நடைமுறை பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதும் மவுசு இருக்கவே செய்கிறது. இந்தியாவின் தலையாயப் பிரச்சனையான ஊழலைப் பற்றிய படம் என்பதால் நிமிர்ந்து நில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர். அதேபோலொரு முக்கிய பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ஒகேனக்கல்.
ஒகேனக்கல் அழகும் ஆபத்தும் நிறைந்த பகுதி. அதேபோல் இப்படத்தின் கதையிலும் இவ்விரண்டும் இருக்கிறது. சீட்டு நடத்திவிட்டு ஏழைகளின் பணத்துடன் கம்பிநீட்டும் மோசடியை இப்படத்தில் விலாவரியாக காட்டுகிறார்கள். சீட்டு மோசடியால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறார்களாம். ஆபத்தான சீட்டு மோசடியுடன் அழகான காதலும் படத்தில் உள்ளது.
எழில் புரொடக்சன் சார்பாக மூன்று பேர் இணைந்து தயாரிக்க எம்.ஆர்.மூர்த்தி படத்தை இயக்கியுள்ளார். எம்.ஆர்.மூர்த்தி கன்னடத்தில் பிரபலமான பெயர். அங்கு மூன்று படங்களை இயக்கிவிட்டு தமிழகம் வந்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை, வசனமும் இவரே.
கதாநாயகனாக பாபு நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஜோதிதத்தா என்ற மும்பை நடிகை. இன்னொரு ஹீரோவாக ப்ருத்வி, அவருக்கு ஜோடி ஸ்ராவியா. இவர்களுடன் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.எஸ்.திருப்பதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
உமாபத்மநாபன், நளினி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், முத்துக்காளை, கிரன் மனோகர், காதல் தண்டபாணி, பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் என ஏராளமானோர் நடித்துள்ளனர். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்ய சரண் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
0 comments:
Post a Comment