Monday, 17 March 2014

உத்தம வில்லன் கமலின் ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா!

கமல் நடிக்கும் உத்தம வில்லனில் அவருக்கு ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா நடிக்கின்றனர்.

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞராக கமல் நடிக்க அவரின் நெருங்கிய நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க ‘உத்தம வில்லன்' படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்தவரும் கமல்ஹாசன் தான்

உத்தம வில்லன் கமலின் ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா!

கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள். கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் கே.விஸ்வநாத் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார்.

மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குனராக கே.பாலச்சந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக திரு.கே.விஸ்வநாத்தும் நடிக்கின்றனர். 8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார். 21ஆம் நூற்றாண்டுக் கமலின் காதலியாக ஆண்ட்ரியா ஜெர்மையாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கொல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் பாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் கொக்கு செட்டியார் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க கமல்ஹாசன் மற்றும் விவேகா பாடல்களை எழுதுகின்றனர். ஒளிப்பதிவு ஷாம்தத், படத்தொகுப்பு விஜய் சங்கர். திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் படத்தை தயாரிக்கிறார்.

-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment