ஐ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. பொதுவாக படப்பிடிப்பு முடிந்த பிறகே போஸ்ட் புரொடக்சனை வைத்துக் கொள்வார்கள்.
படப்பிடிப்புக்கு ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் ஐ போன்ற பிரமாண்டப் படங்களுக்கு இப்படி வேலைகளை அடுத்தடுத்து முடிப்பதென்றால் மேலும் ஒரு வருடம் பிடிக்கும். படப்பிடிப்புடன் சேர்த்து போஸ்ட்புரொடக்சன் வேலைகளையும் ஷங்கர் நடத்தி வந்தார்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் முன்பே முதல்பாதி படத்தின் டப்பிங்கை விக்ரம் முடித்துவிட்டார். விரைவில் இரண்டாவது பாதிக்கான டப்பிங்கை தொடங்குகிறார்.
பலவித தோற்றங்களில் நடித்திருப்பதால் அந்தந்த தோற்றங்களுக்கு ஏற்ப குரலில் மாறுதல் செய்து விக்ரம் டப்பிங் பேசவுள்ளதாக தெரிவிக்கிறது படயூனிட்.
ஐ யில் எமி ஜாக்சன், சுரேஷ் கோபி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். பீட்டர் ஜாக்ஸனின் வீட்டா ஸ்டுடியோ படத்தின் மேக்கப் பணிகளை மேற்கொண்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தயாரிப்பு ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம்ஸ்.
0 comments:
Post a Comment