Monday, 10 March 2014

"இது ரஜினி வாய்ஸ் இல்லை", சொல்கிறார் சௌந்தர்யா

நேற்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் காண்பிக்கப்பட்ட படத்தின் ட்ரைலர் மற்றும் ரஜினியின் சில நிமிட ருத்ர தாண்டவக் காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.


 கோச்சடையான் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கார்ட்டூன் மாதிரி இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின.


இது டீசர்தான்... அதுவும் ரஜினி வாய்ஸ் கூட கிடையாது. மெயின் ட்ரைலர் கலக்கலாக வரும் என்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தெரிவித்திருந்தார். தான் சொன்னபடியே ட்ரைலரில் அசத்தியிருந்தார் சவுந்தர்யா.


கோச்சடையான், ராணா என இரண்டு பாத்திரங்களையுமே வித்தியாசப்படுத்திக் காட்டியிருந்த சவுந்தர்யா, இளம் ரஜினியை வியப்பூட்டும் வகையில் வடிவமைத்திருந்தார். சண்டைக் காட்சிகளும், ரஜினியின் குரலும் அந்த ட்ரைலரின் சிறப்பு அம்சங்களாக அமைந்தன.


அடுத்து ரஜினியின் ருத்ரதாண்டவக் காட்சியை மட்டும் தனியாக போட்டுக் காட்டினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துறையினரும் பிரமித்துப் போனார்கள். அனிமேஷனில் இத்தனை கச்சிதமாக ருத்ரதாண்டவ காட்சிகளை வடிவமைத்த சவுந்தர்யாவைப் பாராட்டினார்கள்.


 பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, 'இதுதான் அனிமேஷன் சாதனை. இவ்வளவு காலம் ஆனதற்கு காரணம் இதுபோன்ற பர்பெக்ட்னஸ் வர வேண்டும் என்பதுதான்.


நீங்கள் ட்ரைலர்தான் பார்த்திருக்கிறீர்கள். மெயின் பிக்சர் பார்த்தால் இன்னும் பிரமிப்பீர்கள்," என்றார்.

ஆர்யாவின் அடுத்த படங்கள் ஒரு பார்வை!

கோலிவுட்டின் சாக்லேட் பாயாக இருந்துவரும் ஆர்யா சமீபமாக ராஜா ராணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காதல் இளவரசன் என்ற பட்டத்தை உலக நாயகனிடமிருந்து பெற்றார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் ஆரம்பம், ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் வெளியாகி பெரும் வெற்றியடைந்தன.


அந்த வெற்றிகளைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக இயற்கை படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் புறம்போக்கு திரைப்படத்திலும், ”தடையறத் தாக்க” மகிழ்திருமேனி இயக்கத்தில் ”மீகாமன்” படத்திலும் நடித்துவரும் ஆர்யா, விரைவில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.


மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் ஆர்யா - விஜய் இருவருக்குமே மிகப் பெரும் வரவேற்புக் கிடைத்தது. மதராசப்பட்டினம் திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகலாம்.


இத்துடன் ஆர்யாவின் பேவரிட் இயக்குனரான விஷ்ணுவர்த்தன் இயக்கவுள்ள திரைப்படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஆர்யா. மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கவுள்ள திரைப்படத்திலும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த அனைத்துப் படங்களும் இந்த ஆண்டே வெளியானால் ஆர்யாவின் நடிப்பில் இவ்வாண்டு வெளியான படங்களில் மொத்தம் ஐந்து திரைப்படங்கள் கணக்காகும்.

விஷால் படத்தில் அஞ்சான் சூர்யா!

சிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள்.


படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் அங்கு படமாகிறதாம். கூடவே சூர்யா-சமந்தா இணையும் பெரும்பாலான காட்சிகளையும் படமாக்குகிறாராம் லிங்குசாமி. ஆக அந்த ஷொட்டியூலோடு பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விடுமாம்.


அதனால், அஞ்சானை ஆகஸ்ட் 15ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். முன்னதாக, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15-ந்தேதி அஞ்சான் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிடுகிறார்களாம்.


 இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தோடு யுடிவியும் இணைந்து தயாரிக்கிறது.


அதனால், யுடிவி தயாரிப்பில் உருவாகி வரும் விஷாலின் நான் சிகப்பு மனிதன் ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வருவதால், அப்படத்தோடு அஞ்சான் பர்ஸ்ட் லுக் டீசனை வெளியிடுகிறார்களாம்.

மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா!

சிம்புவும், த்ரிஷாவும் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக ஜோடி சேருகிறார்கள்.


பெரிய பட்ஜெட்டில் எடுத்த இரண்டாம் உலகம் பெரிய தோல்வியை அடைந்ததால் சின்ன பட்ஜெட்டில் சிறப்பான படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் செல்வராகவன்.


இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது உறுதியாகி இருக்கிறது.


செல்வராகவன் இயக்கத்தில், த்ரிஷா ஏற்கெனவே தெலுங்கில் ஆடவாரி மாட்லாகு அர்த்தலே வேறுலே என்ற படத்தில் நடித்திருக்கிறார்.


 இந்த படம்தான் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் ஆனது. த்ரிஷா கேரக்டரில் நயன்தாரா நடித்தார்.


அதற்கு பிறகு இப்போது மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்க இருக்கிறார். செல்வராகவன் இப்போது இசை அமைப்பாளர் யுவனுடன் இணைந்து படத்துக்கான பாடலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஐதராபாத் சிறையில் விஜய்!

விஜய்யின் கேரியரில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி மிக முக்கியமான படம். ஒரு ராணுவ வீரன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இடத்தில், வெடிகுண்டு வைத்து நாட்டை சீர்குலைக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் கதாபாத்திரம். அது விஜய்க்கு அற்புதமாகவும் பொருந்தியிருந்ததோடு, படமும் மெகா ஹிட்டாக அமைந்தது.


அதையடுத்து, விஜய் இயக்கத்தில் தலைவா, நேசன் இயக்கத்தில் ஜில்லா என இரண்டு படங்களில் நடித்த விஜய்க்கு எதிர்பார்த்த ஹிட் கிடைக்கவில்லை. அதனால் இப்போது தீரன் படம் மூலம் மீண்டும் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்திருப்பதால் அதிக உற்சாகத்தோடு இருக்கிறார். துப்பாக்கியை மிஞ்சும் ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்.


அதனால், இதற்கு முன்பு அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்தபோது பெரிய வித்தியாசத்தைக்காட்டாத விஜய், இந்த படத்தில் நடிக்கும் இரண்டு வேடங்களிலும நிறைய வித்தியாசம் காட்டுகிறாராம். அதனால் உடல்ரீதியாகவும் சேஞ்ச் காட்டுவதால் இரண்டு கெட்டப்புக்கும் இடையே காலஅவகாசமும் எடுத்துக்கொள்கிறாராம்.


மேலும், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ள முருகதாஸ், வில்லன் அட்டாக்கினால் சிறைக்குள் விஜய் தள்ளப்படும் காட்சிகளை தற்போது ஐதராபாத்தில் படமாக்கி வருகிறார். இதை மிகப்பெரிய செட் அமைத்து படமாக்கிக்கொண்டிருக்கிறார். இதில் சிறைச்சாலைக்குள் ஊடுருவும் வில்லனின் அடியாட்களிடம் விஜய் மோதும் ஒரு அதிரடி சண்டை காட்சியும் படமாகிறதாம்.

பாலாவின் பரதேசி கெட்டப்பில் ஆதிவாசி படம்!

வெங்காயம் என்ற படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். பெரியாரிச கொள்கை அடிப்படையில் உருவான அப்படம் கோலிவுட்டின் பெரும்பாலான படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்தது. முதலில் படம் வெளியானபோது சரியானபடி படம் மக்களை சென்றடையவில்லை.


 பின்னர் அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். அதையடுத்து, ஒன் என்ற பெயரில் ஒரு படத்தை தொடங்கினார் சங்ககிரி ராஜ்குமார். படத்தில் ஒரேயொருவர் மட்டும் நடிக்கும் கதை. அந்த ஒருவரும் அவரே. அதோடு படத்திலுள்ள மொத்த பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டதால் அந்த படத்தை அவரால் இன்னமும் முடிக்கமுடியவில்லை.


இந்த நிலையில. இப்போது நெடும்பாறைகள் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். சேலம் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படத்தில் காட்டுவாசிகளின் வாழ்க்கையை முறையை பதிவு செய்துள்ளாராம் ராஜ்குமார். காடே கதியென்று வாழும் மனிதர்கள் நகரத்துக்கு வந்தபோது படும் அவஸ்தைகளையும் சொல்லியிருக்கிறாராம். பெரும்பாலான காட்சிகள் காட்டுப்பகுதியிலேயே நடத்தப்பட்டதால் 6 லட்சம் செலவில் காட்டுக்குள் செட் அமைத்தும் படமாக்கினாராம்.


மேலும், இப்படத்தில் நடித்த அனைவருக்கும் காட்டுவாசிகள் அணிவது போன்ற ஆடைகளையே பயன்படுத்தியிருக்கும் ராஜ்குமார், அவர்களை பரதேசி படத்தில் நூற்றுக்கணக்கானவர்களை பாலா மொட்டையடித்து விட்டது போன்ற கெட்டப்பில் நடிக்க வைத்துள்ளாராம். தற்போது இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் அவர், விரைவில் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

உப்பைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்த சில அருமையான வழிகள்!!!

உப்பைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்த சில அருமையான வழிகள்!!!

உணவில் சுவையை அதிகரிக்க உதவும் உப்பு, வீட்டை சுத்தப்படுத்த உதவும் பொருட்களிலும் முக்கியமான ஒன்று. இத்தகைய உப்பைக் கொண்டு வீட்டில் உள்ள பல பொருட்களை சுத்தப்படுத்த முடியும். உங்களுக்கு வீட்டிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது தெரியுமா?

ஆம், உப்பு துர்நாற்றத்தைப் போக்குவதிலும் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இதுப்போன்று யாரும் எதிர்பார்க்காத சில பொருட்களை சுத்தப்படுத்தவும் உப்பு உதவியாக இருக்கும். இங்கு உப்பைக் கொண்டு வீட்டில் உள்ள எவற்றையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்ப்போம்

காபி பாத்திரத்தை கழுவ...

காபி பாத்திரத்தில் காபியின் கறைகள் படிந்து கருப்பாக இருக்கும். அப்போது அந்த பாத்திரத்தில் உள்ள கருப்பு கறைகளைப் போக்க, வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, காபி பாத்திரத்தை 3 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், கறைகள் சீக்கிரம் போய்விடும்.

டம்ளரை சுத்தம் செய்ய...

உப்பு கலந்த நீரை டம்ளரில் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சை கொண்டு தேய்த்து கழுவினால், டம்ளரில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் நீங்குவதோடு, டம்ளரும் பளிச்சென்று மின்னும்.

இஸ்திரி பெட்டியில் உள்ள துருவை போக்க...

வீட்டில் உள்ள இஸ்திரி பெட்டியில் துரு இருந்தால், அவற்றைப் போக்குவதற்கு உப்பு கலந்த நீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் இந்த உப்பு நீரைக் கொண்டு ஒருமுறை சுத்தம் செய்தால் போதாது, துரு போகும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.

சில்வர் பொருட்கள்

சில்வர் பொருட்கள் பளிச்சென்று மின்னாமல் இருந்தால், அப்போது அவற்றை உப்பு கொண்டு சுத்தம் செய்தால், சில்வர் பாத்திரங்களானது நன்கு பளிச்சென்று மின்னும். அதற்கு சில்வர் பொருட்களை வெதுவெதுப்பான உப்பு நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

ஒயின் கறைகளைப் போக்க...

ஒயின் கறைகளைப் போக்குவது என்பது கடினமான ஒன்று. ஆனால் இந்த கறையை எளிதில் போக்க வேண்டுமெனில், கறைப்படித்த தரைவிரிப்பானை உப்பு நீரால் தேய்த்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, சோப்பு போட்டு துவைத்தால், உடனே போய்விடும்.


மைக்ரோ ஓவனை சுத்தம் செய்ய...

மைக்ரோ ஓவனை எளிதில் சுத்தம் செய்ய ஒரே சிறந்த வழியென்றால், அது 2 டேபிள் ஸ்பூன் உப்பை நீரில் கலந்து, அந்த நீர்மத்தை துணியால் நனைத்து, மைக்ரோ ஓவனை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் ஓவனில் உள்ள கறைகள் மற்றும் எண்ணெய் பசைகள் எளிதில் வெளிவந்துவிடும்.

ஜீன்ஸ் துவைக்க...

ஜீன்ஸ் ஊற வைக்கும் போது, 1 கப் உப்பை சோப்பு நீரில் சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் துவைத்து, சுத்தமான நீரில் அலசினால், ஜீன்ஸில் உள்ள கறைகள் நீங்கி, புதிது போன்று காணப்படும்.

ஏன் ஆண்கள் திருமணத்துக்கு பிறகு மனைவியை கவனிப்பது இல்லை ?

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண்களின் புகார். இதன் காரணமாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப்பட்டு பிரச்சினைகளாக உருவெடுகின்றன.

01-மனம் கவர்ந்தவரிடம் எதிர்பார்ப்பது

வெறும் உடல் ரீதியான உறவு மட்டுமே கணவரிடம் இருந்து பெண்கள் எதிர்பார்ப்பதில்லை. அதையும் தாண்டி மனதளவில் ஆறுதலாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர். பெண்களின் தேடுதல் மிகவும் பெரியது. அதை நிறைவேற்றும் ஆண்களை அவர்கள் பூஜிக்கின்றனர்.

02-பேசி புரிய வைக்கலாம்

பேச்சு என்பது இரு மனங்களுக்கிடையேயான இறுக்கத்தை தளர்த்தும் ஆயுதம். மனதில் பாரம் என்றால் இருவரும் பேசுங்கள். அதிகமாக பேசுவது ஆறுதலைத் தரும். இருவருக்கிடையேயான நேசத்தை பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும்.

03-புறத்தோற்றத்தை ஒதுக்கித் தள்ளுங்கள்

மணமான புதிதில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் குழந்தை பெற்றவுடன் அவர்களின் உடல் குண்டாவது இயல்பு. இது அநேக ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது. மனைவியின் புறத்தோற்றத்தை விமர்சனம் செய்யும் கணவர்கள் இன்றும் இருக்கின்றனர். இதனால் மனரீதியான பிரச்சினைக்கு பெண்கள் ஆளாகின்றனர். அழகு என்பது உருவத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும். பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஆண்களே நல்ல துணைவர்களாக இருக்க முடியும்.

04-சின்ன சின்ன ரொமன்ஸ்

தாம்பத்ய உறவு மட்டுமே மணவாழ்க்கைக்கு முக்கியமில்லை. சின்ன சின்ன ரொமன்ஸ்களையும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். பெண்கள் எதிர்பாராத நேரத்தில் அவ்வப்போது கொடுக்கும் முத்தம். சமையலறையில் சத்தமின்றி செய்யும் சில்மிசங்கள். மனைவியின் கைகளை பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக காதோரம் கிசு கிசுப்பாக கூறும் ஐ லவ் யூ என்ற வார்த்தை என பெண்கள் எதிர்பார்ப்பது எத்தனையோ உண்டு. ஆனால் இவற்றை நிறைய ஆண்கள் செய்யத் தவறிவிடுகின்றனர்.

05-இனிய உறவின் உன்னதம்

ஆண்கள் அவசரக்காரர்கள். தங்களின் காரியம் முடிந்தவுடன் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கப் போய்விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு எதையுமே ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். கணவருடனான நெருக்கத்தை அசை போடுவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு. எனவே உறவின் போது மட்டுமல்லாது உறவிற்கு முன்பும், பின்பும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

இவற்றை கடைபிடிக்கும் ஆண்களை பெண்கள் ஆராதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 

நேர்மறை எண்ணங்களின் வலிமை...!

எனக்குள் திறன் இருக்கிறது! எனக்குள் திறன் இருக்கிறது..! எனக்குள் திறன் இருக்கிறது...! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்...! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....!


என் பார்வையின் மிகுதியில் சிக்குவது எல்லாம் பாஸிட்டிவான விசயங்கள்..மட்டுமே...! எல்லா சூழ்நிலைகளுக்கும் தீர்வினை எட்டும் தீர்க்க முடிவுகள் மட்டுமே நான் எடுக்கிறேன் கூறுகிறேன்!


மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விசயங்களையும் சிக்கலை கொடுக்கும் விசயங்களையும் எப்போதும் சொல்வதை தவிர்க்கிறேன். என்னிடமிருந்து வாழ்த்துக்களும், பரஸ்பரம் அன்பும், விசாரிப்புகளும் அலைகளைப் போல பரவிக் கொண்டே இருக்கின்ற. ஒரு புல் பிளேட் பிரியாணி சாப்பிடும் ஆசையில் என் கண்ணெதிரில் இருக்கும் கஞ்சியையும், கருவாட்டுத் தொக்கையும் ருசிக்க மறக்கும் முட்டாள் மனிதனல்ல நான்....!


ஊரின் விடியலுக்கு போராடக்கூடிய பெரிய செயல்கள் செய்ய முடியாவிட்டாலும் ஒரு மண் பானை வாங்கி நீர் ஊற்றி வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து செல்லக்கூடிய மனிதர்களின் தாகம் தணிக்க வைக்கும் அளவிற்கு திறனுள்ளவன்தான்......... நான்.......!


என்ன மக்கா.. அப்படியே கட்டுரைக்குள்ளே போய்ட்டீங்களா...? சரி வெளில வாங்க இப்போ நாம உக்காந்து பேசுவோம். மேலே சொன்ன மாதிரி தினமும் மனசுக்குள்ளே சொல்லிகிட்டே இருந்த நேர்மறையான எண்ணங்கள் நமக்குள்ளே ஆட்டோமேட்டிகா வரும்னு சொல்றாங்க....அது எப்டிப்பா வரும்.. மாயமா மந்திரமா..?
இங்கே கவனியுங்கள்


எதை வலுவாக திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ அது உண்மை என்று மனது நம்புகிறது. மேலும் மனம் முடிவு செய்யும் தீர்மானமான முடிவுகள்தான் செயலாக மாறுகிறது. உதாரணமாக பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கவேண்டும் என்று நாம் முதலில் நினைக்கிறோம்.


வெறுமனே முதலில் நினைப்பது மனதில் நிகழ்கிறது. அது தீர்மானமான பின்னால்...கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கி வருகிறோம். ஸ்தூலமான இந்த உடலை மனதில் தோன்றும் சூட்சுமமான தீர்க்கமான எண்ணம்தானே வழி நடத்துகிறது.


அப்படித்தான் திரும்ப திரும்ப எதை நம்பிறோமோ (தீர்க்கமாக) அதை வாங்கிக் கொள்ளும் ஆழ் மனது...அதை ஒரு கட்டத்தில் செயல்படவைக்கிறது. அதாவது நாமே அதை செய்கிறோம். நாம் செய்ய வேண்டியதை பெரும்பாலும் செய்யாமல் காலத்தையும் நேரத்தையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இப்போதிருக்கும் நமது நிலைக்கு காலம் கடந்த காலத்து நமது செயல்கள்தான் காரணம்....என்பதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. அப்படி என்றால் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கபோவது எது? நம்து நிகழ்காலத்து செயல்கள்தானே....?


நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.. தட்ஸ் த மில்லையன் டாலர் கொஸ்ஸின்?


புறச்சூழ்நிலை, பணவசதி, நமது பிரச்சினைகள் எல்லாம் ஒரு மாயை....அதிலிருந்து நமது கன்ஸ்டரக்டிவான ம்ம்ம்ம் தொடர்ச்சியான பாஸிட்டிவ் செயல்கள் மூலம் வெளி வர முடியும் என்று தான் சொல்கிறார்கள். ஒரு விசயத்தை எடுத்துப் பார்த்தால் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது. அவர்கள் எப்போதும் தங்களின் செயல்களிலும் நேரத்திலும் கவனம் வைத்திருந்ததோடு மற்ற மனிதர்களின் நிறையை பற்றி மட்டுமே பேசி இருக்கிறார்கள்.


என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்... நீ நிலையாமை பற்றியே நிறைய பேசுகிறாய்.... உடல் பொய்..எல்லாம் மாயை என்று அடிக்கடி சொல்கிறாய் நீ எப்படி நேர்மறை சிந்தனை உடையவனாவாய் என்று.....

மிரட்டலா? வடிவேலு விவகாரத்தில் உண்மை என்ன?

வடிவேலு நடித்துக்கொண்டிருக்கும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


பல ஆண்டுகள் கழித்து வடிவேலு நடிக்கும் படம் என்பதாலும், மாபெரும் வெற்றிபெற்ற இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தைப் போல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதாலும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.


இந்நிலையில் வடிவேலு நடிக்கும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் திரைப்படத்திற்கு சிலரால் ‘ரிலீஸ் செய்யக் கூடாது’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து தெனாலிராமன் திரைப்பட தயாரிப்புக் குழுவிடம் பேசியபோது “முதலமைச்சர் தரப்பிலிருந்து அனுமதி கிடைத்த பிறகே வடிவேலுவை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தோம்” என்று கூறுகின்றனர்.