Sunday, 16 February 2014

ஆண்ட்ரியாவுக்கு தலை கால் புரியாத சந்தோஷம்!

தரமணி படத்திற்காக ஆண்ட்ரியா முதன்முதலாக இசையமைத்து எழுதி பாடிய ஆங்கில பாடல் வெளியானதில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட பாராட்டு மடல்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம். குறிப்பாக, அனிருத் உள்ளிட்ட வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களே, ஆண்ட்ரியாவிடமிருந்து வெளிப்பட்டுள்ள இந்த இசை இளமையாகவும், இனிமையாகவும் உள்ளது. இது இளைய இதயங்களை பெரிய அளவில் ஈர்க்கக்கூடிய வலிமையுள்ளதாக இருக்கிறது என்று வஞ்சணையில்லாமல் புகழ்கிறார்களாம்.

தான் கம்போஸ் செய்த பாடலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருப்பதை கண்டு தலைகால் புரியாமல் தடுமாறிப்போயிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு, அடுத்தடுத்து இசையமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருக்கிறதாம். ஆனால், இதை செயல்படுத்த வேண்டும் என்று சில அபிமானத்திற்குரிய டைரக்டர்களிடம், தற்போது ஒரு பாடலுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் தன்னை முழு இசையமைப்பாளராக்கி விடுமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறாராம்.

இந்நிலையில், அவர்கள் தன்னை அழைக்கும்போது தன்னிடம் பல படங்களுக்கான பாடல்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இப்போது, பாடல் கம்போஸிங் வேலைகளில் மும்முரமாகியிருக்கும் ஆண்ட்ரியா, நண்பர்களுடன் அடித்து வந்த அரட்டை, லூட்டி என அனைத்து பொழுதுபோக்கு விசயங்களையும் தற்காலிகமாக மூட்டைகட்டி வைத்து விட்டாராம். ஆக, கோலிவுட்டுக்கு ஹாலிவுட் தரத்தில் இசையை கொடுக்க ஒரு பெண் இசையமைப்பாளர் அதிரடியாக தயாராகிககொண்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment