Monday, 17 March 2014

மதுஷாலினி நடிக்கும் பேய்ப் படம் கல்பனா ஹவுஸ்!

கல்பனா ஹவுஸ்.. கன்னடம், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இது. அடுத்து தமிழிலும் இதே பெயரில் வெளியாகிறது. அவன் இவன் மதுஷாலினிதான் படத்தின் நாயகி.


மைசூர் காட்டுக்குள் நடந்த திகிலூட்டும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. வேணு கார்த்திக், த்ரில்லர் மஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர். குமார் டைரக்டு செய்திருக்கிறார்.


மதுஷாலினி நடிக்கும் பேய்ப் படம் கல்பனா ஹவுஸ்


‘கல்பனா ஹவுஸ்' படத்தின் கதை பற்றி இயக்குநர் குமார் கூறுகையில், "பிரபல என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் விருந்தினர் மாளிகையில் வந்து தங்குகிறார்.


அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவர்களை பயமுறுத்துகின்றன. போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.


இதற்கு காரணம் அந்த பங்களாவில் இறந்துபோன ஒரு பெண்ணின் ஆவிதான் என்கிறார்கள். அதைக்கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உயிர் பிழைத்தார்களா? அல்லது ஆவியினால் பழிவாங்கப்பட்டார்களா? என்பதே கதை.


தரண் மூவிஸ் சார்பில் ஆர்.நாகராஜன் தயாரித்து வருகிறார். படத்தில் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக, பாடல்களே இல்லாத படமாக இது தயாராகிறது,'' என்றார்.

0 comments:

Post a Comment