Sunday, 16 March 2014

நுரையீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!

நுரையீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்

மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் பணியினை தவறாமல் செய்ய வேண்டுமெனில் நாம் அவற்றை பேணி காப்பது அவசியம்.அந்த வகையில் நுரையீரலை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

நாம் நமது நுரையீரலை அதிக அக்கறையுடன் கவனித்து வந்தோமென்றால், நுரையீரலும் நம் வாழ்நாள் முழுதும் செயல்படும்.எவ்வித வெளிப்புற பாதிப்பும் இல்லாதவரை, நமது நுரையீரலும் நீடித்து உழைக்கக்கூடியவையே. சில விதி விலக்குகள் தவிர்த்து, நாம் நமது நுரையீரலை எவ்வித சிக்கலுக்கும் உள்ளாக்காத வரை, அவையும் நம்மை எவ்வித சிக்கலுக்கும் உள்ளாக்குவதில்லை. நமது ஆயுள் உள்ள வரை ஆரோக்கியமான நுரையீரலைப் பெற சில வழிகளை இக்கட்டுரையில் காண்போம்.


புகைப்பிடித்தலை நிறுத்துங்கள்

அடிப்படையில் புகைப்பிடித்தல் என்பது நமது நுரையீரலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய விஷயமாகும். புகைப்பிடித்தலுக்கு உள்ளாக்கும் போது நமது நுரையீரலுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடைப்பதில்லை. எந்த அளவிற்கு அதிகம் புகைக்கிறோமோ, அதே அளவிற்கு கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் புற்றுநோய் மற்றும் COPD தாக்கும் வாய்ப்புகள் அதிகம். நாம் இருக்கும் இடத்தில் எவரேனும் புகைப்பிடித்து இருந்தாலோ அல்லது நமது அருகிலிருக்கும் மூன்றாவது நபர் புகைப்பிடித்தாலோ நமக்கு தீங்கு விளையும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. சிகரெட் புகைப்பதை மட்டும் நிறுத்தினால் போதாது. மாரிஜூனா, சுருட்டுகள், குழாய் மூலம் புகைப்பிடித்தல், நமது நுரையீரலுக்கு அதே வழியில் தீங்கு விளைவிக்கும்.


சுத்தமான காற்றுக்காக போராடுங்கள்

உலகில் 155 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். காற்று மாசுபாடு ஆஸ்துமா, COPD போன்ற நோய்களை மட்டும் தருவதில்லை மேலும் மக்களையும் கொல்கிறது. ஒழுங்கு குறைபாடுகளை எதிர்ப்பதன் மூலமும் சுகாதாரமான காற்றுக்கான விதிகளை ஆதரிப்பதன் மூலமும் நாம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தனி நபராக நாம் செய்ய வேண்டியது யாதெனில் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவது, குப்பைகள் மரக்கட்டைகள் எரிப்பதை தவிர்ப்பது, வாகனங்கள் பயன்படுத்தலை குறைப்பது ஆகியவை ஆகும்.


அதிக உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்

உடற்பயிற்சி, நுரையீரலை மட்டும் வலிமைப்படுத்துவதில்லை. அதையும் தாண்டி நமக்கு பல நன்மைகள் செய்கின்றது. நுரையீரல் இதயம் மற்றும் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம் இதயத்திற்கான சுவாசத்தை சிறந்த முறையில் பெற முடியும். நாள்பட்ட நுரையீரல் நோயால் தாக்கப்பட்டவர்க்கு உடற்பயிற்சி பல நன்மைகளை செய்கிறது. நுரையீரல் சிறப்புடன் செயலாற்ற நம்மால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வது அவசியமாகும். குளிர்காற்று, ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளை தூண்டினால், அதனை வெதுவெதுப்பாக்க கழுத்துகுட்டையை (கழுத்தையும் தோளினையும் மறைக்கும் துணி) பயன்படுத்துதல் அவசியம் அல்லது முகத்தை மறைக்க வேண்டும்.


வெளிப்புற காற்று மாசுபாடு குறித்து எச்சரிக்கை அவசியம்

குறிப்பாக கோடை காலத்தில் சில பகுதிகளில் உள்ள காற்று மாசுபடுதலால், வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்வதும், வெளிப்புறத்தில் நேரம் செலவழிப்பதும் கூட நுரையூரலை பாதிக்கும். அதிலும் நுரையீரல் பிரச்சனைகளை கொண்டவர்கள், இக்காலத்தில் காற்று மாசுபடுதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

வீட்டின் உள்ளும் காற்றை மேம்படுத்துங்கள்

காற்று மாசுபாடு ஒரு வெளிப்புற பிரச்சனை மட்டும் அல்ல. மரம் எரிக்கும் அடுப்புகள், நெருப்பு, கட்டுமான பொருட்கள் மற்றும் சில மெழுகுவர்த்திகள் மற்றும் காற்று சுத்தப்படுத்திகள் உட்பட வீட்டின் உட்புற காற்றை மாசுபடுத்தும் ஆதாரங்கள் நிறைய உள்ளன. வீட்டின் உட்புற காற்றை மேம்படுத்த ஒரு மூன்று பக்க அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது. அதில் காற்றை மாசுபடுத்தும் ஆதாரங்களை நீக்குவது, காற்றோட்டத்தை மேம்படுத்துவது மற்றும் காற்று தூய்மையாக்கிகளை பயன்படுத்துவது ஆகியன ஆகும். காற்று தூய்மையாக்கிகள் தேவையற்ற துகள்களை நீக்கும் பணியை செய்கின்றன. ஆனால் அவை வாயுக்களை பாதிப்பதில்லை.


ஆரோக்கியமான உணவினை உண்ணுங்கள்

ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்த உணவினை உண்பது நமது நுரையீரலுக்கு நன்மை விளைவிக்கும் ஒரு ஆய்வு ஆதாரத்து தான் கூறுகிறது. மேலும் 2011-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் படி காலிஃப்ளவர், கேல், ப்ராக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அதிகம் உண்பவர்களை, மேற்சொன்ன காய்கறிகளை குறைவாக உண்பவர்களை விட நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயம் பாதியாக குறைகிறது. மேலும் பச்சை இலைகளுடன் கூடிய சிறந்த காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது நமக்கு உயர்ந்த பாதுகாப்பு விளைவினை தருகிறது.

பணியாற்றும் போதும் நுரையீரலை பேணுங்கள்

கட்டுமான தொழிலில் இருந்து முடிவெட்டும் தொழில் வரை அனைத்துவிதமான தொழில்களில் ஈடுபடுவோர்க்கும் நுரையீரல் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். நம் தொழில் மூலம் ஏற்படக்கூடிய எண்ணற்ற காரணிகள் இருந்தாலும் பெயிண்ட், தீப்பொறி தூசி, துகள்கள் மற்றும் டீசல் வெளியேற்ற கழிவுகள் ஆகியவை அதிக தீமை தருபவை ஆகும். நாம் வேலை செய்யும் நிறுவனம் நமக்கு பாதுகாப்பு உபகாரணங்கள் வழங்கினால், நாம் அதை கட்டாயமாக அணிய வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில் நாம் தொழிற்சங்க பிரதிநிதி, உள்ளூர் சுகாதார நிறுவனம்,மற்றும் அதே செயல்பாடுகள் கொண்ட உள்ளூர் நிர்வாகம் ஆகியோரை பாதுகாப்பு குறித்து அணுகலாம்.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!


ரேடானின் அளவை பரிசோதியுங்கள்

ரேடான் இயற்கையாக உண்டாகும் ஒரு கதிரியக்க வாயு. இது பூமிக்கு அடியில் யுரேனிய பிளவு முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பொதுவாக சுவர்கள் மற்றும் அடித்தளத்தில் உள்ள பிளவுகள் மூலம் ஒரு வீட்டை அடைகிறது. ரேடான் புகைப்பிடிக்கும் பழக்கமற்றவரை நுரையீரல் புற்றுநோய் தாக்கும் காரணிகளுள் முக்கிய காரணியாக உள்ளது. மேலும் இது புகைப்பிடித்த பின் நோய் உண்டாக்கும் இரண்டாவது அபாயகரமான காரணியாகவும் உள்ளது. நமது வீட்டை சோதனை செய்து அங்கு ரேடான் இல்லை என்று உறுதி செய்து கொள்வது நமது நுரையீரலுக்கு நல்லது.

சுத்தமான பொருட்களையே பயன்படுத்துங்கள்

நாம் வீட்டில் ஈடுபடும் நடவடிக்கைகளான வீட்டை சுத்தம் செய்தல், பொழுதுபோக்கு, வீட்டை மேம்படுத்துதல் போன்ற பல வேலைகள், நாம் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வாயு மற்றும் துகள்களை எடுத்து செல்ல முடியும். எப்போதும் பாதுகாப்பான பொருள்களை தேர்வு செய்து, காற்றோட்டமான பகுதியில் வேலை செய்வதும், தூசியை தவிர்க்க முகமூடி அணிந்து கொள்வதும் நம்மை காத்து கொள்ளும் வழிகளாகும். எண்ணெய் சார்ந்த வண்ணப்பூச்சுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றிலிருந்து ஆவியாகும் கரிம சேர்மங்கள் வெளியாகும். அதற்கு பதிலாக தண்ணீர் சார்ந்த வண்ணப்பூச்சுகள் தேர்வு செய்ய வேண்டும். சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களான அம்மோனிய மற்றும் ப்ளீச் ஆகியவை கலந்திருக்கும். ஆகவே அவற்றை வாங்கும் முன் அப்பொருட்களின் மீது ஒட்டியுள்ள சீட்டினை கவனமாக படிக்க வேண்டும்.

மேற்சொன்ன முறைகளை பின்பற்றி அனைவரும் நம் பின்பற்றி நுரையீரலை பேணி காப்போம்.

0 comments:

Post a Comment