Saturday, 15 February 2014

இளமையை இப்படிக் காக்கலாம்!

கம்பீரமாய் காட்சியளிப்பார்கள். சிலரோ இளம் வயதிலேயே முதுமை தட்டிப்போய் தோன்றுவார்கள். ‘இவர்கள் மட்டும் எப்படி அன்று பார்த்தது மாதிரியே இன்றும் இருக்கிறார்கள்?’ என்று சிலரைப் பார்க்கும்போதுதான் தோன்றுகிறது.

நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம்தான். அதை ஒழுங்காக, சீராகப் பராமரித்தாலே நமது இளமை நீடித்திருக்கும். எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் சருமத்தில் முதுமைத் தோற்றம் தெரிகிறது.

இதைத் தடுக்க, முகத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரி, நாங்கள் எப்படி இளமையைத் தக்கவைத்துக்கொள்வது என்று கேட்கிறீர்களா? இதோ, இந்தக் குறிப்புகளைப் படியுங்கள், பின்பற்றுங்கள்…

தண்ணீர் நல்லது :

இளமையைத் தக்கவைப்பதில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. சருமத்தை மென்மையாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் தினமும் குறைந்தபட்சம் 1 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது என்கிறார்கள் சரும நிபுணர்கள்.

இளமை காக்கும் உணவுகள் :

என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதும் அவசியம்.

உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறனுடைய ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் முகம் சுருக்கம் இல்லாமலும், மென்மையாகவும் தோன்றும். மேலும், பசலைக்கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, கிரீன் டீ போன்றவற்றையும் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

புகை தவிர்க்க வேண்டும் :

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மதுபானம், புகைபிடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிகரெட்டில் உள்ள ‘நிக்கோட்டின்’, ரத்த ஓட்டத்தைக் குறைப்பதால் சருமத்துக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் வயதான தோற்றம் எளிதில் வந்துவிடுகிறது.

ஆழ்ந்த உறக்கம் அவசியம் :

சரியான உறக்கம் இல்லாததாலும் உடல் அழகு பாதிக்கப்படும் என்பதை பலர் அறிவதில்லை. சரியான தூக்கமின்மை, சோர்வை ஏற்படுத்தும், இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6, 7 மணி நேர உறக்கம் அவசியம். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், மனதில் புத்துணர்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

கவலை கூடாது :

ஏதாவது ஒரு கவலையை இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் மூழ்குவது பலருக்கும் பழக்கமாக இருக்கிறது. கவலை உடல் நலத்தையும், அழகையும் பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் முகம் ஜொலிக்கும்

0 comments:

Post a Comment