Sunday, 16 March 2014

ரஜினிக்கு வில்லனா? அழைப்பு வரவில்லை

ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வரவில்லை என்றார் சுதீப். ‘நான் ஈ‘ படத்தில் நடித்தவர் சுதீப். தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.


இதுகுறித்து சுதீப் கூறியதாவது: டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் புதிய ஸ்கிரிப்டுடன் என்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகியது உண்மைதான்.


நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்பே ரஜினியை வைத்து படம் இயக்க ரவிகுமார் முடிவு செய்துள்ளார்.


ரஜினியின் உடல்நலன் கருதி நான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே ரஜினி படத்தை தொடங்க உள்ளதாக கூறினார். ஓ.கே சொல்லிவிட்டேன். இப்படத்தில் நான் ரஜினியின் வில்லனாக நடிக்க உள்ளதாக என்னுடைய பெயர் இணைய தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது.


ஆனால் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் என்னிடம் கேட்கவில்லை.


ரவிகுமாருடன் எனது பட ஷூட்டிங் மே அல்லது ஜூனில் தொடங்கும். முன்னதாக ரஜினி படத்தை தொடங்குகிறார் ரவிகுமார். இவ்வாறு சுதீப் கூறினார் 

0 comments:

Post a Comment