்புகள், நெருப்பு, கட்டுமான பொருட்கள் மற்றும் சில மெழுகுவர்த்திகள் மற்றும் காற்று சுத்தப்படுத்திகள் உட்பட வீட்டின் உட்புற காற்றை மாசுபடுத்தும் ஆதாரங்கள் நிறைய உள்ளன. வீட்டின் உட்புற காற்றை மேம்படுத்த ஒரு மூன்று பக்க அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது. அதில் காற்றை மாசுபடுத்தும் ஆதாரங்களை நீக்குவது, காற்றோட்டத்தை மேம்படுத்துவது மற்றும் காற்று தூய்மையாக்கிகளை பயன்படுத்துவது ஆகியன ஆகும். காற்று தூய்மையாக்கிகள் தேவையற்ற துகள்களை நீக்கும் பணியை செய்கின்றன. ஆனால் அவை வாயுக்களை பாதிப்பதில்லை.


ஆரோக்கியமான உணவினை உண்ணுங்கள்

ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்த உணவினை உண்பது நமது நுரையீரலுக்கு நன்மை விளைவிக்கும் ஒரு ஆய்வு ஆதாரத்து தான் கூறுகிறது. மேலும் 2011-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் படி காலிஃப்ளவர், கேல், ப்ராக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அதிகம் உண்பவர்களை, மேற்சொன்ன காய்கறிகளை குறைவாக உண்பவர்களை விட நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயம் பாதியாக குறைகிறது. மேலும் பச்சை இலைகளுடன் கூடிய சிறந்த காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது நமக்கு உயர்ந்த பாதுகாப்பு விளைவினை தருகிறது.

பணியாற்றும் போதும் நுரையீரலை பேணுங்கள்

கட்டுமான தொழிலில் இருந்து முடிவெட்டும் தொழில் வரை அனைத்துவிதமான தொழில்களில் ஈடுபடுவோர்க்கும் நுரையீரல் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். நம் தொழில் மூலம் ஏற்படக்கூடிய எண்ணற்ற காரணிகள் இருந்தாலும் பெயிண்ட், தீப்பொறி தூசி, துகள்கள் மற்றும் டீசல் வெளியேற்ற கழிவுகள் ஆகியவை அதிக தீமை தருபவை ஆகும். நாம் வேலை செய்யும் நிறுவனம் நமக்கு பாதுகாப்பு உபகாரணங்கள் வழங்கினால், நாம் அதை கட்டாயமாக அணிய வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில் நாம் தொழிற்சங்க பிரதிநிதி, உள்ளூர் சுகாதார நிறுவனம்,மற்றும் அதே செயல்பாடுகள் கொண்ட உள்ளூர் நிர்வாகம் ஆகியோரை பாதுகாப்பு குறித்து அணுகலாம்.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!


ரேடானின் அளவை பரிசோதியுங்கள்

ரேடான் இயற்கையாக உண்டாகும் ஒரு கதிரியக்க வாயு. இது பூமிக்கு அடியில் யுரேனிய பிளவு முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பொதுவாக சுவர்கள் மற்றும் அடித்தளத்தில் உள்ள பிளவுகள் மூலம் ஒரு வீட்டை அடைகிறது. ரேடான் புகைப்பிடிக்கும் பழக்கமற்றவரை நுரையீரல் புற்றுநோய் தாக்கும் காரணிகளுள் முக்கிய காரணியாக உள்ளது. மேலும் இது புகைப்பிடித்த பின் நோய் உண்டாக்கும் இரண்டாவது அபாயகரமான காரணியாகவும் உள்ளது. நமது வீட்டை சோதனை செய்து அங்கு ரேடான் இல்லை என்று உறுதி செய்து கொள்வது நமது நுரையீரலுக்கு நல்லது.

சுத்தமான பொருட்களையே பயன்படுத்துங்கள்

நாம் வீட்டில் ஈடுபடும் நடவடிக்கைகளான வீட்டை சுத்தம் செய்தல், பொழுதுபோக்கு, வீட்டை மேம்படுத்துதல் போன்ற பல வேலைகள், நாம் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வாயு மற்றும் துகள்களை எடுத்து செல்ல முடியும். எப்போதும் பாதுகாப்பான பொருள்களை தேர்வு செய்து, காற்றோட்டமான பகுதியில் வேலை செய்வதும், தூசியை தவிர்க்க முகமூடி அணிந்து கொள்வதும் நம்மை காத்து கொள்ளும் வழிகளாகும். எண்ணெய் சார்ந்த வண்ணப்பூச்சுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றிலிருந்து ஆவியாகும் கரிம சேர்மங்கள் வெளியாகும். அதற்கு பதிலாக தண்ணீர் சார்ந்த வண்ணப்பூச்சுகள் தேர்வு செய்ய வேண்டும். சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களான அம்மோனிய மற்றும் ப்ளீச் ஆகியவை கலந்திருக்கும். ஆகவே அவற்றை வாங்கும் முன் அப்பொருட்களின் மீது ஒட்டியுள்ள சீட்டினை கவனமாக படிக்க வேண்டும்.

மேற்சொன்ன முறைகளை பின்பற்றி அனைவரும் நம் பின்பற்றி நுரையீரலை பேணி காப்போம்.

அருமையான - பெண்கள் முக அழகு குறிப்புகள்!

பெண்கள் முக அழகு குறிப்புகள்:


* முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.

* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

* அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும்

* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?
* நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்.

முகப்பொலிவிற்கு
* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.

உதடு உலர்ந்து விட்டதா?
* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

கண்ணில் கருவளையம் மறைய...
* சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

காது அழகை பராமரிப்பது எப்படி?
* உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.

யூடியுபுக்காகப் படமெடுக்கும் காலம் வந்தாச்சு!

 குறும்படம் இயக்கினால், திரைப்படம் இயக்கலாம் என்று பலரும் வரிந்து கட்டிக் கிளம்பியிருப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவர் பாலாஜி மோகன். முதலில் காதலித்து வெற்றிகரமாகச் சொதப்பியவர் தற்போது வாய் மூடி பேச வந்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

‘வாயை மூடி பேசவும்' புதுசா இருக்கே தலைப்பு..?

மக்கள் மத்தியில் இப்போ கம்யூனிகேஷன் மூலமாகத்தான் நிறைய பிரச்சினைகள் வருது. அதை மையப்படுத்தி ஜாலியா ஒரு படம் பண்ணியிருக்கேன். மம்மூட்டி மகன் துல்கர் சல்மான்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியா நஸ்ரியா நடிச்சிருக்காங்க. முன்னாள் கதாநாயகி மதுபாலாவை இந்தப் படத்துக்காக மறுபடியும் அழைச்சிட்டு வந்திருக்கேன். எழுத்தாளர் வேடத்துல நடிச்சிருக்காங்க.

உங்க அறிமுகப் படம் படம் தமிழ் - தெலுங்கு, இப்போ தமிழ் - மலையாளம்?

இந்த ரெண்டு மொழிகளிலும் இந்த கதை ரீச்சாகுன்னு நினைச்சேன். அதனால் இந்த முறை தெலுங்கு இடத்துல மலையாளம். மற்றபடி என்னோட மூனாவது படம் தமிழ்ல மட்டும்தான்.

இப்பவே உங்களோட மூணாவது படம் பற்றிய செய்திகள் இணையத்தைக் கலக்குதே?

‘காதலில் சொதப்புவது எப்படி' முடிச்ச உடனே என்கிட்ட வேறு கதைகள் இல்ல. இருந்தா உடனே படம் பண்ணியிருப்பேன். இப்போ என்கிட்ட நிறைய கதைகள் இருக்கு. நடிகர்கள் தேர்வு முடிஞ்சுட்டா என்னால உடனே ஷுட்டிங் கிளம்ப முடியும். என்னோட அடுத்த படத்துல தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கிறாங்க. விஜய் சேதுபதி நடிக்கிறார்ங்கிற செய்தியில உண்மையில்ல.

என்ன மாதிரியான படங்களைப் பார்க்கறீங்க? சமீபத்தில் உங்களை பாதிச்ச படங்கள் என்னென்ன?

சமீபகாலமா நான் எந்தப் படத்தையும் பார்க்க முடியல. ஏன்னா, என்னோட படத்தோட வேலைகளே எனக்கு சரியா இருக்கு. ஆனா கண்டிப்பா பார்க்கணும். படங்கள் பார்க்கிறது நல்ல எனர்ஜி. எனக்கு எல்லா வகைப் படங்களுமே பிடிக்கும்.

இன்னைக்கு படங்களை ரிலீஸ் பன்றதுல இருக்க பெரிய சவால் எதுன்னு நினைக்கிறீங்க?

தயாரிப்பாளர் போட்ட காசை எடுக்கணும், லாபம்னு கொஞ்சமாச்சும் கிடைக்கணும். இதுக்கு அவர் நிறைய விளம்பரப்படுத்த வேண்டியதிருக்கு. டி.டி.எச், யுடியுப் இப்படி நிறைய தியேட்டர் இல்லாத மாற்று மீடியாக்கள் மூலமாக சரியான நேரத்துல படங்களை ரசிகர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.

டி.டி.எச், யுடியுப்ல எல்லாம் படங்களை வெளியிடுவது சாத்தியமா?

அதுதான் எதிர்காலத் திரையரங்கமா இருக்கும். யுடியுபுக்காக மட்டுமே படம் பண்ணும் காலம் சீக்கிரம் வரும்.

உங்க ரெண்டு படங்கள்லயும் சின்ன கேரக்டர்கள்ல தலை காட்டியிருக்கீங்க. ஹீரோவா நடிப்பீங்களா?

நான் நிறைய மேடை நாடகங்கள் பண்ணியிருக்கேன். எனக்கு நடிக்கிறது ரொம்ப பிடிக்கும். ஜாலியா பண்ணுவேன். இப்போதைக்கு சின்ன கேரக்டர்ஸ் எனக்குப் போதும். இயக்கத்துல கவனத்தை வைப்போம். 

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்!

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்!

தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஏனெனில் அந்த அளவில் வேலைப்பளுவானது அனைத்து துறையிலும் அதிகரித்துவிட்டது. அதனால் வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் உடல் சோர்வால் சாப்பிட்டு தூங்க மட்டும் தான் நேரம் உள்ளது. சிலருக்கு அந்த நேரம் கூட கிடைக்காது. ஆகவே அத்தகைய பெண்களுக்கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை தமிழ் போல்ட் ஸ்கை பரிந்துரைக்கிறது. இந்த அழகு குறிப்புக்களை சரியாக பின்பற்றி வந்தால், இயற்கையான அழகில் ஜொலிக்கலாம். அதுமட்டுமின்றி,

இந்த அழகு குறிப்புகள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. சரி, இப்போது அந்த அழகு குறிப்புக்களைப் பார்ப்போமா!

பொலிவான கண்கள்

கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கருவளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.

முகத்தில் வளரும் முடி

சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வேண்டுமெனில், ஃபௌண்டேஷன் போடலாம். இல்லையெனில், வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால், முடி தெரியாது.

முகப்பரு

சரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக்கை, வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.

சரும சுருக்கம்

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சரும சுருக்கம். இந்த சரும சுருக்கம் ஏற்பட்டால், அது முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தும். இதனை தற்காலிகமாக மறைக்க கன்சீலர் பயன்படுத்தலாம். ஆனால் இயற்கையாக மறைக்க வேண்டுமெனில், தயிரை முகத்திற்கு தடவி நன்கு உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமெனில், பீர் அல்லது பீர் ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். வேண்டுமெனில், ஒயின், வோட்கா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

நெயில் பாலிஷ்

நகங்கள் அழகாக இருப்பதற்கு நெயில் பாலிஷ் போடுகிறோம். ஆனால் அந்த நெயில் பாலிஷ் சீக்கிரமே போய்விடுவதால், அது நகங்களின் அழகைக் கெடுக்கிறது. ஆகவே அது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், பால் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, பின் நெயில் பாலிஷ் போட வேண்டும்.

ஹேர் ரிமூவல்

அக்குளில் வளரும் முடியை ஷேவ் செய்யும் போது சோப்பு போட்டு ஷேவ் செய்யாமல், கண்டிஷனர் உபயோகித்து ஷேவ் செய்தால், ஷேவிங் செய்த பின்னர் சருமம் மென்மையாக இருக்கும்.

முழங்கை

முழங்கை வறட்சியுடன் அசிங்கமாக இருந்தால், அதனை போக்க தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, முழங்கையும் மென்மையாக இருக்கும்.

அழகான உதடுகள்

உதடுகளின் நிறம் அழகாக, அதே சமயம் இயற்கையான தோற்றத்தில் காணப்பட வேண்டுமெனில், ப்ரௌன், செர்ரி அல்லது நியூட் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இல்லாவிட்டால், தினமும் உதட்டை தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், உதடுகள் லிப்ஸ்டிக் போடாமலேயே அழகாக இருக்கும்.

ஹேர் கலர்

தற்போது நிறைய பெண்கள் கூந்தலுக்கு கலரிங் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவ்வாறு கலரிங் செய்த பின், அது விரைவிலேயே போய்விடுகிறது. ஆகவே கலரிங் செய்தது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், கூந்தலை ப்ளாக் டீ கொண்டு அலச வேண்டும்.

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்


பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம் என்று தான். ஆனால் இப்படி வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இந்தியாவில் பார்க்க முடியாது. மாறாக மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்தால் தெரிந்திருக்கலாம்.


ஏனெனில் இந்தியாவில் குழந்தை பெண்ணாக இருந்தால், கருவிலேயே சிலர் கலைத்துவிடுகின்றனர் என்பதால் தான். இருப்பினும் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நம் முன்னோர்களின் வாக்கு மூலம் தெரிந்து கொள்ளலாம்.


கர்ப்பிணிகளே! குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...


மேலும் அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம்.
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!


இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.


வயிற்றின் நிலை

வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம்.

சிறுநீரின் நிறம்

நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள்.


பிம்பிள்

கர்ப்ப காலத்தில் பிம்பிளால் அவஸ்தைப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம்.


சிறிய வயிறு

நிறைய பெண்கள் வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த கூற்றின் படி பல பெண்களுக்கு சரியாக நடந்துள்ளது என்றால் பாருங்களேன்.

மார்பகத்தின் அளவு

கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம்.


குளிர்ச்சியான பாதம்

கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.


இதயத்தின் துடிப்பு

ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள். ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

கூந்தல் வளர்ச்சி

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி. கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.


ஆசை

கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான். ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.


தூங்கும் நிலை

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.


கைகள்

எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று