Monday, 17 March 2014

தெலுங்கில் மட்டுமே தயாராகும் மணிரத்னம் படம்?


மணிரத்னத்துக்கே மணி பிரச்சனையா? இரண்டு நாள்களாக இந்தச் செய்திதான் கோடம்பாக்கத்தை சுழற்றியடிக்கிறது.


மகேஷ்பாபு, நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கிறார்கள் என்பது செய்தி. தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் படம் தயாராக உள்ளது. ரோஜா படத்தில் எப்போது தேசிய பிரச்சனைக்குள் தலையை விட்டாரோ அப்போது தொடங்கியது மணிரத்னத்தின் இருமொழி தயாரிப்பு. பல நேரங்களில் தமிழ்ப் படமும் இல்லாமல் இந்திப் படமும் இல்லாமல் மணிரத்னத்தின் படங்கள் தோல்வியைத் தழுவின. தமிழில் அவரின் கடைசி வெற்றி, தமிழில் மட்டுமே தயாரான அலைபாயுதே என்பது கவனிக்கத்தக்கது.


சரி, விஷயத்துக்கு வருவோம். கடல் படம் பலத்த நஷ்டத்துக்குள்ளானதும், படத்தை வாங்கியவர்கள் நஷ்டஈடு கேட்டு மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியதும் வரலாறு. அந்த சம்பவம் காரணமாக தமிழில்நாட்டில் மணிரத்னம் படத்துக்கு பைனான்ஸ் செய்ய தயக்கம் காட்டுகிறார்களாம். அதனால் தெலுங்கில் மட்டும் படத்தை எடுப்பது என மணிரத்னம் தீர்மானித்துள்ளதாக பிரபல நாளிதழே செய்தி வெளியிட்டது.


தனது படத்தை மணிரத்னமே தயாரிப்பார். அவருக்கு பைனான்ஸ் பிரச்சனையெல்லாம் கிடையாது. இது பொய்யான தகவல் என்பது அவருக்கு நெருக்கமானவர்களின் கூற்று.


இதில் யார் சொல்வது சரி? இது ஒருபுறமிருக்க விரைவில் ஹைதராபாத்தில் படவேலைகளை தொங்கும் முனைப்பில் இருக்கிறாராம் மணிரத்னம்.

0 comments:

Post a Comment