Saturday, 15 February 2014

மீனாவுக்கு போட்டியாக களமிறங்கிய நதியா!

பூவே பூச்சுடவா நதியா, 1980-90களில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர். தமிழில் அவர் நடித்த உயிரே உனக்காக, சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன் உள்பட பல படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு எல்லா நடிகைகளையும் போலவே திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விட்ட நதியா, 2004ல் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தபடி ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதையடுத்து, தாமிரபரணி, சண்டை போன்ற படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர், மலையாளம், தெலுங்கிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள் என்றதும், அதில் நடிக்க பலத்த முயற்சி எடுத்து வருகிறார் நதியா.

ஆனால், தமிழ் ரீமேக்கில் மீனா நடிப்பதாக செய்தி பரவியபோதும், அந்த படத்தில் கமல் ஹீரோவாக நடிக்கிறார் என்றதும் வாய்ப்பை கைப்பற்ற, அதிரடி அட்டாக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் நதியா. இதனால் இதுவரை மீனாதான் சரியாக இருப்பார் என்று கூறிவந்த அப்பட டைரக்டர் ஜீத்து ஜோசப், இப்போது மீனாவை விட நதியா நடித்தால் தமிழுக்கு ஒரு மாறுதலாக இருக்கும் என்று கூறி வருகிறாராம்.

இதனால், அவ்வை சண்முகிக்குப்பிறகு மீண்டும் த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுடன் நடிக்கப்போகிறோம் என்று சந்தோசத்தில் இருந்த மீனா, நதியா குறுக்கால புகுந்து விட்டதால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும் போலிருக்கே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment