Wednesday, 26 February 2014

சினிமாவுக்கு குட்பை - நடிகை அஞ்சலி!

சென்னையில் இருந்து தமிழ்ப் படங்களில் நடித்தபோது தனது சித்தியுடன் ஏற்பட்ட தகராறினால் தனது சொந்த ஏரியாவான ஆந்திராவுக்கு ஓடினார் அஞ்சலி.

அங்கே பாதுகாப்பாக இருந்து படங்களில் நடிக்கலாம் என்று கணக்கு போட்டவர் தமிழ்ப் படங்களுக்கு குட்பை சொன்னார். பல படங்கள் அவரைத் தேடி வந்தும் கூட ‘மசாலா’ என்ற ஒரே ஒரே தெலுங்கு படத்தில் தான் அவர் நடித்தார். கடந்த 2013-ஆம் வருடம் ரிலீசான அந்தப்படம் தான் அவருக்கு கடைசிப்படம். அதற்குப் பிறகு தெலுங்கிலும், தமிழிலும் எந்த ஒரு புதிய படத்திலும் அவர் நடிக்கவில்லை.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ஷகிலாவின் சுயசரிதையை மையமாக வைத்து வெளிவர இருக்கும் படத்தில் அஞ்சலி நடிக்கப் போகிறார் என்றும், அதில் அஞ்சலிதான் ஷகிலாவாக நடிக்கப் போகிறார் என்று செய்தி வெளியாகின.

ஆனால் தற்போது அஞ்சலி அந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றும், கூடவே இந்த நிமிடம் வரை அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை இல்லை என்றும் சீக்ரெட் தகவல் கசிந்திருக்கிறது.

சென்னையிலும் இல்லை, ஆந்திராவில் எந்த ஒரு பட விழாவிலும் அஞ்சலியை பார்க்க முடிவதில்லை, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் வைத்திருக்கும் இரண்டு மொபைல் எண்களை தொடர்பு கொண்டால் இரண்டிலுமே எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

அப்படியானால் அஞ்சலி எங்கே போனார்? யாருடைய பிடியில் இருக்கிறார்? என்பது மர்மமாகவே உள்ளது.

இதனால் அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்காக யோசிக்கும் டைரக்டர்கள் அவரை யார் மூலம் எப்படி தொடர்பு கொள்வது? என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் அஞ்சலியோ சினிமாவுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்டு விட்டு ஒரு ‘பெரிய புள்ளி’யின் அன்புப் பிடியில் அடைக்கலமாகி விட்டார் என்றும், இனிமேல் அஞ்சலி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூடுதல் தகவல்களை அவரது நெருங்கிய வட்டாரங்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ அஞ்சலி அதே பெரிய புள்ளியுடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதெல்லாம் உண்மையா? பொய்யா? என்ன என்பதை அஞ்சலியே நேரில் வந்து சொன்னால் தான் உண்டு. சொல்லுங்க எங்க இருக்கீங்க அஞ்சலி?

0 comments:

Post a Comment