Monday, 17 March 2014

பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட வெப் டிவி! மவுசு கூடுகிறது...!

பெண்களுக்காக பெண்கள் ஒரு தனி வெப் டிவியை ஆரம்பித்துள்ளனர்.


உலக மகளிர் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப் டிவிக்கு ஸ்த்ரீ என்று பெயர் சூட்டியுள்ளனர்.


இந்த வெப் டிவியில் முழுக்க முழுக்க பெண்களுக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகின்றன.


பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை வழி வகுக்கின்றன.


பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட வெப் டிவி!


அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சுய முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொள்கிறார்கள்.


ஒவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடம் என்ற அளவில் ஒரு நாளைக்கு மொத்தம் 24 பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் இந்த ஸ்திரீ டிவியில் ஒளிபரப்பாகின்றன. ஆரம்பத்தில் தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை தர உள்ள இந்த ஸ்த்ரீ டிவி வெகு விரைவில் பல மொழிகளிலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தர உள்ளது.


இந்த ஸ்த்ரீ டிவி இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒளிபரப்பாகும். அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்த்ரீ டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்தவித இணைய வேக தடங்களும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment