Sunday, 9 February 2014

எனக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு?

சமீபத்தில் நடிகர் கிருஷ்ணா திருமணம் நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். அதன் பிறகு யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும் 3வதாக பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதைப்பற்றி யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நான் 3வதாக திருமணம் செய்து கொள்ளவில்லை. அது போலியான செய்தி. ஆனால் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். அதற்கு நான் பெருமை அடைகிறேன்.

இந்த முடிவிற்கு என் குடும்பத்தினர் ஆதரவு தருகின்றனர். இது தொடர்பாக எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

லாஜிக்கைப் பாருங்க பாஸ் !

நம்ம சினிமாக்கள் என்னதான் ஒரு பக்கம் டெவலப் ஆகிட்டே போனாலும் சில நேரங்கள்ல 'சி’ சென்டர் ஆடியன்ஸே ஈஸியாக் கண்டுபிடிச்சுக் கலாய்க்கிற மாதிரியான காட்சிகளை, இன்னமும் நம்ம டைரக்டர்ஸ் திரைக்கதைகளில் கோட்டை விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதெல்லாம் பாத்தா கண்ணு வேர்க்குது. சில சாம்பிள்ஸ் நீங்களே பாருங்க. உங்களுக்கும் கண்ணு வேர்க்கும்.

 'எந்திரன்’ படத்துல ஒரு காட்சி. எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஐஸ்வர்யாராயைச் சீண்டுகிற ரவுடிகளை அடிச்சுத் துவம்சம் பண்ற நம்ம 'ரோபோ’ ரஜினி பேட்டரி சார்ஜ் இல்லாம கீழே விழுந்துடுறாரு. அங்கே ஒரு எலக்ட்ரிக் போஸ்ட்டுக்குள்ளே கையை விடுறாரு. ('படையப்பா’ படத்தில் பாம்புப் புற்றுக்குள்ளேயே கையை விட்டவராச்சே) அப்படியே அதில் கிடக்கிற வயரை எடுத்து ப்ளக் பண்ணி சார்ஜ் ஏத்திக்கிறாரு. ஆனா படத்தோட முன்பகுதியில் ஸ்லீப்பிங் மோடுல உட்கார வெச்சு பற்பல கனெக்ஷன்ஸ் கொடுத்து சார்ஜ் ஏத்துறாரு விஞ்ஞானி ரஜினி. அப்புறம் எப்படி எலெக்ட்ரிக் போஸ்ட்ல இருந்து டைரக்ட்டா சார்ஜ் ஏத்துறாரு? ஆண்ட்ராய்டு போன்ல சார்ஜ் நிக்காதுனு தெரிஞ்சு பக்கத்துத் தெரு கடைக்குப் போனாலும்கூட சார்ஜரைக் கையில் எடுத்துக்கிட்டே சுத்துற நம்ம பசங்களுக்கு இது கூடவா தெரியாம இருக்கும்?

அடுத்து 'ஆரம்பம்’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சி. ஸ்விஸ் பேங்க் அக்கவுன்டை அபேஸ் பண்ணக் கிளம்புகிற அஜித் - ஆர்யா டீம் பண்ற அலப்பறை இருக்கே... நைட் டிரெஸ் மாதிரி ஒரு கவுன் போட்ருக்காருங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக படு ஸேஃபான ஒட்டுமொத்த மீடியாவையும் கட்டிக்காக்கிற சர்வர் ரூமுக்குள்ளே ஏதோ செகண்ட் ஷோ சினிமாவுக்கு தியேட்டருக்குள்ள போற மாதிரி படு கேஷ§வலா ஆர்யா உள்ளே போறாரே, எப்படி? அந்தப் பக்கம் அஜித் உலக நாடே சென்சிட்டிவ் பிரைவஸியான பேங்க்னு சொல்ற அந்த பேங்க் மேனேஜராகவே ஆள் மாறாட்டம் பண்றார்.

அந்த மேனேஜரும் ஏதோ நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டுல ஆள் பிடிக்கிற டிராவல்ஸ் ஏஜென்ட்  கணக்கா, 'வாங்க சார், நம்ம பேங்க் ஸேஃப்டியானது, ராசியானது, நாணயமானது. அக்கவுன்ட் வெச்சுக்கலாம். பிம்பிள்ஸ் வராது, 10 வகையான பிராப்ளத்துக்கு நோ டென்ஷன்’னு பேரம் பேசிட்டு இருக்கார். அட எல்லாம் கற்பனைனாலும் அதிலேயும் ஒரு நியாயம் வேணாமா நியாயமாரே?

அடுத்ததா  'ஜில்லா’ படத்துல ஒரு சீன்ல விஜய் கார்ல வர்றார். டிரைவர் காரை ஓட்டிக்கிட்டு வர்றார். நல்லாக் கேட்டுக்கங்க, டிரைவர்தான் காரை ஓட்டிக்கிட்டு வர்றார். ஆனா டியூட்டி பார்க்கிற போலீஸான காஜல் அகர்வால் விஜய்யை மடக்கிப் பிடிச்சு லைசென்ஸ் எடுனு கேக்கிறாங்க. ஆத்தி. உள்ளே உட்கார்ந்திருக்கிற ஆளும் லைசென்ஸ் வெச்சுக்கணும்னு இந்தப் படத்தைப் பாத்ததுக்கப்புறம்தான்யா எனக்கே தெரியுது. யாருக்குத் தெரியும்... இதைப் பாத்துட்டு இனிமே பஸ்ல டிராவல் பண்றவங்களும் ஏன், கண்டக்டரும்கூட லைசென்ஸ் வெச்சுக்கணும்னு கவர்மென்ட்ல ஆர்டர் போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லீங்க.

இப்போ சொல்லுங்க... உங்க கண்ணு வேர்க்குதா இல்லையா?

வித்யா பாலனை ஓரம்கட்டுவார் நயன்தாரா! - ‘கஹானி’.

இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கஹானி’. இப்படம் காணாமல் போன கணவனை தேடி வரும் ஒரு அபலை பெண்ணின் கதை. தற்போது இப்படம் தமிழில் வயா காம் 18 மொசன் பிட்சர்சின் முதல் படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் முதல் படம் என்பதால் நீண்ட நாட்களாக நல்ல தலைப்புக்கு தேடி வந்தனர். தற்போது ‘நீ எங்கே என் அன்பே’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளனர். இப்படத்திற்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தைப் பற்றி படக்குழு கூறும்போது, ‘பெண்களை கவரும் வண்ணம் உள்ள இக்கதையில் நயன்தாரா திறம்பட நடித்துள்ளார். மேலும் இந்தியில் வித்யாபாலன் நடித்து புகழ் பெற்ற பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகூட்டி வருகிறார்’ என்றனர்.

இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முளா ‘நீ எங்கே என் அன்பே’ என்ற தலைப்பு கதைக்கு மிகவும் பொருந்த கூடிய தலைப்பு என்றார். இந்தியில் ‘கஹானி’ படத்துக்கு இணையாக பெயரும், புகழும் இப்படம் ஈட்டும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இம்மாதம் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தெலுங்கில் இப்படம் ‘அனாமிகா’ என்னும் தலைப்பில் உருவாகி வருகிறது. 

நான் எதையும் கொண்டு வரவில்லை - கமல் பேச்சு!

‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’ என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் ராம். இவருடைய அடுத்தப்படைப்பாக ‘தரமணி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் புதுமுகம் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஆண்ட்ரியா, ‘தி சோல் ஆப் தரமணி’ என்னும் பாடலை எழுதி இசையமைத்து அவரே இந்தப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் இசைத்தட்டை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட இயக்குனர் இமயம் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

பாரதிராஜா பேசும்போது, கமல் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தாலும் எனக்கு அவர் நெருங்கிய நண்பர், நான் அவருடன் நட்பாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமானவர். ஆண்ட்ரியா பாடலை கேட்டேன் மிகவும் நன்றாக இருந்தது. இயக்குனர் ராம் மிகவும் திறமையானவர். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சாதிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கமல ஹாசன் பேசும்போது, நான் எல்லாதையும் வைத்து படம் எடுப்பதாக இயக்குனர் ராம் என்னைப் பற்றி கூறினார். ஏனென்றால் நான் எதையும் கொண்டு வரவில்லை, போகும் போது எதையும் கொண்டு போவதில்லை. நான் சினிமாவில் சம்பாதித்ததை திரும்பவும் சினிமாவுக்கே தருகிறேன். என்னைப் பொருத்தவரை என்னுடைய முதலீடு நான்தான் என்றார். ஆண்ட்ரியா பாடிய பாடலை கேட்டேன், நன்றாக இருந்தது. மேலும் இப்படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

இளையராஜாவை சந்தித்த ரஜினியின் பேவரைட் இயக்குனர்!


இளையராஜாவை சந்தித்த ரஜினியின் பேவரைட் இயக்குனர்

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார் பிரபல இயக்குநர் மகேந்திரன் மற்றும் அவரது மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன். இயக்குநர் மகேந்திரனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய படங்கள் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்களாக மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. மகேந்திரன் இயக்கிய சாசனம் தவிர மீதி எல்லாப் படங்களுக்கும் ராஜாதான் இசையமைத்துள்ளார்.

ஒலிப்பதிவுக் கூடத்தில் அமர்ந்து ராஜாவின் இசைக் கோர்ப்பை ரசித்த மகேந்திரன், பாலா படத்துக்கு ராஜா இசையமைத்த சில புதிய பாடல்களைக் கேட்டு ரசித்தார். இருவரும் சில நிமிடங்கள் தங்களின் அடுத்த படங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். மகேந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்துக்கும் ராஜாதான் இசையமைக்கிறார் என்ற பேச்சுகள் கிளம்பியுள்ளன.

 ரஜினி ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த இயக்குனர் என்று மகேந்திரனை குறிப்பிட்டது ஞாபகம் இருக்கலாம்.

வாலியின் முதல் பாட்டு - பல போராட்டங்களை உள்ளடக்கியது!

பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

"வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

"கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

"கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

(1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

"மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

"ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

"வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

"கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எமë.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.

வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

"நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.

மெயில் அனுப்ப போறீங்களா? இதெல்லாம் கவனத்தில் வச்சுக்கோங்க!

இன்றைய உலகில் அனைத்து அலுவலக மற்றும் வெளியுலக செயல்களுக்கு முக்கிய பங்காற்றுவது மின்னஞ்சல் தான்.

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளிஉலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்.

தகவல்களை அனுப்புவது எளிதாகிறது, இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது.

ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும்.

எனவே மின்னஞ்சலை அனுப்பும் முன் சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் மின்னஞ்சலை பொறுத்தவரை அவற்றை அனுப்பி விட்டால் மீண்டும் பெற முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
1. பொதுவாக மின்னஞ்சல்களில் எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை.

தெரிந்தவர்களுக்கு அனுப்பும் போதுதான் பிழைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் ஒன்றும் தவறில்லை.

முன்பின் தெரியாதவர்களுக்கு அனுப்பும் பொழுது எந்தப் பிழைகளுமின்றி அனுப்புங்கள், இதற்காகவே இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வேர்டின் ஸ்பெல் செக்கர்கள் போன்று நமக்கு உதவும் வகையில் தங்கள் கிளையண்ட் புரோகிராம்களை அமைத்துள்ளன. எனவே அவற்றை நம் எழுத்துப் பிழைகளைத் திருத்தி அனுப்ப பயன்படுத்தலாம்.

2. மின்னஞ்சலை தயாரித்து முடித்தவுடன் அதைத் திரும்பவும் படியுங்கள். சொல்ல வந்த கருத்துக்கு மாறான கருத்து கொண்ட கடிதம் உங்களிடம் இருந்து சென்று விடக் கூடாது.

புரியாத கருத்து கொண்ட கடிதமும் சென்று விடக் கூடாது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களில் பிழை இருக்காது. ஆனால் அது வேறொரு பொருள் தருவதாக, அல்லது நேர்மாறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

நீங்கள் ஒரு மூன்றாவது நபர் குறித்து எழுதி இருப்பீர்கள். ஆனால் படிப்பவர் தன்னைப் பற்றி எழுதியதாக எண்ணம் கொள்ளும்படி இருக்கக் கூடாது.
எனவேதான் அனுப்புவதற்கு முன்பு கடிதத்தை மீண்டும் படிக்க வேண்டும். யாருக்குப் பதில் போய் சேர வேண்டுமோ அவருக்கு மட்டும் பதிலை அனுப்பி வையுங்கள். தேவையில்லாமல் Reply All பட்டனை அழுத்தி உங்கள் பதிலை எல்லாருக்கும் அனுப்பி வைக்காதீர்கள்.

3. குறிப்பாக நியூஸ் குரூப், மெயிலிங் லிஸ்ட் போன்றவற்றில் Reply All பட்டனைப் பயன்படுத்தாதீர்கள்.

மின்னஞ்சல் சேவையில் மட்டும் மிக மிக தேவைப்பட்டால் மட்டுமே Reply All பட்டனை அழுத்துங்கள்.

4. கோபத்தில் மின்னஞ்சலை தயாரிக்காதீர்கள். அப்படியே தயாரித்தாலும் உடனே அதை அனுப்பாதீர்கள்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து கோபம் தணிந்த பின்பு, மின்னஞ்சலை படித்துப் பார்த்து அனுப்புங்கள், புண்படும்படியாக எழுதியவற்றை நீக்கி பின்பு அனுப்புங்கள்.

5. மின்னஞ்சல் என்பது வெறும் டெக்ஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே நீங்கள் சாதரணமாக அனுப்புகிற ஒன்றை ஒருவர் தவறுதலாக புரிந்து கொள்ள முடியும். இதைத் தவிர்க்க Smileys எனப்படுகிற அடையாளங்களை சேர்த்தால் நன்று.

6. உரியவருக்குதான் அனுப்புகிறீர்களா என்பதை கவனியுங்கள். ஏதோ நினைவில் மின்னஞ்சலைத் தயாரித்து தொடர்பில்லாத ஒருவருக்கு அனுப்புவது மிகவும் தவறாகும்.

ரகசியம், தனிப்பட்ட விஷயங்களை கொண்ட மின்னஞ்சல்கள் போன்றவற்றை அனுப்பும்போது பெறுநருடைய முகவரியைச் சரி பாருங்கள்.

சில கண்டிபிடிப்புகள் உருவான கதைகளை அறிந்து கொள்வோம் !!


காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள ‘வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?
...
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டு
பிடிப்புக்கு ‘வல்க்ரோ’ என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் ‘வல்க்ரோ’வுக்கு உண்டு.

சோப்


குளியலறைகள் கட்டப்படும் முன்பே சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது பல ஆண்டுகாலம் கழித்துத்தான்.

ஆரம்பத்தில், எண்ணை, மணலைக் கலந்து தேய்த்துக் குளித்தனர். சிலர், வேலையாட்களை வைத்து மரக்கிளைகளால் உடலைத் தேய்த்துவிடக் கூறினர்.

சோப்புகளில் குறிப்பிடத்தக்கது, 1789-ல் ஆண்ட்ரு பியர்ஸ் கண்டுபிடித்த, கண்ணாடி போன்ற சோப். அடுத்து, மிதக்கும் சோப் போன்ற பலவித சோப்புகள் வந்துவிட்டன.

சக்கரம்

உலகை நகர வைத்த முக்கியக் கண்டுபிடிப்பு, சக்கரம். தற்போது ஈராக் நாடாக உள்ள மெசடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கி.மு. 3000 ஆண்டுவாக்கில் சக்கரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. சக்கரம் இல்லையேல் இன்றைய உலக இயக்கமே இல்லை.

‘டூத் பிரஷ்’

1400-ல் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இது. முதலில் விலங்குகளின் முடியைப் பயன்படுத்தினர். பன்றியின் முடியைக் கூடப் பயன்படுத்தி உள்ளனர். 1938-ல் முதல் நைலான் டூத்பிரஷ் உருவாக்கப்பட்டது.

‘பற்பசை’ எனப்படும் ‘டூத் பேஸ்ட்’, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே புழக்கத்தில் உள்ளது. அதை ஒரு டியூப்பில் அடைத்து விற்கலாம் என்பதை 1892-ல் வாஷிங்டன் ஷெப்பீல்டு என்ற பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.

அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!

அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கிறதா? இல்லை. நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள்.

சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது. ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள். இதற்கு மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது.

உணவியல் வல்லுநர்கள் கூறும் அறிவுரை என்ன வென்றால், இவ்வகை உணவுகளை குறைவாக உட்கொள்வதினால், அதன் கேடு விளைவிக்கும் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. இதோ நமது அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் முதல் 11 உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

1.சர்க்கரை உணவுகள் :

சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த உணவுகள், எடை குறைப்பை கெடுப்பதுமட்டுமல்லாது, மூளைச்செயல்பாட்டையும் கெடுக்கும். நீண்ட காலம் சர்க்கரை உட்கொள்வதினால், அது நரம்பியல் பிரச்சினைகளை உருவாக்கும் மற்றும் ஞாபகத்திறனையும் பாதிக்கும். அது மட்டுமல்லாது, சர்க்கரை உணவுகள் நமது படிப்பாற்றலையும் பாதிக்கும். இதனால் தான் சர்க்கரை அதிகமாக உள்ள உணவு வகைகளான பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஸ்வீட், கான் சிரப் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2.மது  :

மது உட்கொள்ளுதல் நாளடைவில் நமது கல்லீரலை பாதிக்கும். இதனால் வருவது தான் `பிரைன் ஃபாக்' எனப்படும் மூளை மூடுபனி. பிரைன் ஃபாக் என்ற பெயருக்கு ஏற்ப இது மனக்குழப்பத்தை ஏற்படுத்தி, சிந்திக்கும் திறனை தாக்குவதோடு, நினைவாற்றலையும் தாக்கும்.

இதனால் மது அதிகம் உட்கொண்டால், சில பொருட்களின் பெயர் மறந்து போய் விடும், சில நிகழ்வுகளை நினைவு கூற முடியாது, நாம் கனவுலகில் இருக்கின்றோமா நிஜவுலகில் இருக்கின்றோமா என்று கூட தெரியாத நிலை வந்துவிடும்.

இவை அனைத்தும் மது நமது மூளையின் செயல்பாட்டை பாதிப்பதால் ஏற்படுகிறது. நல்ல வேளையாக, இந்த அறிகுறிகள் அனைத்தும் திரும்புதலால் நாம் மது அருந்துவதை நிறுத்த வேண்டும் அல்லது வாரம் ஒன்று அல்லது இரண்டு தடவை அருந்துவது என கட்டுப்படுத்த வேண்டும்.

3.ஜங்க் உணவுகள்  :

அண்மையில் மாண்ட்ரியல் பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, ஜங்க் உணவுகள் நமது மூளையில் உள்ள ரசாயனத்தை மாற்றி, அவை மனஅழுத்தம் மற்றும் கவலை நிலைக்கு ஆளாக்கும். அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு பழகி விட்டு, அதனை நிறுத்தும் போதும் இதே போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இந்த வகை உணவுகள், டோபமைன் உருவாவதை தடுக்கிறது. டோபமைன் என்பது சந்தோஷம் மற்றும் நல்ல உடல் வளம் பெற உதவி செய்யும் இரசாயனம். அதுமட்டுமல்லாது, டோப மைன் அறிவுத்திறன், விழிப் புணர்வு, ஊக்கத்திறன் மற்றும் ஞாபகத்திறன் போன்றவற்றிற்கும் உதவுகிறது.

4.பொரித்த உணவு  :

தற்போதுள்ள எல்லா பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் ரசாயனங்கள், சாயப் பொருட்கள், சேர்க்கைப் பொருட்கள், செயற்கை சுவைகள் மற்றும் பதப்பொருட்கள் உள்ளன. பொரித்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மூளையில் உள்ள நரம்பு அணுக்களை அழிகின்றன. இருப்பினும் சில எண்ணெய்கள் மிகவும் ஆபத்தானவை. அவைகளில் சூரியகாந்தி எண்ணெய் தான் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகும்.

5.பதப்படுத்தப்பட்ட உணவு  :

பொரித்த உணவுகள் போல பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும். மேலும் அல்சைமர் எனப்படும் மூளை சிதைவு நோய் வரும் வாய்ப்புகளும் அதிகமாகும்.

6.அதிக உப்பு உள்ள உணவு  :

அதிக உப்பு உள்ள உணவுகள் ரத்த அழுத்தத்தை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். மேலும் அது நமது இதயத்திற்கும் கேடு விளைவிக்கும். அதிக உப்பு உள்ள உணவுகள் அறிவுத்திறன் மற்றும் சிந்திக்கும் திறனை பெரிதும் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வேண்டுமெனில் அது அறிவாற்றலை பாதிக்கும் என்றும் சொல்லலாம். உப்பு மற்றும் நிக்கோட்டின் உள்ள பொருட்களை சாப்பிடுவது, ஒருவித போதையை உண்டாக்கும். அதனை கைவிடும் போது, அவற்றின் மேல் தீவிர நாட்டம் அடையத் தூண்டும்.

7.தானியங்கள் (முழு தானியங்களைத் தவிர்த்து)  :

எல்லா வகையான தானியங்களும் உடல் நலத்தையும், மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கும். ஆனால், முழு தானியங்களில் உள்ள அதிக நார்ச்சத்து நாடி துடிப்பிற்கு மிகவும் நல்லது. மற்ற வகை தானியங்கள் அனைத்தும் நமக்கு விரைவிலேயே முதிர்வு ஏற்பட செய்யும் மற்றும் ஞாபக மறதி வரும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

அதனால், தானியங்களுக்குப் பதிலாக கார்போஹைட்ரேட் சேர்த்து சாப்பிட வேண்டும். நாம் பயன்படுத்தும் கார்போஹைட்ரேட், கூட்டு அமைப்பு கொண்ட கார்போ ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும். அதற்கு முழு தானிய பிரட்டை உண்ணுங்கள்.

8.பதப்படுத்தப்பட்ட புரோட்டீன்  :

தசை வளர்ச்சிக்கும், உடல் சரிவர செயல்படவும் பெரிதும் உதவியாக இருப்பது புரதமே. மாமிசம் தான் உயர்தர புரோட்டீன் நிறைந்த உணவு. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான ஹாட்டாக், சலாமி, சாசேஜ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

இயற்கையான புரோட்டீன்கள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட புரோட்டீன் அதற்கு எதிர்மாறாக செயல்படும். ஆகவே இயற்கையான உயர்தர புரோட்டீன் நிறைந்த இயற்கை மீன்கள் (டூனா, சால்மன்), பால் பொருட்கள், வால்நட் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள்.

9.கொழுப்புச்சத்துள்ள உணவு  :

கொழுப்புச்சத்துள்ள உணவுகள் உடலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலும் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் ஆரம்பித்து, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணமாக இருக்கும். அவை நமது மூளையையும் பெரிதும் பாதிப்பதனால் பக்கவாதம் வர காரணமாக இருக்கிறது. மேலும் இவ்வகை உணவுகளை நீண்ட காலம் சாப்பிட்டால், அது நமது மூளையை சுருங்கச் செய்யும். இதனை தொடர்ந்து, தமனிகள் பாதிக்கக்கூடும். இதனை தடுக்கவும், பக்கவாதம் வராமல் காக்கவும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை குறைவாகவே சாப்பிட வேண்டும்.

10.செயற்கை இனிப்புக்கள்  :

சிலர் ஒரே நாளில் எடை குறைப்பதற்காக சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்புகளை உபயோகிப்பதால் ஸ்லிம் ஆகி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆம்! செயற்கை இனிப்புக்களில் மிக குறைவான கலோரிகள் தான் இருக்கின்றன.

ஆனால், அவை நன்மை தருவதை விட தீமையை தான் அதிகம் தருகின்றன. அதிலும் நீண்ட காலம் செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது மூளையை பாதிக்கும். மேலும் அதிக அளவு செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது அறிவுத்திறனையும் பாதிக்கும்.

11.நிக்கோட்டின்  :

வயதான தோற்றம், மூச்சு காற்றில் துர்நாற்றம், நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை உண்டாக்குவதோடு மட்டும் நிக்கோட்டின் நின்று விடுவதில்லை. இது ரத்தத் தந்துகிகள் எனப்படும் சிறிய ரத்தக் குழாய்களுக்கு இறுக்கம் கொடுத்து, நரம்பியல் அலைப் பரப்பிகளின் உற்பத்தி மற்றும் செயல்பாடுகளை பாதிப்படைய செய்யும்.

குறிப்பாக ரத்தத் தந்துகிகள் தான் மூளை செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே நிக்கோட்டின் உள்ள உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது.

"ஹிட்' என்றால் என்ன?

இன்டர்நெட் குறித்து பேசுகையில் பலர் இந்த தளத்தின் ஹிட் எண்ணிக்கை என்ன? என்று கேட்கின்றனர். அல்லது சில தளங்களின் முகப்புப் பக்கத்தில் இத்தனை பேராக நீங்கள் இதனைப் பார்க்கிறீர்கள் என்று கணக்குக் காட்டப்படும். பலர் இதுதான் அந்த தளம் பெற்ற ஹிட்களின் எண்ணிக்கை என எண்ணுகின்றனர். இந்த ஹிட்” என்பது என்ன? அது எதனைக் குறிக்கிறது>? அதனை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? என்று பார்ப்போம்.

சரியாகச் சொல்வதென்றால் இந்த சொல் குறித்து பலரும் தவறாகவே கருத்து கொண்டுள்ளனர் என்று கூறலாம். பலரும் ஹிட் என்றால் ஓர் இணைய தளத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று குறிப்பிடுவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை ஒருவர் ஓர் இணைய தளத்திற்குச் சென்று பார்த்தால் அதன் ஹிட்களின் எண்ணிக்கை யில் ஒன்று கூடும் என எண்ணுகிறார்கள். இது உண்மை அல்ல. சரியான கணிப்பும் அல்ல. “ஹிட்” என்பது ஒரு வெப் சர்வருக்கு அளிக்கப்படும் வேண்டுகோள் ஆகும்.

எடுத்துக் காட்டாக நீங்கள் தன்னுடைய இணைய முகப்புத் தளத்தில் ஆறு படங்களை உடையதாக ஓர் இணைய தளம் இருப்பதாகக் கொள்வோம். இந்த தளத்தைப் பெற உங்களுடைய பிரவுசர் இந்த ஆறு படங்களுக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பும். அத்துடன் அத்தளத்தின் எச்.டி.எம்.எல் க்காகவும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். எனவே இந்த வேண்டு கோள்கள் எல்லாம் சேர்ந்தால் மொத்தம் ஏழு “ஹிட்” கள் இந்த தளத்திற்கு அனுப்பப் படுகின்றன.

நீங்கள் கூகுள் தேடுதளத்தில் (அல்லது நீங்கள் விரும்பும் எந்த தேடு தளத்திலும்) உங்கள் தேடுதலை அனுப்பி அதற்கான முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு ஹிட்” ஆகக் கருதப்படும். எனவே உங்கள் தேடுதல் சார்ந்து 423 தளங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டால் உங்களுக்கு 423 ஹிட்கள் திரும்ப வந்துள்ளன என்று பொருள். இதுதான் “ஹிட்” என்பதின் உண்மையான பொருள்.

நகத்திலேயே தெரியும நம் உடலின் ஆரோக்கியம்!

உலகம் முழுவதும் பலர் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான். காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோன்று செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது. இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று தெரிவிகிறார்கள். இது மட்டுமல்லாமல் நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், உடல்நிலை பாதிக்கப்படுதல் போன்றவை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் கூட பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை வ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.

ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ‌மஞ்ச‌ள் ‌ நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம்.

நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம். ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது.

இதற்கிடையில்தான் த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.
‌அதே சமயம் வீ‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌ண்களு‌க்கு ந‌க‌ம் வள‌ர்வதே ‌இ‌ல்லை எ‌ன்று எ‌ண்ணு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அது அ‌ப்படி இ‌ல்லை. வேலை செ‌ய்யு‌ம் போது நக‌ம் தே‌ய்‌ந்து அத‌ன் வள‌ர்‌ச்‌சி ந‌ம் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாமலேயே‌ப் போ‌ய்‌விடு‌கிறது.

மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.  அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.

மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌ பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌ பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம்.

‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌ சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌ தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம்.

நாஸ்கா கோடுகளும் மர்மமும்!!

செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நடத்தமுடிவதைப் பற்றிய ஆராய்ச்சிகள், நொடிப்பொழுதில் கோடிக்கணக்கானோர் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளும் தொலைத்தொடர்பு வளர்ச்சி, மனிதனே தேவையில்லாத அளவிற்கு ரோபோக்களின் பயன்பாடு என்று இது வரை மனிதகுலம் பார்த்திராத அளவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. எந்த விசயமாக இருந்தாலும் அறிவியல் சார்ந்த பதிலைத் தர விஞ்ஞானிகளும் தவறுவதில்லை.

அப்படிப் பட்ட விஞ்ஞானிகளின் அறிவிற்கே சில சமயம் சவால் விடும் படியாக அமைந்து விடுகிறது முன்னோர்களின் படைப்புகள்!! எத்தனை சூத்திரங்களைக் கொண்டு அனுகினாலும் முன்னோர்கள் போட்ட முடிச்சுகளில் உள்ள மர்மத்தையும் சிக்கலையும் அவிழ்க்க முடிவதில்லை!! அப்படி ஒரு முடிச்சு தான் பெரு நாட்டு நாஸ்கா மக்கள் வரைந்த கோடுகள்!!

கோடுகள் வரைவதில் அப்படி என்ன பெரிய மர்மம்? நாம் ஏடுகளில் வரையாத கோடுகளா, ஓவியங்களா என்ற கேள்வி நம் மனதில் எழாமலில்லை. இவர்கள் வரைந்த கோடுகளின் பிரம்மாண்டமும், வரைந்த முறையும் தான் பிரமிப்பிற்குக் காரணம். இரும்புத்தாதுப் பொருட்கள் நிறைந்த நாஸ்கா நிலத்தில செந்நிறத்தில் கூழாங்கற்கள் பரவிக்கிடக்கின்றன. இந்தக் கூழாங்கற்கள் அகற்றப்படும் இடம் வெளிர் நிறமாக மாற, இதே முறையில் கோடுகளை வரைந்துள்ளனர்.

இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிற்கு உள்ள இடத்தில் ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் கோடு சிறிய காதுகள், தலை, கால்கள், அளவான உடல், ஆறேழு சுற்று சுற்றிய வால் என சீராக வரையப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது. பாடப்புத்தகத்தில் ஒரு ஓவியத்தை சீராக வரையவே நாம் சிரமப்படும் வேளையில், எப்படி பிரம்மாண்டமான கோடுகளைத் தீட்ட முடிந்தது? இந்தக் குரங்கின் முழு உருவத்தைப் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் உயரத்திற்குச் செல்ல வேண்டும். அதுவும் இப்பொழுது இருப்பதைப் போல உயரத்தில் இருந்து கண்கானிக்கும் கருவிகள், கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் அளவெடுக்கும் கருவிகள் எதுவும் இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முன்பு!

நாஸ்கா கோடுகள் அமைந்திருப்பது பெரு நாட்டில் உள்ள நாஸ்கா மற்றும் பால்பா என்ற இரண்டு இடங்களுக்கு நடுவிலான 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வறண்ட பீடபூமியில்!! இந்தப் பீடபூமியில் காற்று, மழை சுவடே இல்லாததால் 2000 ஆண்டுகளாகியும் அழியாமல் உள்ளன.

குரங்குகள், பறவைகள், சிலந்திகள், சூறாமீன்கள், பல்லிகள் என பெரிய உருவங்களும், முக்கோணம், நாற்கரம் போன்ற வடிவங்களும் ஏராளமான நீண்ட கோடுகளும் பீடபூமி முழுவதும் வரையப்பட்டுள்ளன. நாஸ்காக் கோடுகளை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள், “எப்படி பல நூறு மீட்டர்கள் தொலைவில் இருந்து வரும் 60 கோடுகளை ஒரே புள்ளியில் இணைத்திருக்கிறார்கள்” என்று வியக்கிறார்கள்.

விண்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் தெளிவாகத் தெரியும் படியான ஆயிரக்கணக்கான கோடுகளை எதற்காக நாஸ்கா மக்கள் வரைந்திருக்கிறார்கள்? இந்தக் கோடுகள் கூறும் அர்த்தமென்ன?

மரியா ரெய்சி என்ற ஆராய்ச்சியாளர் தன் வாழ்நாள் முழுவதையும் நாஸ்கா கோடுகளை ஆராய்ச்சி செய்வதற்கே அர்ப்பணித்துள்ளார். நாஸ்கா கோடுகள் வின்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும், சூரியன் மற்றும் சந்திரனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் குறிப்பதாகக் கூறியுள்ளார்.

இவருடைய ஆராய்ச்சி முடிவையும் தீர்வாக ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. வேற்று கிரக உயிரினங்கள் வந்திறங்க உதவுவதற்கே இந்த கோடுகள் வரையப்பட்டுள்ளதென்று சிலரும், இறைவனை வழிபடுவதற்கும் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவிப்பதற்காகவும் வரையப்பட்டது என்று சிலரும், மிக நீளமான ஆடைகளின் இழைகளை நெய்வதற்காக இந்தக் கோடுகள் வரையப்பட்டதென்றும் சிலர் கூறுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தீர்வை வெளியிட்டாலும், நாஸ்காவின் மர்மம் மட்டும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு கால் நூற்றாண்டாகத் திறந்துவிடப்பட்டுள்ளது. பெரிய அளவிளான பலூன்களில் ஏறி ஒரு கிலோமீட்டர் உயரத்தில் பறந்தபடியே இந்தக் கோடுகளையும் உருவங்களையும் பார்க்க முடியும்.

நம் முன்னோர்கள் நம்மை விடவும் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு நாஸ்கா கோடுகள் ஒரு எடுத்துக்காட்டு தான்!!

தண்ணீர் பாட்டிலில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை அக்காலத்தில் எல்லாம் பல்வேறு பாத்திரங்களில் சேகரித்து வைத்து பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களால் தான் தண்ணீரை சேகரித்து வைத்து பயன்படுத்துகிறோம்.

அப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரானது சேகரித்து வைப்பதால், பாட்டிலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். துர்நாற்றம் வீசுகிறது என்று அவற்றை தூக்கிப் போட்டு, தினமும் ஒரு பாட்டில் வாங்க முடியுமா என்ன?
மேலும் பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போடுவதால், சுற்றுச்சூழல் தான் மாசுபடும். ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள, பாட்டிலை தூக்கிப் போடாமல், அவற்றை துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பார்ப்போமா.

பிளாஸ்டிக் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது டிஷ் வாஷ் நீர்மத்தை விட்டு, நன்கு குலுக்கி, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாட்டிலில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். ஒருவேளை அழுக்குகள் இன்னும் இருந்தால், மீண்டும் இந்த செயலை தொடர்ந்து செய்யுங்கள்.


அழுக்குகள் நிறைந்த பிளாஸ்டிக் பாட்டிலில் அரிசி மற்றும் பேக்கிங் சோடாவை போட்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 30-45 நிமிடம் ஊற வைத்தால், அரிசியானது பாட்டிலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். பேக்கிங் சோடா கிருமிகளை அழித்துவிடும். இந்த முறையை அழுக்கு மற்றும் துர்நாற்றம் நீங்கும் வரை செய்யலாம்.

மற்றொரு முறை வினிகரை பாட்டிலில் நிரப்பி, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து சோப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும். ஆரம்பத்தில் சிறிது நேரம் வினிகர் வாசனை வரும். ஆனால் சிறிது நேரத்தில் அது போய்விடும். அதே நேரம் அதில் உள்ள அழுக்குகள் நீங்கி, பாட்டில் புதிது போன்று காணப்படும்.

அடுத்து செய்தித்தாளை பாட்டிலில் போட்டு நிரப்பி, இரவு முழுவதும் மூடி வைக்க வேண்டும். இதனால் அதிலிருந்து வெளிவரும் நாற்றம் அனைத்தும் போய்விடும்.

ஆண்களுக்கு விரைவாக தாடி மீசை வளர வேண்டுமா?

தற்போது ஃபேஷனானது அதிகரித்து வருகிறது. அதிலும் இதுவரை உடைகள், ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் தான் ஃபேஷன் இருந்தது. மேலும் இதுவரை ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியுமாறு வைப்பது என்று இருந்தார்கள்.

 ஆனால் இப்போது ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடியை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சிலரால் நல்ல அடர்த்தியான மீசையை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தால், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கு, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பார்க்கலாமே!!!

புரோட்டீன் உணவுகள் 

உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய்

மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியாக வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வது தான். இதனால் அங்குள்ள இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்கள் வலுவோடு வளர்ச்சி பெறும்.

டெஸ்டோஸ்டிரோன் 

என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் குறைவாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க்கடலை, எள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தண்ணீர்

உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

போதுமான தூக்கம் 

தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழுதுகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை வைத்தியம்

ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.