Monday, 17 March 2014

ஆத்மா சாந்தி அடையட்டும் சனா கானுக்கு சரமாரி மெசேஜ்

நான் விபத்தில் இறந்துவிட்டதாக நினைத்து குடும்பத்தினர் பதறிவிட்டனர் என்றார் சனா கான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனா கான். இதே பெயர் கொண்ட பாகிஸ்தான் நடிகை ஒருவர் கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார்.


 அது தமிழ் நடிகை சனாகான் என நினைத்து அவரது குடும்பத்தினருக்கு பலர் போன் செய்தனர். அவர்கள் பேசியதை கேட்டு அவரது தாய் உள்பட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி சனா கான் கூறியதாவது: பல நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்னுடைய இணைய தள பக்கத்தில் ரெஸ்ட் இன் பீஸ் (ஆத்மா சாந்தி அடையட்டும்) என தகவல் அனுப்பினர். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். என் பெயர் கொண்ட பாகிஸ்தான் நடிகை விபத்தில் இறந்துவிட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது.


பாகிஸ்தான் நடிகை விபத்தில் சிக்கிய தினத்தன்று நான் எனது நண்பர்களுடன் வெளியில் சென்றிருந்தேன். இதனால் எனது மொபைலை சைலன்ட் மோடில் வைத்திருந்தேன். மேலும் எனது அம்மாவுக்கும் யாரோ போன் செய்து நான் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி இருக்கிறார்கள். அவர் பயந்துவிட்டார். என் குடும்பத்தினர் 50 பேர் மிஸ்டு கால் செய்திருந்தனர். ஏதேச்சையாக என் போனை பார்த்தபோது இது தெரியவந்தது. மேலும் என்னுடைய கார் டிரைவரையும் அன்றைய தினம் வரவேண்டாம் என்று சொல்லி இருந்தேன்.


இது என் குடும்பத்தினரை இன்னும் பயத்தில் ஆழ்த்தி இருந்தது. பிறகு எனது நண்பர்களுக்கு, இறந்தது நான் இல்லை என்று தகவல் அனுப்பினேன். தவறாக புரிந்துகொண்டு மெசேஜ் பரப்பியதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நண்பர்களும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இதுபோல் தகவல் சொல்லும்போது உண்மை எது என்று தீர விசாரித்தபிறகு சொல்ல வேண்டும். இவ்வாறு சனா கான் கூறினார். 

0 comments:

Post a Comment