Monday, 3 February 2014

4 உடன் 5 மகிழ்ச்சி அளிக்கிறது....

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அந்த வகையில் 1992ல் சினிமாவுக்குள் என்ட்ரியான அவர், கடந்த 21 ஆண்டுகளில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தேசிய விருது, ஆஸ்கர் விருது போன்ற விருதுகளை பெற்றவர், இதுவரை 4 முறை டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தற்போது 5வது முறையாகவும் அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த பட்டம் கிடைத்துள்ளதாம். 1945ம் ஆண்டிலிருந்து உலக அளவில் நடிப்பு, நடனம், இசை போன்ற துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த டாக்டர் பட்டத்தை தான் மட்டும் வாங்கிக்கொள்ளாமல் தனது கேஎம் இசைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்களுடன் சென்று பெற்றுள்ளாராம் ரகுமான்.

அதோடு, ஒவ்வொரு முறை விருதுகள், பட்டங்கள் கிடைக்கும்போது சந்தோசத்தையும், நெகிழ்ச்சியையும் அனுபவிக்கிறேன். அந்த வகையில், இந்த டாக்டர் பட்டம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் கொடுத்துளளது என்று தெரிவித்துள்ளார் ரகுமான்.

0 comments:

Post a Comment