Wednesday, 26 February 2014

யுவன் மதம் மாறியது குறித்து கேட்காதீங்க! - இளையராஜா!

இயக்குனர் மகேந்திரன் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் . இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குனர் மகேந்திரன். நடிகர் நடிகையர் தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.


இதனிடையே படத்திற்கான பிரஸ்மீட் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் இளையராஜாவும், மகேந்திரனும் கலந்து கொண்டனர். ஆனால் பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ., முகத்தில் ஒரே டென்ஷன் காணப்பட்டிருக்கிறது.


காரணம், இரண்டு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கிடையாது. சில வாரங்களுககு முன் இஸ்லாமியராக மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி பத்திரிகையாளர்கள் அவரின் தந்தை இளையராஜாவிடம் ஏடாகூடமாக எதுவும் கேட்டுவிடக் கூடாது என்று தான்.


 இது குறித்து முன்னதாகவே சுதாரித்துக் கொண்ட பி.ஆர்.ஓ., பிரஸ்மீட்டில் கேள்வி கேட்கும் வழக்கமுடைய முக்கிய பத்திரிகையாளர்களை அழைத்து மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்.


அவருடைய இந்த பரிதாப நிலைமையை உணந்த பத்திரிகையாளர்கள் இளையராஜாவிடம் யுவன் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லையாம். இதன்பிறகே சம்மந்தப்பட்ட அந்த பி.ஆர்.ஓ., நிம்மதி பெருமூச்சிவிட்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment