தேவையான பொருட்கள்:
கோழி – 500 கிராம்
பச்சை மிளகாய் – 5.
கசகசா – அரை தேக்கரண்டி.
மிளகாய்ப் பொடி – 1 தேக்கரண்டி.
இஞ்சி (அரைத்தது) – 1 தேக்கரண்டி.
பூண்டு (அரைத்தது) – 2 தேக்கரண்டி.
கொத்தமல்லி பொடி – 1 தேக்கரண்டி.
எலுமிச்சை பழங்கள் – 2
நறுக்கிய வெங்காயம் 2.
நறுக்கிய தக்காளி – 2.
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை:
ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அரைத்த இஞ்சியை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு இவை இரண்டையும் கோழிக் கறியுடன் சேர்த்து சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். 2 பச்சை மிளகாய்களை எண்ணெயில் விட்டு லேசாக வறுக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய், கறிவேப்பிலை, கசகசா, சிறிது வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு சுமார் 2 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை இதில் போட்டு சுமார் 5 நிமிடம் வதக்கவும். மசாலாவை இதனுடன் சேர்க்க வேண்டாம்.
இப்போது கோழியை எடுத்து இதில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரும் வரை கிண்டி விடவும். பிறகு தக்காளிகளையும் சேர்த்து சில நிமிடங்கள் நல்ல சூட்டில் வறுக்க வேண்டும். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்கனவே வறுத்த பச்சை மிளகாய்கள், கொத்தமல்லி, மிச்சமுள்ள எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றை கறியுடன் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் ஊற விடவும்.
சப்பாத்தி , ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

0 comments:
Post a Comment