Monday, 17 March 2014

அம்மாவா...? தபுவை கோபப்படுத்திய பெண் இயக்குனர்!

பல வருடங்களுக்கு முன்பே, மனசுக்குப் பிடித்த படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்தவர் தபு. மனசுக்குப் பிடித்திருந்தால் சின்ன வேடமானாலும், என்ன வேடமானாலும் நடிக்க தபு தயார். அதனை தவறாக புரிந்து கொண்டார் இயக்குனர் ஸோயா அக்தர்.


விஷயம் இதுதான். ஸோயா அக்தர் இயக்கும் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். அவரின் அம்மாவாக நடிக்க திறமையும், அழகும் கொண்ட நடிகை தேவை. ஸோயாவின் கெட்ட நேரம், அவர் மனதில் தபுவின் முகம் தெரிய, தைரியமாக அவர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினார்.


வந்த காரியத்தை சொன்னதும் தபுவின் முகத்தில் தாளிக்காமலே கடுகு வெடித்தது. ப்ரியங்கா சோப்ரா இன்று ஜோடியாக நடித்து வரும் முன்னணி நடிகர்களுடன் எல்லாம் ஒருகாலத்தில் தபுவும் ஜோடி போட்டிருக்கிறார். அதுவுமில்லாமல் 31 வயது ப்ரியங்காவுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு ஐம்பது வயதெல்லாம் இல்லை தபுவுக்கு. ஜஸ்ட் 42 தான்.


இதுக்கு மேல் இப்படியொரு ஆஃபருடன் வந்தால் அவ்வளவுதான் என்று அடித்து விரட்டாத குறையாக ஸோயாவை துரத்தியிருக்கிறார் தபு.


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த தபு அதற்குள் அம்மாவா? ஸோயா மீது நமக்கே லேசா கோபம் வருதே

0 comments:

Post a Comment