Saturday, 15 February 2014

“ப்ளிச்” ஆக சில குறிப்புகள் இதோ…..

“ப்ளிச்” ஆக சில குறிப்புகள் இதோ…..

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் “ப்ளிச்” ஆகிவிடும்.
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

2. ஜொலி ஜொலிக்க…

உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா – இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.

இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

ராம்சரணுடன் மட்டும் கூடுதல் நெருக்கம்! காஜல் மீது தெலுங்கு ஹீரோக்கள் புகார்!!

தெலுங்கில் மகதீரா படத்தில் ஜோடி சேர்ந்த ராம்சரண்தேஜா-காஜல்அகர்வாலுக்கு அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தனர். நல்ல ரொமாண்டிக்கான கதைகள் வந்தால் ராம்சரணே காஜலின் பெயரை பரிந்துரை செய்து வந்தார். இதனால், அவர்களுக்கிடையிலான நட்பு ஆழமானது.


பின்னர், தமிழ்ப்படங்களில் காஜல் நடிக்க வந்து விட்டபோதும், அவ்வப்போது அவரை தன்னுடன் நடிக்க அழைப்பு விடுத்துக்கொண்டேயிருந்தார் ராம்சரண். அதனால் தற்போது தமிழில் படவாய்ப்புகள் குறைந்ததால் உடனே அவரிடம் தஞ்சமடைந்து விட்டார் காஜல். வழக்கம்போல் அவருக்கு இருகரம் நீட்டி அடைக்கலம் கொடுத்த ராம்சரண், தற்போது இரண்டு படங்களில் காஜலுடன் நடித்து வருகிறார்.


அப்படி நடிக்கும் இரண்டு படங்களுமே காதல் கதைகள் என்பதால், இதுவரை நடித்ததை விடவும் கூடுதல் நெருக்கம் காட்டி நடிக்கிறார்களாம். அவர்களது நெருக்கம் படத்துக்குப்படம் அளவுக்கதிகமாகிக்கொண்டே இருக்கிறதாம். ஆனால், ராம்சரணுடன் காட்டுவது போன்று மற்ற ஹீரோக்களுடன் காஜல் நெருக்கம் காட்டுவதில்லையாம்.


இதனால் ஆந்திராவிலுள்ள சில இளவட்ட ஹீரோக்கள் காஜல் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். இந்த அதிருப்தி விவகாரம் காஜலின் காதுகளை எட்ட உஷாராகி விட்டார். இப்படியேபோனால் தன்னை மற்றவர்கள் ஓரங்கட்டி விடுவர்கள் என்று நாக சைதன்யாவுடன் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்தின் போட்டோ செஷனிலேயே ஏகபோக தாராளம் காட்டி அசத்தி விட்டாராம். இதனால் அதிருப்தியாளர் கூட்டத்தில் உறுப்பினராக இருந்த நாகசைதன்யா இப்போது அதிலிருந்து நழுவி காஜலின் ஆதரவாளராகியிருக்கிறாராம். இதுபோன்று ஒவ்வொரு இளவட்டமாக அடுத்தடுத்து தனது பாசறைக்குள்இழுக்க திரைமறைவில் தீவிரம் காட்டி வருகிறாராம் காஜல்.

இளைஞர்களுக்கு கொலை செய்யும் ஊக்கத்தை கொடுத்த மோகன்லால் படம்!

சினிமா என்பது மிகப்பெரிய சாதனம். அதன்மூலம் பொதுமக்களுக்கு சொல்லப்படுகிற அறிவுரைகளை விட தவறான விசயங்கள் எளிதில் ரீச் ஆகிவிடுகிறது. அதனால்தான் தவறான விசயங்களை வடிகட்டி படங்களை வெளியிட அனுமதி கொடுப்பதற்காக சென்சார்போர்டு என்ற அமைப்பு உள்ளது. ஆனபோதும், சில படங்கள் அந்த சட்டதிட்டங்களையும் உடைத்து விட்டு வெளியே வந்து விடுகின்றன.

அப்படி வெளியான சில படங்கள் பொதுமக்களிடையே சமூகவிரோத செயல்களை தூண்டி விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த வகையில், சமீபத்தில் கேரளாவில் வெளியான மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் ஒரு கொலை சம்பவம் நடைபெற தூண்டுகோலாக இருந்துள்ளது.

அதாவது, கேரளாவில் நிலாம்பூர் என்ற பகுதியில் சில இளைஞர்கள் ஒரு கொலையை செய்து, அதை த்ரிஷ்யம் படத்தில் கொலையை மோகன்லால் மறைப்பது போன்றே மறைத்துள்ளனர். பின்னர் போலீசிடம் பிடிபட்ட அவர்களிடம் விசாரித்தபோது, மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம்தான் எங்களை கொலை செய்ய வைத்தது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்களாம். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இதேபோல் கேரளாவில் வெளியான ஹனி பீ, இடுக்கி கோல்டு உள்ளிட்ட சில படங்களை பார்த்த ஏராளமான இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக ஏற்கனவே கூறியிருந்தார்கள்.

இதுபோன்று சினிமா மூலம் சொல்லப்படுகிற கெட்ட விசயங்களுக்கு இளைஞர்கள் எளிதில் அடிமையாகி விடுவதால், மோகன்லால் உள்ளிட்ட சில மலையாள நடிகர்கள் இளைஞர்களை தவறான வழிக்கு திசைதிருப்பும் கதைகளில் இனி நடிப்பதில்லை என்று மானசீகமாக முடிவெடுத்திருக்கிறார்களாம்.

மீனாவுக்கு போட்டியாக களமிறங்கிய நதியா!

பூவே பூச்சுடவா நதியா, 1980-90களில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர். தமிழில் அவர் நடித்த உயிரே உனக்காக, சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன் உள்பட பல படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு எல்லா நடிகைகளையும் போலவே திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விட்ட நதியா, 2004ல் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தபடி ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதையடுத்து, தாமிரபரணி, சண்டை போன்ற படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர், மலையாளம், தெலுங்கிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள் என்றதும், அதில் நடிக்க பலத்த முயற்சி எடுத்து வருகிறார் நதியா.

ஆனால், தமிழ் ரீமேக்கில் மீனா நடிப்பதாக செய்தி பரவியபோதும், அந்த படத்தில் கமல் ஹீரோவாக நடிக்கிறார் என்றதும் வாய்ப்பை கைப்பற்ற, அதிரடி அட்டாக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் நதியா. இதனால் இதுவரை மீனாதான் சரியாக இருப்பார் என்று கூறிவந்த அப்பட டைரக்டர் ஜீத்து ஜோசப், இப்போது மீனாவை விட நதியா நடித்தால் தமிழுக்கு ஒரு மாறுதலாக இருக்கும் என்று கூறி வருகிறாராம்.

இதனால், அவ்வை சண்முகிக்குப்பிறகு மீண்டும் த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுடன் நடிக்கப்போகிறோம் என்று சந்தோசத்தில் இருந்த மீனா, நதியா குறுக்கால புகுந்து விட்டதால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும் போலிருக்கே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.

1000 கோடி பட்ஜெட் படம் தமிழில் வரப்போகிறது..!

ஹாலிவுட்டில் பிரமாண்டமாக தயாராகி உள்ள பொம்பிய் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் வருகிற 21ந் தேதி வெளியாகும் இந்தப் படம் தமிழிலும் அதே நாளில் ரிலீசாகிறது.


கி.மு 79ல் நடக்கிற கதை. அமெரிக்காவில் அருகில் உள்ள மிகப்பெரிய எரிமலையின் அடிவாரத்தில் இருக்கிறது பொம்பிய் என்ற சிறிய நகரம். அந்த நகரத்து போர் வீரன் மைலோ, அவன் அதே ஊரைச் சேர்ந்த காசியாவை காதலிக்கிறான். இரு வீட்டார் சம்மத்தோடு திருமணத்துக்கு ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த நேரத்தில் எரிமலை வெடிக்கத் தொடங்கும் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கிறது.


அப்படி அது வெடித்தால் 1500 ஆண்டுகளுக்கு பொம்பியில் புல்பூண்டுகள் கூட முளைக்காது. அந்த எரிமலைய தடுத்து நிறுத்திவிட்டு வந்தால்தான் மணப்பேன் என்கிறாள் காதலி. காதலியை கரம் பிடிக்கவும், மக்களை காப்பாற்றவும் மைலோ என்ன செய்கிறான் என்பதுதான் கதை. “கன்னியர் தன் கடைக்கண் காட்டிவிட்டால் மண்ணில் காளையர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்ற பாரதிதாசன் வரிகளை நினைவு படுத்துகிற கதை.


மைலோவாக கிட் ஹாரிங்டனும், காசியாவாக எமிலி ப்ரோவிங்கும் நடித்திருக்கிறார்கள். வி.எஸ்.ஆண்டர்சன் படத்தை இயக்கி இருக்கிறார். சுமார் 1000 கோடியில் உருவான படம் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது.

அசினைத் தொடர்ந்து இலியானாவையும் வீழ்த்திய பாலிவுட் நடிகைகள்!

ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப்பறந்து விட்டு பாலிவுட்டுக்கு சென்றபோது அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு. போன வேகத்திலேயே அங்குள்ள அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிவிட்டு தான் மட்டுமே இந்தி சினிமாவில் சுயாட்சி அமைத்தார் ஸ்ரீதேவி. இதனால் அப்போதைய பாலிவுட்டின் பிரபல நடிகைகள் அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பிழைப்பு தேடி அண்டை மாநிலங்களில் தஞ்சமடையக்கூடிய நிலை ஏற்பட்டது.


அதனால், அதன்பிறகு தென்னிந்தியாவில் புகழ் பெற்ற பல நடிகைகளுக்கும் இந்தி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியது. அதனால்தான், கஜினி மூலம் இந்திக்கு சென்ற அசின், ஸ்ரீதேவியை போன்று சாதிக்க வேண்டும் என்று அதிரடியாக படங்களை கைப்பற்றி நடித்து வந்தார். ஆனால், சில இந்தி நடிகைகள் அதிரடியாக பிரவேசித்து அசினின் மார்க்கெட் அவுட் பண்ணி விட்டனர்.


அதேபோல், அசினைப்போன்று நாமும் இந்தியில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஐதராபாத்திலிருந்து தனது முகாமை மும்பைக்கு மாற்றிய இலியானாவின் மார்க்கெட்டும் தற்போது சரிந்து கொண்டிருக்கிறதாம். காரணம், தென்னிந்திய நடிகைகள் தொடர்ந்து இந்திக்கு வந்து தங்களது வாய்ப்புகளை அபகரிப்பதை தடுக்கும் முயற்சியாக, தீபிகா படுகோனே, சோனாக்ஷிசின்ஹா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட அங்குள்ள அதிரடி நடிகைகள் தற்போது ஒன்று திரண்டு அசினைத்தொடர்ந்து இலியானாவையும் வீழ்த்தும் முயற்சியில் இறங்கியிருப்பதே இந்த சரிவுக்கு காரணமாம்.


இப்படி பாலிவுட் நடிகைகள் கைகோர்த்திருப்பதால் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் இலியானா, இனி பாலிவுட்டில் நீண்டநாள், காலம் தள்ள முடியாது என்பதால், மறுபடியும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான முயற்சியை முடுக்கி விட்டுள்ளாராம். கூடவே பாலிவுட் படங்களில் நடித்ததற்கு கடுகளவும் குறையாத அளவுக்கு கவர்ச்சி காட்டி நடிப்பேன் என்றும் ஆந்திராவில் பரபரப்பு செய்தி வெளியிட்டு வருகிறார் இலியானா. இதனால் பாலிவுட் நடிகைகளுக்கு பயந்து தெலுங்குக்கு வரும் இலியானாவைப்பார்த்து தெலுங்கு சினிமாவில் மையம் கொண்டுள்ள, அனுஷ்கா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் இலியானாவைககண்டு பயத்தில் ஆடிப்போய் உள்ளனர்.

மும்பையை கலக்கிய அஹானா திருமணம்!

ஹேமமாலினி - தர்மேந்திராவின் இளைய மகள், அஹானாவுக்கும், டில்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் வைபவுக்கும், சமீபத்தில் மும்பையில் திருமணம் நடந்தது.


 இந்த புதுமண தம்பதியை வாழ்த்த, ஒட்டு மொத்த பாலிவுட்டும் திரண்டு விட்டது. மணமகள் அஹானா, கனகாம்பர கலரில், அனார்கலி உடையணிந்து தேவதை போல், காட்சி அளித்தார்.


இந்த உடையை வடிவமைத்தவர், பிரபல பேஷன் டிசைனர், மணிஷ் மல்கோத்ரா. ஹேமமாலினி, வெள்ளையும், பச்சையும் கலந்த, எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவையில் மினு மினுத்தார்.


ஐஸ்வர்யா, இளம் சிவப்பு நிற சுடிதாரிலும், தீபிகா படுகோனே, பேண்டா ஆரஞ்சு கலரில், எம்பிராய்ட் செய்யப்பட்ட புடவையில் ஒளிர்ந்தார்.


மாஜி ஹீரோயின் ரேகா, மயில் கழுத்து கலர், காஞ்சிபுரம் புடவையில், ஜொலித்தார். ஆனால், கீழே உள்ள படம், அஹானாவின் திருமணத்தில் எடுக்கப்பட்டதல்ல; வரவேற்பின்போது எடுக்கப்பட்டது.

7 மாநிலங்கள், 15 நகரங்களில் உருவான ஹைவே!

பாலிவுட்டில் இப்போது மோஸ்ட் வாண்டட் மூவி எதுவென்றால் அது ஹைவேதான். ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி இருக்கும் பாடல்கள் இந்தி அல்லாத மாநிலங்களிலும் ஹிட்டடித்திருக்கிறது.


 அதுவும் மாஹிவே... பாடல் இப்போதே செல்போன்களில் நிறைந்து கிடக்கிறது.


இம்தியாஸ் அலி டைரக்ட் செய்துள்ள இந்தப் படத்தில் ரன்தீப்ஹோடாவும், அலியா பகத்தும் நடித்துள்ளனர்.


டில்லியில் தொடங்கி காஷ்மீரில் முடியும் பயண காதல் கதை. இடையில் ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சல் பிரதேஷ், மாநிலங்களை கடந்து செல்கிறது.


7 மாநிலங்கள், 15 நகரங்களில் இதன் படப்பிடிப்புகள் ஒரு வருடத்துக்கு மேலாக நடந்துள்ளது.


ஒரு சரக்கு லாரியில் பயணிக்கும் காதலர்களின் மென்மையான உணர்வு, அன்பு, அவர்கள் சந்திக்கும் பிரச்னைதான் கதை.


ஏ.ஆர்.ரகுமான் பாடலுடன் யூ டியூப்பில் வரும் படத்தின் டீசர் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி இருக்கிறது. வருகிற 21ந் தேதி உலகம் முழுவதும் யுடிவி நிறுவனம் வெளியிடுகிறது.

சருமத்திற்கு அழகு தரும் உளுத்தம்பருப்பு!

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப்பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். வறுத்த உளுத்தம்பருப்பு – 100 கிராம், கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை – 10, கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் – 5. இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். `பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வாகப் பிரகாசிப்பீர்கள்.

* கண்ணுக்குக் கீழே கருவளையம் விழுந்து எப்போது பார்த்தாலும் `கவலைக்குரிய’ மனுஷியாகக் காணப்படுகிறீர்களா? உங்கள் கவலையைப் போக்குகிறது உளுத்தம்பருப்பு! 2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரையுங்கள். இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து அலசுங்கள். வெள்ளரிக்காய், கருவளையத்தைப்போக்கி `ப்ளீச்’ செய்யும். உளுத்தம் பருப்பு கண்களுக்குக் கீழே இருக்கிற தோலின் முரட்டுத்தனத்தைப் போக்கி, தோலை மென்மையாக்கும்.

* முகத்தில் சுருக்க வரிகள் தோன்றி கவலைப்படுத்துகிறதா? மனம் சுருங்க வேண்டாம். கசகசா – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், முழு உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன் இவற்றை ரவைபோல் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன், கஸ்தூரி மஞ்சள் – ஒரு சிட்டிகை கலந்து பேஸ்ட்டாக்குங்கள். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டால் முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். சுருக்கம் முற்றிலுமாக நீங்கி, முகம் இளமையாகிவிடும்.

* புதினாசாறு – 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி – 1 டீஸ்பூன், சந்தனம் – கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்குகள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.

* சிலரது உதடுகள் கறுப்பு லிப்ஸ்டிக் போட்டது போல இருக்கும். அவர்களுக்கு ரோஜா இதழ்களை அளிக்கிறது உளுத்தம்பருப்பு வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில், உதடுகள் ரோஜா நியமாவதுடன், மென்மையாகவும் ஆகும்.

* கால்களில் பாளம் பாளமாக பித்த வெடிப்புகள் இருக்கின்றனவா? இந்த சிகிச்சையைச் செய்து பாருங்களேன்…….. வெள்ளை ரவை – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன். இந்த இரண்டையும் ரவை மாதிரி பொடித்து அதில் எலுமிச்சைசாறை கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இரவு படுப்பதற்கு முன் இந்த பேஸ்ட்டை வெடிப்பின் மேல் தேய்த்து, உலர்ந்ததும் கழுவுங்கள். பிறகு பாதத்தைத் துடைத்து விட்டு, சிறிது கிளிசரின் தடவுங்கள். நாலைந்து நாட்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், பித்த வெடிப்பு, சேற்றுப் புண் போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். காலும் மெத்தென்று இருக்கும்.

* குழந்தை பிறந்த பிறகு வயிற்றில் ஏற்படுகிற `ஸ்ட்ரெச் மார்க்’குகள் பல பெண்களின் தீராத கவலை. அதற்கும் தீர்வு வைத்திருக்கிறது உளுத்தம்பருப்பு! வறுத்து அரைத்த உளுத்தம் மாவு – 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன். இந்த இரண்டையும், உளுந்து ஊற வைத்த தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை வயிற்றில் `பற்று’ மாதிரி போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வரிகள் மறைவதுடன் அரிப்பும் ஓடியே போகும்.

குறிப்பு: உளுத்தம்பருப்புப் பொடிகளை தயாரித்து, பல நாட்கள் வைத்து உபயோகிக்கக் கூடாது. உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது கொஞ்சமாக அரைக்க வேண்டும் என்பதால், இவற்றை அரைப்பதற்கென்றே தனியாக ஒரு சிறு அம்மியை வைத்துக்கொள்வது நல்லது.

வயது – தோற்றத்துக்கு ஏற்ற அலங்காரம்!

எல்லோருமே நல்ல அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிக்கவே விரும்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இந்த ஆர்வம் பெருகியுள்ளது என்பதுடன் அழகுக்கலை பற்றிய விழிப்புணர்வும் நன்கு ஏற்பட்டுள்ளது. தலைமுடியை பொறுத்தவரை நீண்ட கூந்தல் – அதில் செய்யும் அலங்காரங்கள் என்பது சற்று மாறி, நடு முதுகு வரை வெட்டிக்கொள்ளவே இன்று பலரும் விரும்புகின்றனர்.

இந்த வகை ஹேர்-கட் எல்லாவித உடைகளுக்கும் பொருந்தும். அதில் பல வகை ஹேர் ஸ்டைல்களும் செய்து கொள்ளலாம். பெரிய கொண்டைகள் போடும் நிலைமாறி இன்று மென்மையான எளிதான தலை அலங்காரங்களே வரவேற்பு பெறுகின்றன.

அழகுக்கலை இன்று மிக நல்லதொரு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அழகு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதுடன், அழகின் மதிப்புத்தெரிகிறது. அதைப்பராமரிக்கும் வழிகளையும் நாடுகின்றனர். வயதுக்கும் தோற்றத்திற்கும் ஏற்ப அலங்காரம் செய்து கொள்வது தான் நேர்த்தியானது.

சாதாரணமாக வீடுகளில் பணிபுரியும் பெண்கள் கூட அழகைப்பராமரிக்கவும், அழகுபடுத்திக் கொள்ளவும் விரும்புகின்றனர். சுத்தமே அழகின் அடிப்படை. இதுவும் அவர்களுக்கு புரிகிறது. திருமணமாகி விட்டால் அழகைப்பராமரிக்கும் ஆர்வம் குறைந்துவிடும்.

குழந்தைகள் பிறந்த பின்பு சுத்தமாக இதை கைவிடுவதும் இன்று மாறி வருகிறது. நல்ல ஆரோக்கியம், முறையான உணவுப்பழக்கம், சுத்தம் இவற்றை கவனித்துக் கொண்டால் தானாக அழகு பரமரிக்கப்படும்.

எனக்கு அழகில்லை என விருப்பமில்லாமல் இருப்பதைவிட நம்பிக்கையுடன் பிளஸ் பாயிண்டுகளை எண்ணிப்பார்த்து அவற்றை நன்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

புடவைகள், டிரஸ் வகைகள் தேர்வு செய்யும் போது, நல்ல நிறம், எடுப்பான டிசைன் எனப்பார்த்து தேர்வு செய்வதைவிட இந்த நிறம், இந்த டிசைன் நமக்கு பொருந்துமா? நன்றாக இருக்குமா? என்பதை அறிந்து புடவை அல்லது டிரஸ் வகைகளை தோள் மீது போட்டு பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

இளமையை இப்படிக் காக்கலாம்!

கம்பீரமாய் காட்சியளிப்பார்கள். சிலரோ இளம் வயதிலேயே முதுமை தட்டிப்போய் தோன்றுவார்கள். ‘இவர்கள் மட்டும் எப்படி அன்று பார்த்தது மாதிரியே இன்றும் இருக்கிறார்கள்?’ என்று சிலரைப் பார்க்கும்போதுதான் தோன்றுகிறது.

நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம்தான். அதை ஒழுங்காக, சீராகப் பராமரித்தாலே நமது இளமை நீடித்திருக்கும். எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் சருமத்தில் முதுமைத் தோற்றம் தெரிகிறது.

இதைத் தடுக்க, முகத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரி, நாங்கள் எப்படி இளமையைத் தக்கவைத்துக்கொள்வது என்று கேட்கிறீர்களா? இதோ, இந்தக் குறிப்புகளைப் படியுங்கள், பின்பற்றுங்கள்…

தண்ணீர் நல்லது :

இளமையைத் தக்கவைப்பதில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. சருமத்தை மென்மையாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் தினமும் குறைந்தபட்சம் 1 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது என்கிறார்கள் சரும நிபுணர்கள்.

இளமை காக்கும் உணவுகள் :

என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதும் அவசியம்.

உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறனுடைய ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் முகம் சுருக்கம் இல்லாமலும், மென்மையாகவும் தோன்றும். மேலும், பசலைக்கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, கிரீன் டீ போன்றவற்றையும் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

புகை தவிர்க்க வேண்டும் :

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மதுபானம், புகைபிடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிகரெட்டில் உள்ள ‘நிக்கோட்டின்’, ரத்த ஓட்டத்தைக் குறைப்பதால் சருமத்துக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் வயதான தோற்றம் எளிதில் வந்துவிடுகிறது.

ஆழ்ந்த உறக்கம் அவசியம் :

சரியான உறக்கம் இல்லாததாலும் உடல் அழகு பாதிக்கப்படும் என்பதை பலர் அறிவதில்லை. சரியான தூக்கமின்மை, சோர்வை ஏற்படுத்தும், இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6, 7 மணி நேர உறக்கம் அவசியம். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், மனதில் புத்துணர்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

கவலை கூடாது :

ஏதாவது ஒரு கவலையை இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் மூழ்குவது பலருக்கும் பழக்கமாக இருக்கிறது. கவலை உடல் நலத்தையும், அழகையும் பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் முகம் ஜொலிக்கும்

‘மாதவனும் மலர்விழியும்’ மலராத மொட்டு. - திரைவிமர்சனம்!

நாயகன் மாதவன் கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இல்லாத இவர் பாட்டியின் அரவணைப்பில் இருக்கிறார். இவர் மீது பாட்டி மிகுந்த பாசம் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் எந்தவித பொறுப்பும் இல்லாமல் ஊரைச் சுற்றி வருகிறார்.

ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது காஞ்சனாவை சந்திக்கிறார் மாதவன். முதல் சந்திப்பிலேயே இருவரும் மோதிக் கொள்கிறார்கள். திமிராக பேசும் காஞ்சனாவை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதனால் காஞ்சனாவை அடிக்கடி சந்திக்க வழியைத் தேடுகிறார் மாதவன்.

அப்போது இளம் விதவையான மலர்விழி நடத்தும் நடனப்பள்ளியில் காஞ்சனா நடனம் பயின்று வருவது மாதவனுக்கு தெரிகிறது. உடனே அவரும் அந்த நடனப் பள்ளியில் சேருகிறார். அங்கேயும் இருவரும் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

நடனப்பள்ளி நடத்தும் மலர்விழி அடிக்கடி மயக்கம் போட்டு விழுபவர். ஒருநாள் மாதவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு டாக்டர், நீங்கள் இளம் விதவை, உங்களுக்கு கண்டிப்பாக ஒரு ஆண் துணை தேவை. அடுத்த தடவை நீங்கள் மயக்கம் போட்டு விழுந்தால் ஆண் துணையில்லாமல் உங்களை காப்பாற்ற முடியாது என்று ஆலோசனை கூறுகிறார். இதனை வெளியில் இருந்து கேட்டு விடுகிறார் மாதவன்.

இந்நிலையில் ஒருநாள் மாதவன், மலர்விழி வீட்டுக்குச் செல்கிறார். அங்கு மயங்கிய நிலையில் மலர்விழி கிடக்கிறார். எனவே, டாக்டர் சொன்ன ஆலோசனைப்படி மலர்விழியுடன் இணைந்து விடுகிறார் மாதவன். இதனால் மலர்விழி காப்பாற்றப்படுகிறாள். இதன்பிறகு மலர்விழி ஞாபகமாகவே மாதவன் இருக்கிறார்.

இதற்கிடையில் மாதவனுடன் சண்டைப்போட்டு கொண்டிருந்த காஞ்சனா மனம் மாறி மாதவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இறுதியில் மாதவன், மலர்விழியை கரம் பிடித்தாரா? காஞ்சனாவை  கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

மாதவனாக நடித்திருக்கும் அஸ்வினின் நடிப்பு முதற்பாதியில் ரசிக்க முடியாமல் இருந்தாலும் பிற்பாதியில் ரசிக்கும் படியாக நடித்திருக்கிறார். மலர்விழி என்னும் கதாபாத்திரத்தில் இளம் விதவையாக நடித்திருக்கும் சிஜா ரோஸ், தன் நடிப்பு திறமையால் கதாபாத்திரத்திற்கு மெருகூட்டியிருக்கிறார். இவருடைய நடனம் மிகவும் அருமை. காஞ்சனாவாக நடித்திருக்கும் நீரஜாவுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும் ஓரளவுக்கு ரசிக்கலாம்.

வெண்புறா வெங்கடேஷாக வரும் பொன்னம்பலம், காமெடி கலந்த வில்லன் நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார். வசந்த மணி இசையில் பாடல்கள் சுமார்தான். ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இயக்குனர் மாசில், ஏற்கனவே வேறொரு மொழியில் வந்த படத்தை தமிழில் சிறப்பாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் புதுமையான கிளைமாக்ஸ். அதை ரசிக்கும் படியாக எடுத்திருக்கலாம்.

‘மிஸ்டர் கோ’ ஹாலிவுட் கலக்கல். - திரைவிமர்சனம்!

சர்க்கஸ் தொழில் செய்யும் 15 வயதான வெய்யின் தாத்தா, அவருக்கு லிங்க் என்னும் பெயருள்ள ஒரு கொரில்லா குரங்கினை விட்டுவிட்டு செல்கிறார். பேஸ்பால் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடைய லிங்க் குரங்கிற்கு பேஸ்பால் விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கிறார். எனவே அக்குரங்கு பேஸ் பால் விளையாட்டில் தூள் கிளப்புகிறது.

சர்க்கஸ் கம்பெனியின் அதிகப்படியான கடன் சுமை காரணமாக பேஸ் பால் விளையாட்டின் ஏஜெண்ட் சங்குடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கொரியன் பேஸ் பால் லீக்கில் லிங்க் விளையாட வெய் சம்மதிக்கிறார். தனது அசாத்திய திறமையால் அப்போட்டியில் டூஸான் அணிக்காக களமிறங்கும் லிங்க் சிறப்பாக விளையாடி ஏராளமான ரசிகர்களை பெறுகிறது. மேலும் ரசிகர்களால் மிஸ்டர் கோ என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.

வெற்றிக்களிப்பில் வெய்யும், சங்கும் மிஸ்டர் கோவிற்கு கால் முட்டியில் ஏற்பட்ட அடியை கவனிக்காமல் ஜப்பானில் நடைபெறும் போட்டிற்கு அதை அழைத்து செல்கின்றனர். ஆனால் வலியின் காரணமாக மிஸ்டர் கோ மட்டையை சுழற்ற முடியாமல் கீழே விழுகிறது. இதனால், வெய்யும், சங்கும் அதிர்ச்சியடைகின்றனர்.

இந்நிலையில், மிஸ்டர் கோ போலவே பேஸ் பால் விளையாட்டில் பந்தை எறியும் பயிற்சியில் கைதேர்ந்த மற்றொரு கொரில்லாவை எதிர் அணி வாங்கி அதை அந்த போட்டியில் ஈடுபட வைக்கின்றனர்.

இறுதியில், மிஸ்டர் கோ உடல் தேர்ச்சி பெற்று பேஸ் பால் விளையாட்டில் தனது ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டதா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தை எழுதி இயக்கிய கிம் யாங் வா ஹாலிவுட்டில் பல ஹிட் படங்களை இயக்கியவர். கொரிய இசையையும் சீன இசையையும் இணைத்து பிரமாதமாக இசையமைத்துள்ளார் இப்படத்தின் இசையமைப்பாளர் கிம் தியோன்.

இப்படத்தில் 500க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி காட்சிகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஜங்க் சங்க் சன். கொரில்லா தோன்றும் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தை 3டி தொழில்நுட்பத்திலும் எடுத்துள்ளதால், படம் பார்ப்பவர்கள் பேஸ் பால் மைதானத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தந்துள்ளது.

‘ரெட்டை கதிர்’ - துளிர் விடவில்லை. - திரைவிமர்சனம்!

சந்தர்ப்ப சூழ்நிலையால் அனாதையாக்கப்படும் இருவர் பற்றிய கதை.

சக்தி மற்றும் சக்திவேல் இவர்கள் இருவரும் சிறுவயதில் அனாதையாக்கப்படுகிறார்கள். சக்தி வளர்ந்தவுடன் ஒரு தாதாவின் வளர்ப்பு தம்பியாக, கல்லூரியில் படித்துக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டு வருகிறார்.

சக்திவேல் ஆதரவற்றவராக பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற கனவில் ஒரு கல்லூரியில் சேர்கிறார். அங்கு விடுதியில் தங்கும் இவரை கண்டு சக மாணவர்கள் இவருடைய தோற்றத்தைப் பார்த்து கேலி-கிண்டல் செய்கிறார்கள்.

ஒருநாள் ஒரு ரவுடி கும்பல் சக்திவேலிடம் வம்பிழுத்து அவரை அடித்து விடுகிறார்கள். அவர் வழியில் செல்லும்போது மயங்கி விழுகிறார். அந்த வழியாக வரும் அதே கல்லூரியில் படிக்கும் நாயகி அபிராமி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுகிறார். இதனால் அபிராமி மீது காதல் வயப்படுகிறார்.

இதற்கிடையில் வேறொரு கல்லூரியில் படிக்கும் சக்தி, தன் அண்ணனின் கட்டளையால் ஒரு கல்லூரியை அழிக்க, அந்த கல்லூரிக்கு மாற்றலாகி போகிறார். அங்கு கலவரத்தை உண்டு பண்ண அண்ணன் கட்டளையிடுகிறார்.

அந்த கல்லூரியில் தான் சக்திவேல் மற்றும் அபிராமி படிக்கிறார்கள். இதே கல்லூரியில் வந்து சேருகிறார் சக்தி. ஒருநாள் கெமிஸ்ட்ரி லேப்பில் ஒரு விபத்து ஏற்படுத்த திட்டம் தீட்டுகிறார் சக்தி. அந்த விபத்தில் ஒரு ஆசிரியருக்கு அடிப்பட்டு விடுகிறது. இதற்கு நிர்வாகம்தான் காரணம் என்று சக்தி, மாணவர்களை திரட்டி போராட்டம் பண்ணுகிறார். இந்த முயற்சி தோல்வி அடைகிறது. இதனை பார்க்கும் அபிராமி சக்தி மீது காதல் வயப்படுகிறார்.

இறுதியில் சக்தி அந்த கல்லூரியில் கலவரத்தை ஏற்படுத்தினாரா? சக்திவேல், அபிராமியை காதலிக்க வைத்தாரா? அபிராமி சக்தியை காதலிக்க வைத்தாரா? என்பதே மீதிக்கதை.

சக்தியாக நடித்திருக்கும் சுப்பு, சண்டை, நடனம், கோபம் என நடிப்புத்திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். சக்திவேலாக நடித்திருக்கும் துரை, பாவப்பட்டவர் போல் இருக்கிறார். அதனால்தான் என்னவோ படம் முழுக்க அப்படியே வருகிறார். அவரை சரியாக பயன்படுத்தியிருக்கலாம். அபிராமியாக நடித்திருக்கும் ஸ்மிதா, நடிக்க வாய்ப்பு குறைவு. அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை.

சந்தர்ப்ப சூழ்நிலையில் அனாதையாக மாறும் குழந்தைகள், காலப்போக்கில் எப்படி மாறுகிறார்கள் என்ற கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர், புதுமுகங்களை வைத்துக்கொண்டு அவர்களிடம் வேலை வாங்க தெரியாமல் கோட்டை விட்டுவிட்டார். முதற்பாதியில் நீண்ட காட்சிகள், தேவையில்லாத காட்சிகள் என படத்திற்கு பொருந்தாமல் உள்ளது. சொல்ல வருவதை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம்.

தேவா குமார் இசையில் பாடல்களை ரசிக்கலாம். கானாபாலா குரலுக்கு பாண்டியராஜன் நடனம் ஆடும் பாடல் தாளம் போட வைக்கிறது. வாசுதேவன் ஒளிப்பதிவில் ஓரிரு காட்சிகளை ரசிக்கலாம்.

இது கதிர்வேலன் காதல் - காமெடி கலாட்டா... திரைவிமர்சனம்!

வழக்கமாக காதலுக்கு ஏற்படும் பிரச்சனையை சமாளித்து அதை சுபமாக்கி காதலியை வீட்டிலுள்ளவர்கள் சம்மதத்தோடு கைபிடிக்க நினைக்கும் காதல் கதை தான், இது கதிர் வேலன் காதல்.

ஆனால் இந்த கதிர்வேலன் அதை எப்படி சுவாரஸ்யமாக செய்கிறார் என்பதே இப்படத்தின் சிறப்பம்சமாகும். படம் அதிர்ச்சியான காட்சியோடு தொடங்குகிறது. உதயநிதியின் அக்கா சாயாசிங் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்தவர். அதனால் காதல் என்றாலே உதயநிதியின் அப்பா நரேனுக்கு வெறுப்பு.

சாயாசிங் தன் கணவரோடு கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வர அக்கா கணவரிடம் பேசி சமாதனம் செய்து வைக்க மதுரையிலிருந்து கோயம்புத்தூர் வருகிறார் உதயநிதி. அக்கா வீட்டின் எதிர் வீட்டிலிருக்கும் நயன்தாராவை பார்த்ததும் காதலில் விழுகிறார். ஆஞ்சநேய பக்தரான உதயநிதி அந்த நேரத்தில் அங்கு சந்திக்கும் தன் பால்ய நண்பன் சந்தானத்தின் உதவியோடு தன் காதலில் வெற்றி பெற போராடுகிறார்.

நயன்தாராவின் நண்பரான சுந்தர் ஒருபக்கம் அவரை அடைய நினைக்கிறார். உதயநிதியின் அக்கா கணவருக்கும் நயன்தாராவின் அப்பா ஜெய பிரகாஷ்க்கும் ஜென்ம பகை. நரேன் தன் மகன் உதயநிதிக்கு பெண் பார்க்கிறார். உதயநிதி தன் காதலுக்கு இருக்கும் இவ்வளவு சிக்கல்களையும் முறியடித்து  நயன்தாராவை கைபிடித்தாரா என்பதே மீதி கதை.

உதயநிதி இரண்டாவது படத்தில் நடனத்தில் முன்னேறி இருக்கிறார். இயல்பாக நடிக்க முயற்சிப்பது அழகாக இருக்கிறது. ரொம்ப நாளைக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு நடிப்பது கைகொடுக்காது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். நயன்தாராவின் அழகு நாளுக்கு நாள்  கூடிக் கொண்டே போகிறது. அவர் வரும் காட்சிகளை தனித்திறனோடு திறமையான நடிக்கும் அளவுக்கு மிகவும் தேறிவிட்டார்.

சந்தானம் வந்த பிறகே படம் களை கட்டுகிறது. தன்னை நம்பியவர்களை கைவிடாமல் அவர் அற்புதமாக நடித்துள்ளார். அதுவும் உதயநிதி காதலுக்காக நரேனிடம் பேசப்போகும் காட்சியில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆஞ்சநேயர் வேடத்தில் வரும் லொள்ளுசபா சாமிநாதனும், மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக வரும் மயில்சாமியும் கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கியுள்ளனர்.

சாயாசிங், உதய நிதியின் அம்மாவாக வரும் சரண்யா, நண்பராக வரும் முருகதாஸ், நயன்தாரா தோழியாக வந்து சந்தானத்தின் காதலியாக மாறும் கேரளப்பெண், வில்லத்தனம் காட்டும் சுந்தர் ஆகியோர் கிடைத்த பாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை காட்டியுள்ளனர்.

சாயாசிங்கின் கணவராக வரும் நபர் மிக அழகாக இருப்பதோடு  நடிக்கவும் தெரிந்தவராக இருக்கிறார். நரேன் அருமையான நடிகர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்துக் கொண்டு இருக்கிறார். ஜெய பிரகாஷ்ஷும் அவருடைய மனைவியாக வருபவரும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமனியெம் ஒளிப்பதிவில் காட்சிகள் உயர்தரமாக இருக்கிறது. சாதாரண குடும்ப படம் என்று விட்டு விடாமல் கவனம் எடுத்து ரசனையாக பதிவு செய்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பின்ணணி இசை  சில இடங்களில் ஏற்க்கனவே கேட்ட உணர்வு. பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது.

ரொம்ப நாளைக்கு பிறகு குடும்பத்தோடு பார்க்கிற அழகான படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் SR. பிரபாகரன். சண்டைகாட்சிக்கு வாய்ப்பிருந்தும் அதை செய்யாமல் முழுமையான குடும்ப படத்தை தந்திருக்கிறார். கடைசி காட்சியில் முதல் காட்சிக்கான புதிரை அவிழ்க்கும் இடத்தில் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. அதே போல் நரேனுடன் உதயநிதி விவாதம் செய்யும் இறுதிக் காட்சி வசனங்களும் நரேனின் நடிப்பும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.

இயக்குனர் முதல் பத்து நிமிடங்களுக்கு நிறைய திருப்பங்களை தந்து விட்டு அடுத்து திரைக்கதை மெதுவாக நகர்த்துவது கதைக்குள் எளிதில் உள்ளே போக முடியவில்லை. இருந்தாலும் அந்த நேரத்தில் சந்தானம் வந்து காப்பாற்றி விடுகிறார் என்று சொல்ல வேண்டும். எடிட்டிங்கில் இன்னும் ஷார்ப் செய்திருக்கலாம். இரண்டரை மணி நேர படம் என்பதால் படத்தின் நீளம் மிக அதிகம் என்றே சொல்ல தோன்றுகிறது.

எல்லோரும் ஏற்று கொள்ளும்படியான காதலை காட்டிய விதத்தில் கதிர்வேலன் காதல் வெற்றி பெற வேண்டிய காதலே.

மொத்தத்தில் இது கதிர்வேலன் காதல் காமெடி கலாட்டா... 

பெண்களின் கருப்பை நரம்புகளும் மெட்டியும்....

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.


அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்


பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.


இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.


கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.