Saturday, 15 February 2014

மும்பையை கலக்கிய அஹானா திருமணம்!

ஹேமமாலினி - தர்மேந்திராவின் இளைய மகள், அஹானாவுக்கும், டில்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் வைபவுக்கும், சமீபத்தில் மும்பையில் திருமணம் நடந்தது.


 இந்த புதுமண தம்பதியை வாழ்த்த, ஒட்டு மொத்த பாலிவுட்டும் திரண்டு விட்டது. மணமகள் அஹானா, கனகாம்பர கலரில், அனார்கலி உடையணிந்து தேவதை போல், காட்சி அளித்தார்.


இந்த உடையை வடிவமைத்தவர், பிரபல பேஷன் டிசைனர், மணிஷ் மல்கோத்ரா. ஹேமமாலினி, வெள்ளையும், பச்சையும் கலந்த, எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவையில் மினு மினுத்தார்.


ஐஸ்வர்யா, இளம் சிவப்பு நிற சுடிதாரிலும், தீபிகா படுகோனே, பேண்டா ஆரஞ்சு கலரில், எம்பிராய்ட் செய்யப்பட்ட புடவையில் ஒளிர்ந்தார்.


மாஜி ஹீரோயின் ரேகா, மயில் கழுத்து கலர், காஞ்சிபுரம் புடவையில், ஜொலித்தார். ஆனால், கீழே உள்ள படம், அஹானாவின் திருமணத்தில் எடுக்கப்பட்டதல்ல; வரவேற்பின்போது எடுக்கப்பட்டது.

0 comments:

Post a Comment