Monday, 3 February 2014

சந்தானத்திற்கு ஷாக்! கொடுத்த படம் இதுதான்...?

கவுண்டமணியின் தீவிர ரசிகர் சிம்பு. அதனால் தனது ஆரம்பகால படங்களில் அவரை தனது படங்களில் நடிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், சந்தானத்தின் நடிப்பும் அவரை கவர்ந்ததால், காதல் அழிவதில்லை படத்திலிருந்தே அவருக்கு வாய்ப்பு கொடுத்து வந்கிறார்.

ஒரே படத்தோடு விடாமல் தொடர்ந்து தான் நடித்த படங்களில் சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்து அவரை சினிமாவில் ஆளாக்கி விட்டார் சிம்பு.

அதனால், சிம்புதான் எனது காட்பாதர் என்று மேடைகளில் சொல்லும் சந்தானம், அவரது படங்களுக்கு எப்போது அவர் அழைத்தாலும் ஓடிச்சென்று நடித்துக்கொடுப்பேன். சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன், இல்லையென்றாலும் நடிப்பேன் என்று கூறும் சந்தானம், தற்போது சிம்பு-நயன்தாரா இணைந்துள்ள இது நம்ம ஆளு படத்திலும் தனக்கு கண்டிபபாக வாய்ப்பு இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தாராம்.

எப்படியாவது அழைப்பு வரும் என்று நினைத்தவருக்கு தற்போது சூரியே அப்படத்தின் பிரதான காமெடியனாக நடிக்கும் அதிர்ச்சி செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாம.

இதையடுத்து, அவசர அவசரமாக சிம்புவையும் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த கதையை எழுதும்போதே சூரியை மனதில் கொண்டு பாண்டிராஜ் எழுதிய விவரத்தை சிம்பு சொல்ல, என் காட்பாதர் படத்தில் நான் இல்லையா? இது கொஞ்சம்கூட நியாயமே இல்லை என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியவர், எப்படியோ உங்களுடன் நான் இல்லையென்றாலும், நீண்ட இடைவேளைக்குப்பிறகு நயன்தாரா இணைந்திருக்கிறார்.

ஏதோ ஒருவகையில் நல்லது நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இதுகூட எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்று அப்படம் வெற்றிபெற மனதார வாழ்த்து சொல்லி விடைபெற்றாராம் சந்தானம்.

0 comments:

Post a Comment