Sunday, 9 March 2014

பெண்களுக்கு எப்படிபட்ட ஆண்களை பிடிக்கும் தெரியுமா?

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான்........

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

கற்றாழை ஜெல்லின் சரும நன்மைகள்!

வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒன்றான கற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவும்.          

குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழை தான். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அவை முகப்பரு மற்றும் பிம்பிளை நீக்குகின்றன.

மேலும் இந்த கற்றாழையை வைத்து நிறைய அழகுப் பொருட்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கற்றாழையை வீட்டிலேயே வளர்த்து, தினமும் முகத்திற்கு தடவி வந்தால், முகம் நன்கு பட்டுப் போன்று மாறிவிடும்.

இப்போது அதன் மற்ற நன்மைகளைப் பார்ப்போமா!!! * முகப்பருவை குறைக்க வேண்டுமென்பவர்கள், இதனை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும்.

ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன.

இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும். * வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும்.

குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும். * ஆண்கள் ஷேவிங் செய்த பின்னர், முகத்திற்கு லோசனை தடவுவார்கள்.

ஏனெனில் ஷேவிங் செய்த பின்னர், அந்த இடத்தில் அரிப்புகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமென்று தடவி மசாஜ் செய்வார்கள்.

அவ்வாறு கெமிக்கல் கலந்த லோசனை தடவுவதற்கு பதிலாக கற்றாழை ஜெல்லை தடவினால், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம். * உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல்.

ஆனால் கற்றாழையை வைத்து, மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும்.

பொதுவாக இந்த மார்க்குகள் உடல் எடை அதிகரிப்பது அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும். * முதுமை தோற்றம் சிலருக்கு இளமையிலேயே ஏற்படுகிறது.

எனவே இத்தகைய தோற்றத்தை தடுக்க கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி உடலில் செய்து வர, தளர்ந்து இருக்கும் சருமம் நன்கு இறுக்கமடைந்து, இளமை தோற்றதை வைக்கும்.

அதுமட்டுமின்றி கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. இதனால் சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். * சூரிய கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சருமம் கருமையான நிறத்தில் காணப்படும்.

அதுமட்டுமின்றி சில நேரங்களில் கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

எனவே எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், ஏதேனும் மாய்ச்சுரைசரை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தை பாதிப்பிலிருந்து தடுக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

ஆண்களால் பெண்களுக்கு அளிக்கப்படும் சில கஸ்டமான விடயங்கள் !!

காதலும், மூர்க்கத்தனமும் ஒரு சேர நிறைந்த ஆண்கள், தாங்கள் பெரிதும் விரும்பும் பெண்களுக்கே கூட தங்களுக்கே தெரியாமல் பலவகைகளில் தொல்லைகள்  புரிவதில் வல்லவர்கள். அப்படி ஆண்கள், பெண்களுக்குச் செய்யக்கூடிய சில கூடாதா விடயங்களை என்னவென்று பட்டியல் இட்டுள்ளர்கள்


01-ஆண்கள் அனைவருமே பெண்களை  கடைக்கண்ணில் பார்க்கும் வழக்கமுடையவர்கள் என உலகெங்கிலும் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, ‘ஜொள்' வடிக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாவது, அவர்கள் பார்க்கும் பெண் மட்டுமல்லாது, அவர்கள் அருகில் இருக்கும் பெண்ணும் தான்! காதலியுடன் வெளியில் செல்லும் தருணங்களில் கூட, ஆண்கள் பிற பெண்களை பார்க்காமல் விடுவதில்லை!


02-அநேகமாக ஆண்கள், பெறாமை குணம் இருக்கும். பெண்கள் மிகுந்த பொறாமைக் குணம் உடையவர்கள் என குற்றம் சொல்லும் ஆண்கள், தங்கள் காதலி வேறொரு ஆணைப் பற்றி பேசினால் கூட உச்சக்கட்ட பொறாமை கொள்கிறார்கள்.


03-மிகவும் சுதந்திரமான, நவநாகரீகமான பெண்ணுடன் பழகுவதே பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தாய்க்கு அறிமுகம் செய்யும் சமயங்களில் அடக்கமான பெண்களையே விரும்புவார்கள். ஊர் சுற்றும் போது நவநாகரீகமான உடைகளை அணிவதையும், வித்தியாசமான சிகையலங்காரத்தையும் விரும்பியவர்கள், திருமணத்தின் போது மட்டும் நேர்மாறான பெண்களைத் தேடுவது தான் ஆண்களின் மோசமான செயல்களிலேயே முதன்மையானது!


04-மனைவி வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததிலிருந்து, "எங்கே இருக்கிறாய்?" என நச்சரித்துக் கொண்டே இருக்கும் கணவனின் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் வரும். ஆண்களின் இந்த அளவுக்கு அதிகமான அக்கறை பெண்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறிவிடுகிறது.


05-பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் வருவதற்கு முன்பும், இந்த உலகில் பெண்கள் கவனமாகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை ஆண்கள் உணருவதே கிடையாது. இதைப் படிக்கும் போதாவது சில ஆண்கள் திருந்தினால் சரி.


06 பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றாலும், ஆண்களைப் போல் அல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் விஷயங்களை செய்வதில் வல்லவர்கள்.


ஆண்கள் பெண்களின் உணர்வுகளை கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், வாழ்வில் சிறப்பாக வாழ்வது நிச்சயம்

மொறுமொறு... முந்திரி ப்ரை!

நட்ஸ் உடலுக்கு மிகவும் சிறந்தது. அத்தகைய நட்ஸில் முந்திரி பெரும்பாலானோருக்கு மிகவும் பிடிக்கும்.

எனவே மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது முந்திரியை ப்ரை செய்து சாப்பிடலாம்.

அந்த முந்திரி ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்:

முந்திரி - 1

கப் கடலை மாவு - 1/2

கப் அரிசி மாவு - 2

டீஸ்பூன் மிளகாய் தூள் - 1

டீஸ்பூன் நெய் - 2

டீஸ்பூன் (விரும்பினால்) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:

முதலில் முந்திரியை முழுமையாகவோ அல்லது இரண்டாகவோ உடைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும், அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி ப்ரை ரெடி!!!

சாப்பிடும் முன் சூப்!

சாப்பிடுவதற்கு முன் சூப் சாப்பிடுவதை சிலர் ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பணக்காரர்களின் விருந்தில் இது ஒரு கவுரவ கலாசாரமாக பின்பற்றப்படுகிறது. 16- நூற்றாண்டின் ஐரோப்பியர்கள் இரவு சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிடுவதை ஒரு வழக்கமாக உருவாக்கினார்கள். இதை அறிவியல் ரீதியாக சொல்லும் போது அப்பிடைசர் ஸ்டார்ட்டர் வகையைச் சேர்ந்தது என்கிறார்கள்.                                                          

அதாவது அதிகம் பசி இல்லாமல் இருக்கையில் இந்த சூப் வயிற்றுக்குள் சென்று ஜீரணத்துக்கு உண்டான என்சைம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க முடியும். வசதி படைத்தவர்களுக்கு பெரும்பாலும் பசி எடுப்பதில்லை. அந்த பசியைத் தூண்டி விடுவதற்காக இப்படி சூப் கொடுக்கப்டுகிறது. சூப் மட்டும்ல்ல மசாலா வாசனைகளும் பசியை தூண்டிவிடுகின்றன என்கிறார்கள்.


ஒட்டலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் எப்போதும் மசாலா வாசனையை நுகர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தொடர்ந்து மசாலா வாசனையை மட்டும் நுகர்வதால் கல்லீரல் பிரச்சனை, பித்தம் முதலியவை ஏற்படலாம்.


நமக்கு உணவு வாசனை மூக்கை எட்டியவுடன் நமது வயிறு உணவை எதிர்பார்த்து காத்துடக் கொண்டிருக்கும். வாசனை வரும் போது எல்லா சுரப்பிகளும் தயாராகி விடுகின்றன. மூக்குக்கு எட்டியது வாய்க்கும் எட்ட வேண்டும் என்பது இயற்கை நியதி. அதை மீறி  வெறும் வாசனையை மட்டுமே தொடர்ந்து சுவாசிக்கம் போது சுரப்பிகள் பலவீனம் அடைகின்றன. அதனால் ஓட்டல் அருகே குடியிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?

பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள்.          

குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள்கின்றனர். இப்போது அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் கீழே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலானதாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதியாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்பமிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதை கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.

3. பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் பணத்தை கொடுப்பது சரியில்லைதான், அதற்காக உங்கள் குழந்தை கேட்கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது என்று நிராகரிக்க வேண்டாம். எதைக்கேட்டாலும் முடியாதென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரிடும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

4. உங்களை எப்பொழுதும் அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற நபராக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள். எப்பொழுதும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் மற்றும் அவர்கள் பேசுவதை செவிகொடுத்து கேட்பவராகவும் இருப்பதற்கு, உங்களால் முடிந்தவரை கடினமான முயற்சிகளை எடுங்கள். அம்மாவிடம் நட்புடன் ஆலோசனை கேட்பதும், வயதுக்கு வருவது பற்றிய சந்தேகங்களை கேட்கவும், வீட்டுவேலைகளில் உதவி செய்யவும், அல்லது சாதாரணமாக அம்மாவை கட்டிப்பிடிப்பதும் அவர்களுக்கு தெரியும். தங்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாமலிருந்தால், பின் குழந்தைகள் தனிமையிலேயே இருப்பார்கள். எனவே அவ்வப்போது அவர்களிடம் பேசும் வழக்கத்தை கொள்ள வேண்டும்.

5. குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மருத்துவம் படிப்பதிலோ அல்லது மருத்துவராக ஆவதிலோ விருப்பம் இல்லையென்றால், அப்போது கோபப்பட வேண்டாம். உங்கள் மகளின் எண்ணம் உங்களுடையதிலிருந்து மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை எப்போதுமே குழந்தையாக எண்ணாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு மாறுங்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அதனையே திரும்பவும் செய்ய வேண்டாமே!

6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க பயப்படாதீர்கள். இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் உங்கள் மேல் கோபப்படுவதை தடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுங்கள்.

7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித்திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை அளவுக்கு அதிகமாக நேசிப்பதைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது.

8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர்களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த நேரத்திலும் குழந்தைகளை நேசித்தால், அவர்களது மனதில் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக்காமல் நேசிப்பார்கள்.

ஓட்ஸ் உப்புமா ஓட்ஸ் உப்புமா !

தேவையானப் பொருள்கள்:                                                                  

ஓட்ஸ்- 2 கப்
சின்ன வெங்காயம்- 10
இஞ்சி-ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்-2
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
எலுமிச்சை சாறு உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு உளுந்து
கடலைப் பருப்பு
காய்ந்த மிளகாய்-2
பெருங்காயம்-சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

• வெறும் வாணலியில் ஓட்ஸை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்

•  வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

• பிறகு நறுக்கி வைத்துள்ள் வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி 4 கப்புகள் (ஒன்றுக்கு இரண்டு என) தண்ணீர் ஊற்றி கலக்கி உப்பு சேர்த்து மூடி கொதி வரும் வரை வேக விடவும்.

• கொதி வந்ததும் திறந்து ஓட்ஸை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

• முழுவதும் சேர்த்த பிறகு நன்றாகக் கிளறி விட்டு மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.

• வேகும் வரையில் இடையிடையே அடிப் பிடிக்காதவாறு அடிக்கடி கிளறிவிடவும்.

• நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கொத்துமல்லி தூவி,எலுமிச்சை சாறு விட்டு இறக்கவும்.