Friday, 7 February 2014

பிரமிக்க வைக்கும் 'பாஹுபாலி'...இந்தியளவில் யாரும் செய்யாதது..?

 ராஜமெளலி இயக்கத்தில் தயாராகி வரும் 'பாஹுபாலி' படத்திற்காக 4500 ஷாட்கள் கிராபிக்ஸ் காட்சிகள் செய்து சாதனை படைக்க இருக்கிறார்கள்.

'நான் ஈ' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் இந்தியளவில் அனைவரையும் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராஜமெளலி. தற்போது அவர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் 'பாஹுபாலி' என்னும் படத்தினை இயக்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் அதிகப் பொருட்செலவில் தயாராகி வரும் படம் என்ற சாதனையை ஏற்கனவே 'பாஹுபாலி' திரைபப்டம் அடைந்துள்ளது. 2015ல் தான் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மூலமாகவும் புதிய சாதனை படைக்க இருக்கிறார் ராஜமெளலி. 4500 ஷாட்கள் 'பாஹுபாலி' படத்திற்காக கிராபிக்ஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தியளவில் 'ரா ஒன்' மற்றும் 'க்ரிஷ் 3' உள்ளிட்ட படங்களில் கூட இந்தளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் கையாளப்பட்டதில்லை.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் பல கோடிகளை இறைத்திருக்கிறார்கள். 'பாஹுபாலி' தயாரிப்பாளர் ஷோபு "படம் பார்ப்பவர்களை பழங்கால கோட்டைகள், அரண்மனைகள், போர்கள் என பிரமிக்க வைக்கும். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பல்வேறு வெளிநாட்டு வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை ஸ்ரீனிவாஸ் மோகன் மேற்பார்வை செய்து வருகிறார். 

0 comments:

Post a Comment