விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்து வரும் அரிமா நம்பியின் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.
துப்பாக்கி படத்தின் போது முருகதாஸின் உதவி இயக்குனர்கள் இருவருக்கு படம் செய்ய வாய்ப்பளிப்பதாக தயாரிப்பாளர் தாணு வாக்குத் தந்திருந்தார். படம் வெளிவந்ததும், தான் சொன்னபடி முருகதாஸ் உதவி இயக்குனர் ஆனந்த் சங்கரை இயக்குனராக்கினார். அந்தப் படம்தான் அரிமா நம்பி.
விக்ரம் பிரபு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் நம்ம ட்ரம்ஸ் சிவமணி. எனர்ஜியின் இன்னொரு பெயரான சிவமணி உலகம் முழுக்க பிரபலம் என்றாலும் அவர் ஒரு திரைப்படத்துக்கு இசையமைப்பது என்பது இதுவே முதல்முறை. சிவமணியின் பாடல்களையும், இசையையும் கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்துவரும் நிலையில் அடுத்த மாதம் - ஏப்ரல் 13ஆம் தேதி பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
0 comments:
Post a Comment