Monday, 10 March 2014

"இது ரஜினி வாய்ஸ் இல்லை", சொல்கிறார் சௌந்தர்யா

நேற்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் காண்பிக்கப்பட்ட படத்தின் ட்ரைலர் மற்றும் ரஜினியின் சில நிமிட ருத்ர தாண்டவக் காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.


 கோச்சடையான் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கார்ட்டூன் மாதிரி இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின.


இது டீசர்தான்... அதுவும் ரஜினி வாய்ஸ் கூட கிடையாது. மெயின் ட்ரைலர் கலக்கலாக வரும் என்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தெரிவித்திருந்தார். தான் சொன்னபடியே ட்ரைலரில் அசத்தியிருந்தார் சவுந்தர்யா.


கோச்சடையான், ராணா என இரண்டு பாத்திரங்களையுமே வித்தியாசப்படுத்திக் காட்டியிருந்த சவுந்தர்யா, இளம் ரஜினியை வியப்பூட்டும் வகையில் வடிவமைத்திருந்தார். சண்டைக் காட்சிகளும், ரஜினியின் குரலும் அந்த ட்ரைலரின் சிறப்பு அம்சங்களாக அமைந்தன.


அடுத்து ரஜினியின் ருத்ரதாண்டவக் காட்சியை மட்டும் தனியாக போட்டுக் காட்டினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துறையினரும் பிரமித்துப் போனார்கள். அனிமேஷனில் இத்தனை கச்சிதமாக ருத்ரதாண்டவ காட்சிகளை வடிவமைத்த சவுந்தர்யாவைப் பாராட்டினார்கள்.


 பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, 'இதுதான் அனிமேஷன் சாதனை. இவ்வளவு காலம் ஆனதற்கு காரணம் இதுபோன்ற பர்பெக்ட்னஸ் வர வேண்டும் என்பதுதான்.


நீங்கள் ட்ரைலர்தான் பார்த்திருக்கிறீர்கள். மெயின் பிக்சர் பார்த்தால் இன்னும் பிரமிப்பீர்கள்," என்றார்.

1 comments:

  1. அப்போ சல்மான்கான் சொன்னது மாதிரி - ஏஆர் ரஹ்மான் ஒரு சராசரி இசையமைப்பாளர்தான் எனபது உண்மைதான் போல...
    இன்னனும் எனக்கு கொச்சாடையான் என்ற இந்த டுபாக்கூர் படம் வெளிவருமா எனபது சந்தேகமாகத்தான் உள்ளது..அப்படியே வெளி வந்தாலும் கால் மணி நேரத்தில் படம் சுருண்டு கொள்ளும் என்று நினைக்கிறேன்...டிரைலேரை பார்த்தால் சகிக்கவில்லை...இருக்கும் கொஞ்சூண்டு விசிலடிச்சான் குஞ்சுகள் டாஸ்மாக் கடைகளில் இருந்து நேரடியாக வந்து பார்த்துவிட்டு புலன்காகிதமடையலாம்...விபச்சார பத்திரிகை நாய்கள் கிடைக்கும் பிச்சை குவட்டருக்கும், பிரியாணிக்கும் பணத்துக்கும் விசுவாசமாக ஆகா ஓஹோ என்று ஒத்து ஊதலாம்..

    ReplyDelete