Monday, 17 March 2014

அட நம்ம சிம்புவா இப்படியெல்லாம் பேசுறது?

ஏதோ கடமைக்குத்தான் நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சொல்லப்போனா எனக்கு சினிமாவுல நடிக்கவே புடிக்கல என்று சமீபத்தில் ஒரு ஞானி போல பேசியிருக்கிறார் நடிகர் சிம்பு.


ஹன்ஷிகா கை கழுவியதால் இப்படி ஒரு நிலமைக்கு சிம்பு தள்ளப்பட்டாரா? என்பதை விட அவர் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்பது என்பது ஆச்சரியம் தானே? இதோ சிம்பு பேசியிருப்பதை தொடர்ந்து படியுங்கள்…


சினிமாவைப் பொறுத்தவரைக்கும் நான் எல்லா விஷயங்களிலுமே ஆர்வமாத்தான் இருக்கேன். அது தானாகவே அமைஞ்சிடுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கும் போது நமக்கு சினிமா தெரியாம இருந்தா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு சில நேரங்கள்ல தோணும். ஏன்னா சினிமா தெரிஞ்சதுன்னா அங்க நடக்கிற சில காமெடிகள், தப்புகள் இதெல்லாமே முன்கூட்டியே தெரியும். அதுவந்து ஒரு விதத்துல எனக்கு எரிச்சலாத்தான் இருக்கும். அதையெல்லாம் பார்த்தும் கூட சரி என்ன பண்ண முடியும்னு அமைதியாப் போயிடுவேன்.


இப்போ எனக்கு சினிமாவுல நடிக்கவே புடிக்கல, அதுதான் உண்மை. சின்ன வயசுலேர்ந்தே ரஜினி சார் மாதிரி பெரிய ஸ்டார் ஆகணும்ங்கிற ஆசை இருக்கும். நெறைய படங்கள் பண்ணனும்ங்கிற ஆசையெல்லாம் இருந்துச்சு. ஆனா இப்போ 28 வயசை தாண்டின உடனே வேறவேற ஆசைகள் தான் இருக்கு. சினிமாங்கிற வட்டத்துக்குள்ள மட்டுமே இருக்கிறது எனக்கு புடிக்கல. அதையும் தாண்டி இந்த உலகத்துக்கு எதையாவது செஞ்சோம்கிற மாதிரி எதையாவது செய்யணும்.


எனக்கு பணம் அதிகமா சம்பாதிக்கிறது புடிக்கல. பணத்தால தான் இந்த உலகத்துல மனிதாபிமானமே போயிடுச்சு. பணத்துக்காக நல்லவங்க கூட இன்னைக்கு கெட்டவங்களா மாறிக்கிட்டிருக்காங்க. பணம் இருந்தா எதை வேணும்னாலும் செஞ்சிடலாம்கிற நெலைமை ஆயிடுச்சு. இதனால இந்த சமுதாயத்துல உண்மை இல்லாம போயிடுச்சு, பொய்கள் அதிகமாயிடுச்சு, பொறாமை ஜாஸ்தியாயிடுச்சு. இதுக்கெல்லாம் பணம் தான் காரணம்னு நெனைக்கிறேன். பணமே இல்லேன்னா இந்த உலகம் நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன்.


இடையில என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்துச்சு. அதுக்கப்புறம் தான் எனக்கு ஆன்மீகத்துக்குள்ள ஒரு ஈடுபாடு வந்துச்சு. அதை நோக்கிப்போனேன். இப்போ யாராவது வந்து உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ஆகணும்னு ஆசை இருக்கான்னு கேட்டா எனக்கு இல்லேன்னு தான் சொல்லுவேன். பெரிய ஸ்டார் ஆகணும், இன்னும் நெறைய படங்கள் பண்ணனும்ங்கிற ஆசையெல்லாம் போயிடுச்சு.


இப்போ கூட நான் படங்கள் பண்றதுக்கு எதுக்குன்னா இதுதான் என்னோட தொழில். இது மட்டும் தான் எனக்குத் தெரியும், நமக்குன்னு சில கடமைகள் இருப்பதில்லையா? அதுபோலத்தான் நான் படங்களின் நடிச்சிக்கிட்டிருக்கேன். யாரோட படத்தையும் பார்க்கும் போது போட்டியோ, பொறாமையோ, கோபமோ வரவே வராது. என்னோட படம் ஹிட்டனாலும் ப்ளாப்பானாலும் ஒரே மனநிலையில தான் இருப்பேன். என்கிறார் சிம்பு.

0 comments:

Post a Comment