’ஐந்து ஐந்து ஐந்து’ படத்தை தொடர்ந்து பரத் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்திற்கு ‘ஏழு கடல் தாண்டி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் செந்தில் குமார் இயக்குகிறார். இவர், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் பரத்துடன் சதயராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது. படப்பிடிப்பு விரைவில் ஆரமபமாகவுள்ளது.
தற்போது பரத் ‘கூதற’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லட்சத்தீவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாறுபட்ட ஒரு கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தில் மோகன்லாலும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை பரத் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
காதல் படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் பரத். அதன் பிறகு சில படங்கள் அவருக்கு கை கொடுத்தாலும் காதல் போன்று பெயர் வாங்கி கொடுக்கும் படம் இல்லாத ஏக்கம் அவரிடம் இருந்து வருகிறது.
வெங்கடேஷ் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்த ‘கில்லாடி’ என்ற படம் இன்னமும் ரிலீசாகாமல் இருப்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்!

0 comments:
Post a Comment