Friday, 7 February 2014

பிரமிக்க வைக்கும் 'பாஹுபாலி'...இந்தியளவில் யாரும் செய்யாதது..?

 ராஜமெளலி இயக்கத்தில் தயாராகி வரும் 'பாஹுபாலி' படத்திற்காக 4500 ஷாட்கள் கிராபிக்ஸ் காட்சிகள் செய்து சாதனை படைக்க இருக்கிறார்கள்.

'நான் ஈ' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் இந்தியளவில் அனைவரையும் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராஜமெளலி. தற்போது அவர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் 'பாஹுபாலி' என்னும் படத்தினை இயக்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் அதிகப் பொருட்செலவில் தயாராகி வரும் படம் என்ற சாதனையை ஏற்கனவே 'பாஹுபாலி' திரைபப்டம் அடைந்துள்ளது. 2015ல் தான் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மூலமாகவும் புதிய சாதனை படைக்க இருக்கிறார் ராஜமெளலி. 4500 ஷாட்கள் 'பாஹுபாலி' படத்திற்காக கிராபிக்ஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தியளவில் 'ரா ஒன்' மற்றும் 'க்ரிஷ் 3' உள்ளிட்ட படங்களில் கூட இந்தளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் கையாளப்பட்டதில்லை.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் பல கோடிகளை இறைத்திருக்கிறார்கள். 'பாஹுபாலி' தயாரிப்பாளர் ஷோபு "படம் பார்ப்பவர்களை பழங்கால கோட்டைகள், அரண்மனைகள், போர்கள் என பிரமிக்க வைக்கும். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பல்வேறு வெளிநாட்டு வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை ஸ்ரீனிவாஸ் மோகன் மேற்பார்வை செய்து வருகிறார். 

‘புலிவால்’ மொட்ட வால் - திரைவிமர்சனம்!

விமல், அனன்யா, சூரி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மேனனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வருகின்றனர்.

மறுமுனையில் பெரிய தொழிலதிபரான பிரசன்னா, அவருடைய கம்பெனியில் வேலை செய்யும் ஓவியாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறார். பெண்களை ஏமாற்றி திரியும் பிரச்சன்னாவின் குணாதிசயம் தெரியாமலேயே அவருடன் நெருங்கி பழகி வருகிறார் ஓவியா.

இந்நிலையில், பிரசன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்றனர். அதன்படி இனியாவை பேசி முடிக்கின்றனர். இந்த வேளையில் ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்து அவளுடன் நெருக்கமாக இருக்கிறார் பிரசன்னா. இதை தன்னுடைய செல்போனில் படம் பிடித்தும் வைத்துக் கொள்கிறார்.

பின்னர், ஓவியாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இனியாவைப் பார்க்கச் செல்கிறார் பிரசன்னா. அப்போது டிரைவர் மூலமாக பிரசன்னாவுக்கு இனியாவுடன் நிச்சயதார்த்தம் ஆன விஷயம் ஓவியாவுக்கு தெரியவர, பிரசன்னாவை போனில் அழைக்கிறாள். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறும் அவள், தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இருவருக்குமுள்ள உறவை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறாள்.

பயந்துபோன பிரசன்னா ஓவியாவை சந்திக்க விரைந்து வருகிறான். இருவரும் காபி ஷாப்பில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இறுதியில் பிரசன்னா, ஓவியாவிடம் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை காண்பிக்க அதன்பிறகு அமைதியாகிறார் ஓவியா. பிரசன்னாவிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்றுவிடுகிறார்.

பிரசன்னாவும் கோபத்தில் எழுந்துபோக, அவருடைய செல்போன் அங்கேயே விழுந்துவிடுகிறது. இந்நிலையில், அங்கு வரும் விமல் அந்த செல்போனை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஓவியாவும், பிரசன்னாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் அந்த செல்போனில் இருப்பதால் அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிரமாக தேடி வருகிறார் பிரசன்னா. இறுதியில், விமல்தான் அதை எடுத்தவர் என்று தெரியவர, விமலும் அதைக் கொடுக்க வருவதாகக் கூறிவிட்டு, கமலா தியேட்டருக்கு வருகிறார். ஆனால், பிரசன்னாவிடம் அதைக் கொடுக்காமலேயே திரும்பி விடுகிறார்.

ஒரு கட்டத்தில் செல்போனில் சார்ஜ் இறங்கிவிட, அதை சார்ஜ் செய்வதற்காக தன்னுடைய நண்பன் கடைக்கு செல்கிறார் விமல். அங்கு தனது நண்பனிடம் செல்போனை கொடுக்கிறார். அவர் செல்போனில் இருக்கும் வீடியோவை பார்த்து, அதை யூடியூப்பில் அப்லோடு செய்துவிடுகிறார். இதனால் அவமானம் தாங்க முடியாத ஓவியா தற்கொலைக்கு முயல்கிறார். பிரசன்னாவின் திருமணமும் தடைபட்டு விடுகிறது.

இறுதியில் ஓவியாவும், பிரசன்னாவும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

விமல் வழக்கம்போல் எல்லா படங்களிலும் வருவதுபோல் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் வலம் வருகிறார். இவரது முகபாவணையை பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு சலிப்படைந்து விட்டது. இனிமேலாவது இவரது நடிப்பை மாற்றிக் கொண்டால் ரசிக்கலாம். அந்த அளவுக்கு இந்த படத்தில் சொதப்பியிருக்கிறார்.

பிரசன்னா தன்னுடைய கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார். ஓவியா, இனியா, அனன்யா என படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், இவர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. அனைவருடைய கதாபாத்திரத்தையும் வீணடித்திருக்கிறார்கள். ஓவியாவை கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சூரி, தம்பி ராமையா என காமெடி ஜாம்பவான்கள் இருந்தும் படத்தில் காமெடிக்கு பஞ்சமே. மொபைலில் வரும் பஞ்ச் டயலாக்குகளையே காமெடி என்ற பெயரில் பேசி சூரி கடுப்பேத்தியிருக்கிறார். வழக்கம்போல், இவர் தனி டிராக்கில் காமெடி செய்திருந்தாலாவது ரசித்திருக்கலாம்.

செல்போன் என்பது இப்போது எல்லோருடைய வாழ்க்கையிலும் அன்றாட தேவையான ஒன்றாக மாறிவிட்டது. அதை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவை இயக்குனர் இப்படத்தில் சொல்லியிருக்கிறார். இந்த கதையை சொல்ல 15 நிமிட காட்சிகளே போதுமானது. ஆனால், 2 மணி நேரம் படத்தை ஓட்டுவதற்காக காட்சிகளை இழுஇழுவென்று வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். இயக்குனர் சொல்ல வந்த விஷயம் நல்லதாக இருந்தாலும் அதை ரசிக்கும்படியாக வைப்பதில் கோட்டை விட்டிருக்கிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். போஜன் கே.தினேஷ் ஒளிப்பதிவு படத்திற்கு சிறிது வலு சேர்த்திருக்கிறது.

உருளையால் இவ்வளவு நன்மைகளா...?

செரிமானம் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமானமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு இது சிறந்த உணவாய் விளங்குகிறது.

சரும பாதுகாப்பு வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

அழற்சி/வீக்கம் உட்புற மற்றும் வெளிப்புற வீக்கம் மற்றும் அழற்சிக்கு ஏற்ற மருந்தாக விளங்குகிறது உருளைக்கிழங்கு. இது மிகவும் மென்மையாக, எளிதில் செரிமானம் செய்யக்கூடியதாக இருக்கும். மேலும் இதனுள் அதிகமாக வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால், குடல்களில் மற்றும் செரிமானம் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் அழற்சியை சரி செய்யும்.

வாய் புண் வாய் புண் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

மூளை செயல்பாடு மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ், ஆக்ஸிஜன் வரத்து, வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உருளைக்கிழங்கு மேற்கூறிய அனைத்தையும் தருவதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

இதய நோய்கள் உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளன. இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது. இருப்பினும் இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கூட்டுவதாலும், இதை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன் அதிகரித்து விடும். இதனால் இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். எனவே மிகவும் குண்டாக இருப்பவருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்த உணவு அல்ல.

வயிற்றுப் போக்கு வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வளமான ஆற்றல் கொண்ட உணவாகும். ஏனென்றால் இதில் சுலபமாக செரிமானமாகிவிடும் ஆற்றல் இருக்கிறது. இருப்பினும் இதை அதிகமாக உட்கொண்டால் அதிக அளவு ஸ்டார்ச் உடலின் உள்ளே செல்லுவதால் வயிற்றுப்போக்கு அதிகரிக்கச் செய்யும்.

உருளைக்கிழங்கின் சாறை எரி காயத்துக்கு, சிராய்ப்புகள், சுளுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உபயோகிக்கலாம். 

சில்லி சிக்கன் கராஹி - சமையல்!

தேவையான பொருட்கள்:

கோழி – 500 கிராம்

பச்சை மிளகாய் – 5.

கசகசா – அரை தேக்கரண்டி.

மிளகாய்ப் பொடி – 1 தேக்கரண்டி.

இஞ்சி (அரைத்தது) – 1 தேக்கரண்டி.

பூண்டு (அரைத்தது) – 2 தேக்கரண்டி.

கொத்தமல்லி பொடி – 1 தேக்கரண்டி.

எலுமிச்சை பழங்கள் – 2

நறுக்கிய வெங்காயம் 2.

நறுக்கிய தக்காளி – 2.

கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அரைத்த இஞ்சியை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு இவை இரண்டையும் கோழிக் கறியுடன் சேர்த்து சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். 2 பச்சை மிளகாய்களை எண்ணெயில் விட்டு லேசாக வறுக்கவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய், கறிவேப்பிலை, கசகசா, சிறிது வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு சுமார் 2 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை இதில் போட்டு சுமார் 5 நிமிடம் வதக்கவும். மசாலாவை இதனுடன் சேர்க்க வேண்டாம்.

இப்போது கோழியை எடுத்து இதில் சேர்த்து பொன்னிறமாக வரும்  வரும் வரை கிண்டி விடவும். பிறகு தக்காளிகளையும் சேர்த்து சில நிமிடங்கள் நல்ல சூட்டில் வறுக்க வேண்டும். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்கனவே வறுத்த பச்சை மிளகாய்கள், கொத்தமல்லி, மிச்சமுள்ள எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றை கறியுடன் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் ஊற விடவும்.

சப்பாத்தி , ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

அஞ்சான் சூர்யா அதிக சம்பளத்திற்கு செய்த தந்திரம் என்ன?

அஞ்சான் படத்தில் ரூ.40 கோடி சம்பளம் வாங்குகிறாராம் சூர்யா.
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது.

இந்நிலையில் சூர்யா தற்போது லிங்குசாமி தயாரித்து இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு சம்பளம் 18 கோடி என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக சூர்யாவிற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் இப்படத்தின் தெலுங்கு உரிமையையும் சூர்யா கேட்டிருக்கிறார்.

தயாரிப்புத் தரப்பு அதற்கும் சம்மதம் சொல்லிவிட்டதாம். தெலுங்கு உறுமை குறைந்தது 20 கோடியாவது போகும். அப்படியென்றால் சூர்யாவில் சம்பளம் 40 கோடியா? எaன்று கொலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்.

, ரஜினிக்கு மகள் கோவிலில் வழிபாடு!

ரஜினியின் 2–வது மகள் சவுந்தர்யா. இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் மாதம் 11–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

கோச்சடையான் படம் வெளியாவதை தொடர்ந்து சவுந்தர்யா நேற்று கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.

அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர், கோவிலின் பிரதான நேர்ச்சையான துலாபாரம் நேர்ச்சையும் அளித்தார்.

இதில், ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்துவதாக வேண்டிக் கொண்டார். அதன்படி சுமார் 75 கிலோ எடைக்கு வெண்ணை வழங்கி பிரார்த்தனை செய்தார்.

கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பிரார்த்தனை செய்த பின்பு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்த அவர், பின்னர் அங்கிருந்து தங்கியிருந்த விடுதிக்கு கிளம்பிச் சென்றார்.

கோச்சடையான் படம் முதல் முறையாக மோஷன் கேப்சர் என்ற தொழில் நுட்பத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடத்தப்பட்டு வரும் படப்பிடிப்பு முறைக்கு இது மாற்று முறையாகும். இதனை டைரக்டர்கள் இந்திய சினிமாவின் முதல் முயற்சியாக கருதுகிறார்கள்.

இந்த படத்தில் ரஜினி 2 வேடம் ஏற்று நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். மேலும் சரத்குமார், நாசர், ஆதி, ருக்மணி உள்ளிட்டோரும் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மராத்தி, போஜ்பூரி, வங்காளம், பஞ்சாபி போன்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவருகிறது.

சர்வதேச அளவில் ஆங்கிலத்திலும் இந்த படம் வெளியிடப்படுகிறது.

இதுபற்றி சவுந்தர்யா கூறும் போது, கோச்சடையான் படம் இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றார். 

அலறும் கோலிவுட் நடிகைகள்!

பாணா காத்தாடி சமந்தாவுக்கு தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்தே சோதனைக்களமாகவே இருந்துள்ளது. மணிரத்னம், ஷங்கர் என மெகா டைரக்டர்களின் படங்கள் கிடைத்தபோது, தோல் அலர்ஜி நோய் காரணமாக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு சில வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தில் கமிட்டானபோதும் அதே தோல் அலர்ஜி தலைதூக்கியது. இருப்பினும் சீரியசாக சிகிச்சை எடுத்து இப்போது கோடம்பாக்கத்தில் அதிரடி பிரவேசம் செய்ய தயாராகி விட்டார் சமந்தா.

அதைத் தொடர்ந்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருப்பதால், கோலிவுட்டிலுள்ள நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. காரணம், சமந்தாவை நாயகியாக்கினால், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படத்தை நல்ல விலைக்கு விற்று விடலாம். அதோடு, இங்குள்ள சில நடிகைகளை மாதிரியே தேவையில்லாத கண்டிசனெல்லாம் போடமாட்டார்.

குறிப்பாக, பாடல் காட்சிகளில் லிமிட் வைக்காமல், எந்த மாதிரி காஸ்டியூம் கொடுத்தாலும் அணிந்து நடித்து தாராள கவர்ச்சியை வழங்குவார் என்று படாதிபதிகளின் கவனம் சமந்தா பக்கம் திரும்பியிருப்பதுதான். இதனால், செக்போஸ்ட் தாண்ட மாட்டேன் என்று எக்குத்தப்பாக முடியை கோதிவிட்டபடி பேட்டி கொடுக்கும் சில இளவட்ட நடிகைகளும், சமந்தாவின் வரவு நம்மையும் சாய்த்து விடுமோ என்று கலவரமடைந்துள்ளனர்

‘உ’ உஉஊஊ... - திரைவிமர்சனம்!


திரைப்படத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார் தம்பி ராமையா. ஒருநாள் இவர் சினிமா தயாரிப்பாளரான பயில்வான் ரங்கநாதனிடம் கதை சொல்கிறார். அங்கு அவரிடம் கதையின் கருவை மட்டும் சொல்கிறார். இதை ஏற்றுக்கொண்ட பயில்வான் ரங்கநாதன், கதையின் விரிவாக்கத்தை தயார் செய்யும்படி சொல்கிறார்.

கதையின் விரிவாக்கத்தை உருவாக்க தனக்கு உதவியாளர்கள் வேண்டும் என்று எண்ணுகிறார் தம்பி ராமையா. இதனால் இவருடன் அறையில் தங்கியிருக்கும் நண்பர்களை உதவியாளராக பணிப்புரிய அழைக்கிறார். அவர்கள் ''உனக்கே ஒன்றும் தெரியாது. உன்னிடம் நாங்கள் பணிபுரிவதா'' என்று இவரை கேலி கிண்டல் செய்கிறார்கள். இதனால் கோபம் அடையும் தம்பி ராமையா ஒருநாள் நான் படம் எடுத்து காண்பிக்கிறேன் என்று போதையில் அவர்களிடம் சவால் விட்டுச் செல்கிறார்.

தனியாக செல்லும் இவர் போதையில் வழியிலே விழுந்து விடுகிறார். அந்த வழியாக வரும் போலீசார் சந்தேகத்தின் பெயரில் இவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள். அங்கு தம்பி ராமையா, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் நான்கு இளைஞர்களை சந்திக்கிறார். இவர்களை தனக்கு உதவியாளர்களை சேரும்படி அழைக்கிறார். இவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் பணிபுரிய சம்மதிக்கிறார்கள்.

நான்கு இளைஞர்கள் உதவியோடு தம்பி ராமையா கதையின் விரிவாக்கத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையில் இவர் சவால் விட்டு சென்ற இவரது நண்பர்கள், இவர் இயக்குனர் ஆகிவிட கூடாது என்று தம்பி ராமையா உருவாக்கும் படத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.

இவர்கள் செய்யும் தடைகளை தாண்டி படத்தை இயக்கினாரா? அந்தப்படம் வெற்றியடைந்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தில் தம்பி ராமையாவை வைத்து கதை பிண்ணப்பட்டிருக்கிறது. அதை முழுமையாக புரிந்து கொண்ட தம்பி ராமையா படத்தை தன் நடிப்பு திறமையால் கதையை அழகாக எடுத்துசென்றிருக்கிறார். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. இவர் மட்டும் தனித்து தெரிகிறார். தம்பி ராமையாவும் நான்கு இளைஞர்களும் செய்யும் அரட்டைகள் அருமை.

உதவியாளர்களாக வரும் நான்கு இளைஞர்கள் தங்களால் முடிந்தவரை சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் அவர்கள் ரசிக்கும்படி இருந்தாலும் அடுத்த காட்சியிலே வெறுப்பை வரவழைக்கிறார்கள். நாயகன், நாயகி என இவர்கள் எடுக்கும் படத்திலே வருவதுபோல் அமைக்கப்பட்டுள்ள காட்சி பார்ப்பவர்களுக்கு ரசிக்கும் படியாக இல்லை.

அபிஜித் ராமசாமி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார்தான். ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகளை ரசிக்கலாம். இளம் வயதிலேயே இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் ஆஷிக் நான்கு இளைஞர்களை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை சுமந்து செல்லும் பெரிய பொறுப்பை தம்பி ராமையாவை மேல் சுமத்தியிருக்கிறார். இதில் இவர் வெற்றி கண்டிருக்கிறாரா என்பது கேள்வி குறி.

மீண்டும் அஜித்தின் புதிய இளமைத் தோற்றம்!

1980-90களில் கமலஹாசன், ரஜினிகாந்தின் ஆதிக்கம் தமிழ்த் திரையுலகில் மேலோங்கியிருந்தபோதே நவரச நாயகன் எனப்படும் நடிகர் கார்த்திக் தன்னுடைய நடிப்புத் திறமையினால் தனி முத்திரை பதித்தார். 100 படங்களுக்கும் மேலாக கதாநாயக அந்தஸ்தில் நடித்துள்ள இவர் தற்போது வில்லன் வேடங்களில் நடிக்க முன்வந்துள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிக்கும் 'அநேகன்' திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்துவருகிறார். இப்போது ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் கெளதம் மேனனின் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள புதிய படத்திலும் வில்லனாக நடிக்க கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்தும், கார்த்திக்கும் முன்பே இரு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ஹீரோவாக நடித்த 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் அஜித் கௌரவ வேடத்தில் தோன்றியுள்ளார். அதேபோல் அஜித் நடித்த 'ஆனந்தப் பூங்காற்றே' படத்தில் நடிகர் கார்த்திக் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்கு வந்தன.

'வீரம்' படத்தின் வெற்றியை அடுத்து அஜித், கெளதம் மேனனின் படத்தில் இணைந்துள்ளார். கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இதுவாகும். நிதிப் பிரச்சினைகளில் திண்டாடும் கெளதம் மேனனுக்கு உதவும் விதமாகவே அஜித் தானே முன்வந்து இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் வெகு நேர்த்தியாகவும், நவீன உத்திகளுடனும் தயாரிக்கப்பட இருப்பதால் ஒப்பனைக் கலைஞர்களிலிருந்து நடனக் கலைஞர்கள் வரை ஹாலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர். அஜித்தும் சமீபத்திய கருப்பு, வெள்ளை தலைமுடியுடன் கூடிய தோற்றத்தை மாற்றி இந்தப் படத்தில் இளமையாகக் காட்சியளிக்க உள்ளார். இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையுமே அமெரிக்காவில் நடத்துவதற்கு மேனன் திட்டமிட்டுள்ளார். மேலும் அஜித்தின் படங்களில் இதுவே மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகின்றது. 

அம்மா - அப்பா வித்தியாசம் என்ன?

அம்மா - அப்பா வித்தியாசம் என்ன?

இயற்கை நமக்கு அம்மா, அப்பா என்று பெற்றோரைக் கொடுத்திருக்கிறது. இதில் அம்மா என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற ரகசியம் இருக்கிறது. அப்பா என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற ரகசியமும் இருக்கிறது.

தமிழில் "ம்மா' இரண்டும் மெல்லின எழுத்துக்கள். "அ' என்பது உயிர்எழுத்தில் முதல் எழுத்து. தமிழில் எப்படி வைத்தார்கள்? நாம் உயிர் எடுத்ததில் முதல் காரணம் அப்பா, அம்மா. உயிர் எழுத்தில் முதல் எழுத்து அவர்களுக்கு "அ' அடுத்தது என்ன அழகு என்றால் அம்மாவில் "ம்,மா' இரண்டும் மெல்லின எழுத்து.

 அப்பாவில் "ப்,பா' இரண்டும் வல்லின எழுத்து என்ன அர்த்தம்? வாழ்க்கையில் அம்மா இரண்டு மடங்கு மென்மையாக இருக்க வேண்டும். அப்பா இரண்டு மடங்கு வன்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.