Saturday, 15 February 2014

வயது – தோற்றத்துக்கு ஏற்ற அலங்காரம்!

எல்லோருமே நல்ல அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிக்கவே விரும்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இந்த ஆர்வம் பெருகியுள்ளது என்பதுடன் அழகுக்கலை பற்றிய விழிப்புணர்வும் நன்கு ஏற்பட்டுள்ளது. தலைமுடியை பொறுத்தவரை நீண்ட கூந்தல் – அதில் செய்யும் அலங்காரங்கள் என்பது சற்று மாறி, நடு முதுகு வரை வெட்டிக்கொள்ளவே இன்று பலரும் விரும்புகின்றனர்.

இந்த வகை ஹேர்-கட் எல்லாவித உடைகளுக்கும் பொருந்தும். அதில் பல வகை ஹேர் ஸ்டைல்களும் செய்து கொள்ளலாம். பெரிய கொண்டைகள் போடும் நிலைமாறி இன்று மென்மையான எளிதான தலை அலங்காரங்களே வரவேற்பு பெறுகின்றன.

அழகுக்கலை இன்று மிக நல்லதொரு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அழகு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதுடன், அழகின் மதிப்புத்தெரிகிறது. அதைப்பராமரிக்கும் வழிகளையும் நாடுகின்றனர். வயதுக்கும் தோற்றத்திற்கும் ஏற்ப அலங்காரம் செய்து கொள்வது தான் நேர்த்தியானது.

சாதாரணமாக வீடுகளில் பணிபுரியும் பெண்கள் கூட அழகைப்பராமரிக்கவும், அழகுபடுத்திக் கொள்ளவும் விரும்புகின்றனர். சுத்தமே அழகின் அடிப்படை. இதுவும் அவர்களுக்கு புரிகிறது. திருமணமாகி விட்டால் அழகைப்பராமரிக்கும் ஆர்வம் குறைந்துவிடும்.

குழந்தைகள் பிறந்த பின்பு சுத்தமாக இதை கைவிடுவதும் இன்று மாறி வருகிறது. நல்ல ஆரோக்கியம், முறையான உணவுப்பழக்கம், சுத்தம் இவற்றை கவனித்துக் கொண்டால் தானாக அழகு பரமரிக்கப்படும்.

எனக்கு அழகில்லை என விருப்பமில்லாமல் இருப்பதைவிட நம்பிக்கையுடன் பிளஸ் பாயிண்டுகளை எண்ணிப்பார்த்து அவற்றை நன்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

புடவைகள், டிரஸ் வகைகள் தேர்வு செய்யும் போது, நல்ல நிறம், எடுப்பான டிசைன் எனப்பார்த்து தேர்வு செய்வதைவிட இந்த நிறம், இந்த டிசைன் நமக்கு பொருந்துமா? நன்றாக இருக்குமா? என்பதை அறிந்து புடவை அல்லது டிரஸ் வகைகளை தோள் மீது போட்டு பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment