Sunday, 16 March 2014

முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல...?

அஜீத்துக்கு தல என்று அடைமொழி உருவாக காரணமாக இருந்தவர் முருகதாஸ். அவரின் முதல் படம் தீனாவில் அஜீத்தை அவரது அல்லக்கைகள் தல என்றுதான் அழைப்பார்கள். வத்திக்குச்சி பாடலில் மகாநதி சங்கர், தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது என்று ஒரு வசனமும் பேசுவார்.


சரி, அதுக்கென்ன இப்போ? காரணம் உள்ளது. இதே பெயரில், அதாவது தல என்ற பெயரில் அஜீத் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்கப் போவதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலவுகிறது.


வாலி படத்தில் அஜீத் நடித்த போது முருகதாஸ் அப்படத்தின் உதவி இயக்குனர். அப்படிதான் தீனா படத்தில் அஜீத்தை இயக்கும் வாய்ப்பு முருகதாஸுக்கு கிடைத்தது. அப்போது மிகவும் சின்னப் பையனாக இருந்ததால் ஷாட் வைப்பதற்கு முருகதாஸ் திணறியதாகவும் முதல் சில தினங்கள் அவரின் குருநாதர் எஸ்.ஜே.சூர்யாதான் ஷாட் வைத்தார் எனவும் சிலர் மலரும் நினைவுகளில் நினைவுகூர்கிறார்கள்.


படத்தின் ரிசல்ட் எப்படியிருக்குமோ என்று முருகதாஸ் படம் வெளியான போது தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்றுவிட்டார். படம் பிக்கப்பான செய்தி அறிந்த பிறகே அவர் சென்னை திரும்பினார்.


இப்படி முதல் படத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால்தான் முருகதாஸும், அஜீத்தும் மீண்டும் இணையவில்லை என கூறப்பட்டது.


அதெல்லாம் பழைய கதை. இன்று முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க இந்தியாவின் டாப்மோஸ்ட் நடிகர்கள் காத்திருக்கின்றனர். அஜீத்துடன் பணிபுரிய முருகதாஸும் தயார். அதனால், முருகதாஸ் அஜீத்துக்காக தல என்ற ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார் என்பதில் உண்மை இருக்க அதிக சாத்தியமுள்ளது. இன்னும் சில தினங்களில் தல யின் உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வரும்.

0 comments:

Post a Comment