Wednesday, 26 February 2014

போச்சுடா... விமலும் இப்போ பாடகர்!

கமல், சிம்பு, ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவ கார்த்திகேயன்.... என்ற நீண்ட வரிசையில் இப்போது விமலும். இந்த நல்ல (அல்லது கெட்ட) காரியத்தை செய்தவர் டி.இமான்.


இப்போதெல்லாம் நடிகர்களை பாட வைப்பது அவர்களின் குரலுக்காக கிடையாது. சும்மா ஒரு பாடலை பதிவு செய்தால் மீடியா திரும்பிப் பார்க்காது. இதுவே ஒரு நடிகர் அல்லது நடிகை பாடினால் நாலு காலத்துக்கு செய்தி போட்டு நாறடித்து...


ஸாரி விளம்பரப்படுத்துவார்கள். தவிர இப்போது வருகிற டாஸ்மாக் கானா பாடலுக்கோ, ஈவ்டீஸிங் பாடலுக்கோ குரல் முக்கியமில்லை.


வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவ கார்த்திகேயனை பாடகராக்கிய டி.இமானுக்கு விமலின் மீது ஒரு கண் போலிருக்கிறது. ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவில் அதனை தீர்த்துக் கொண்டார்.


கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இந்தப் படத்துக்கு டி.இமான்தான் இசை. அதில் வரும் ஒரு பாடலை விமலிடம் தந்து பாட வைத்துள்ளார். சும்மா சொல்லக் கூடாது சூப்பராகவே பாடியிருக்கிறார் என்கிறார்கள் உடனிருந்தவர்கள்.


குளோபல் இன்போடெய்ன்மெண்ட் மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்கிறார். 

0 comments:

Post a Comment