சம்பள பாக்கி கேட்ட நடிகர் சுதீரை கடுமையாக தாக்கியுள்ளார் இயக்குனர் வினயன். என் மன வானில், காசி ஆகிய படங்களை இயக்கிய வினயன் மலையாளத்தில் ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். டிராகுலா 3டி என்ற மலையாள படத்தையும் அவர் இயக்கினார். இப்படத்தில் சுதீர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதில் நடித்ததற்கு தனக்கு வைத்திருக்கும் சம்பள பாக்கியை உடனே தர வேண்டும் என்று இயக்குனர் வினயனிடம் கேட்டு வருகிறார். இதில் கோபம் அடைந்த வினயன், சுதீரை கடுமையாக விமர்சித்தார். இது பற்றி இயக்குனர் கூறும்போது, சுதீரை என் படத்தில் நடிக்க வைத்தது என்னுடைய தவறு என்பதை உண்மையிலேயே இப்போது உணர்கிறேன்.
முதல் ஷாட் நடிக்க தொடங்கிய நாளிலிருந்து பணம், பணம் என்று கேட்டு வருகிறார். இந்திரஜித், ஜெயசூர்யா போன்ற நடிகர்களை என் படத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.
அவர்கள் பெற்ற முதல் சம்பளத்தைவிட சுதீருக்கு அதிகமாக தரப்பட்டுள்ளது. அவரை முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து பெரிய ரிஸ்க் எடுத்தேன். அவ்வளவு பெரிய படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ததற்காக அவர்தான் எனக்கு பணம் தர வேண்டும் என்றார். விரைவில் நடிகர் மீது மானநஷ்ட வழக்கு தொடரவும் வினயன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment