Wednesday, 26 February 2014

இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா தம்பதியரின் 34வது திருமண நாளுக்கு வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் திரண்டனர்.


திரையுலகில் பிற நடிகர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் உதாரணமாகத் திகழும் தம்பதியர் ரஜினிகாந்த் - லதா.


இருவருக்கும் கடந்த 1981-ம் ஆண்டு இதே நாளில் திருப்பதியில் திருமணம் நடந்தது. நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர வேறும் யாருக்கும் திருமணத்துக்கு அழைப்பு தரவில்லை.


இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்


பத்திரிகையாளர்கள் நிச்சயம் வரவேகூடாது என பிரஸ் மீட் வைத்தே கூறிவிட்டார். அப்படியும் மீறிச் சென்ற பத்திரிகையாளரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பினார் ரஜினி.


அதன் பிறகு சென்னையில் அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நடத்தினார்.


ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், திரையுலகைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் திகழ்ந்தாலும், குடும்பத்தைப் பொருத்தவரை ஒரு எளிய தலைவனாக, மனைவிக்கு மரியாதை கொடுத்து, அதற்கேற்ப நடக்கும் ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு அன்பான தகப்பனாகத் திகழ்கிறார்.


இந்த ஆண்டு திருமணம், அடுத்த ஆண்டு விவாகரத்து, அதற்கடுத்த சில மாதங்களில் மறு திருமணம்.. என்பதே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறையாகிவிட்ட இந்த திரையுலகில்... ரஜினி- லதா உதாரணத் தம்பதியராகத் திகழ்கின்றனர்
.

இந்த ஆண்டு இருவருக்கும் திருமணமாகி 33 ஆண்டுகள் முடிந்து, 34 ஆவது ஆண்டு பிறக்கிறது. ஆண்டு தோறும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 மட்டுமல்ல, திருமண நாளான பிப்ரவரி 26-ம் தேதியும் வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக்கு ரசிகர்கள் செல்வது வழக்கம். அவர்களை வரவேற்று இனிப்பு வழங்குவார் லதா ரஜினிகாந்த்.


இந்த ஆண்டும் ஏராளமான ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலிருந்து ரஜினிக்கும் லதாவுக்கும் மலர்க் கொத்துகள், பரிசுகள் கொடுத்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவர்களை வரவேற்று நன்றி கூறி இனிப்பு வழங்கினார் லதா ரஜினி.

0 comments:

Post a Comment