Saturday 15 February 2014

இளைஞர்களுக்கு கொலை செய்யும் ஊக்கத்தை கொடுத்த மோகன்லால் படம்!

சினிமா என்பது மிகப்பெரிய சாதனம். அதன்மூலம் பொதுமக்களுக்கு சொல்லப்படுகிற அறிவுரைகளை விட தவறான விசயங்கள் எளிதில் ரீச் ஆகிவிடுகிறது. அதனால்தான் தவறான விசயங்களை வடிகட்டி படங்களை வெளியிட அனுமதி கொடுப்பதற்காக சென்சார்போர்டு என்ற அமைப்பு உள்ளது. ஆனபோதும், சில படங்கள் அந்த சட்டதிட்டங்களையும் உடைத்து விட்டு வெளியே வந்து விடுகின்றன.

அப்படி வெளியான சில படங்கள் பொதுமக்களிடையே சமூகவிரோத செயல்களை தூண்டி விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த வகையில், சமீபத்தில் கேரளாவில் வெளியான மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் ஒரு கொலை சம்பவம் நடைபெற தூண்டுகோலாக இருந்துள்ளது.

அதாவது, கேரளாவில் நிலாம்பூர் என்ற பகுதியில் சில இளைஞர்கள் ஒரு கொலையை செய்து, அதை த்ரிஷ்யம் படத்தில் கொலையை மோகன்லால் மறைப்பது போன்றே மறைத்துள்ளனர். பின்னர் போலீசிடம் பிடிபட்ட அவர்களிடம் விசாரித்தபோது, மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம்தான் எங்களை கொலை செய்ய வைத்தது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்களாம். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இதேபோல் கேரளாவில் வெளியான ஹனி பீ, இடுக்கி கோல்டு உள்ளிட்ட சில படங்களை பார்த்த ஏராளமான இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக ஏற்கனவே கூறியிருந்தார்கள்.

இதுபோன்று சினிமா மூலம் சொல்லப்படுகிற கெட்ட விசயங்களுக்கு இளைஞர்கள் எளிதில் அடிமையாகி விடுவதால், மோகன்லால் உள்ளிட்ட சில மலையாள நடிகர்கள் இளைஞர்களை தவறான வழிக்கு திசைதிருப்பும் கதைகளில் இனி நடிப்பதில்லை என்று மானசீகமாக முடிவெடுத்திருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment